Saturday, June 27, 2026
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள்

கார்ப்பரேட் முதலாளிகள்

கார்ப்பரேட் முதலாளிகள்

கிரேட் நிகோபார் திட்டம்: அமெரிக்க மேலாதிக்கத்திற்கான அடிமை சேவை!

கிரேட் நிகோபர் என்பது ஒரு நிலம் அல்ல, அது பூமிப்பந்திற்கான உயிர் இருப்பின் அங்கம், அங்கு வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை – பண்பாட்டின் பிண்ணிப்பிணைந்த ஒரு பகுதி. இதனை ஏகபோக போட்டிக்காகவும், அம்பானி – அதானிகளின் வேட்டைக்காகவும் அழிக்கத் துடிக்கும் பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிராக அனைத்து தரப்பிலும் இருந்து குரலெழுப்ப வேண்டும்.

பருத்தி இறக்குமதி வரி ரத்து: விவசாயிகளைப் பலிகொடுக்கும் அமெரிக்க அடிமை மோடி அரசு!

2,000 ஏக்கர் பரப்பளவில் அதிக மானியம் பெற்று விவசாயம் செய்யும் அமெரிக்க கார்ப்பரேட் விவசாயிகளுடன் கடன் வாங்கி விவசாயம் செய்கின்ற இந்திய விவசாயிகளால் போட்டியிட முடியாது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்தைத் தனது விவசாயப் பணப்பயிர் பொருளாதாரத்தின் கணிசமான பங்கை இழக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது பாசிச மோடி அரசு.

அம்பானி செல்வம் கொழிக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதி வரி குறைப்பு!

ரிலையன்ஸ் நிறுவனம் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதனைத் தன்னுடைய ஜாம்நகர் ஆலையில் சுத்திகரித்து, எரிபொருட்களாக அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, தென் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. அம்பானி செல்வம் கொழிப்பதற்காகவே எரிபொருட்களுக்கான ஏற்றுமதி வரியானது தற்போது மோடி அரசால் குறைக்கப்பட்டுள்ளது.

பி.எஃப்.ஏ.எஸ் நச்சு ரசாயன ஆலை: ஏகாதிபத்தியங்களின் குப்பைத் தொட்டியாகி வரும் இந்தியா!

0
“எந்தவொரு சமூகமும் தங்களின் வேலைவாய்ப்புக்காகத் தங்கள் ஆரோக்கியத்தையோ, உயிரையோ பலி கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படக் கூடாது. ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு ஆபத்து என்று நிராகரித்த ஒரு நச்சுப் பொருளை, நம் நாட்டிற்குள் கொண்டு வந்து ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மீண்டும் விற்க அனுமதிக்க முடியாது.”

உ.பி, ஹரியானாவைத் தொடர்ந்து, ராஜஸ்தானிலும் தொழிலாளர் போராட்டம் மாபெரும் வெற்றி!

வேறு வழி இல்லாமல் அரசுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு நெட்டித் தள்ளப்பட்டது நேப்பினோ நிர்வாகம். பேச்சுவார்த்தை முடிவில் தொழிற்சங்க உறுப்பினர் ஆறு பேர் இடை நீக்கத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தைக் கூடிய விரைவில் முடித்துத் தருவதாகவும் ஒப்புக்கொண்டது. உடனடியாக தற்காலிகப் பொருளாதாரப் பலன்களாக சில கூடுதல் படிகளைத் தருவதாகவும் ஏற்றுக் கொண்டது.

கோழிப் பண்ணை விவசாயிகள்: அரசியல் மற்றும் தீர்வுக்கான திசைவழி | பாகம் 3

கோழிப்பண்ணை விவசாயிகள் பிரச்சினை என்பது இந்தியாவின் வேளாண் உற்பத்தி மற்றும் தொழில்துறை உற்பத்தி சார்ந்த அரசின் கொள்கை முடிவோடு தொடர்புடைய பிரச்சினையாகும். கறிக்கோழி உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தை ஆதரிக்கும் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றியமைக்காமல், வெறுமனே கூலி உயர்வு போராட்டம் மட்டும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்துவிடப் போவதில்லை.

அமெரிக்காவிடம் சரணடைந்த அதானி – அடகு வைக்கப்பட்ட நாட்டு நலன்

அதானி குழுமம் அமெரிக்காவில் செய்ய ஒப்புக்கொண்டுள்ள 10 பில்லியன் டாலர் முதலீடு என்பது, பெயரளவில் அவர்களுடையதாக இருந்தாலும், உண்மையில் அது இந்தியப் பொதுமக்களின் சேமிப்பையும், நாட்டின் பொருளாதார இறையாண்மையையும் உறிஞ்சி அங்கே கொண்டு சேர்க்கப்படும் மக்கள் பணமே ஆகும்.

கிருஷ்ணகிரி: டாட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன தொழிலாளர்கள் போராட்டம் வெல்லட்டும்!

ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை “கமிஷன்” என்ற பெயரில் இடைத்தரகராகச் செயல்படும் டி.சி.எஃப்.எம் நிறுவனம் பெற்றுக்கொண்டு தங்களைச் சுரண்டுவதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக சரியான சம்பளம் வழங்காமல் ஏமாற்றி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

ஆயிரக்கணக்கான ஊழியர்களை வெளியேற்றும் காக்னிசன்ட் நிறுவனம்!

காக்னிசன்ட் நிறுவனம் எவ்வளவு ஊழியர்களை வேலையில் வெளியேற்ற இருக்கிறது என்பதை நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனாலும் ஒதுக்கியுள்ள இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில் ஒரு கணக்கீடு செய்து இந்தியாவில் 12,000 முதல் 15,000 பேர் வரை வெளியேற்றப்படலாம் என்று ஐ.டி. துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வரலாறு இன்னும் முற்றுப் பெறவில்லை! | கவிதை

கூனிக் கிடந்த தொழிலாளி வர்க்கம் முதுகெலும்பின் கூர்முனையால், முதலாளித்துவத்தின் மார்பில் செங்குருதி கொண்டு செதுக்கிய மாபெரும் விடுதலை வரலாறு, இன்னும் முற்றுப் பெறவில்லை! இரத்தத்தை, வியர்வையை காலங்காலமாய் உறிஞ்சிக் கொழுத்து, கார்ப்பரேட் காட்டேறியாய் வளர்ந்து, முழு உலகும் போதாதென பாசிச வெறியேறிச் சுற்றித் திரிகிறது, முதலாளித்துவம்! பறிக்கப்பட்ட நம் உரிமைகளைப் பச்சை மாமிசமென மென்று தின்ன, மிச்சமிருக்கும் சட்ட வேலிகளை உடைத்து, வழி சமைத்துக் கொடுக்கின்றன ‘காவல்’ எந்திரங்கள்! மின்னல்களைத் தரிக்கும் மாபெரும் போராட்டத்தின் இடிமுழக்கமாய், நம் முன்னே எஞ்சி நிற்கிறது, சுரண்டலின் இருள் வானத்தை சுடர் விட்டெரிக்கும் செங்கொடி! உழைப்பின் உதிரம் குடித்து உண்டு கொழுக்கும் இராட்சசப் பிடாரிகளை வீழ்த்தாமல், உழைப்பின் ஊன் தின்னும் உயிர்க்கொல்லி கிருமிகளை ஒழிக்காமல், உழைப்பின் வடு உடலெல்லாம் வியர்வையாய் படிந்திட்ட உழைக்கும் வர்க்கத்துக்கு, ஒவ்வொரு மே நாளும் ஓய்வெடுக்கும் நாளல்ல... அடக்குமுறையின் விலங்குகளை அறுத்தெறிய செங்கொடி ஏந்தும் போர் நாள்! இஸ்க்ரா சமூக...

மே தின சிறப்புக் கதை: சிலந்தியும் ஈயும்! | மீள்பதிவு

“சிலந்தியும் ஈயும்” வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் புலப்படுத்துகிறார்.

மே 1, 2026: தமிழ்நாடு – புதுச்சேரி முழுவதும் பேரணி, ஆர்ப்பாட்டம்

மே நாள் வாழ்க! டிரம்ப்-மஸ்க் பாசிச கும்பல் தலைமையிலான அமெரிக்க உலக மேலாதிக்கத்தை முறியடிப்போம்! நாட்டை மறுகாலனியாக்கும் மோடி அரசை வீழ்த்துவோம்! *** சென்னை: இடம்: அண்ணா சிலை, ஆவடி பேருந்து நிலையம் எதிரில். நேரம்: காலை 9 மணி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு), சென்னை. *** காஞ்சிபுரம்: இடம்: காவலான் கேட், தாலுகா அலுவலகம், காஞ்சிபுரம். நேரம்: மாலை 4 மணி *** வேலூர்: இடம்: பேருந்து நிலையம் எதிரில் பேர்ணாம்பட் நேரம்: காலை 10 மணி *** கடலூர்: இடம்: மஞ்சகுப்பம் போஸ்ட் ஆபீஸ், கடலூர். நேரம்: காலை 10 மணி *** நெல்லை: இடம்: சந்தை ரவுண்டானா, மேலப்பாளையம்,...

Clarion Call for May Day 2026

We, who raise our voices for the rights of the working people, must take to the streets and fight against US hegemony. We must express our support for the working people protesting worldwide against US-Israeli dominance. We must expose and unmask all tendencies that speak in support of Russian-Chinese imperialism under the guise of a “multi-polar world”. We must build international proletarian solidarity.

டெல்லி நொய்டாவைச் சுற்றி வீசிய தொழிலாளர் போராட்ட அலை

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த தொழிலாளர்களின் இந்த ஒன்றுபட்ட வேலை நிறுத்தப் போராட்டத்தின் விளைவாக நிர்வாகங்கள் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தியுள்ளன. பீதி அடைந்த ஹரியானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில அரசுகள் உடனேயே குறைந்தபட்ச ஊதிய உயர்வுக்கான உத்தரவைப் பிறப்பித்தன.

நொய்டா: தொழிலாளி வர்க்கத்தின் மீது பாசிச யோகி அரசு நடத்தும் பயங்கரவாதப் போர்!

கூலி உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தவர்களை வரைமுறையின்றி கைது செய்வதும் அவர்களை நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதையும் கூலி உயர்வு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காகவே நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதையும் மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

அண்மை பதிவுகள்