டாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கையோடு, பச்சையப்பா மாணவர்களை தாக்கிய போலிசைக் கண்டித்தும் தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடர்கின்றன. நெல்லை, நாகர்கோவில் ஆர்ப்பாட்டச் செய்திகள் படங்களோடு இங்கே இடம்பெறுகின்றன.
1. நாகர்கோவில் வழக்கறிஞர் போராட்டம்
குடி கெடுக்கும் டாஸ்மாக்கை மூடு என்ற கோரிக்கையுடன் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் 07.08.2015 அன்று மாவட்ட நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். “உரிமை காக்க அரசாங்கமா? ஊற்றிக் கொடுக்க அரசாங்கமா” போன்ற முழக்கங்களை நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் கவனித்தனர். சக வழக்கறிஞர்கள் மத்தியில் ஆர்ப்பாட்டம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
- மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், நாகர்கோவில்
__________________________________
2. நெல்லை சட்டக் கல்லூரி மாணவர்கள், மதிதா இந்துக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
 தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்கக் கோரியும், மாணவர்களின் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 06.08.2015 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பெருந்திரளாக சுமார் 2 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா;.
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை விடுவிக்கக் கோரியும், மாணவர்களின் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 06.08.2015 அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி வகுப்புகளை புறக்கணித்து பெருந்திரளாக சுமார் 2 மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா;.
மாணவர்கள் தங்களது போரட்டத்தில் முழக்கங்களாகவும், விளக்கவுரையிலும் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தினர்:
Ø பூரண மதுவிலக்கு கோரி நடத்தப்படும் போராட்டங்களை கொச்சைப்படுத்தி பேசிய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
Ø சசிபெருமாள் மரணம் தற்கொலை அல்ல. ஆட்சியாளர்கள் அலட்சியப் போக்கால் நடத்திய கொலை. அவரது இறப்பை கொலைவழக்காக பதிவு செய்து நீதிவிசாரணை நடத்த வேண்டும்.
Ø பூரண மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
Ø சமூக அக்கறையுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
Ø மதுவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகள் திரும்பபெறவேண்டும்.
இது யாருக்கான அரசு?
Ø டாஸ்மாக்கை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகின்ற போராட்டங்களுக்கு தமிழக அரசு பதில்கூறாமல் மௌனமாக இருப்பதன் காரணம் என்ன?
Ø ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிக்கூடங்களை மூடுவதற்கு தயங்காத தமிழக அரசு டாஸ்மாக்கை மூட மறுப்பது ஏன்?
Ø சமூக உணர்வோடு டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய மாணவர்களை கைது செய்து சிறையிலடைத்த காவல்துறை, ஊழல் வழக்கில் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி, பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, பல கடைகளை அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினரில் எத்தனை பேரை கைது செய்து சிறையிலடைத்தது? எத்தனை பேர் மீது வழக்கு தொடுத்தது?
Ø அரசு சேலத்தில் இறந்த டாஸ்மாக் ஊழியர் குடும்பத்திற்கு நஷ்டஈடும், அரசு வேலையும் வழங்க உத்தரவிட்டு அறிவித்துள்ளது. இதே போல் தமிழகத்தில் டாஸ்மாக் குடியின் காரணமாக மட்டும் உயிரிழந்துள்ள ஏராளமான குடும்பங்களுக்கு அரசு வேலையும் நஷ்டஈடும் வழங்குமா? அவர்களின் வாழ்வை காக்க அரசின் பதில் என்ன?
தொடர் போராட்டம்:
தமிழக அரசுக்கு கடன் இருப்பதாகவும் கடனை அடைக்க டாஸ்மாக் வருமானத்தை பயன்படுத்தி கடனை அடைப்பதாக கூறும் ஜெயலலிதா அரசுக்கு மாணவர்களான நாங்கள் அடுத்த கட்டமாக பிச்சையெடுத்து அரசுக்கு மணியார்டர் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
அரசுக்கு கெடு:
மாணவர்களான நாங்கள் அரசுக்கு 15 நாட்கள் கெடு விதிக்கிறோம். அதற்குள்ளாக அரசு மருத்துவமனைகளில் குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்தி விட்டு தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வரும் விதமாக அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இல்லையெனில் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வகுப்புகளை புறக்கணிப்போம், வீதியில் இறங்குவோம், ஜெயா அரசுக்கு பாடம் புகட்டுவோம்.
மதிதா இந்துக்கல்லூரி போராட்டம்
 மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருநெல்வேலி மாவட்டம் மதிதா இந்துக்கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காலை 8 மணிக்கு வகுப்புகளை புறக்கணிப்பதாக திட்டமிட்டிருந்தனர். மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாணவர்களை யாரும் வெளியே நிற்ககூடாது, ஒழுங்குமரியாதையாக கல்லூரிக்குள் சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக திருநெல்வேலி மாவட்டம் மதிதா இந்துக்கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் காலை 8 மணிக்கு வகுப்புகளை புறக்கணிப்பதாக திட்டமிட்டிருந்தனர். மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே வந்திருந்த 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாணவர்களை யாரும் வெளியே நிற்ககூடாது, ஒழுங்குமரியாதையாக கல்லூரிக்குள் சென்று விடுங்கள் என்று மிரட்டினர்.
அதையும் மீறி போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர்கள் காவல்துறையிடம், மதுவிலக்கு அமல்படுத்துக்கோரியும், மாணவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று எங்களுடைய எதிர்ப்பினை தமிழக அரசுக்கு தெரிவிக்கிறோம். அதனால் கல்லூரிக்குள் செல்ல முடியாது என்று கூறி கல்லூரி வாயிலில் நின்று யாரும் உள்ளே செல்லாமல் சுமார் 700 மாணவிகள் உட்பட 2000 மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தி 2 மணிநேரம் கல்லூரி வாயிலில் நின்று ,தேர்வு இருந்தும் வகுப்புகளை புறக்கணித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர்.
– தகவல்: மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், திருநெல்வேலி.


 
  
  
  
 
