அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்லும் போது அது குறிப்பாக அமெரிக்க ஆளும் வர்க்கத்தை அதாவது அரசு, முதலாளிகள், கார்ப்பரேட் ஊடகங்கள் இவற்றையே குறிப்பிடுகின்றது. அமெரிக்க மக்களைப் பொறுத்த வரை அவர்கள் இந்த ஏகாதிபத்திய செல்வாக்கில் இருந்து வெளியேற வேண்டும் என்பதை இதுவரை மற்றவர்கள் சொல்லி வந்தார்கள். இன்று அமெரிக்க மக்களே உணரத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்தும் ஆக்கிரமிப்பு போர்களில் இருந்து, அமெரிக்காவின் அடியாள் இஸ்ரேல் நடத்தும் பாலஸ்தீனப் படுகொலை வரை அதை ஆவேசத்துடன் எதிர்க்கும் மக்கள் அங்கே ஏராளம். அதன்படி அமெரிக்காவிற்கு பாரதமாதாவை விற்பதற்கு டீல் பேச சென்றிருக்கும் மோடியையும் அமெரிக்க மக்கள் எதிர்க்கின்றனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள், பேராசிரியர்கள் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மோடியின் டிஜிட்டல் இந்தியா நிர்மூலமாக்கப் போகும் தனியுரிமை குறித்தும், மோடி- பா.ஜ.கவின் கிரிமினல் வரலாற்றை குறிப்பிட்டும் எதிர்ப்பை விளக்கியிருக்கிறார்கள்.
சிலிக்கான் வேலியில் மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திய நீதி மற்றும் பொறுப்புணர்வுக்கான கூட்டமைப்பு, modifail.com மோடி தோல்வி எனும் இணைய தளத்தில் மேற்கண்ட பிரச்சாரம் ஒன்றினை இங்கே தமிழ்ப்படுத்தியிருக்கிறோம்.
இதில் ஃபேஸ்புக் முதலாளி திருவாளர் சக், மோடியை சந்திப்பதை எதிர்த்து நடத்தப்பட்ட பிரச்சார இயக்கம் இடம் பெறுகிறது. அமெரிக்க ஏகாதிபத்திய கட்டமைப்பில்தான் அமெரிக்க ஐ.டி மற்றும் இணைய பன்னாட்டு நிறுவனங்களும் வருகின்றன. அமெரிக்க மற்றும் முழு உலக மக்களை உளவு பார்க்க இவர்கள்தான் அமெரிக்க அரசிற்கு உதவுகின்றனர். இணையத்திலும் அமெரிக்காவின் கொள்கைக்கேற்பத்தான் இவர்களது பார்வைகளும் இருக்கும்.
எனினும் இவர்களது போலித்தனத்தை இது போன்ற பிரச்சாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.
– வினவு
________________________________________
ஃபேஸ்புக் முதலாளி மற்றும் தலைமை நிர்வாகி, நூற்றுக்கணக்கான பியூரெல் கிருமி நாசினி பாட்டில்களை வைத்து என்ன செய்யப் போகிறார்?
இந்தியாவின் பிரதமர் மோடி யார் தெரியுமா? 2002 குஜராத் இனப்படுகொலைக்காக அமெரிக்காவில் நுழைவதற்கு அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்டவர். ஆனாலும் தான் குற்றமற்றவர், கைகள் சுத்தமென்று நம்மை நம்ப வைத்தவர்!
ஆனால் அவரது கைகளில் ஏராளம் ரத்தக் கறை உள்ளதை நாம் அறிவோம்!
நியூயார்க் டைம்ஸில் வந்த செய்திக் குறிப்பை பாருங்கள்!
மதவெறி இந்துக்களின் கூட்டம் இரண்டு மாதங்களுக்கும் மேல் நடத்திய கலவரம், தீ வைப்பு, சூறையாடல், வன்புணர்ச்சி, கொலைகள் அளவிடற்கறியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட முசுலீம்கள் கொல்லப்பட்டனர். 20,000த்திற்கும் மேற்பட்ட முசுலீம்களின் வீடுகள் மற்றும் வணிக நிலையங்கள், 360 வழிபாட்டு ஸ்தலங்கள் நொறுக்கப்பட்டன. 1,50,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக்கப் பட்டனர்.
இந்துக்களின் வன்முறைக் கூட்டத்தை பா.ஜ.கதான் வழிநடத்தியது என்று பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. போலிஸ் அதிகாரிகளோ ஒரு தனி நபரைக் கூட கைது செய்யாமல், கோபம் கொண்ட இந்துக்களை கலவரம் செய்ய அனுமதித்தனர். மோடிதான் அப்படி நடவடிக்கை எடுக்க கூடாது என்று உத்தரவிட்டதாக ஒரு உயர் போலீஸ் அதிகாரி கூறினார். கைது செய்யப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டவர்களும் சாட்சியங்கள் இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர்
– நியூயார்க் டைம்ஸ்
ஃபேஸ்புக்கின் தலைமை நிர்வாகி மார்க் சக்கர்பெர்க்கை சந்தியுங்கள்!
செப் 27, 2005 அன்று சக்கர்பெர்க் திருவாளர் மோடியுடன் கை குலுக்க போகிறார்!
ஜயா சக், உங்கள் கையை இரத்தக்கறையாக்க அனுமதியாதீர்கள்!
எனவே நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
ஆனாலும் மோடி தொடர்புடைய குற்றங்களின் எண்ணிக்கையை பார்க்கும் போது
சில குப்பிகள் மட்டும் போதுமா?
ஆகவே எவ்வளவு குப்பிகளை அனுப்ப முடியுமோ
அவ்வளவையும் அனுப்புவதென்று முடிவு செய்தோம்.
அன்பிற்குரிய சக்,
கறை போக்கும் பியூரெல் குப்பிகள் சரியான நேரத்திற்கு உங்களை அடையும் என நம்புகிறோம்.
கடந்த வாரம் உங்களது அண்டை அயலார் சுமார் 250 குப்பிகளை அனுப்பியுள்ளார்கள். ஒவ்வொன்றிலும் குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவருடைய பெயர் உள்ளது.
ஐயா சக், தயவு செய்து உனது கையை கழுவு!
அன்புடன்
நீதி மற்றும் பொறுப்புணர்வின் கூட்டமைப்பில் இருக்கும் உங்களது நண்பர்கள்
நன்றி: http://modifail.com/
மேலும் படிக்க:






