Tuesday, May 6, 2025
முகப்புசெய்திநீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்

நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராக கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள்

-

நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராகவும், தமிழ் நாடு உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கவும், இதற்காக போராடிய வழக்குரைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்தும், இந்திய பார் கவுன்சில் வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்ததை கண்டித்தும், இதை ஒட்டி தமிழகம் முழுவதும் போராடும் வழக்குரைஞர்களுக்கு ஆதரவாகவும் 28-09-2015 அன்று கோவை அரசு சட்டக்கல்லுரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

kovai-law-college-support-lawyers-4இந்த ஆர்ப்பாட்டத்தில் நீதிபதிகளின் ஊழலுக்கு எதிராகவும், தமிழை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்கக் கோரியும், இந்திய பார் கவுன்சில் தமிழ் நாடு வழக்குரைஞர்களின் மீது எடுத்த நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டன…

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க