privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !

ஓட்டுப் போடாதீர் மக்கள் அதிகாரமே மாற்று !

-

அன்பார்ந்த பெரியோர்களே ! தாய்மார்களே ! இளைஞர்களே ! வணக்கம்.

ஒட்டுப்போடும் முன் சற்றுச் சிந்தியுங்கள். ஒட்டுப்போடுவதன் மூலம் அரசாங்கத்தை ஆளும் கட்சியை மாற்றலாம். ஆட்சியாளர்களை மாற்றலாம். வேற என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பேரழிவுகளை திரும்பிப் பாருங்கள்.

sankar
உடுமலை சங்கர் – கவுசல்யா

காஞ்சி சங்கரராமன் பட்டப்பகலில் கோவில் வாசலிலேயே கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை ஆனார்கள். உரிய நீதி ஏன் கிடைக்கவில்லை?

சாதி மாறி காதலித்ததால் தர்மபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என நாளும் தொடரும் ஆணவப் படுகொலைகள். தடுக்க முடியவில்லை.

எந்தவித அங்கீகாரமும், அனுமதியுமின்றி செயல்பட்ட கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகள் படுகொலை செய்யப்பட்டனர். மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் துன்புறுத்தலால் தினந்தோறும் நடக்கும் மாணவர் தற்கொலைகள். தீர்வு காண முடியவில்லை.

இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளுக்கு அடிபணியாததால் நிகழும் விஷ்ணுபிரியா, முத்துகுமாரசாமி போன்ற உயர் அதிகாரிகள் முதல் ரேஷன் கடை ஊழியர் வரை பலரின் தற்கொலைகள். மர்ம மரணங்கள் நேர்மைக்கு கிடைத்த தண்டனையா?

இவை போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அனைத்துத் துறைகளிலும் தினந்தோறும் நாடு முழுவதும் நடக்கிறது. இவற்றை எதையாவது ஒட்டுப் போடுவதால் நிறுத்திவிட முடியுமா?

இவற்றுக்கு நீதி கிடைத்ததா? தீர்வு காணப்பட்டதா? சொல்லுங்கள்.

ஏரி, குளம், கண்மாய், புறம்போக்கு நிலங்களையும் காடுகளையும் மக்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளையும் எனத்தெரிந்தே தனியாரும், அரசுமே ஆக்கிரமிக்கிறார்கள்.

தாதுமணல் கொள்ளையால் சீரழிக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை
தாதுமணல் கொள்ளையால் சீரழிக்கப்பட்ட பெரியதாழை கடற்கரை

கிரானைட் கொள்ளை, ஆற்று மணல் கொள்ளை, தாதுமணல் கொள்ளை எனக் காடுகளையும், மலைகளையும் கடற்கரை களையும் அழித்து இயற்கை வளங்களை சூறையாடி பேரழிவுகளையிம் பெரும் நாசங்களையும் விளைவிக்கிறார்கள். இதன் குற்றவாளிகள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், அரசியல்வாதிகள், நீதிபதிகள்தான். குற்றவாளிகளிடமே மனு கொடுத்து தண்டிப்பது எப்படி?

மக்களுக்கும், நாட்டுக்கும் பேரழிவு ஏற்படுத்தி பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாய நிலங்களில் எரிவாயு எடுத்து, எரிவாயுக்குழாய்கள் பதித்து, பாசன மற்றும் குடிநீர் நீர்நிலைகளை அந்நியருக்கு விற்று, மீனவர் மீன்பிடி உரிமையை மறுத்து நமது வாழ்வாதாரங்களைப் பறித்து, நம்மை வெறும் கையேந்திகளாக மாற்றியவர்கள் தற்போதைய அதிகாரிகளும்  ஆட்சியாளர்களும்தான்.

அரசின் அடி முதல் நுனி வரை அனைத்தும் இலஞ்சம், ஊழல் முறைகேடுகள் அத்துமீறல்களால் நிரம்பி வழிகின்றது. இவற்றை ஒட்டுப்போட்டு ஒழிக்க முடியாது.

குடிநீர் முதல் கழிப்பறை- சாக்கடை வசதி, கல்வி-மருத்துவ வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை வழங்க வக்கற்ற அரசாங்கம் அதற்காக போராடும் மக்கள் மீது போலிசை வைத்து ஒடுக்குகிறது.

சாராயம் வேண்டாம், டாஸ்மாக்கை மூடு எனக் கேட்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ, மந்திரிகளோ, சட்டமன்ற உறுப்பினர்களோ வருவதில்லை. போலீசு வந்து தாக்குகிறது. நீதியை, சட்டத்தைக் காக்க வேண்டிய நீதிமன்றங்களோ அதைக் கண்டிக்கவில்லை.

நீதிபதிகள் அனைத்து ஊழல்களையும் விசாரிக்கிறார்கள். அனைத்து கொள்ளை களையும் விசாரிக்கிறார்கள். அனைத்து சாதி வெறிபடுகொலைகளை விசாரிக்கிறார்கள். ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? சிந்தியுங்கள்.

விவசாயிகளின் விளைபொருளான நெல், கரும்புக்கு கட்டுபடியானவிலை கொடுக்காமலும், வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை இழுத்தடிப்பதாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதை தடுப்பதற்கு காரணமான அதிகாரிகளை தண்டிப்பதற்கு என்ன வழியிருக்கிறது? கோடிக்கணக்கான தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். போராடி பெற்ற எண்ணற்ற உரிமைகள் பறிபோகிறது. ஒட்டுப் போடுவதால் தீர்க்கப்படுமா? சொல்லுங்கள்.

நீர் ஆதாரங்களை தூர் வாரி பராமரித்து பாதுகாக்க வேண்டிய பல்வேறு துறை அதிகாரிகள் அதை செய்யாமல் ஆண்டுதோறும் நிகழும் வெள்ளப் பேரழிவில் ஏற்படும் சாவு மற்றும் இழப்பை வைத்து வெள்ள நிவாரணத்தை கொள்ளை அடிக்கிறார்களே. இதற்கு ஏன் தீர்வு காண முடியவில்லை? அமுல்படுத்தும் அதிகாரம் மக்களிடம் இருக்க வேண்டும் என சொல்கிறோம்.

அரசாங்கம் எதுவானாலும் மக்களுக்கு எதிரான அதன் எல்லாத் திட்டங்களையும் சட்டங்களையும் வகுத்துக்கொடுத்து, அமலாக்கும் இடத்தில், பொறுப்பில் இருப்பது நீதிபதிகள் உட்பட அனைத்து துறை அதிகாரிகள் தாம். அவர்களின் அரசுக் கட்டமைப்பும்தான். மக்களுக்கு எதிரான எல்லா குற்றங்களுக்கும் முதன்மைக் காரணமாக உள்ளனர். அரசு அதிகார வர்க்கம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறி மக்கள் விரோதமாகிவிட்டது.

ஒட்டுப் போடுவதனால் இந்த அரசுக் கட்டமைப்பில் எந்த மாற்றமும் வந்துவிடாது. தேர்தலில் வாக்களித்தால் எதற்காவது தீர்வு காண முடியுமா என எந்த அரசியல்வாதிகளும் அறிவாளிகளும் பேசுவதில்லை. தொலைக்காட்சியும் விவாதிப்பதில்லை. மீண்டும் மீண்டும் நல்லவர்களை தேர்ந்தெடுங்கள் என மக்களுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

இவ்வாறு சொல்பவர்கள் அரசு அதிகாரவர்க்கம் முழுவதும் கிரிமினல் மயமாக மாறி மக்கள் விரோதமாகிவிட்டது. இந்த நிலையை மாற்றி அதை மீண்டும் தூய்மைபடுத்தி நேர்மையாக மாற்ற முடியும் என்பதை அதற்கான வழிமுறைகளுடன் சொல்ல முடியுமா?

தேர்தலில் வாக்களிப்பதால் மக்களின் எந்த பிரச்சினையும் தீராது. நிகழும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அரசு கட்டமைப்புதான். மேலும் அது மீள முடியாத நெருக்கடியில் சிக்கி ஒன்றுக்கொன்று முரண்பட்டு மக்களுக்கு எதிராக மாறிவிட்டது. மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்கும் ஆற்றலை இழந்துவிட்டது. மொத்தத்தில் மக்களை ஆளும் அருகதை இழந்துவிட்டது.

எனவே தான் சொல்கிறோம் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிகள் மாற்று அல்ல. மாற்று என்பது மக்கள் அதிகாரம்தான். அரசு நிர்வாகத்தை தாங்களே ஆள்வதும், நேரடியாக கண்காணித்து தவறு செய்பவர்களை மக்களே விசாரித்து தண்டிக்கும் முறை வேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். சாத்தியமா என தயங்க வேண்டாம்.

வெற்றியடைந்த விடுதலை போராட்டங்கள், மக்கள் புரட்சிகள் அனைத்தும் வரலாற்றின் தேவையிலிருந்தும் தியாகத்திலிருந்தும்தான் உருவாகியது.சாத்தியபாட்டிலிருந்து உருவாவதில்லை.

ஒட்டுப்போடாதீர்!

மாற்று மக்கள் அதிகாரமே..    

– மக்கள் அதிகாரம்.
விருத்தாச்சலம், 97912 86994.