privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !

மீனவர்களும் முசுலீம்களும்தான் முதல்ல வந்தாங்க !

-

சென்னை ஜாபர்கான் பேட்டையிலிருந்து கோட்டூர்புரம், வேளச்சேரி ராம் நகர் பகுதி வரை சென்று பார்த்ததில் மீனவ இளைஞர்களையும், பகுதி இளைஞர்களையும், முஸ்லீம் அமைப்பினரையும் மக்கள் நன்றியோடு பார்க்கிறார்கள்.

வீட்டில் குடிக்க வைத்திருந்த தண்ணீர் கேன்களை கட்டி அதன் மூலம் தன் குழந்தைகளை காப்பாற்றிய இளைஞனை தன் தெய்வம் என்று போற்றுகிறார் ஒரு தாய். ”மீனவர்கள் தான் சார் எங்கள காப்பாத்துனாங்க”, ஜாபர்கான்பேட்டை கூலிதொழிலாளிகள் முதல் ராம்நகர் ஐ.டி ஊழியர்கள் வரை இதை கூறுகிறார்கள்.

அடுத்தபடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருபவர்களை பற்றி மக்கள் நன்றியோடு கூறினார்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களின் பங்கு குறித்து சிலாகித்து பேசுகிறார்கள். சபரிமலைக்கு மாலை அணிந்திருக்கும் செட்டித்தோட்டம் பகுதி இளைஞர்
ஒருவர் நம்மிடம “மக்கள் எல்லாரும் உதவி பண்றாங்க. மத்தவங்க கூட தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்ச பின்னாடிதான் நிவாரணம் கொண்டு வந்தாங்க. ஆனா இவ்ளோ தண்ணியிருந்தப்ப முஸ்லீம் ஆளுங்கதான் மரபலகையில மிதவை செஞ்சு சாப்பாடு கொண்டாந்தாங்க.” என்று கூறினார். நாம் சென்று வந்த பல பகுதிகளிலும் நிவாரண் பணியில் ஈடுபவர்களில் பரவலாக முஸ்லீம் மக்களை பார்க்க முடிந்தது.

முசுலீம்கள் என்றால் பயங்கரவாதிகள், குண்டு வைப்பவர்கள், சந்தேகத்திற்குரியவர்கள் என்பதில் ஆரம்பித்து மணம், குணம், உணவு வரை ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி வைத்திருக்கும் பொதுப்புத்தி தவறானது என்பதை ஓரளவிற்கேனும் ‘இந்துக்கள்’ உணர்வார்கள் என்பது உறுதி. ஆர்.எஸ்.எஸ் அவாள் கூட்டம் கரண்டை காலில் தண்ணீர் கூட நனையாமல் நாரதகானசபாவில் வெங்காயம் வெட்டி தயிர்சாதம் போட்ட சேவையெல்லாம் முசுலீம் இளைஞர்கள் செய்திருக்கும் அளப்பரிய பணியின் கால் தூசுக்கு கூட பெறாது என்பதும் நிச்சயம்.  உடன் சென்றதாக இருக்கட்டும், குப்பைகளை அகற்றுவதாக இருக்கட்டும், நிவாரணப் பொருட்களை உடன் திரட்டி விநியோகித்தாக இருக்கட்டும் அனைத்தும் திட்டமிட்ட முறையில் உரிய மக்களுக்கு போய்ச் சேர்ந்தது.

பாரிமுனையின் கறிக்கடை சங்கத்தினர் தினமும் 2000ம் பேருக்கு கோழிக்கறி பிரியாணியே போட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவையெல்லாம் இந்துமதவெறியர் போல மிகுந்த விளம்பர நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. பலருக்கும் தெரியாது. முசுலீம்கள் என்றால் தனித்திருப்பார்கள், ஒட்டமாட்டார்கள் என்ற பொய்ப்பிரச்சாரமும் இங்கே தகர்க்கப்பட்டிருக்கிறது.

மேற்கு சைதாப்பேட்டையை ஒட்டியுள்ள செட்டித்தோட்டம் பகுதி அடையாறு ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது.  நகரத்தில் கூலிவேலை செய்யும் மக்களின் குடிசைகள் மற்றும் சிறுவீடுகளுக்கு சற்று தொலைவில் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளும் இருக்கின்றது. இருவர்க்கத்தினரையும் புரட்டிப் போட்டிருக்கிறது வெள்ளம்.

தங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் ஜன்னல்கள் வழியே குப்பத்து இளைஞர்களிடமும் மற்றவர்களிடமும் அபயக்குரல் எழுப்புவோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்,  அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்.  “அவர்கள் நிறையவே உதவி செய்தார்கள்”என்று குடிசைப் பகுதி இளைஞர்களை ஆங்கிலத்தில் வாழ்த்துகிறார்கள். இருப்பினும் இந்த வெள்ளம் தங்களையும் கையேந்த வைத்துவிட்டதாக பொருமவும் செய்கிறார்கள்.

வளர்ச்சி என்ற பெயரில் வீடுகள், கார்கள், நுகர்வுப் பொருட்கள் அடங்கிய உலகமயமாக்கத்தை ஆதரித்தவர்கள் இன்று ஏரிகள் ஆக்கிரமிப்பையும், ரியல் எஸ்டெட் வீடுகளையும், மியாட் மருத்துவமனையின் படுகொலையையும் கண்டித்து பேசுகிறார்கள். எட்டிப்பார்க்காத அரசு குறித்தும் அவர்களுக்கு விமரிசனமிருக்கிறது. ஒரு சிலரோ பகுதி வாழ் மக்களை அணிதிரட்டி நிவாரணப்பணிகளையும் கூட செய்கிறார்கள். அடுக்கு மாடிகளில் தனித்திருந்து வாழப்பழகியவர்கள் இன்று கூட்டாக வாழவேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள், கொஞ்சமேனும்.

chennai-flood-photos-2
ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்பின் விளைவினால் பேரழிவைக் கொண்டு வந்த அடையாறு சற்று அமைதியாக ஓடுகிறது.
chennai-flood-photos-1
வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பொருட்களோடு விளையாடும் சிறுவர்கள்- ஜாபர்கான்பேட்டை கரையோரம் கட்டப்பட்டுவரும் வணிகவளாகத்தில்.

 

settithottam-flood-damages-photo-8
வெள்ளத்தில் அடித்து நொறுக்கப்பட்ட கரையோர வீடுகள்.

 

chennai-flood-photos-6
கடையில் இருப்பு வைத்திருந்த பொருட்களை இழந்து கரையோர வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்குள்ளாகியிருக்கிறார்கள் – சூளைப்பள்ளம் பகுதி கடையின் முன் பயன்படுத்த முடியாத பொருட்களை குவித்து வைத்திருக்கும் காட்சி

soolaipallam-flood-damages-photo-1

 

chennai-flood-photos-12

chennai-flood-photos-4
சுத்தியிருக்குற தண்ணியில தான் யூரின் போனோம். டாய்லட் போறது இடமில்லால்லாத காரணுத்துக்காகவே சாப்பிடாம இருந்தோம். பீரியட் சமயத்துல வேற துணிக்கூட இல்லாம தண்ணியிலதான் இருந்தோம்.
chennai-flood-photos-3
”யாருமே என்ன பாக்கவரவில்லை. நீ மட்டும் என்ன மயித்துக்கு பேட்டி எடுக்க வர்ர” – வினவு செய்தியாளர்களிடம் சீறுகிறார் ஒருவர்.
settithottam-flood-damages-photo-3
“முஸ்லீம்கள சும்மா சொல்லக்கூடாது சார். மத்தவங்க கூட தண்ணி கொஞ்சம் வடிய ஆரம்பிச்ச பின்னாடிதான் நிவாரணம் கொண்டு வந்தாங்க. ஆனா இவ்ளோ தண்ணியிருந்தப்ப முஸ்லீம் ஆளுங்கதான் மரப்பலகையில மிதவை செஞ்சு சாப்பாடு கொண்டாந்தாங்க.”

chennai-flood-photos-8settithottam-flood-damages-photo-2

 நான்கில் மூன்று பங்கு மக்கள் சேற்றுப்புண்ணினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

chennai-flood-photos-11
அடுக்குமாடி குடியிருப்புகளையும் விட்டுவைக்கவில்லை மழைவெள்ளம் -முதல் தளம் வரை வெள்ளம் சூழ்ந்து தற்போது வடிந்திருக்கும் செட்டித்தோட்டம் பகுதி குடியிருப்பு.

settithottam-flood-damages-photo-1

settithottam-flood-damages-photo-7
“செம்பரம்பாக்கம் வாட்டர் ரிலீஸ் ஆகுதுனு நியூஸ் பாத்ததும் தயாராத்தான் இருந்தோம்.லாப்டாப், எல்சிடி எல்லாம் பெட் மேல வெச்சோம் ஆனா இவ்ளோ வரும்னு தெரியாது.” – செட்டிதோட்டம் அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள பெண்

 

 

settithottam-flood-damages-photo-5
சீ மை வெசல்ஸ். ஐ காண்ட் யூஸ் எ சிங்கிள் ஸ்பூன். ஐ ஹவ் நத்திங் டு லாஸ். (என் பாத்திரங்களை பாருங்கள். ஒரு ஸ்பூனை கூட பயன்படுத்தமுடியாது. என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை) – செட்டிதோட்டம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத  நடுத்தரவர்க்க பெண்.
settithottam-flood-damages-photo-6
வெள்ளத்தப்போ மூணாவது மாடி போயிட்டோம். ரெண்டு நாள் இருந்ததை கொஞ்சம் கொஞ்சமா சமைச்சி சாப்டோம். பிரெண்ட்ஸ் ரிலேடிவ்ஸ் புட் கொண்டு வருவாங்க.உண்மைய சொல்லனும்னா அங்க (நிவாரண மையங்கள்) போய் சாப்பாடு வாங்க எங்க சுயகொளரவம் இடம் கொடுக்கல. என் குழந்தைக்கு எந்த கஷ்டமும் தெரியகூடாதுனு இது வரை வளத்துவந்தேன். குழந்தைங்கள நினைக்கும்போது தான் கஷ்டமா இருக்கு.
chennai-flood-photos-16
இரண்டாம் தளம் வரை வெள்ளம் சூழ்ந்து வடிந்திருக்கும் கோட்டூர்புரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு.
chennai-flood-photos-13
”தண்ணிவந்த மொதநாளே வந்துட்டோம். நாங்க மட்டும் 200 பேர காப்பாத்திருப்போம். இவங்க சொல்ற கணக்கவிட ரொம்ப பேரு செத்திருப்பாங்க.தண்ணி வடிஞ்ச பின்னாடி தான் தெரியவரும்.” – நொச்சிக்குப்பம் மீனவ இளைஞர்கள், சென்னை கோட்டூர்புரம் பகுதியில். காப்பாற்ற வந்தவர்களும் வீதியிலேதான் சாப்பிட வேண்டும்.

 

chennai-flood-photos-14
”எங்க ஏரியாலிருந்து 30 படகுகளோடு வந்திருக்கோம். கடல்ல இவ்ளோ போர்ஸா தண்ணிவராது. காருங்க மேல தான் படகு போச்சினா பாத்துகாங்க. எங்க படகு கூட சேதமாயிருக்கு. எதையும் எதிர்பாத்துலாம் இங்க வரல.” – மீனவ இளைஞர்கள்

– வினவு செய்தியாளர்கள்