Monday, May 5, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விசெப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்

செப் 20 தமிழகமெங்கும் புதிய கல்விக் கொள்கை எரிப்புப் போராட்டம்

-

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம் – ஏன்?

அன்பார்ந்த மாணவர்களே!

  1. புதிய கல்விக் கொள்கை
    புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

    அன்று, ‘பார்ப்பனர் அல்லாத சாதிகளுக்கு கல்வியறிவு தேவையில்லை என்றது மனுதர்மம்’ இன்று, உழைக்கும் சாதி மற்றும் வர்க்கங்களுக்கு 5-ம் வகுப்புக்கு மேல் கல்வி இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை.

  2. அன்று, உடலால் இந்தியர்களாகவும் சிந்தனையால் ஆங்கிலேயர்களாகவும் உள்ள ஊழியர்களை உருவாக்குவதற்காக மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்தினார்கள் ஆங்கிலேயர்கள். இன்று, இந்து, இந்தி, இந்தியா எனும் பார்ப்பனிய தேசியத்தை கட்டுவதற்கேற்ப மாணவர்களை தயார்படுத்துவதற்காகவே புதிய கல்விக் கொள்கை எனும் நவீன மெக்காலே கல்வி திட்டத்தை புகுத்துகிறது மோடி அரசு.
  1. ஆரம்பக் கல்வி முதல் ஐ.ஐ.டி.ல் சமஸ்கிருத திணிப்பின் மூலம் ராமாயணம் மாகாபாரதம், பகவத் கீதை போன்றவைகள் பாடமாக நடத்தப்படும். இனி வேத காலத்திலேயே விமானம், டி.வி, மரபணு அறிவியல் எல்லாம் இருந்தது என சொல்லித் தரப்படும். மொத்தத்தில் பல்வேறு இனம், மொழி, பண்பாடு, வரலாற்று அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஆரிய – பார்பனர்களின் பண்பாடே இந்தியாவின் பண்பாடாக முன்னிறுத்தப்படும்.
  2. உயர்கல்வித் துறையின் அனைத்து நிர்வாகப் பொறுப்புகளும், நிர்வாக அமைப்புகளும் WTO-GATS வழிகாட்டுதலின்படி அரசு அதிகாரிகள், கார்ப்பரேட் முதலாளிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும்.
  3. கல்விநிறுவனங்கள்மீதானபுகார்கள் இனி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படாது, கல்விதீர்ப்பாயத்தில் தான் (Educational tribunal) விசாரிக்கப்படும். அங்கு ஏழை மாணவர்களுக்கு நீதி மறுக்கப்படும்.
  4. அரசு, அரசு உதவி பெறும் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் அரசாங்கத்திடமிருந்து நிதி உதவியை எதிர்பார்க்கக் கூடாதாம். நிதி தன்னாட்சியை (financial autonomy) அதாவது, மாணவர்களிடமே கட்டணம் வசூலித்துக்கொள்ள வேண்டுமாம்.
  5. அரசு, அரசு உதவிபெறும் உயர்கல்வி நிறுவனங்களை மூடுவது, கல்வியை தனியார்வசம் ஒப்படைப்பது, வெளிநாட்டுப் பல்கலைகழங்களை அனுமதிப்பது இது தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம்.
  6. வெளிநாட்டுப் பல்கலைகழகங்களில் உள்ள பேராசிரியர்கள் இனி இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றுவார்கள். நம்நாட்டு ஆரிசியர்கள் – பேராசிரியர்கள் வீதிக்கு துரத்தப்படுவார்கள்.
  7. கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சங்கம் வைக்க தடை, கல்லூரி வாயிலில் போலீசு பூத் வைத்து கண்காணிப்பு என கல்வி நிறுவனங்கள் சிறைச்சாலையாக மாற்றப்படும்.
  8. பொதுப்பட்டியலில் உள்ள கல்வித்துறையை மத்தியபட்டியலுக்கு கொண்டு செல்லப்போகிறார்கள். இது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது மட்டுமல்ல, ஒரே பாடத்திட்டம், நுழைவுத்தேர்வு என்ற பெயரில் ஒருபுறம், அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக மலிவான உழைப்புசக்தியாகவும், மறுபுறம் பண்பாட்டு ரீதியாக பார்ப்பனிய அடிமை சிந்தனையில் ஊறியவர்களாகவும் மாணவர்களை உருவாக்குவதாகும்.

இந்தித் திணிப்பை விரட்டியத்த வீரம்செறிந்த வரலாறு கொண்டவர்கள் நாம். அலையலையாக மாணவர்கள் அணிதிரள்வோம்!
கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அடிமை விசுவாசத்தையும், கொடிய பார்ப்பனிய விசத்தையும் கக்கும்,
மோடி அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான நகலை தீயிட்டுக் கொளுத்துவோம்!

மோடி அரசின் புதிய கல்விக் கொள்கை நகல் எரிப்புப் போராட்டம்!

செப்டம்பர் – 20

சென்னையில்: காலை 12 மணி
இடம்
: அண்ணாசாலை தபால்நிலையம் அருகில்.

மற்றும் விழுப்புரம்/விருத்தாச்சலம்/திருச்சி/கோவை/நெல்லை.

தகவல்,

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
தமிழ்நாடு
. 9445112675