Thursday, November 26, 2020
முகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

கோவை : போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம் !

-

kovai-hindutva-thugs-violence-30கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் வெட்டி கொலை செய்யப்பட்டதற்காகவே பார்ப்பன இந்துமதவெறியர்கள் காத்திருந்தார்கள். இந்தக் கொலையை முகாந்திரமாக வைத்துக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் வானரக் கூட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணி, அனுமன் சேனா போன்ற தினுசு தினுசாக 50-க்கும் மேற்பட்ட கும்பல்களில் உள்ள காலிகள் கோவை அரசு மருத்துவமனையில் கலவரம் ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்துடன் கூடினர். சசிகுமாரின் பிணத்தைப் பெற்றுக்கொண்டு முசுலீம்கள் அதிகம் வாழும் டவுன்ஹால், உக்கடம், கோட்டைமேடு வழியாகத்தான் கொண்டு செல்வோம் என்று கூறியபோது காவல் துறை மென்மையாக அனுமதி மறுத்தது. உடனே மருத்துவமனையில் இருந்த 1000 பேர் கொண்ட இக்கும்பல் முஸ்லீம்கள் வாழும் பகுதிகளில் உள்ள கடைகள் அடித்து நொறுக்கியது. பின்னர் குடியிருப்பு பகுதிக்குள் சென்று முசுலீம்களைத் தாக்க முற்படும் பொது அவர்களும் திருப்பி தாக்கினர்.

kovai-hindutva-thugs-violence-33பிறகு காவி பயங்கரவாத கும்பல் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சவத்தை பெற்றுக்கொண்டு சுமார் 18 கிலோமீட்டர் வம்படியாக ஊர்வலம் சென்றது. ஊர்வல வழியில் தென்பட்ட கடைகள் அனைத்தையும் குறிப்பாக இசுலாமியர் கடைகளை தெரிவு செய்து அடித்து நொறுக்கியது. அதே நேரம் இந்துமதவெறியர்களுக்கு அவ்வப்போது விரும்பியோ அல்லது நிர்ப்பந்தத்தாலோ பண உதவி செய்யும் ‘இந்துக்களின்’ கடைகளும் சூறையாடப்பட்டன. கூடுதலாக இந்துமதவெறியர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள முசுலீம் மக்களின் கடைகளை குறித்து வைத்துக் கொண்டு அடித்து நொறுக்கினார்கள்.

​​kovai-hindutva-thugs-violence-08இதையெல்லாம் தடுத்து தண்டிக்கவேண்டிய காவல்துறை கலவரத்தை நடத்த அனுமதியை கொடுத்துவிட்டு கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தது. தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தாலோ பொது மக்கள் அடிப்படை பிரச்சனைக்காக போராட்டம் நடத்தினாலோ சட்ட ஒழுங்கு பிரச்சினை வரும் என்று போராட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கும் காவல் துறை கலவரங்களை நடத்துவதற்கென்றே இந்து மதவெறி அமைப்புகளுக்கு 18 கிலோமீட்டர் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்தது.

இந்தக் கலவரத்தில் 60 அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டது, எண்ணற்ற இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன, ஒரு செல்போன் கடையில் காஸ் கட்டிங் செய்து ஷட்டரை ஓட்டை போட்டு செல்போன்கள் திருடப்பட்டன. பூக்கடை மார்க்கட் பகுதியில் உள்ள மசூதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. புது பேருந்து நிலையம் அருகில் உள்ள மசூதியில் 2000 மேற்பட்ட கற்களை எறிந்து கண்ணாடி மற்றும் மேற்க்கூரைகள் உடைக்கப்பட்டன. இதற்காகவே வண்டி நிறைய கற்களையும், சோடாபாட்டில்களையும் , உருட்டுக்கட்டைகளையும் குவித்துக் கொண்டு இந்துமதவெறியர்கள் கலவரம் நடத்தினர்.

kovai-hindutva-thugs-violence-35இவையெல்லாமே காவல்துறை ஆணையர் அமுல்ராஜ் கண்முன்னே நடந்தது. இனி அவர் தனது பெயரை அமைதிராஜ் என்று வைத்துக் கொள்ளலாம். இறுதியாக காவல்துறை வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டாலும் சொரணையேதுமின்றி லேசானதடியடியை மட்டும் காவல் துறை நடத்தியது. முசுலீம் மக்கள் மற்றும் வணிகர்களை பாதுகாக்க வேண்டிய காவல் துறை அதற்கான எந்த நடவடிக்கையுமே எடுக்கவில்லை. சசிகுமாரின் உடலை உடல் கூறு ஆய்வு செய்து காலை 6 மணிக்கே ஒப்படைக்க தயாராகஇருந்தும் காவல்துறை மதியம் 12 மணிவரை அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தியது. இப்படி இந்து அமைப்புகள் கலவரம் நடத்துவதற்கு வசதியை ஏற்படுத்தி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் 18 கிலோமீட்டருக்கு ஊர்வலமாக செல்ல அனுமதியும் கொடுத்துள்ளது, காவல் துறை.

kovai-hindutva-thugs-violence-36நத்தம் காலனி இளவரசன் இறந்தபோது ஊர்வலம் நடத்த அனுமதிமறுத்த இதே காவல்துறைதான், தாழ்த்தப்பட்ட மக்கள் இறந்து போன தங்களது உறவினர்களை பொது பாதை வழியாக கொண்டுசெல்ல அனுமதி மறுத்த போது அதை எதிர்த்து போராடிய மக்களை அடித்து விரட்டிவிட்டு சவத்தை தானே அடக்கம் செய்தது.

இப்படி சாதாரண மக்களின் உரிமையை பறிக்கும் காவல் துறை எப்படி கலவரக்காரர்களுக்கு துணை போனதுஎன்பதை அம்பலப்படுத்தி மக்கள் அதிகாரத்தின் சார்பாக கோவை, உடுமலை, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதில் உடுமலையைச் சேர்ந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் சக்திவேல், மணிகண்டன்,தங்கவேல் ஆகியோர்களை கலவரம் ஏற்படுத்துவார்கள் என்று கூறி 151 சி.ஆர்.பி.சி பிரிவிகளில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது உடுமலை காவல் துறை. கோவையில் செய்தி சேகரிக்க சென்ற தோழர் மூர்த்தியை கைது செய்து மாலையில் விடுவித்தது.

​​kovai-hindutva-thugs-violence-31போலீசை கையில் வைத்திருக்கும் ஜெயலலிதாவோ பார்ப்பனிய இந்துமதவெறியர்களின் இயல்பான கூட்டாளியாக இருப்பதால், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தனது வன்முறையை எந்த பயமுமின்றி செய்து வருகிறது. இப்படி அ.தி.மு.க அரசின் ஆசீர்வாதத்தோடு இந்துமதவெறியர்கள் ஆட்டம் போட்டு வருகின்றனர். இதை அம்பலப்படுத்த வேண்டிய ஊடகங்களோ வன்முறைக் காட்சிகளை மட்டும் பரபரப்பு எனும் மலிவான சந்தையை குறிவைத்து வெளியிடுகின்றன.

கலவர சமயத்தில் மட்டுமல்ல, சமாதான காலத்தில் கூட இந்த காவல் துறை மக்களை பாதுகாக்காது என்பது உறுதி. கொட்டடிக் கொலை, வழிப்பறி, கொள்ளை போன்றவற்றை சீருடையுடன் செய்யும் இந்த காவல் துறையும் அதை பாதுகாக்கும் இந்த அரசும் இருக்கும் வரை இந்துமதவெறியர்களின் அட்டகாசங்கள் குறையாது. இவர்களை தூக்கி எறியாமல் அமைதி இல்லை என்பதைஉணர்ந்திடுவோம் ! மக்கள் அதிகாரம் படைத்திடுவோம்!

பொதுமக்களே!

 • இந்துமத வெறியர்களுக்கு நிதி கொடுத்து வளர்த்த வியாபாரிகள், மக்கள் மீதே வளர்த்த கிடா மார்பில் பாயுது!
 • திருட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபடும் காவல்துறை கலவரத்தை ஒடுக்கி மக்களை பாதுகாக்காது!
 • மதவெறி, இனவெறி, சாதிவெறி – ஆட்டம் எங்கு நடந்தாலும் இனம் கண்டு தண்டிப்போம்!
 • செயல் இழந்த அரசுக் கட்டமைப்பை அகற்றுவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

செய்தி :
மக்கள் அதிகாரம் – கோவை/உடுமலை/கோத்தகிரி

இந்து முன்னணி சசிக்குமார் கொலை!
போலீசு துணையுடன் இந்து மதவெறியர்கள் வெறியாட்டம்!
செயலற்று முடங்கியது அரசு நிர்வாகம்!

தமிழக அரசே!

 • வெறியாட்டம் போடும் காவிக் கும்பலை கைது செய்! சிறையிலடை! வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்கு!
 • இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மதவெறி அமைப்புகளை தடை செய்!

உழைக்கும் மக்களே!

 • சசிகுமார் மரணத்தை காட்டி பெரியார் பிறந்த மண்ணை காவிமயமாக்கும் சதித்திட்டத்தை முறியடிப்போம்!
 • மதவெறி அமைப்புகளை புறக்கணிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ம.க.இ.க – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு – கோவை

 1. கட்சிக்காரன் இறந்துபோனால் என்ன செய்ய வேண்டும்??
  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டணும்.
  கட்சிக்கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடணும்.
  கருப்பு உடையில் சென்று இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளணும்.
  இதுதான்டா முறை.

  ஆனால் அயோக்கிய இந்து முன்னணி மற்றும் பாஜக கும்பல் என்ன செய்யுது?
  பிற மதத்தினர் மீது கொலைகார பட்டத்தை சுமத்துவது,
  காவிக்கொடியை ஏந்திக் கொண்டு சாலை மறியலில் ஈடுபடுவது,
  கடைகள், பேருந்துகளை அடித்து நொறுக்குவது.
  இந்தக் கும்பல் இருக்கும் இடத்தில் சகல வன்முறைகளும் நடக்கும்.

  சகோதரத்துவத்தை குலைக்கும் விதத்தில் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்.

 2. சுமார் இருபது வருண்டங்களுக்கு முன்னாள் இப்படித்தான் இந்தக் காலிப் பயல்கள் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் மதவெறியைத் தூண்டிவிட்டு அதை மிகப்பெரிய மதக் கலவரமாகவும் இசுலாமிய அமைப்புகளின் குண்டுவேடிப்பாகவும் மாற்றினார்கள். பழைய வரலாறு திரும்பக் கூடாது, காவி டவுசர் காலிகளை இனிமேலும் தமிழகத்தில் அனுமதிக்ககூடாது! அந்த மதவெறிக் கூட்டத்தின் பக்கமே மானமுள்ள தமிழர்கள் யாரும் போகக்கூடாது. கடைகளை எல்லாம் நொறுக்கிவிட்டு நல்லவர்கள் போல் வந்து காசு கேட்டால் அந்த நாய்களைச் செருப்பால் அடிக்கவேண்டும் வணிகர்கள், இதில் சாதி மத வேறுபாடு பார்க்கக்கூடாது.
  வயிறு எரிகிறது, குருதி கொதிக்கிறது, அதே நேரத்தில் எதுவும் செய்ய முடியாத நிலை மனதை அறுக்கிறது..

Leave a Reply to Insider பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க