Saturday, May 10, 2025
முகப்புசெய்திநீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே ! தஞ்சையில் கருத்தரங்கம்

-

1. நீர்நிலைகள் மீதான அதிகாரம் மக்களுக்கே! – தஞ்சை கருத்தரங்கம்

டுவர் மன்றம்-இடைக்காலத் தீர்ப்பு-இறுதித் தீர்ப்பு- மீண்டும் வழக்குகள், உச்சநீதிமன்றத்தின் அவ்வப்போதைய பிச்சை போடும் தீர்ப்புகள்….

cauvery-tnj-conference-notice-1இவற்றால் சிறிது நம்பிக்கை வைத்திருந்த விவசாயிகளுக்கு பெரிய பட்டை நாமத்தைச் சாத்தியிருக்கிறது மோடி அரசு.

நாற்பது ஆண்டுகளாகத் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் விழலுக்கிறைத்த நீராகிப் போயிற்று. ஆட்சிக்கு வந்தால் மேலாண்மை வாரியம் அமைப்போம், காவிரிச் சிக்கலைத் தீர்ப்போம் என்ற வாய்ச்சவடால் அடித்த மோடியின் பா.ஜ.க தமிழகத்துக்கு காவிரி நீர் விட மறுத்து, தமிழகர்களைத் தாக்கி, சொத்துக்களை சூறையாடும் ரௌடித்தனத்தில் இறங்கியிருக்கிறது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பை கர்நாடக அரசு சாக்கடையில் வீசிய போது, மோடியே நேரில் தலையிட்டு பேசினால்தான் சிக்கல் தீருமென சிறுபிள்ளைத்தனமாகப் பேசிய தமிழகத் தலைவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிட்டு மேலாண்மை வாரியம் அமைக்க முடியாதென நிராகரிக்கிறார் மோடி.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றக் கோரி தமிழகத்தில் நடந்த கடையடைப்பை தி.மு.க அரசு ஆதரித்ததற்காக “ஆட்சியை கலைக்க உத்தரவிடுவோம்” என எக்காளமிட்ட உச்ச நீதிமன்றம், கர்நாடக அடாவடித்தனத்திற்குத் துணை போகும் வகையில் “கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” என மண்டியிடுகிறது. ஒவ்வொரு முறையும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகம் முறையிடும் போதும் அதற்கு இணங்கி, தான் திறக்க உத்தரவிட்ட நீரின் அளவை 15000, 12000, 6000, 2000 கன அடி என்ற குறைத்து தன் பங்குக்கு அநீதியழைக்கிறது உச்சநீதிமன்றம்.

cauvery-tnj-conference-notice-2இரு மாநில நதி நீர் சிக்கல்களை நியாயமாகத் தீர்ப்பதில் தோல்வியடைந்தது மட்டுமல்லாது, தனது அரசியல் ஆதாயத்திற்காக ஒரு பகுதி மக்களை திட்டமிட்டே வஞ்சிக்கும் துரோகத்தையும் செய்கிறது. பா.ஜ.க-காங்கிரஸ் கும்பல். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பல் தனது பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதற்கு தமிழகம் மிகப்பெரும் தடையாக இருக்கிறது என்பதால் கூடுதல் ஆத்திரத்துடன் தமிழகத்தை வஞ்சிக்கிறது. இந்தியா முழுவதும் கார்ப்பரேட் கொள்ளையர்களின் லாபவெறிக்காக காடுகளை அழிப்பது, தொழிற்சாலைக் கழிவுகளால் நீர்வளங்களை சீர்குலைப்பது, கிரானைட், மணற்கொள்ளை என இயற்கைச் சூழலை நாசம் செய்வது, மழைவளம், நீர் ஆதாரம் அவற்றை முற்றாக அழிப்பது ஆகியவற்றை “வளர்ச்சி”-யின் பெயரால் அரங்கேற்றி வருகின்றன மத்திய மாநில அரசுகள். நீர் பங்கீட்டுச் சிக்கல்கள் மேலும் அதிகரிக்கும் அபாயம் நிலவுகறிது. மத்திய மாநில அரசுகளோ, நீதிமன்றங்களோ மக்கள் பிரச்சசனைகளை தீர்க்கத் தவறிவிட்டது மட்டுமின்றி மக்களுக்கு எதிரான அமைப்புகளாக சீரழிந்து விட்டன.

எனவே, மாற்று வழிகளை சிந்திப்போம், இந்த அரசுக் கட்டமைப்புக்குள்ளே அல்ல! அதற்கு வெளியே!

கானல் நீராகும் காவிரி நீர்…
தொடரும் துரோகங்கள்….
விடிவுக்கு வழிதான் என்ன?

கருத்தரங்கம், பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர்

சனிக்கிழமை, அக்டோபர் 8, 2016 மாலை 5.30

தலைமை : தோழர் மாரிமுத்து, மாநில ஒருங்கிணைப்புக் குழு, மக்கள் அதிகாரம்

கருத்துரை
தோழர் ப. பாலசுந்தரம், மாவட்டச் செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சி.பி.ஐ), தஞ்சாவூர்
தோழர் சாமி நடராஜன், மாவட்டச் செயலர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சி.பி.எம்), தஞ்சை
தோழர் என். குணசேகரன், தமிழக ஜனநாயக விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம்
திரு த. மணிமொழியன், மாவட்ட தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம், தஞ்சை
திரு வ. பழனியப்பன், வேளாண் வல்லுநர்
தோழர் காளியப்பன், தலைமைக்குழு, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம்,
தஞ்சைக் கிளை
தொடர்புக்கு 9443188285