ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்
முதலாளித்துவத்தை மீட்பதற்கான இத்தகைய நடவடிக்கைகள், அழுகி நாறி வரும் முதலாளித்துவத்தின் முடை நாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன. இதுதான் இந்த ஏகாதிபத்திய சொர்க்கபுரியின் அவலம்; ஏகாதிபத்திய மனிதாபிமானத்தின் கோர முகம். முதலாளித்துவம்தான் மனித நாகரீகத்தின் உச்சம் என்று கூச்சமின்றி மார்தட்டிக் கொள்ளும் முதலாளித்துவ அறிவு ஜீவிகளோ இதைப் பற்றி பேசுவதும் இல்லை, பேச விரும்புவதும் இல்லை.
உத்தரப் பிரதேசம்: மீண்டுமொரு தில்லி போராட்டம் – மோடியை எச்சரிக்கும் விவசாயிகள்!
இந்தமுறை தில்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் வீரியமான விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று மோடி அரசை எச்சரித்தார் எஸ்.கே.எம் தலைவர் ஹன்னன் மொல்லா!
கார்ப்பரேட்டுகளுக்கு சேவை புரியும் திவால் சட்டம் 2016!
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி மோசமான கடன்களை (bad loans) ‘தள்ளிவைப்பு’ செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இதில் மோசமான விசயம் என்னவென்றால், இவ்வாறு தள்ளிவைக்கப்பட்ட கடன்களில் வெறும் 13 சதவிகிதத்தை மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க முடிந்தது.
கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !
விழிஞ்சம் துறைமுக திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பறிபோவதை எதிர்த்து போராடும் மீனவ மக்களை கலவரக்காரர்களாக சித்தரிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு இத்திட்டதை பொருளாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் என்கின்றனர்.
விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !
போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.
இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !
வறுமை மற்றும் காலநிலை பேரழிவின் இந்த "இரட்டை அச்சுறுத்தலை" எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த குழந்தைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இந்தியா உலகளவில் மிக உயர்ந்த இடத்தில் உள்ளது என்று அது கூறியது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் அரசு பயங்கரவாதப் படுகொலைகள் | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!
தனியார்மயம் - தாராளமயம்- உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளே அரசியல் சட்டங்களாகவும் பொருளாதாரத் திட்டங்களாகவும் நீடிக்கும் வரை இப்படிப்பட்ட படுகொலைகளையும் அரசு பயங்கரவாத செயல்களையும் ஒருபோதும் தடுக்க முடியாது .
உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!
உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். அதானி உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்திற்காகப் போட்டி போட்டுக்கொண்டிருக்கையில் இந்தியா பட்டினிக் குறியீட்டில் அதள பாதாளத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது.
நவசேவா துறைமுகத்தில் ’ஹெராயின்’: அதானிகளும் போதைப்பொருள் மாஃபியாக்களும் சேர்ந்து நடத்தும் கொள்ளை!
உலக அளவில் இரண்டாவது பணக்காரராக மாறி இருக்கும் அதானியின் சொத்தில் நமது நாட்டு இளைஞர்களின் பல பின்தங்கிய ஏழை நாடுகளின் இளைஞர்களின் சீரழிக்கப்பட்ட வாழ்க்கையும் அடங்கியுள்ளது.
ஜார்க்கண்டில் கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றி படுகொலை செய்த மகேந்திரா நிறுவனம்!
பூஜா ராணி அவர்களுக்கு வழிவிடாமல் அங்கேயே நின்று விடாப்பிடியாக போராடி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அவர் மீது டிராக்டரை ஏற்றினர். இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பூஜா ராணி உயிரிழந்தார்.
பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!
தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.
என்.டி.டிவி நிறுவனத்துக்கே தெரியாமல் அந்நிறுவனத்தை கைப்பற்றிய அதானி!
அதானி இதுபோன்று ஊடகங்களை கைப்பற்றுவது ஒன்றும் முதல்முறை அல்ல. இதற்கு முன்பே ப்ளூம்பெர்க் குயின்ட்(Bloomberg Quint) என்ற ஆங்கில ஊடகத்தை அதானி கும்பல் கைப்பற்றி இருக்கிறது.
5G அலைக்கற்றையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்ற மோடி அரசு!
பிஎஸ்என்எல் புறக்கணிக்கப்பட்டால் 5ஜி போன்ற தொழில் நுட்பங்கள் மற்றும் மொபைல் சேவைகள் என்பது மேல்த்தட்டு மக்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும் என்பதில் ஐயமில்லை.
உணவுப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு!
ஜி.எஸ்.டி என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து கார்ப்பரேட் முதாலாளிகளுக்கு விருந்து வைக்கும் மோடி அரசை எதிர்த்து நாம் அனைவரும் போராட வேண்டியது அவசியம்.
ஒடிசா : ஜிண்டால் எஃகு ஆலைக்கு எதிராக போராடும் பழங்குடி மக்கள் – அடக்குமுறைகளை ஏவும் பாசிச அரசு !
ஒருபுறம், குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடிப் பெண் நிறுத்தப்பட்டிருப்பதை மத்திய, மாநில அரசுகள் பெருமை பீற்றி வருகின்றன. மறுபுறம், பழங்குடி மக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக போலீசு – இராணுவத்தால் ஒடுக்கப்படுகின்றனர்.