Saturday, May 10, 2025
முகப்புசெய்திமோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்

மோடியின் கார்ப்பரேட் கல்விக் கொள்ளை ! செப் 8 தஞ்சை கருத்தரங்கம்

-

ஆர்.எஸ்.எஸ் கிரிமினல்களுக்கும், கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கும் பிறந்த கள்ளக் குழந்தையே மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை!

pala-tnj-meeting-against-new-education-policy-notice-frontபுதிய கல்விக் கொள்கையின் சில நச்சுத்துளிகள்…

  • ஏழைக் குழந்தைகள் இனி அய்ந்தாம் வகுப்பைத் தாண்ட முடியாது. அதையும் தாண்டிவரும் ஒரு சிலரும் தொழிற்கல்வி என்ற பெயரில் பத்தாம் வகுப்பிலேயே கழித்துக் கட்டபடுவர்.
  • தொழிற்திறன் வளர்ப்பு என்ற பெயரில் பள்ளிக் கூடத்திலேயே குலக்கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும்.
  • 10,12 வகுப்புகளில் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தி உயர்கல்வி வாய்ப்புகள் அனைத்தும் தனியார் பள்ளி மேட்டுக்குடி மாணவர்களுக்குத் தாரை வார்க்கப்படும்.
  • கல்வி உள்நாட்டு, வெளிநாட்டு முதலாளிகள் கொள்ளைக்கு முற்றாகத் திறந்து விடப்படும்.
  • சமஸ்கிருதத்தைத் திணிப்பது, ஆர்.எஸ்.எஸ் ஆசிரமங்களை பள்ளிகளோடு இணைப்பது, நாடு முழுவதும் ஒரு பாடத்திட்டம் இவற்றின் மூலம் பல்வேறு மொழி, பண்பாட்டை அழித்து சாதி, மதவெறி, தேசவெறியைத் தூண்டுவது சிறுபான்மை மக்களை அச்சுறுத்துவது, சமூகப் பதட்டத்தை உருவாக்குவது இவற்றின் மூலம் மனுதர்மத்தை, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டும் சதித்திட்டம்.
  • கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக உருவாக்கப்பட்டுள்ள மட்டுமீறிய சுயநலமும் நுகர்வுவெறியும் மனித மாண்புகள், வேற்றுமையில் ஒற்றுமை, சமூக அக்கறை, பகுத்தறிவு, மதச்சார்பின்மை, பொதுநல சிந்தனை ஆகியவற்றை அழித்து சமூகத்தையே கிரிமினல் மயமாக்கி வருகின்றன. இத்தகைய ஆபத்தான சூழலில் மோடி அரசு அறிவித்திருக்கும் புதிய கல்விக் கொள்கை ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களை தற்குறிகளாக, சாதிமத வெறியர்களாக கார்ப்பரேட் முதலாளிகளின் கொத்தடிமைகளாக மாற்றும் பேரபாயம் கொண்டுள்ளது. இந்தச் சதியை முறியடிப்பது உழைக்கும் மக்களின் உடனடி கடமையாகும்.

உழைக்கும் மக்களே,

பெரும்பான்மை உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிக்கும்
புதிய கல்விக் கொள்கையை முறியடிப்போம்!

சமஸ்கிருத – வேத கலாச்சாரத் திணிப்பின் மூலம்
நாட்டை பார்ப்பனிய மயமாக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன்
இந்து ராஷ்டிர கனவை தகர்த்தெறிவோம்.

pala-tnj-meeting-against-new-education-policy-posterகருத்தரங்கம்

இடம் : பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்
நாள் : செப்டம்பர் 8, 2016 மாலை 5.30

கருத்துரை

முனைவர் வெ.சிவப்பிரகாசம்
மேனாள் பேராசிரியர், திராவிட இயக்க ஆய்வுமையம்,
சென்னை பல்கலைக் கழகம்

தோழர் காளியப்பன்
இணைப் பொதுச்செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தஞ்சை கிளை
தொடர்புக்கு: 94431 88285