Monday, July 26, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க அந்த சிறுவன்தான் வினவு - அவனைத் தடுக்க முடியாது !

அந்த சிறுவன்தான் வினவு – அவனைத் தடுக்க முடியாது !

-

தமிழகத்தில் மாஃபியா ஆட்சி – தோழர் மருதையனின் நேர்காணல் நிறைவு பாகம்.

இந்த காணொளியில்

“உல்லாசம் என்று கூறுவது தவறானதா?

பாடல் வரிகள் பெண்ணை(ஜெயலலிதாவை) இழிவுபடுத்துகிறதா?

கோவன் கைதுக்கு டாஸ்மாக் பாடல் மட்டும்தான் காரணமா?

வினவைத் தடை செய்ய முடியுமா?

மக்கள் போராட்டங்களை தூண்டிவிடுவது யார்?”

– போன்ற கேள்விகளை அலசுகிறார்

தோழர் கோவன் கைதை ஒட்டி அ.தி.மு.க மற்றும் போலிசு செய்து வரும் அவதூறு பிரச்சாரங்களை அம்பலப்படுத்துகிறார், தோழர் மருதையன்.

 

SUPPORT US

 1. இப்பிரச்சினை இன்றைய நிலையில் வெறுமனே தமிழ்நாட்டின் பிரச்சினை இல்லை. இது இந்தியா முழுக்க – உலகம் முழுக்க பேசப்படும் பிரச்சினை. அனைவரும் கேட்க வேண்டிய உரை இது. ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடவும்.

 2. தோழர் மருதையனின் நேர்காணலைகாணொலி காட்சி மட்டுமின்றி எழுத்து வடிவில் கொடுத்தால் 2g மொபைல் பயன்படுத்துபவர்களுக்கும் விஷயம் சென்றடையும், காணொலிகாட்சியை பார்த்தல் மற்றும் பதிவிறக்கம் செய்யும்படி பதிவிடுங்கள்

 3. கோவனின் கோபத்தில் தவறும் இல்லை அவர் வார்த்தைகளில் தவறும் இல்லை, பெருவாரியான மக்களின் எதிர்ப்பினை மீறி அந்த ——– முதல்வர் மீண்டும் மதுவிற்பனையினை அதிகரிக்கவே முயற்ச்சி எடுக்கின்றாரே தவிர அதை குறைப்பதர்க்கும், தவிர்ப்பதற்க்கும் முயர்ச்சி எடுக்கவில்லை, காரணம் இதில் இருந்தே தெரிகின்றது அவரது ஆணாவமும் அகங்காரமும், நிச்சயம் மாற்றம் வரும், ஆனால் அந்த ————– முதல்வறுக்கு சொம்பு தூக்கும் அந்த முதுகெலும்பு என்றால் என்னவென்று அறியாத மூடர் அமைச்சர் கூட்டதிற்க்கும் கொள்ளை அடிக்கவே நேரம் பத்தாமல் இருக்கும் எம் எல் ஏ க்களாயும் முதல் களை எடுக்க முயர்ச்சிக்கவேண்டும், உல்லாசம் என்பது என்ன நடந்தாலும் தவறு செய்து விட்டு குஷியாக இருப்பதை குறிக்கும் வார்த்தை தானே தவிர வேறு ஒன்றும் இல்லை ஆனால் சில கூட்டத்திற்க்கு உல்லாசம் என்றாலே அர்த்தம் வேராக த்தான் இருக்கும் , உல்லாச சுற்றுலா என்று மாணவர்களை அழைத்து செல்லும் ஆசிரியர் இனி எப்படி எடுத்து கொள்ளுவார் என்று தெரியவில்லை இனி.

  ——— போட்ட இடத்தில் தறுதலை என்று போட்டு கொள்ளுங்கள்.

 4. மக்கள் அதிகாரம் என்பதே வாக்கு சீட்டு தான் . மக்களுக்கு டாஸ்மாக் பிடிக்கவில்லை என்றால் ஜனநாயக முறையில் மாற்று அரசை தேர்ந்தெடுக்கலாம் . நீங்கள் கூறும் மாற்று ஜனநாயக அமைப்பு வாகு சீட்டு இல்லாமல் எப்படி நடக்கும் ? போலித் பீரோவுக்குள் நீங்கள் மட்டும் கட்சிக்குள்ளேயே வாக்கு அளித்து கொள்வதற்கு பெயர் ஜனநாயக அமைப்பு அல்ல.

  நீங்கள் மக்களுக்கு மாற்று அரசை , தேர்தலில் நின்று வழங்கலாம்.

  உல்லாசம் என்னும் வார்த்தையில் தவறு இல்லை ஆனால் அந்த வார்த்தைகள் வரும் பொது பிரதமர் மோடியோடு நிற்பதை கானொளியில் காட்டி இருப்பதால் அனர்த்தம் ஆகிவிட்டது.

  கால் கழுவி வந்தேன் என்பதை கோவில் குளம் அருகில் நின்று சொல்கிறீர்களா இல்லை ஊர் குளம் அருகில் நின்று சொல்கிறீர்களா என்பதை பொருது பொருள் மாறும்.

  இதை நினது பாடலாசிரியர் எழுதவில்ல ஆனாலும் காணொளி தயாரிப்பவர் தனது சின்ன புத்தியை காட்டியதால், மற்றவர்களும் ஆள்பவர்கள் மேல் உள்ள கோபத்தால் அப்ப்ரூவ் செய்துவிட்டு இருப்பார்கள்.

  ஆனால் இதையே பொருது கொள்ள முடியாத ஆளும் வர்க்கம் , தாலி இழந்து தெரு வோரம் சீண்டப்படும் விதவை தாய்மார்களின் மன நிலையில் சிந்திக்க வேண்டும் என்கிறீர்கள். அது நியாமானது.

  • வாக்களிப்பை விற்கும் மனநிலையில் உள்ள பெரும்பான்மையான மக்களின் அறியாமையை நீக்கத்தனே இந்த போராட்டம்.அவர்கள் அறியாமை நீங்கும் போது ஜனநாயகத்தால் தவறான அரசியல்வாதிகள்தான் உருவாக முடியுமா?
   சுயநலத்தை மறந்த மனிதனிடம் சின்ன புத்தியெல்லாம் இருக்காது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன்.

 5. தோழர் மருதையனின் விளக்க உரை வெகு அருமை. வினவின் நெடுநாளைய வாசகனான நான் வினவின் பல கருத்துக்களுடன் ஒத்துப் போனாலும், வினவின் கருத்துக்களில் அடிநாதமாக மார்க்சிய லெனினியம் இருப்பதையும், நக்சல் கருத்துக்கள் இருப்பதையும், வினவுக்கு தேர்தல் முறை ஜனநாயகத்தில் நம்பிக்கையின்மை இருப்பதையும் ஏற்க முடியவில்லை. தற்போதைய தேர்தல் முறை ஜன்நாயகத்தை விடவும் சிறந்த அரசமைப்பு முறை இருப்பதாகத் தெரியவில்லை. சீனாவின், சோவியத் ரஷியக் கூட்டமைப்பின், க்யூபாவின் அரசமைப்புக்கள் அடக்குமுறையின் அடிப்படையில் அமைந்தவை என்பது கண்கூடு.

  இன்றைக்கு வினவின் கோவனை ஒரு பாடலுக்காகக் கைது செய்ததும் பேச்சுரிமை, எழுத்துரிமை என்று உலகெங்கும் கண்டனக் குரல்களை வினவால் ஒருங்கிணைத்து எழுப்பமுடிகிறது என்றால், வினவு தளம் வெறுமே எளிய மக்களால் நடத்தப்படுகிறது என்ற தோற்றம் பொய் என்றுதான் தெரியவருகிறது. வினவுக்குமிகப் பெருமளவில் உலகளாவிய ஆதரவு இருக்கிறது, அந்த ஆதரவு மறைவாக இருக்கிறது என்றே தெரிகிறது. அப்படியான ஆதரவு இருப்பதில் தவறில்லை, ஆனால் அந்த ஆதரவை வெளிப்படையாகச் சொல்ல என்ன தயக்கம்?

  எல்லாரும் வினவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க முடிகிறது என்றால், அதற்குக் காரணம் இந்தியாவில் இன்றிடுக்கும் தேர்தல் முறையிலான ஜனநாயகம், சுதந்திரமான நீதித் துறை, சுதந்திரமான ஊடகங்கள் இவை மட்டுமே. ஆங்காங்கே இருக்கின்ற குறைபாடுகள் ஜனநாயகக் கட்டமைப்புக்குள்ளேயே களையப் படக் கூடியவையே. அவற்றைக் களைவதற்கு மார்க்சிய லெனினியம்தான் தேவை என்ற வினவின் கருத்துக்கள் சரியானவை அல்ல. மேலும் மார்க்சிய லெனினியப் பாதையில் கருத்துச் சுதந்திரம் என்பது அறவே இருக்காது என்பது அனைவரும் அறிந்ததே. அப்பாதை ஏற்புடையதல்ல. அப்பாதை ஜனநாயகத்துக்கு ஒவ்வாதது ஆகும்.

 6. மிக அருமையான விளக்கம். கடைசி ஒரு நிமிடம் நெஞசை நெகிழச் செய்து விட்டது. சிறு பொறி தான் பெருந்தீ என்பர். இது போன்ற பாடல்கள் சிறுபொறி தான் என்றாலும் இது காட்டுத்தீ மாதிரி பரவி விடக்கூடாது என்பதே ஆட்சியாளர்களின் அச்சத்திற்குக் காரணம். உங்கள் பணி தொடரட்டும்..

Leave a Reply to K,v.gandhi பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க