1. சீர்காழி அ.தி.மு.க
மக்கள் அதிகாரத்தின் சார்பாக “மூடு டாஸ்மாக்கை” சிறப்பு மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு சீர்காழி பகுதியில் சுவரெழுத்து எழுதுவதற்க்காக பணி மேற்கொண்ட போது அ.இ.அ.தி.மு.கவினரால் ஜெயா பிறந்த நாளுக்காக அனைத்து சுவர்களும் ஆக்கிரமிக்கக்பட்டு விட்டிருந்தன. எழுதாத ஒரு சில இடங்களைக் கூட ‘இது எங்கள் ஊர் நாங்கள் இந்த சுவரை விட முடியாது’ என்று அடாவடித்தனம் செய்தார்கள்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இந்நிலையில் சீர்காழி புதிய பேருந்து நிலயத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக 25 அடி சுவர் எழுத்து எழுதப்பட்டது. மறுநாள் 25-01-2016 காலை 12 மணியளவில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த ரமேஷ் பாலாஜி என்பவருக்காக சுவரெழுத்து எழுதும் அ.தி.மு.க.வினர் “மூடு டாஸ்மாக்கை” சுவரெழுத்தை அழித்துவிட்டு ஜெயா பிறந்த நாளுக்கான சுவரெழுத்தை எழுதிக்கொண்டு இருந்தார்கள். அந்தவழியாக வந்த மக்கள் அதிகார அமைப்பினர், “ஏன் மாநாட்டு சுவரெழுத்தை அழித்தீர்கள்” என்று எழுதிக் கொண்டிருந்த பெயிண்டரிடம் கேட்டதும், “எனக்குத் தெரியாது மேலிடத்தில் உள்ளவர்கள் சொன்னார்கள், எழுதினேன்” என்று அவர் கூறினார். “யார் மேலிடம்” என்று கேட்டதற்க்கு சீர்காழி நகரச் செயலாளர் பக்கிரிசாமி பெயரை சொன்னார்கள்.
பக்கிரிசாமியிடம் கேட்டதற்கு “எனக்கு தெரியாது” என்று சொல்லிவிட்டார். “நாஸ்கர் நடு ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் பண்ணப் போகிறோம்” என்று கடுமையாக பேசிய பிறகு அடுத்த 5 நிமிடத்தில் சீர்காழி சரக காவல்துறையினர் அந்த இடத்திற்கு வந்து “என்ன பிரச்சனை” என்று கேட்டனர். “மூடு டாஸ்மாக்கை” சுவரெழுத்து அழிக்கபட்ட விபரத்தைச் சொன்ன பிறகு சமரசம் பேசி அ.தி.மு.க.வினரிடம், “உங்கள் சுவரெழுத்தை அழித்துவிட்டு மூடு டாஸ்மாக்கை என்ற சுவரெழுத்தை எழுதி கொடுங்கள்” என்றனர். “பிறகு எழுதித்தருகிறேன்” என்று அ.தி.மு.க எழுத்தர் சொல்ல காவல்துறை அதிகாரி அவ்விடத்தை விட்டு சென்றுவிட்டார்.
வேறு ஒரு தொலைபேசியில் தொடர்புகொண்ட அ.தி.மு.கவை சேர்ந்த ரமேஷ் பாலாஜி “இதே இடத்தில் எழுத முடியாது. வேறுஒரு இடத்தைக் காட்டுங்கள், எழுதித் தருகிறோம்” என்றார்.
“முடியாது இதே இடத்தில்தான் எழுதித் தர வேண்டும்”
“நாங்களே எப்படி மூடு டாஸ்மாக்கை என்ற சுவரெழுத்தை எழுதித்தர முடியும்”
“நீங்கள்தான் எழுதித் தரவேண்டும்” என்று அழுத்தம் கொடுத்து பேசினோம்.
அவர் மிரட்டலாக, “உன்பெயர் என்ன? உன் ஊர் என்ன?” என்று கேட்டார்.
பெயரையும் ஊரையும் சொன்னதும் செல் பேசியை கட் பண்ணிவிட்டார்.
அ.தி.மு.க.காரர்கள் எழுதி தருகிறோம் என்று பேசி பகலில் எழுதினால் அவமானமாகிவிடும் என்று இழுத்தடித்து இரவு “ஊருக்கு ஊரு சாரயம் கதருது தமிழகம், மூடுடாஸ்மாக்கை சிறப்புமாநாடு” என்று அரை குறையாக சுவரெழுத்தை எழுதி முடித்தனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி
2. ஆம்பூர் பேருந்து நிலையம்
3. வேலூர் பேருந்து நிலையம்
4. திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் சுவரெழுத்து பிரச்சாரப் படங்கள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தகவல்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர்.