Friday, May 2, 2025
முகப்புசெய்திமல்லையாவுக்கு வரவேற்பு - விவசாயிகள் தற்கொலையா ? - ஆர்ப்பாட்டம்

மல்லையாவுக்கு வரவேற்பு – விவசாயிகள் தற்கொலையா ? – ஆர்ப்பாட்டம்

-

ங்கிகளிடம் வாங்கிய கடன் 9000 கோடியை கட்டாமல் சுற்றித் திரிந்த விஜய் மல்லையா என்ற உல்லாச பொறுக்கியை இரவோடு இரவாக வழியனுப்பி வைத்தது மோடி அரசு. ஆனால் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த விவசாயி பாலன், அரியலூரை சேர்ந்த விவசாயி அழகர் என்பவரும் வங்கியில் கடன் பெற்று இரண்டு தவணைகள் மட்டுமே கட்டுவதற்கு தவறியுள்ளார். அதற்காக காவல்துறையை ஏவி விட்டு பாலன் மீது சராமரியாக தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள் வெறி பிடித்த காவல் மிருகங்களும் கோட்டாக் மகிந்திரா வங்கி நிறுவனமும். அரியலூரில் தனக்கு நேர்ந்த அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார் விவசாயி அழகர். தொடர்ச்சியாக விவாசாயிகள் தற்கொலை அதிகரித்து வரும் சூழலில் அதற்க்கெதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றது.

கடந்த 19.03.2016 அன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பாகthiruvennainallur-demo-against-continuing-assaults-on-farmers-5 அரசூர் கூட்டு ரோட்டில் மாலை 4:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய செயலர் தோழர். அரிகிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்கி பேசுகையில் நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ராணுவத்திற்கு கோடி கோடியாக நிதி ஒதுக்குகிறார்கள். ஆனால் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லப்படுகின்ற விவசாயத்திற்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இதன் காரணமாக விவசாயத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நாடு முழுவதும் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. இதனை தடுத்து நிறுத்த வேண்டிய அரசோ கொண்டு கொள்ளாமல் இருக்கின்றது. ஆனால் விஜய் மல்லையா போன்ற முதலாளிகளுக்கு கோடி கோடியாக கடன் வழங்கி முதலாளிகளை பாதுகாத்து வருகிறது. இந்த அரசு முதலாளிகளின் கைக்கூலி அரசு தான் என்பது தெரிகின்றது. இந்த அரசு விவசாயிகளுக்கு என்றும் எதிரி தான். எனவே விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் அனைவரும் ஒற்றுமையாக அணிதிரள வேண்டும் என்று கூறி தனது தலைமையுரையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக கண்டன உரையாற்றிய திருவெண்ணெய்நல்லூர் இணைச்செயலர் தோழர் மனோகரன் அவர்கள் பேசுகையில் நமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் இந்த அரசு விவசாயிகளுக்கு கொடுக்கும் மரியாதை தற்கொலை. சிலர் நினைக்கலாம் “ அவர்கள் thiruvennainallur-demo-against-continuing-assaults-on-farmers-6கடன் வாங்கினார்கள், கட்ட முடியவில்லை என்று தற்கொலை செய்து கொண்டார்கள்” என்று யதார்த்தமாக பேசுவார்கள். அது உண்மையா என்றால் கிடையாது. ஒவ்வொரு விவசாயியும் இந்த அரசால் திட்டமிட்டே தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். குறிப்பாக விவசாயத்திற்கு என்று ஒதுக்கி வந்த மானியங்களை ரத்து செய்து விட்டது. விவசாயிகளின் விலை பொருளுக்கு போதிய விலையை கொடுக்காமல் குறைத்து விட்டது. அதேபோல் மான்சாண்டோ என்ற பன்னாட்டு நிறுவனத்தின் போலி விதைகளை தான் வாங்க வேண்டியுள்ளது. அதனை மறு உற்பத்திக்கும் விதைகளை பயன்படுத்த முடியாது. இவ்வாறு அனைத்திலும் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். இப்படி இருந்தால் விவசாயிகள் கடனில் இருந்து மீள முடியுமா? என்றால் முடியாது. வாங்கிய கடனையும் கட்ட முடியாது தான். அதற்காக போலிசை ஏவி விட்டு அடிப்பது எந்த சட்டத்தில் இருக்கிறது. அப்படி இருக்கிறது என்றால் விஜய் மல்லையா போன்ற முதலாளிகளை தான் தாக்கி இருக்க வேண்டும் ஆனால் தப்பித்து போக வழிகாட்டிய இந்த கேடுகட்ட அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசுகையில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்தை தக்க வைத்து கொள்வதற்காக வங்கியிலே கடன் பெறுகிறார்கள். போதிய வருமானங்கள் வராத போதுthiruvennainallur-demo-against-continuing-assaults-on-farmers-9 கட்டுவதற்கு தாமதமாகிறது. இந்த தாமதம் தான் அரியலூர் விவசாயி அழகரின் தற்கொலைக்கு காரணம். எதற்க்கெடுத்தாலும் தேசத்துரோக வழக்கு போடும் அரசு, தேச மக்களின் சேமிப்பு பணங்களை சுருட்டிய விஜய் மல்லையாவை தப்ப வைத்தது ஏன்? சொத்துக் குவிப்பு வழக்கிலே ஜெயலலிதாவை விடுவித்தது ஏன்? இரவு பகலாக சுடுகாட்டிலே படுத்துறங்கி கிரானைட் கொள்ளைக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் ஒரு விவசாயி வாங்கிய கடனை கட்டவில்லை என்பதற்காக அவரை கடுமையாக தாக்குகிறது என்றால் இந்த சட்டம் போலிசு அரசு என அனைத்தும் விவசாயிகளுக்கு எதிராகவும் முதலாளிகளையும், கிரிமினல்களையும் பாதுகாக்கவும் தான் இருக்கிறது. இந்த அரசு இனி நமக்கு தேவையில்லை. இதனை தூக்கி எறிந்து விட்டு விவசாயிகளையும், மாணவர்களையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க கூடிய ஓர் புதிய அரசை உருவாக்குவது தான் தீர்வு. இது சாதரணமாக முடியாது சீரழிந்த இந்த அரசுக்கு எதிராக ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தை கட்டியமைப்பதன் மூலம் தான் உருவாக்க முடியும். எனவே நாம் அனைவரும் உழைக்கும் வர்க்கமாய் புரட்சிகர அமைப்பின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்று கூறி கண்டன உரையை நிறைவு செய்தார்.thiruvennainallur-demo-against-continuing-assaults-on-farmers-4

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், விவசாயிகள் என பலரும் திரளாக கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் அப்பகுதி வாழ் விவசாயிகள் மத்தியில் இந்த அரசு நமக்கானது இல்லை என்ற ஆழமான சிந்தனையை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்:
விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணெய்நல்லூர் வட்டாரம்.
தொடர்புக்கு : 96555 87276