Thursday, May 1, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்வேலை வாய்ப்பளிப்பது இந்தியா தமிழா ? செய்திகள் - கேலிச்சித்திரங்கள்

வேலை வாய்ப்பளிப்பது இந்தியா தமிழா ? செய்திகள் – கேலிச்சித்திரங்கள்

-

சோறு போடுவது இந்தியா, தமிழா?

சோறு போடுவது இந்தியா, தமிழா?
இந்தி படித்தால் வேலை கிடைக்குமென்றால் வட இந்தியத் தொழிலாளர்கள் ஏன் தமிழகம் வரவேண்டும்? ஏன் தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் ?

ர்.எஸ்.எஸ் மற்றும் காரியவாத நடுத்தர வர்க்கத்தின் முக்கியமான கருத்து, இந்தி படிக்கவிடாமல் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பை திராவிட இயக்கங்கள் பாழாக்கினர் என்பதே. ஆனால் ஆர்.எஸ்.எஸ்-ன் புண்ணிய பூமியான வட இந்தியாவிலிருந்து பல நூறு தொழிலாளிகள் அன்றாடம் தமிழகம் வந்து இறங்குகின்றனர். அவர்களது மண்ணில் இந்தி, சப்பாத்தி போடவில்லை என்பாதல் தமிழ் அன்னம் உண்ண விரும்பி வருகின்றனர். தமிழும் கற்கின்றனர். ஆகவே நியாயமாக வட இந்திய தொழிலாளிகளுக்கு தமிழ் கற்பிக்கும் வேலையைச் செய்தால் அந்த மாநில மக்களின் எதிர்காலம் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கும். இல்லையேல் இந்தி சாதம் போடும் என்று சாதிக்கும் அம்பிகள் தமது தினசரி தமிழக வாழ்வில் அதே இந்தி தொழிலாளிகளின் சேவைகள் வேண்டாம் என்று விரதம் எடுக்க வேண்டும்.செய்வார்களா?

படம் நன்றி: தினகரன்

————————————————————-

ஃபேஷன் (நவநாகரிகம்)

ஃபேஷன் (நவநாகரிகம்)
ஃபேஷன் (நவநாகரிகம்)

மேற்குலகின் ஃபேஷன் – மூன்றாம் உலகின் அடிமைகளால் விளைகிறது.

நன்றி : Cartoon Movement ,
ஓவியர் : Payam Boromand.

———————————————————-

பொதுப் பள்ளிகளில் கட்டாய மதப் போதனைகள்:

பொதுப் பள்ளிகளில் கட்டாய மதப் போதனைகள்:
பொதுப் பள்ளிகளில் கட்டாய மதப் போதனைகள்:

நாம் நமது குழந்தைகளுக்கு வழங்கும் கல்வி அவர்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல அது பூமியின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்!

நன்றி : Cartoon Movement ,
ஓவியர் : Osmani Simanca.

—————————————————————

விடுதலையின் கனவு

விடுதலையின் கனவு
விடுதலையின் கனவு

இந்த கேலிச்சித்திரம், ஆப்கான் பள்ளியொன்றில் படிக்கும் மாணவி சோகைலா ஹூசைனியின் “வலிக்கும் கனவு” யோசனையை அடிப்படையாகக் கொண்டது.

ஓவியர்: கியூபாவைச் சேர்ந்த Ares
நன்றி: Cartoon Movement

————————————————————–

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் !

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் !
ஏய் பசங்களா, நூத்துக்கு ஒன்னு குறைந்தாலும் உரிச்சு தொங்க விட்டுடுவேன் !

நாமக்கல் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்கும் பெற்றோரின் ஒரே லட்சியம் – அதிக மதிப்பெண்கள். ஓரிரு ஆண்டுகள் நீடிக்கும் இந்தக் கொத்தடிமை வாழ்க்கையை எப்பாடுபட்டாவது தங்கள் பிள்ளைகள் சகித்துக் கொண்டால் அதன் பின் ஒளிமயமான ஒரு எதிர்காலம் உத்திரவாதம் என்கிறார்கள்.

இந்தக் கொத்தடிமை வாழ்வின் விதிகள் திணிக்கப்படும் மாணவர்களில் பெரும்பாலானோர் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள் என்றும், மாணவர்களின் விடலைப் பருவ வாழ்க்கை கெட்டுப் போகிறது என்றும், இவர்களெல்லாம் உலகமே அறியாத கிணற்றுத் தவளைகளாகவும், ப்ராய்லர் கோழிகளைப் போன்றும் உருவாகிறார்கள் என்றும் சில முதலாளித்துவ பத்திரிகைகளே எச்சரிக்கை செய்கின்றன.

கேலிச்சித்திரம்: ரவி

மேலும் படிக்க: நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

———————————————————————–

வீடியோ கேம் ஆடுபவர்களுக்கு எங்கள் கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடையாது, என்னை மன்னியுங்கள்!

வீடியோ கேம் ஆடுபவர்களுக்கு எங்கள் கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடையாது, என்னை மன்னியுங்கள்!
வீடியோ கேம் ஆடுபவர்களுக்கு எங்கள் கல்லூரியின் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு சலுகைகள் கிடையாது, என்னை மன்னியுங்கள்!


கார்ட்டூன் நன்றி: Ron Morgan

———————————————————————–

வினவு பேஸ்புக் பக்கங்களில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள் – கேலிச்சித்திரங்கள்.

இணையுங்கள்: