Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை

-

நேற்று 17.11.2015 மாலை 5.30 மணிக்கு சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து தோழர் கோவன் விடுதலை செய்யப்பட்டார். மதியம் முதலே ஊடக நண்பர்களும், தோழர்களும் குழுமியிருந்தனர்.

தோழர் கோவன் சிறையிலிருந்து வெளியே வரும் போதே முழக்கமிட, குழுமியிருந்த தோழர்களும் முழக்கமிட்டனர். பின்னர் சிறை வாயிலில் ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்தார் தோழர் கோவன்.

பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார்.

சிறையிலிருந்து விடுதலை – போராட்டம் தொடர்கிறது !

kovan's release (4)

– செய்தி, புகைப்படங்கள், வீடியோ: வினவு செய்தியாளர்கள்