மாஞ்சோலை தொழிலாளிகள் – தாமிரபரணி படுகொலையின் 16-வது ஆண்டு நினைவு தினம்!
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் ! – மீள்பதிவு!
பிணங்கள், அதுவும் தேர்தல் நேரத்தில் விழும் பிணங்கள் சர்வ வல்லமை வாய்ந்தவை. ராஜீவின் பிணம் ஜெயலலிதாவுக்கு தமிழகத்தைத் தந்தது; இந்திராவின் பிணம் ராஜீவுக்கு பிரதமர் பதவியைத் தந்தது; கோவை குண்டு வெடிப்பின் பிணங்கள் பாரதிய ஜனதாவுக்கு வாழ்வையும் செயலலிதாவுக்கு மறுவாழ்வையும் தந்தன.
பிணத்தை வைத்து அரசியல் நடத்துவதில் வல்லமை பெற்ற தி.மு.க., காங்கிரசு ஆட்சியில் குண்டடி பட்டுச் செத்த வால்பாறைத் தோட்டத் தொழிலாளி ஒருவரை காட்டி ”கூலி உயர்வு கேட்டான் அதான், குண்டடி பட்டுச் செத்தான்” என்று முழக்கம் வடித்து ஆட்சியையும் பிடித்தது.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் கொல்லப்பட்ட 17 பேரின் உடல்களைத்தான் யாரும் அரசியலாக்க மறுக்கிறார்கள். தீண்டவே மறுக்கிறார்கள். இது ஏன் அரசியலாக்கப் படவில்லை?
கொலை செய்யப்பட்டவர்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்களும் அடக்கம். தன் சொந்தக் கட்சித் தொண்டரின் கொலையைக் கூட த.மா.கா. அரசியலாக்காதது ஏன்?
அமைதியாக ஊர்வலம் சென்ற நிராயுத பாணியான மக்கள் மீதும் பெண்கள் மீதும், காவல்துறை எப்படி வெறி கொண்டு தாக்குதல் நடத்தியது என்பதை விவரமாக எழுதியிருக்கிறது மார்க்கிஸ்டு கட்சியின் நாளேடான தீக்கதிர். எங்குமில்லாத வகையில் போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டதையும், தங்களது மாவட்டச் செயலாளர் பழனியை போலீசார் குறிவைத்து தாக்கியதையும் கோபம் கொப்பளிக்க எழுதியிருக்கிறது.
தேயிலைத் தோட்ட முதலாளிகளான பன்னாட்டு நிறுவனங்களையும், அவர்களது அடியாட் படையாக செயல்படும் போலீசையும். தொழிலாளி வர்க்க விரோத தி.மு.க. அரசையும் அம்பலப்படுத்த இதுவோர் பொன்னான வாய்ப்பல்லவா?
மதவாத பா.ஜ.க.-வுடன் கூட்டு வைத்தது மட்டுமல்ல, பா.ஜ.க-வை ஆதரிக்கும் பணமூட்டைகளான பெருமுதலாளிகளுடனும் திமு.க. கள்ளக் கூட்டு வைத்திருக்கிறது என்பதை திரை கிழித்திருக்கலாமல்லவா?
சாக்கடைக்குத் தூர் வாரவில்லை, தெரு விளக்கு எளியவில்லை என்பதையெல்லாம் சொல்லி ஓட்டுக் கேட்பதைக் காட்டிலும் இது வலிமையான ஆயுதமல்லவா? இந்த அரசியல் ஆயுதத்தை மார்க்சிஸ்டு கட்சி ஏன் பயன்படுத்த வில்லை?
மேலும் படிக்க:
மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
___________________________
தி இந்துவில் அக்டோபர் 6, 2013-ல் வெளிவந்த அஜித்தின் நேர்காணல்!

கேள்வி: “நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்…”
அஜித்: “ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!”
இவ்வளுதான் மேட்டர் யுவர் ஆனர் அவர்களே!
“வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!”
______________________________
எஸ்.எஸ்.சந்திரன் ஆபாசமாக கருணாநிதியைப் பேசும் போது ஜெயா குலுங்கிச் குலுங்கிச் சிரிப்பாரே அத்தகைய ஒரு ஆசிக்காகத்தான் இந்த கனவான் இப்படி கண்ணியத்தோடு கார்ட்டூன் போடுகிறார்.
தமிழகத்தின் அவமானங்களில் ஒன்று தினமணியின் மதி. புதுப் பெரியவாள் அல்லது சங்கராச்சாரி என்று எழுதும் ஜெயேந்திரனை கொலை புகழ் என்றோ, சொத்து திருட்டு வழக்கு புகழ் ஜெயாவை குறைந்தபட்சம் ஊழல் தலைவி என்றோ எழுதுவது இருக்கட்டும், கற்பனையில் கூட சிந்திக்கத் துப்பில்லாத இந்த ஜென்மத்திற்கு டாஸ்மாக்கால் தமிழக மக்கள் படும் துன்பத்தை விட அதை மூடுமாறு கருணாநிதி சொன்னது கொலை வெறியூட்டுகிறது என்றால் போயஸ் தோட்டத்து நாய்களே பொறாமையில் தலை குனியும்!
_____________________________
வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்