Saturday, May 10, 2025
முகப்புசெய்திகும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !

கும்மிடிப்பூண்டியில் தங்குவதற்கு இடமில்லை !

-

நண்பர்களே,

வினவு தளத்தில் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியிடப்பட்ட ஒரு பதிவுக்கு பிறகு ஒரு வாரம் பதிவுகள் வெளியிட இயலவில்லை. மழை, வெள்ளம், மின்சாரம் துண்டிப்பு,  இணையம் மற்றும் தகவல் தொடர்பின்மை காரணமாக எங்கள் செயல்பாடும் முற்றிலும் பாதிப்படைந்தது. இடையில் முக்கியமான நாட்களில் செயல்பட முடியாமைக்கு வருந்துகிறோம். அந்த நாட்களில் எமது  செய்தியாளர்கள் சென்னையின் வெள்ளப்பகுதிகள் பலவற்றுக்கு சென்று மக்களை சந்தித்து பல்வேறு செய்திகளை சேகரித்தனர். எமது தோழமை அமைப்புகளின் தோழர்கள் நகரின் பல்வேறு இடங்களில் நிவாரணப்பணிகளையும் செய்து வருகின்றனர். அரசு, ஊடகம், மக்கள் என இந்த துயரம் குறித்த பேசுவதற்கு நிறைய இருக்கிறது. முயல்கிறோம்.

– வினவு

சென்னையின் பெய்த கனமழை காரணமாக ஏரிகள் நிரம்பி வெள்ளமாய் மக்கள் குடியிருப்புகளுக்குள் புகுந்து நினைத்துப் பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கூடவே இந்த சேதம் அரசு எந்திரத்தின் அலட்சியத்தையும் உலகறியச் செய்திருக்கிறது. வெள்ளத்திலிருந்து அந்தந்த பகுதி மக்களை தங்களைக் காப்பாற்றிக் கொண்டதே அதிகம். அதன்பிறகு அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைப்பதை கூட பல பகுதிகளில் அரசு நிர்வாகம் செய்ய வில்லை.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம், அமைப்புகள் சென்னையில் மதுரவாயல், சேத்துப்பட்டு, மணலி, கும்மிடிப்பூண்டி, முடிச்சூர், எம்.ஜி.ஆர் முதலான பகுதிகளில் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். கூடவே அரசையும் நிவாரணப்பணிக்கு அழைத்து வர போரடுகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு இடம் கேட்டு 07.12.2015 அன்று காலையில் பு.ஜ.தொ.மு தலைமையில் கொட்டும் மழையில் மக்களுடன் சாலை மறியல் நடைபெற்றது.

Chennai-Flood-people-protest-kummudipoondi-7

 

 

 

 

 

 

 

 

 

 

 

செ ன்னை எழும்பூருக்கு அருகே இருக்கும் சேத்துப்பட்டு கோசான்குளம் பகுதியில் ஒரு மாதமாக கழிவுநீரும் மழைநீரும் கலந்து தரைதளம் ஒரு முழம் அளவு சாக்கடையில் மூழ்கியுள்ளது. தொற்று நோய், சேத்துப்புண், காய்ச்சலால் மக்கள் அவதியுறுகின்றனர். அரசு நிர்வாகம் வராத நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தினர். அதனை அடுத்து கழிவுநீரை அகற்ற முயற்சி மேற்கொண்டதோடு மக்களை திரட்டி சாலை மறியல் நடத்தப்பட்டது. விரைந்து வந்த போலீசு மக்களில் நால்வரை அழைத்து சென்று பேச்சுவார்த்தை நாடகம் நடத்தியது

 

மேலதிக செய்திகள் அடுத்தடுத்து வெளியிடப்படும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க