Thursday, June 30, 2022
முகப்பு செய்தி RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !

RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !

-

ழுத்தாளர் பெருமாள் முருகனின் மாதொரு பாகம் நாவல் மீதான மாவட்ட நிர்வாகத்தின் கட்டப்பஞ்சாயத்து தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. போதாதா? அம்பி குருமூர்த்திக்கு வேர்த்து விட்டது! அந்த பதட்டத்தை ஆங்கில இந்துவின் சார்பில் ஸ்ருதிசாகர் யமுனன் எடுத்த நேர்காணலில் காணலாம். குருமூர்த்தியிடம் இத்தகைய கேள்விகளை கேட்பதற்கு தைரியமற்ற தமிழ் இந்து அதை தமிழாக்கி வெளியிட்டிருக்கிறது. அதில் குருமூர்த்தி தனக்கு வந்தால் ரத்தம், தலித்துக்கு வந்தால் தக்காளி ஜூஸ் என்பதை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதன் சுருக்கம் கீழே:

கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!
கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!

குருமூர்த்தி: ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் (கொங்கு வேளாளக் கவுண்டர்கள்) மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகியுள்ளனர். ஒரு குடும்பம் அல்லது சமூகத்தின் கவுரவம் பெண்ணிடமே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. நாம் ஒன்றும் ஆங்கிலோ – சேக்சன் சமூகத்தில் வாழவில்லை. நாம் வாழும் சமூக்கத்துக்கென சில மதிப்பீடுகள் இருக்கின்றன. அவை அரசியல் சாசனத்திலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது முற்போக்கு சிந்தனைகள் மக்களின் உள் உணர்வைச் சுடுவதாக இருந்தால் அது நிச்சயம் நீடிக்காது. அந்த வகையில் பார்த்தால் மக்கள் உள் உணர்வுகளைக் காயப்படுத்தியது தவிர இந்தப் புத்தகம் வேறு எதையும் செய்யவில்லை.

கேள்வி: உங்களது பார்வை நடுநிலையில் இல்லை என சிலர் கருதுகின்றனர். கிருஷ்ணருக்கும் – கோபியருக்கும் இடையேயான் உறவு, பாண்டவர்களுக்கும் பாஞ்சாலிக்குமான உறவு எப்படி ஏற்றுக்கொள்ளப்படுகிறதோ அதேபோல் மாதொருபாகனை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? பாகவதத்துக்கு ஒரு சமூகம் தடை கோரினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?

குருமூர்த்தி: பாகவதம் வரலாறாக பார்க்கப்படாதவரை பிரச்சைனையில்லை.

கேள்வி: எப்படிச் சொல்கிறீர்கள்?

குருமூர்த்தி: பாகவதம் இப்போது புராண அந்தஸ்தில் இருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள சமூகத்தின் சந்ததிகள் இல்லை. மக்கள் அந்த சமூகத்தினுடன் தங்களை ஒப்பிட்டுக் கொண்டு மூதாதையர்கள் இருக்கிறார்கள் என உரிமை கொண்டாடாத வரையில் சிக்கல் இல்லை.

கேள்வி: ஆனால் யாதவர்கள் அவ்வாறு கூறுகிறார்களே..

குருமூர்த்தி: ஆமாம், யாதவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அவர்கள் அவ்வாறு கூறிக் கொள்வதை நிரூபிக்க அவர்களை அனைவரும் ஓரிடத்திலா வாழ்கிறார்கள். கிருஷ்ணர் – கோபியர் உறவை யாரும் ஒழுக்கக்கேடானது என விமர்சிக்கவில்லை.

கேள்வி: அப்படியென்றால் ஒரு தனிநபர் கடவுளுக்கு சமமாக தூக்கி நிறுத்தப்பட்டால் இத்தகைய செயல்கள் நியாயப்படுத்தப்படுமா?

குருமூர்த்தி: உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர். மனிதன் உணர்வுகளால் ஆனவன். உங்கள் வாழ்வில் எவ்வளவு அத்தியாயங்களை நீங்கள் அறிவு சார்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பீர்கள்.

***

கிருஷ்ணன் கோபியர் உறவு ஒழுக்கக் கேடுன்னு யாரும் சொல்லலையாம். கிருஷ்ணரை உரிமை கொண்டாடும் யாதவர்கள் ஓரிடத்தில் வாழலையாம். அதனால் பாகவதத்தை தடை செய்ய வேண்டாமாம்! இவ்வளவு தூரம் ‘அறிவுப்பூர்வமாக’ ஆய்வு செய்யும் அம்பி குருமூர்த்தி கடைசியில் தர்க்கம் பேசாதே என்கிறார். கிருஷ்ணனுக்கு வந்தா ரத்தம், பெருமாள் முருகனுக்கு வந்தா தக்காளி ஜூஸாம்!

 1. தினமணியிலும்,இந்தியன் எக்ஸ்பிரசிலும் இவருடைய கருத்து,வெறுப்பு பதிவு செய்துள்ளார்.பெருமாள் முருகன் விவகாரத்தை ஊதிப்பெருக்கி,கட்டைபஞ்சாயத்து செய்தவர்கள் காவி பரிவாரங்கள்தான் என்பதை நிரூபித்துள்ளார்,இந்த காவி பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் அம்பி.

 2. ஐயா புது நிலா பாய்முதலில் நிம்பில் நிஜ பெயரை பதிவு செய்யவும். \\பெருமாள் முருகன் விவகாரத்தை ஊதிப்பெருக்கி…/உங்களுக்கு வந்தா அது ரத்தம் அதுவே மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் ஆதரிக்க தயாரா?விஸ்வரூபம் படத்தைத் தடை பண்ண கூப்பாடு போட்டது யாரு?த டா வின்சி கோட் திரைப்படத்தை தடை செய்யதது யார்? இந்த செயல்கள் எல்லாம் சரியா என்று மத சார்பற்ற சக்திகளையும் முற்போக்கு எழுத்தாளர்கள் கூறவேண்டும்.

 3. Whenever a married couple is childless,in most cases,the wife is only blamed by the community.In several cases,the fault may lie on the husband. In stead of seeking medical intervention to cure the husband,the parents of the husband will resort to remarriage.Perumalmurugan wrote this novel only to highlight this anamoly and the suffering undergone by such women.Gurumoorthis will not understand this social problem since they are not brought up for giving due respect to women in general.

  • \\Perumalmurugan wrote this novel only to highlight this anamoly and the suffering undergone by such women.// Sooriyan first I would like to highlight ___________.There is an international conspiracy in this. Murugan’s ‘novel’ was actually a project work undertaken under a grant from India Foundation for the Arts (IFA).In their 2005-06 report, the grant given to Murugan is Rs 3,28,500 over two years. He failed to prove the incidents happened in the novel.If the writer can come up with proper documentary and properly recorded oral traditions, the community should look inwards and make an unqualified apology to the writer. Freedom of expression is sacrosanct in any civil society and more so in Indian society, which has traditionally nurtured diversity and has considered loving irreverence and even blasphemy as a rightful form of adoration of the divine.On the other hand, if the writer cannot substantiate what he had written, he must tender an unqualified apology, not for hurting anyone’s sentiments, but for libel against the people living in the town.

   • It is a kind of historical fiction. Such fiction constructs its arabesque like network of imagination over a tiny and flimsy line of history. As Sandilyan wrote volumes of Kadalpura and how much history in them can one verify? Fiction writers enjoy the liberty to create a large tome over a single line of episode.

    The incidents, rather one incident – of seeking unknown and strange partners on the final day of the festival, in the darkness to get pregnant, is true or not, I don’t know, but lets take it a hearsay. A fiction can be authored over a hearsay too.

    Whether it is indeed true or not, as a member hereinabove has put it, only DNA test can prove. Are the community ready to accept the test? The member says it will prove the miscegenation.

    Kaunders are angry only because the novel suggests the strange and obscure fornicators atop the hill in the darkness came from lower caste. In that area, the lower caste is chakkiliyar. They work in the farms also. Further, all such young and virile women came in expectation of enjoying the sex from such willing women. It means such men had no sexual morals. They were rogue and disorderly youth.

    Mixing blood (i.e. miscegenation) with such lowest caste doing the dirty work, that too, men with no character, is unbearable. At the same time, if the miscegenation had occurred with partners of highest caste or forward, the Kaundes would have been proud to flaunt that. – like the devardiyar community feels proud of having Iyer partners. This community was attached to temples and as such, the iyers used them for sex or kept them and children were born. No one can be blamed for that because cotton and fire is a lethal combination. Close proximity leads to unwanted results.

    Their children are proud to use the surname Iyer. An e.g. is Subbu lakshmi, the singer. In addition to the Iyers, other rich communities kept them. Thillana Mognambal is not a fictional film in this matter. A rich zamindar attempted to keep the devaradiayal i.e. temple dancer there.

    If the said community women were kept by lowest untouchable classes of society then, they would not reveal it, let alone feel proud of it.

    All wanted to be known as partnering with high castes. Another example is Arayaiar. They were not Brahmins. They were singers in Vaishanva Temples like Thirukkurungudi, Thiruvarangam etc. Their women were married to Iyengars. Finally, the Araiyars were assimilated into Thengalai Iyengar community. Neither the original nor the fake Iyenagars feel ashamed of it. If the Araiyars had mixed with any other or lower caste, they would not say that out, let alone own it.

    Take another example: Anglo Indians. Their ancestor mothers were Indian low castes and the fathers were rogue British white soldiers. The British soldiers during their outing sought women who were available for money or love. One night stands, or one month etc. But all is causal sex. A community was created from the union which is now known as Anglo Indians. Are they ashamed of the illicit parentage of white blood? Not at all. They are proud and more so, with taking only the customs and practices of their white forefathers, not the dark Indian low caste mothers. It is TN and other States history. In cities like Delhi, the case of John Skinner, the manor marrying legally an Indian wife is a rare example. All others are bastard children of British soldiers.

    The key is in caste hierarchy. Gounders feel superior to many other castes in TN. That is the problem. If they had no such vanity, they would have accepted that such an episode was part of their ancient history and they had mixture of blood in them, the blood of chakkiliyars,

    • \\The incidents, rather one incident – of seeking unknown and strange partners on the final day of the festival, in the darkness to get pregnant, is true or not, I don’t know, but lets take it a hearsay. A fiction can be authored over a hearsay too.// If you once dont’t know than why you want to narrate a long fictitious stories? This is not caste problem but an international conspiracy to denigrate HINDU religion through such writer by the IFA, Bangalore. Please see the Ministry of Home Affairs site to know who are the donors for this IFA. \\Whether it is indeed true or not, as a member hereinabove has put it, only DNA test can prove. Are the community ready to accept the test? The member says it will prove the miscegenation.// Im sorry to type the following which will deeply hurt you. If someone says that you are not born to your mother will you react or take DNA Test to prove? Perumal Murugan is not a HINDU.

 4. குருமூர்த்தி சரியாக சொல்லியிருக்கிறார் .
  உங்கள் விளக்கம் கொச்சையாகவும் மோசமாகவும் உள்ளது .
  விவகாரத்தை முற்று புள்ளி வைத்து விட்டு வேறு வேலை பார்க்கவும்

 5. எல்லா மதத்தினரிடையேயும் , சாதியினரிடையேயும் எப்போதாவது , விதிவிலக்கான ,சிதறலான வகையில் ,அபூர்வமாக சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கலாம்.
  அதற்காக , ஒவ்வொருவரும் அந்த நிகழ்ச்சியை முதன்மைப்படுத்தி ஒரு நாவலை எழுதி வெளியிட்டால், சமூகம் மிகுந்த குற்ற உணர்ச்சி பெறும், எனவே எப்போது பெரும்பான்மையினரான மக்கள் இந்த நாவலை எதிர்க்க முன்வந்தார்களோ, அப்போதே இதை பற்றிய விவாதத்தை கைவிட்டிருக்க வேண்டும். இன்னும் இதை தூக்கி பிடித்து கொண்டு பேசிக்கொண்டிருந்தால் , நமக்கு வேறு பொளப்பே கிடையாதா?

 6. நல்லா பாருங்கப்பா….
  ஒவ்வொரு பதிலுக்குள்ளும் “பூணூல்” புரண்டு…புரண்டு நெளிவதை!

 7. கற்பனையான இடத்தில் கற்பனையான மனிதர்கள் என்னும் போது எப்போதும் பிரச்சினை வராது .

  நிஜமான இடத்தில் கற்பனை மனிதர்கள் என்பது பின்னாளில் வரலாற்று பதிவாக மாறும் .
  படிப்பவர்கள் உண்மையான யதார்த்தத்தை தான் கதை பிரதிபலிக்கிறது என்று நம்புவார்கள்

  சிலப்பதிகாரம் – கண்ணகி கற்பனை என்றாலும் சிலை வைத்து கதையை, கற்பு என்னும் விலங்கை தமிழ் கலாச்சாரம் என்றானது .

  ராமாயணம் – புராணத்தில் வரும் ராமன் கதை, மக்கள் அவரை கடவுளாக்கி , இந்தியாவில் வரலாற்று பதிவாக பார்க்க படுகிறது . இதை வெறும் கதை என்று கூறும் திராவிட அமைப்புகள் கூட , குழம்பி ராவணன் தமிழன் என்று கூறி இதை வரலாற்று பதிவாக பார்க்கிறார்கள்,
  வராலாற்று பிழையை சரி செய்ய ராவண காவியம் எழுதினார்கள்

  பெருமாள் முருகனின் விஷம கதை : – இது நிஜமான இடத்தில் நடக்கும் கற்பனை மனிதர்கள் செய்யும் கற்பனை செயல்கள் கொண்ட கதை .ஆனால் சிலப்பதிகாரம் ,ராமனையும் போல பின்னாளில் இது வரலாற்று பதிவாக மாறும் அபாயம் உள்ளது கற்பு என்பதற்கு இன்னமும் பெறும் மதிப்பு கொடுத்துக்கொண்டு இருக்கும் வரலாற்று காலத்தில் வாழ்வதால் ,கண்ணகி என்றால் கற்பு என்பது போல கொங்கு மகளிர் மீது எதிர் மறை கரை படிந்துவிடுகிறது .இதை அந்த சமூகம் எதிர்த்ததில் தவறு இல்லை. ராவண காவியம் போல இது போன்ற பிழைகளை இன்னொரு கதை எழுதி சரி செய்ய முடியாது .

  ஸ்பெர்ம் பேங்க் காலத்தில் தமிழகம் இன்னமும் வரவில்லை

 8. நீங்கள் குமுதம் பின்னணிப்பு புத்தகம் ஒன்றில் – ஒரு குறிப்பிட்ட தெலுங்கு மொழி பேசும் மக்களின் அறுவடைதிருவிழா – அக்காலத்தில் நடக்கும் களியாட்டம் பற்றி படித்து உள்ளீர்களா ?. அதற்கும் எதிர்ப்புதான் கிளம்பியது. ஆனால் அது உண்மை. அதுபோலத்தான் இதுவும். நடந்த்தது உண்மை, மனித மரபியல் முழுவதும் இது ஆதாரபூர்வமாக நிறுவப்பட்டு உள்ளது. இதற்கும் ஆதாரம் உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க