privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திRSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !

RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !

-

ழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகம் நாவல் மீதான மாவட்ட நிர்வாகத்தின் கட்டப்பஞ்சாயத்து தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. போதாதா? அம்பி குருமூர்த்திக்கு வேர்த்து விட்டது! அந்த பதட்டத்தை ஆங்கில இந்துவின் சார்பில் ஸ்ருதிசாகர் யமுனன் எடுத்த நேர்காணலில் காணலாம். குருமூர்த்தியிடம் இத்தகைய கேள்விகளை கேட்பதற்கு தைரியமற்ற தமிழ் இந்து அதை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறது. அதில் குருமூர்த்தி தனக்கு வந்தால் ரத்தம், தலித்துக்கு வந்தால் தக்காளி ஜூஸ் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம் கீழே:

கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!
கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!

குருமூர்த்தி: ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்) மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு குடும்பம் அல்லது சமூகத்தின் கவுரவம் பெண்ணிடமே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாம் ஒன்றும் ஆங்கிலோ – சேக்சன் சமூகத்தில் வாழவில்லை. நாம் வாழும் சமூக்கத்துக்கென சில மதிப்பீடுகள் இருக்கின்றன. அவை அரசியல் சாசனத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது முற்போக்கு சிந்தனைகள் மக்களின் உள் உணர்வைச் சுடுவதாக இருந்தால் அது நிச்சயம் நீடிக்காது. அந்த வகையில் பார்த்தால் மக்கள் உள் உணர்வுகளைக் காயப்படுத்தியது தவிர இந்தப் புத்தகம் வேறு எதையும் செய்யவில்லை.

கேள்வி: உங்களது பார்வை நடுநிலையில் இல்லை என சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணருக்கும் – கோபியருக்கும் இடையேயான் உறவு, பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்குமான உறவு எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் மாதொருபாகனை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? பாகவதத்துக்கு ஒரு சமூகம் தடை கோரினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

குருமூர்த்தி: பாகவதம் வரலாறாக பார்க்கப்படாதவரை பிரச்சைனையில்லை.

கேள்வி: எப்படிச் சொல்கிறீர்கள்?

குருமூர்த்தி: பாகவதம் இப்போது புராண அந்தஸ்தில் இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தின் சந்ததிகள் இல்லை. மக்கள் அந்த சமூகத்தினுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு மூதாதையர்கள் இருக்கிறார்கள் என உரிமை கொண்டாடாத வரையில் சிக்கல் இல்லை.

கேள்வி: ஆனால் யாதவர்கள் அவ்வாறு கூறுகிறார்களே..

குருமூர்த்தி: ஆமாம், யாதவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு கூறிக் கொள்வதை நிரூபிக்க அவர்களை அனைவரும் ஓரிடத்திலா வாழ்கிறார்கள். கிருஷ்ணர் – கோபியர் உறவை யாரும் ஒழுக்கக்கேடானது என விமர்சிக்கவில்லை.

கேள்வி: அப்படியென்றால் ஒரு தனிநபர் கடவுளுக்கு சமமாக தூக்கி நிறுத்தப்பட்டால் இத்தகைய செயல்கள் நியாயப்படுத்தப்படுமா?

குருமூர்த்தி: உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர். மனிதன் உணர்வுகளால் ஆனவன். உங்கள் வாழ்வில் எவ்வளவு அத்தியாயங்களை நீங்கள் அறிவு சார்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பீர்கள்.

***

கிருஷ்ணன் கோபியர் உறவு ஒழுக்கக் கேடுன்னு யாரும் சொல்லலையாம். கிருஷ்ணரை உரிமை கொண்டாடும் யாதவர்கள் ஓரிடத்தில் வாழலையாம். அதனால் பாகவதத்தை தடை செய்ய வேண்டாமாம்! இவ்வளவு தூரம் ‘அறிவுப்பூர்வமாக’ ஆய்வு செய்யும் அம்பி குருமூர்த்தி கடைசியில் தர்க்கம் பேசாதே என்கிறார். கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!