privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகோவன் பாடலை பாட அனுமதியில்லை - தொடரும் போராட்டங்கள்

கோவன் பாடலை பாட அனுமதியில்லை – தொடரும் போராட்டங்கள்

-

1. மதுரை

(குறிப்பு : 04-11-2015 அன்று வெளியான படங்கள் தொடர்பான விரிவான செய்தி)

மக்கள் அதிகாரம் – ஆர்ப்பாட்டம் – தென் மாவட்டங்கள்

மூடு டாஸ்மாக்கை” என்று பாடிய புரட்சிப்பாடகர் தோழன் கோவன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதிலும் ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் மதுரை மாநகரில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்02-11-2015 அன்று ஆர்ப்பாட்டம் நடந்துவதற்கு 31-10.-2015 அன்றே காவல்துறை வசம் அனுமதிக்கு எழுதிக் கொடுக்கப்பட்டது. அனுமதியை எழுத்துபூர்வமாக கொடுக்காமல் இழுத்தடித்து 01-11-2015 அன்று இரவு, “ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆகையால் அதை ஏற்றுக் கொண்டால் அனுமதி தருகிறோம். உடனே வந்து கையெழுத்துப் போட்டுச் செல்லுங்கள்” என வலியுறுத்தினார்கள் காவல் துறையினர்.

விதிமுறைகள் என்ன என்று பார்த்தால், ‘கோவன் பாடிய பாடலை பாடக்கூடாது. அவர் பாடியிருந்த பாடலை விநியோகம் செய்யக் கூடாது. பிரசுரம் விநியோகம் கூடாது. மைக் அனுமதி கிடையாது’ என ஏகப்பட்ட கிடையாது என்பதுடன் அனுமதி அளித்தார்கள்.

மக்கள் அதிகாரத்தின் தலைமைக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் காவல் துறை உயர் அதிகாரிகளிடம், “மைக் வைத்து கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்” என வாதாடிய போது “என்னால் ஒன்றும் செய்யமுடியாது. இது மேலிடத்து உத்தரவு, மைக் கட்டாயம் அனுமதி தர முடியாது” என்று சொன்னார்கள் அதிகாரிகள்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்நாம் அழைத்திருந்த சர்வ கட்சியை சேர்ந்த பிரமுகர்களும், ஆர்ப்பாட்டத்திற்கு வந்துவிட்டபடியால் அவர்களுடைய கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பதிவு செய்ய வேண்டிய நிலையில் ஆர்ப்பாட்டம் மைக் இல்லாமல் துவங்கியது.

ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரத்தின் மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் “ஆர்ப்பாட்டத்திற்கு மைக் வைக்கக் கூடாது என்று காவல் துறையினர் கூறியிருப்பது சட்டவிரோத நடவடிக்கையின் துவக்கம். மக்கள் டாஸ்மாக்கினால் சொல்ல முடியாத அளவிற்கு கொடூரமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அப்படி மக்களை பாதிக்கின்ற விசயங்களை விமர்சிப்பது சட்டத்தினால் வழங்கப்பட்ட உரிமை. மக்களிடம் சென்று கேட்டுப்பார்த்தால் தெரியும் டாஸ்மாக் பாதி்ப்பை மக்கள் சொல்வார்கள்.

கோகுல்ராஜை கொலை செய்த யுவராஜ் உடனே கைது செய்யப்படவில்லை. சிவகங்கை சிறுமியை வல்லுறவு செய்த போலீசு கைது செய்யப்படவில்லை. ஆனால் டாஸ்மாக்கை மூடு என்று பாடிய கோவன் கைது செய்யப்படுகிறார்.

கோவன் கைதினைத் தொடர்ந்து இன்று ஆர்ப்பாட்டத்திற்கு மைக் செட்டிற்கு மறுப்பு. அடுத்தடுத்து அரசியல் சட்ட விரோத செயல் அரங்கேற்றப்படுகிறது. பாசிசம் நெருங்கி விட்டது. அதனை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டியதிருக்கிறது” என இன்றைய அரசியல் சூழலை எடுத்துக்காட்டி பாசிச அபாய எச்சரிக்கை விடுத்தும் தலைமையுறையை நிறைவு செய்தார்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்பின்னர் தி.மு.க. வின் தீர்மானக் குழுத் தலைவரும், உயர்செயல்திட்டக்குழு உறுப்பினருமான, முன்னாள் அமைச்சர் திரு பொன். முத்துராமலிங்கம் அவர்களின் கண்டன உரையில்…

”கோவன் அடவாடித்தனமான சட்டத்தை பயன்படுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். இது ஏற்கத்தக்கது அல்ல. கண்டிக்கத்தக்கது.

“அரசியல் சட்டத்தின்படியான ஆட்சி நடைபெறுகிறது. அரசியல் சட்டத்தின் 19 யு பிரிவு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ள “பிரிடம் ஆஃப் ஸ்பீச் அண்ட் எக்ஸ்பிரஸன்” என்று மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கபட்டுள்ள திருத்த முடியாத உரிமை.

அந்த உரிமைப்படி கோவன் பாடியிருக்கிறார். அது தவறு என்று கருதினால், அவதூறு என்று கருதினால் வேறு சட்டப்பிரிவில் வழக்கு தொடரலாம். “செடிஷன்” – கூட்டுச்சதி என்று வழக்குதொடர்ந்து அவரை முடக்க அரசு திட்டமிடுகிறது. இது ஜனநாயக விரோத நடவடிக்கை.

டாஸ்மாக்கினால் குடும்பங்கள் அழிந்து வரும் சூழ்நிலை தமிழ்நாடு முழுக்க இருக்கிறது. இதை ஒரு பாடகர் எடுத்துச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

மேலும் மாநில அரசுகளுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் “ஸ்டேட் பாலிசி” வழிகாட்டும் நெறி 47 வது பிரிவு குடிப்பதை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடமைகளை விதித்துள்ளது. இக்கடமையை கோவன் செய்தால் தவறா?

செடிஷன் என்பது வெள்ளைக்கார கூட்டம் கொண்டுவந்த இந்த சட்டம் சட்ட புத்தகத்தில் இருக்கக் கூடாது.

சட்டத்தின் ஆட்சியை எல்லோரும் ஏற்கிறார்கள் ஆக அதனை பாதுகாக்க அனைவரும் சேர்ந்து பாதுகாக்க வேண்டும்” என சிறப்பான உரையை பதிவு செய்தார்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் தோழர் விஜயராஜன் ஆற்றிய உரையில்

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்“டாஸ்மாக்கினால் பல குடும்பங்கள், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள். இந்த அவலத்தை மனதில் தைக்கும் விதமாக பாடியதால் தான் கோவன் இரவோடு இரவாக கைது செய்யப்படுகிறார்.

ஜெயா சினிமாவில் ஆடாத ஆட்டமா? பாடாத பாட்டா? எம்.ஜி.ஆர். உடன் சேர்ந்து எத்தனை படத்தில் பாடியிருக்கிறீர்கள், ஆடியிருக்கிறீர்கள்? இதிலில்லாத அசிங்கமா?

காவல்துறை ஆளுகின்ற அரசின் ஏவல்துறை தான். இராமநாதபுரம் துப்பாக்கிச்சூடு 12 பேர் மரணம், வச்சாத்தி வீரப்பன் தேடுதல் வேட்டையில் மலை வாழ் பெண்கள் கற்பழிப்பு, சிவகங்கை சிறுமி கற்பழிப்பு இப்படி உள்ளது காவல்துறை.

பரப்பன அக்ரஹரத்தில் 21 நாட்கள் சிறையில் இருந்தும் ஜெயாவிற்கு திமிர் அடங்கவில்லை. அந்தத் திமிரில் தான் கோவனை கைது செய்கிறார். வரலாற்றில் எத்தனை சர்வதிகாரிகள் அடக்கி ஆண்டார்கள், ஹிட்லர் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டார். ஜெயாவும் அப்படி வீசப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

ரேசன் கடையில் பருப்பு கிடைப்பதில்லை, ரேசன் கடையை மூடிட்டு போயிடுறான். டாஸ்மாக் கடை 10 மணி வரை திறந்து வைக்கிறான். மண்ணெண்ணெய் பேரல் பேரலா வெளியே விக்கிறான். மக்களுக்கு கிடைப்பதில்லை. டாஸ்மார்க் சாராயம் பேரல் பேரலா விக்கிறான்.

டாஸ்மாக்கினால் தேனியில் 2 குழந்தைகளோடு தற்கொலை. இந்த அவலத்தை பாடிய தோழர் கோவனை உடனே விடுதலை செய்ய வேண்டும்” என பேசினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறநகர் மாவட்டச் செயலர் தோழர் காளிதாஸ் உரையில்….

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்
தோழர் வாஞ்சிநாதன்

“வ.உ.சி.யை கைது செய்த போது கலெக்டருக்கு ஒரு பக்கம் சிரைத்து விட்டு இன்னொரு பக்கம் சிரைக்க மாட்டேனுட்டான். அந்த மாதிரி இப்போது நாம் போராட வேண்டும்.

காவல் துறையும் இதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு மூணு கலர் வேட்டி கட்டியது போல போலீசு செயல்படக் கூடாது.

மைக் வைக்கக் கூடாது, ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடாது என்றால் காசு இருக்கிறவன் கோர்ட்டுக்கு போவான் இல்லாதவன் எங்கே போவான்.

குடி குடியை கெடுக்கும் என எல்லா இடத்திலையும் விளம்பரம் எதுக்கு புடுங்குறதுக்கா?

அரசாங்கம் ஒன்று செய்யலாம் அதிகமாக குடிக்கிறவனுக்கு வேணா பதக்கம் கொடு.  ஜெயா 21 நாள் ஜெயில் இருந்தார். இப்ப மீண்டும் அதே போல ஆட்டம் போடாதீர்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

“தொழிலாளர்களுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த மாட்டேன்” சொன்ன பாலைப் போல நீங்களும் சொல்லுங்க அப்போ தான் உங்களுக்கு மரியாதை” என காவல்துறைக்கு வேண்டுகோள் விட்டார். “அப்படி இல்லை என்றால் உங்களை மக்கள் தூக்கி எறிந்து விடுவார்கள்” என்று எச்சரி்க்கை விடுத்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் பாதுகாப்புக் குழு அமைப்பாளர் பேராசிரியர் சீனிவாசன் தனது உரையில்…

“வட இந்தியாவில் மதவெறி, தமிழகம் சாதி வெறி மற்றும் சாராயத்தில் நாசமாகிக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து மக்களை காப்பாற்ற மனித நேயத்தோடு கோவன் பாடல் பாடுகிறார். அவரை சிறை வைப்பது நமது உரிமைகளை இழந்து வருகிறோம் என்ற அச்சம் ஏற்படுகிறது” என உரை நிகழ்த்தினார்.

கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்பேரறிவாளன் – தமிழ்புலிகள் அபை்பின் இணைச் செயலர்…..” ஜெயா யாரைப் பார்த்து பயப்படுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்கின்ற கோவனை பார்த்து நடுக்கம், பயம் வந்திருக்கிறது. அதனால் தான் அவரை கைது செய்கிறார்.

பல கட்சியினரும் காவல்துறையை மட்டும் கண்டிக்கிறார்கள், ஜெயாவுக்கு தொடர்பு இல்லாதது போல.. காவல்துறையை கைவசம் வைத்துக் கொண்டு மீண்டும் ஆட்சியை பிடிக்க முயலுகிறார் ஜெயா.. புரட்சி வெடிக்க காவல்துறை, இராணுவம் தான் காரணம். டாஸ்மாக் தடுக்கச் சொன்னால் வழக்கு போடுவது சரியல்ல.. போலீசு எதிரி இராணுவத்தை போல செயல்படுகிறது. இதற்கு எதிராக தமிழக மக்கள் பாடம் புகட்டுவோம்.. விஸ்வரூபம் எடுப்போம்” என்றார்.

பால்ராஜ் – அரசியல் நண்பர்கள் வட்டம், ராஜபாளையம் தனது உரையில்

“பச்சை மரத்தை தீ எரிக்காது. ஆனால் காட்டுத் தீ காட்டில் எவ்வளவு பச்சை மரத்தையும் எரிக்கும். கோவன் மீது போடப்பட்டுள்ள வெள்ளையர்களுககு எதிராக போராடியவர்கள் மீது பிரிட்டீஷ் அரசு போட்ட வழக்கு.. டாஸ்மாக்குக்கு எதிராக போராடுவது ஜெயாவுக்கு துரோகம் என்றால் அதை முதலில் செய்வோம்.. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிப்பது போன்று நடவடிக்கை தான் கோவன் கைது.

அந்த உரிமைகளை அம்பேத்கர் தான் உருவாக்கித் தந்தார். கோவன் பாட்டில் ஆபாசமாக உள்ளதாக சொல்கிறார்கள். அ.தி.மு.க. கூட்டத்தில் செக்ஸ் டான்ஸ் ஆடித்தானே கூட்டம் சேர்க்கிறார்கள். உங்களுக்கு இளைஞர்களைப்பற்றி கவலை இல்லை…கோவன் போன்றவர்களுக்கு கவலை இருக்கிறது” என்றார்.

kovan-arrest-madurai-demo-06கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம்திராவிடர் கழகம் தலைமைக் கழக பேச்சாளர் வேங்கை மாறன் தனது உரையில்..

“அமெரிக்காவில் மக்கள் ஒழுக்கங் கெட்டவனா இருப்பான். ஆள்பவன் ஒழுக்கமா இருக்கணும்னு நினைப்பான், ஆனால் தமிழ் நாட்டில் மக்கள் ஒழுக்கமா இருப்பான், ஆள்பவர்கள் ஒழுக்கங் கெட்டவர்களா இருக்கிறார்கள்.

கோவன் கைதின் மூலம் பல கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விளம்பரத்தை தேடித் தந்துள்ளார்கள். 30 ஆண்டுகள் முழங்கிய குரலை 90 நாட்கள் முடக்க முடியுமா?” என்று கேள்வி எழுப்பி உரையாற்றினார்.

கனகவேல் – சமநீதி வழக்கறிஞர் சங்கம்- மதுரை

“கோவன் பாடல் முதல்வரை கேவல்படுத்துகிறது என்கிறார்கள். எல்லா இலவசப் பொருட்களிலும் உன் போட்டாவை போட்டு கொடுக்கிற. ஊத்தி கொடுக்கிறதுக்கு நீதான பொறுப்பு..

இலக்கு வைத்து டாஸ்மாக் விற்பனை நடக்கிறது. ஜெயா தமிழ் சமூகத்தை சீரழித்தவர்” ஜெயாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தினார்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையின் தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர். செல்வம் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் சந்திர போசு கோவன் கைதானத்திற்கு காரணமான அதே பாடலை பாடினார். பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் ஜெயாவின் அரசை அம்பலப்படுத்தியும், பாடலின் நோக்கத்தையும் விளக்கி எழுச்சி உரை ஆற்றினார்.

மக்கள் அதிகாரம் தோழர் குருசாமி நன்றியுரை தெரிவுத்தவுடன் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதியைச் சுற்றியுள்ள மக்களின் கவனத்தை ஈர்த்தது.

தோழர். கோவன் கைது – கண்டன சுவரொட்டி மீது வழக்கு

தோழர் கோவன் கைதை ஒட்டி 02-11-2015 அன்று மதுரையில் காவல் துறை அனுமதியுடன் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தின் சுவரொட்டி தென் மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. தேனி மாவட்டம் கூடலூரிலும் இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த அன்று மாலை இந்த சுவரொட்டி ஒட்டியதற்காக வழக்கு பதிவு செய்திருப்பதாக காவல் துறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. கூடலூர் மாமி போலீஸ் தனது விசுவாசத்தை இதன் மூலம் காட்டியுள்ளது.
கோவன் கைது - மதுரை ஆர்ப்பாட்டம் - போஸ்டர்

2. கடலூர்

க்கள் பாடகரும் ம.க.இ.க மையக் கலைக்குழுவின் தோழர் கோவனை கைது செய்த ஜெயாவின் அடியாள் படையான தமிழக போலீசைக் கண்டித்தும், கோவனை விடுதலை செய்யக் கோரியும், கடலூர் உழவர் சந்தை அருகில் 02-11-2015 அன்று காலை 10.30 மணி அளவில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் அனுமதி மறுத்த காவல்துறை, 01-11-2015 அன்று இரவு 9 மணிக்கு மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் பாலுவை அழைத்து, 10.00 முதல் 11.00 மணி வரை மட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும், முழக்கம் போடக் கூடாது, பாட்டு போடக் கூடாது, மோளம், அடிக்கக் கூடாது, ஒலிபெருக்கிக் கூடாது என்ற பல கூடாதுகளை கட்டுப்பாடாக போட்டன். மீறினால் கைது செய்யப்படும் என்று மிரட்டினார்கள்.

சரியாக காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வின் மாநில அணி அமைப்பாளர் புகழேந்தி, வி.சி.க மாவட்டச் செயலாளர் தாமரைச் செல்வன், நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் கடல் திபன், சி.பி.ஐ மாவட்ட இணைச் செயலாளர் குலேப், சி.பி.எம் தோழர் அமர்நாத், வெண்புறா பொதுநல இயக்கம் குமார், சாயப்பட்டறை போராட்ட குழ பூங்குன்றன், ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டம் பகல் 1.30 மணி வரை நடைபெற்றது.

மக்கள் பாடகர் கோவன் கைது என்பது சாதாரண நிகழ்வல்ல, கல்புர்கி கொலை, அரியானாவின் தலித் குழந்தைகள் படுகொலை, மாட்டுக் கறி விவகாரம் என இந்திய அளவிலும், தமிழக அளவிலும் அறிவிக்கப்படாத அவசர நிலை ஆட்சி நடைபெறுகிறது. இனி சாதாரண போராட்டங்களால் தீர்வு இல்லை. நமது உரிமையை காத்துக் கொள்வதுதான் ஒரே வழி.

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்கருத்துரிமை, பேச்சுரிமை இவற்றை நசுக்கும் போது அவை நிச்சயம் வேறு ஒன்றாக மாறும். அது மக்கள் அதிகாரமாகவும் இருக்கும். நாங்கள் தேர்தல் அரசியலில் இருந்தாலும் மக்கள் அதிகாரம் அமைப்புடம் கைகோர்ப்போம் என்றும் கோவன் விடுதலை ஆக வேண்டும், டாஸ்மாக் மூடப்பட வேண்டும், அதற்கான மக்கள் அதிகாரத்தின் போராட்டத்தில் இணைவோம் என்றும்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு கட்சியினர் உரையாற்றினார்கள்.

விடுதலை செய்! விடுதலை செய்!

மக்கள் பாடகர் கோவனை
விடுதலை செய்! விடுதலை செய்!

பறிக்காதே! பறிக்காதே!
கருத்துரிமையை பறிக்காதே
பேச்சுரிமையை பறிக்காதே!
எழுத்துரிமையை பறிக்காதே!

கோவன் கைது - கடலூர் ஆர்ப்பாட்டம்ஊருக்கூரு சாராயம்
தள்ளாடுது தமிழகம்
ஊத்திக் கொடுத்த உத்தமிக்கு
போயசிலே உல்லாசம்
தட்டிக் கேட்டால் சிறைவாசமா?

சாராயக் கடையை மூடச் சொன்னால்
தேசத் துரோக சிறைவாசமா?
அல்லிராணி ஆட்சியிலே
அய்யோ! அய்யோ! கொடுமையடா?

படிக்கப் போகுற வயசுல
குடிக்கச் சொல்லி ஊத்துறாங்க
படிக்கணுமா? குடிக்கணுமா?
கேள்வி கேட்டால் தேசத் துரோகமா?

அப்பா குடிக்க வேணாம்னு
புள்ள சொல்லி கேட்டிருப்ப
அம்மா குடிக்க சொல்லுறத
கேட்டியா? கேட்டியா?

தகவல்

மக்கள் அதிகாரம்,
கடலூர்

3. விழுப்புரம்

  • ஆர்.எஸ்.எஸ் மயமாகிறது நீதித்துறை! ஊழலும் சர்வாதிகாரமுமே அதன் சட்டம்!
  • என்ன செய்ய போகிறோம்?
  • தோழர் கோவனை விடுதலை செய்:
  • பொதுக்கூட்டத்திற்கு தடை! தடையை மீறி ஆர்ப்பாட்டம்
  • அதிர்ந்தது விழுப்புரம் ரயில்நிலையம்! பணிந்தது போலிசு!

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பதினான்கு பேரின் தற்காலிக நீக்கத்தை ரத்து செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர்களை இழிவு படுத்தும் நோக்கத்துடன் நேரடி விசாரணையின் ஒளிபரப்பை கண்டித்தும், மதுரை மாவட்ட வழக்கறிஞர்களைசங்க கட்டிடத்திலிருந்து வெளியேற்றும் உத்தரவை ரத்து செய்யக்கோரியும் 04-11-2015 அன்று பொதுக்கூட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டு காவல்துறையிடம் 23-10-2015 அன்று அனுமதி கேட்டு விண்ணப்பித்திருந்தோம். அன்று முதல் எந்த வித மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த காவல்துறை 04-11-2015 அன்று “உங்கள் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை” என்றனர். காரணம் கேட்டதற்கு, “தமிழ்நாடு காவல் சட்டம் 30(2) அமுலில் உள்ளதாலும், நீங்கள் அனுமதி கேட்டுள்ள இடம் மக்கள் அதிகம் கூடுவார்கள், மேலும் நீதி மன்ற தீர்ப்பை திரும்ப பெற கோரி பேச உள்ளீர்கள் எனவே உங்களுக்கு அனுமதி மறுக்கிறோம் மேலும் நீதித்துறையும் நாங்களும் (போலிசும்) வேறு வேறல்ல” என்றனர்.

ஏற்கனவே நாடு முழுவதும் கருத்துரிமை, பேச்சுரிமை மற்றும் பாடும் உரிமை கூட மறுக்கப்பட்டு வரும் சூழலில் இந்தத் தடை என்பது நாம் எதிபார்த்த ஒன்று தான். இருப்பினும் நெருங்கி வரும் பேரபாயமான நீதிமன்றத்தின் பார்ப்பன பாசிச சூழலை முறியடிக்கவும், ம.க.இ.க வின் மையக்கலைகுழு பாடகர் தோழர் கோவனை விடுதலை செய்யக்கோரியும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவதென முடிவு செய்தோம்.. இதனைத் தெரிந்து கொண்ட காவல் துறை சரியாக 4.00 மணிக்கு ரயில் நிலைய வாயிலில் போலிசு படையை குவித்து வைத்திருந்தது.

ரயில் நிலையம் அருகே கூட்டம் கூட்டமாக நின்றிருந்த பொதுமக்களிடம், “இங்கே ஏன் நிற்கிறீர்கள்.. இங்கு ஒரு மிகப் பெரிய கைது சம்பவம் நடக்கப் போகிறது உடனே கலைந்து செல்லுங்கள்” என பீதியூட்டி மிரட்டியது போலிசு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ரயில் நிலைய வாயிலை ஒட்டி விழுப்புரம் புதுச்சேரி பிரதான சாலையில் சரியாக 5.1௦ மணிக்கு விசில் சத்தம் வந்தவுடன், முழக்கமிட்டவாறு வந்த தோழர்களை சற்றும் எதிர்பாராத போலிசு ஓடோடி வந்து தோழர்களின் கையில் இருந்த முழக்கத்தையும், பேனரையும் கொடியையும் பிடுங்கி நம்மை அப்புறபடுத்த முயற்சித்தது. அதே நேரத்தில் இன்னொரு திசையிலிருந்து முழக்கமிட்டவாறே வந்த தோழர்களை பார்த்து என்ன செய்வதென்று புரியாமல் திகைத்த போலிசு, தோழர்களின் சாலை மறியலை உடனடியாக தடுக்க முடியவில்லை. விழுப்புரம்-புதுச்சேரி பிரதான சாலையில் மறியல் தொடங்கியதும் போக்குவரத்து இருபுறமும் ஸ்தம்பித்தது.

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்ஒரு கட்டத்திற்குமேல் சுதாரித்த போலிசு தோழர்களிடம் இறங்கிவந்து பேசிக்கொண்டே, தள்ளுமுள்ளுவையும் தொடங்கியது. போக்குவரத்து நெருக்கடி அதிகரித்ததும் போலிசு முற்றிலும் இறங்கி வந்து, “நீங்கள் உள்பக்கம் நின்று ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுங்கள்” என்று அனுமதி கொடுத்தது. அதற்குள் மக்கள் சுற்றிலும் திரண்டு நிற்க ஆரம்பித்தனர். மைக் செட் இல்லாமலேயே தோழர்களின் முழக்கம் சுற்று வட்டாரப் பகுதியையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் விழுப்புரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டது.

அனைத்து பத்திரிகை தொலைகாட்சிகளும் நம் மறியலை, அதன் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தை செய்தியாக சேகரித்தனர். மக்கள் அதிகாரம் திருவெண்ணெய் நல்லூர் வட்டார ஒருங்கிணைப்பாளர், தோழர்.ஏழுமலை பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கையில் “நீதித்துறையின் ஊழலை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்துவதாக திட்டமிட்டிருந்தோம். காவல்துறை அனுமதி தர மறுத்துவிட்டது. மேலும் டாஸ்மாக்கினால் லட்சக்கணக்கான மக்கள் வக்கற்றவர்களாகவும், நாடோடிகளாகவும் வாழ்ந்து வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்களின் தாலி அறுக்கப்பட்டுள்ளது, இந்த சூழலில் கடந்த நான்கு மாதமாக மக்கள் அதிகாரம் சார்பில் டாஸ்மாக்கை மூடக்கோரி பிரச்சாரம் செய்து வருகிறோம்.

கோவன் கைது - விழுப்புரம் ஆர்ப்பாட்டம்இந்த நிலையிலே ஜெயாவின் இழிவான ஆட்சியையும், டாஸ்மாக்கை மூடக்கோரியும் ம.க.இ.க வின் மையக்கலை குழு பாடகர் தோழர் கோவன் பாடல் மூலம் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்து வந்தார். அவரை அரசுக்கு எதிராகவும், மக்களுக்கு எதிராகவும் பாடினார் என கைது செய்து புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளனர். எனவே உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்.. டாஸ்மாக்கை நிரந்தரமாக மூட வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி டாஸ்மாக்கை மூடு வரை மக்கள் அதிகாரம் போராடும்” என்றார்.

இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் கடலூர் ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு பேசுகையில், “பெரும்பான்மை மக்களின் குடியை கெடுக்கும் பாசிச ஜெயா அரசு வெறிபிடித்த போலிசை ஏவிவிட்டு டாஸ்மாக்கை மூடக்கோரி பாடல் மூலம் பிரச்சாரம் செய்த தோழர் கோவனை கைது செய்துள்ளது. உடனடியாக அவரை விடுதலை செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கட்சியினரை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.. நூற்றுக்கணக்கான மக்கள் ஆங்காங்கே நின்று ஆர்ப்பாட்டத்தை ஆர்வமாக கவனித்தனர்.

இவண்

மக்கள் அதிகாரம்,
விழுப்புரம். தொடர்புக்கு; 99441 17320

4. தருமபுரி

மூடு டாஸ்மாக்கை என்பது தேசத் துரோகமா? ம.க.இ.க புரட்சிகர பாடகர் தோழர் கோவனை நிபந்தனையின்றி உடனே விடுதலை செய் என்ற முழக்கத்துடம் பல்வேறு அரசியல் கட்சிகளின் பங்கேற்புடன் மக்கள் அதிகாரம் சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

மக்கள் அதிகாரம்,
தருமபுரி