ஆயிரக்கணக்கான மக்கள் சிறை செல்லத் தயாராகி மணல் கொள்ளைக்கு எதிராக ஆற்றில் இறங்கி போராடினோம். கார்மாங்குடி மணல் குவாரியை மூடினோம்.
மேலப்பாலையூர் டாஸ்மாக்கை முற்றுகையிட்டு போராடி 14 பேர் ஒரு மாதம் சிறை சென்றார்கள். அந்த டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

ஆனால், “டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகி விடும். எனவே டாஸ்மாக்கை மூட முடியாது” என்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள் ஆட்சியாளர்கள். கள்ளச்சாராயம் விற்ற காலத்தில் கூட சிறுவர்கள், மாணவர்கள் யாரும் குடித்ததில்லை. ஊருக்குள் குடிப்பவர்கள் கூட விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் அன்றைக்கு குடிப்பவர்கள், குடிப்பது கேவலம், அசிங்கம் என்று கருதினார்கள். இன்றைக்கு சிறுவர்கள், மாணவர்கள் அனைவரும் குடிப்பது, புகைபிடிப்பது, பாக்கு போடுவது அனைத்தும் நாகரிகமானதாகவும், அது ஒன்றும் பெரிய தவறில்லை என்ற கேடுகெட்ட பண்பாட்டை பரப்பி உள்ளார்கள் ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கங்களும்.
குடிப்பதனால் கொலை, திருட்டு, பெண்களை கேலி செய்வது, பாலியல் வன்முறைக்கு செல்வது போன்ற ஊதாரித்தனமான வாழ்க்கைக்கு சென்றது. கௌரவம், ஒழுக்கம், இந்த சமூகத்தில் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள், சமூக அக்கறை என அனைத்திலும் ஏதுமற்ற விட்டேத்திகளாக, எது சொன்னாலும் தலையை ஆட்ட வேண்டும் என்ற ஆட்டு மந்தைகளாக நம்மை மாற்றியுள்ளார்கள் ஆட்சியாளர்கள்.
இந்த கேடுகெட்ட அடிமைத்தனமான பண்பாட்டை இனியும் சம்மதிக்கப் போகிறோமா? அல்லது அதை வீழ்த்தப் போகிறோமா? ஆம். வீழ்த்துவதுதான் நம்மையும், நமது சமூகத்தையும் சீர்படுத்தும். அடிப்படை உரிமைகளையும், சமூக அக்கறை சமூக அக்கறையையும் பெற்றுத் தரும்.
காவனூர் டாஸ்மாக்கை மூடவும், பவழங்குடி, தேவங்குடி ரோடு போடவும் அனைவரும் குடும்பத்தோடு போராடினால்தான் கோரிக்கையில் வெற்றிபெற முடியும்.
திருடக் கூடாது, பொய் சொல்லக்கூடாது, குடிபோதை கூடாது, பெண்களை மதிக்க வேண்டும் என்பதை குடும்பத்தின், சமூகத்தின் பண்பாடாக மாற்றப் போராடுவோம். இதுதான் எதிர்கால மனித குலத்திற்கு நாம் செய்யும் அடிப்படை கடமையாகும்.
மேலப்பாலையூர் டாஸ்மாக் கடையை மூட போராடி சிறை சென்றவர்கள்
S.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடுS.செந்தில்குமார், மாவட்டத் தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், விருதைR.நந்தகுமார், மாவட்டச் செயலாளர், விவசாய சங்கம், மேலப்பாலையூர் R.ராஜவன்னியன், ஒன்றியச் செயலாளர், இல.சிறுத்தொண்ட நாயனார், ஓய்வு, |
சி.தெய்வக்கண்ணு, உழவர்மன்றம், பவழங்குடிவெங்கடேசன், மக்கள் அதிகாரம், விளாங்காட்டூர்K.வேல்முருகன், மேலப்பாலையூர். K.ரத்தினசாமி, மேலப்பாலையூர் |
உத்தரவிடுவோம்!
குடிகெடுக்கும் காவனூர் டாஸ்மாக்கை மூடு!
பாழடைந்த பவழங்குடி, தேவங்குடி ரோடை போடு!
ஆளும் அருகதையற்ற அதிகாரிகள் செய்ய மாட்டார்கள்!
இனி மக்கள்தான் அதிகாரத்தை கையிலெடுத்து செயல்படுத்த வேண்டும்!!
ஒன்று திரள்வோம் மக்கள் அதிகாரத்தில்!!!
மாபெரும் ஆர்ப்பாட்டம்
07-10-2015 புதன், மாலை 4 மணி, கருவேப்பிலங்குறிச்சி
தலைமை
R. நந்தக்குமார், மாவட்ட செயலாளர், விவசாய சங்கம், மேலப்பாலையூர்
ஆர்ப்பாட்ட உரை
தோழர் முருகானந்தம், ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், விருதை.R ராஜவன்னியன், ஒன்றிய செயலாளர்., தே.மு.தி.க, சி.கீரனூர்திருமதி மந்திரிகுமாரி, கச்சிராயந்ததம்.T.இளங்கோவன் தலைமை ஆசிரியர் (ஓய்வு) கருவேப்பிலங்குறிச்சி இல. சிறுத்தொண்ட நாயனார், சி.தெய்வக்கண்ணு, வெங்கடேசன், G.கொளஞ்சி, M.G.பஞ்சமூர்த்தி, |
K. செல்வக்குமார், செயற்குழு உறுப்பினர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை.K. சுப்பிரமணியன், நேரம்A.கோபாலகிருஷ்ணன், கார்மாங்குடி தோழர் கதிர்வேல், செயலர் வை.வெங்கடேசன், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் செந்தில்குமார், மாவட்டத் தலைவர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், கடலூர் வழக்கறிஞர் பா. சிவாஜிசிங், விருதை வழக்கறிஞர் R. புஷ்பதேவன், மாவட்டச் செயலாளர், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விருதை. |
சிறப்புரை :
வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம், தமிழ்நாடு
நன்றியுரை :
K.வேல்முருகன், மேலப்பாளையூர்.
தகவல்
மக்கள் அதிகாரம்-தமிழ்நாடு
விருத்தாசலம் வட்டம் : 9791286994