சென்னையில் இராமன் எரிப்பு – இராவண லீலா ! அனைவரும் வருக !

30
21

திராவிடர்களை இழிவுபடுத்தும் இராமலீலாவைக் கண்டித்து இராவண லீலா ! இராமன் உருவ பொம்மை எரிப்பு !

 

ராவண லீலா அழைப்பிதழ்
ராவண லீலா அழைப்பிதழ்

நாள்    : 12.10.2016, புதன் கிழமை
நேரம் : மாலை 5.05 மணிக்கு
இடம் : சமஸ்கிருத கல்லூரி முன்பு மயிலாப்பூர்,சென்னை.

லகத்தின் மூத்த இனம் தமிழினம. தற்போதைய இந்தியாவில் அரப்பா, மொகஞ்சதாரோ என்ற பகுதிவரை பரவி வாழ்ந்தவர்கள் நாகர்கள் என்றழைக்கப்பட்ட திராவிடர்களான தமிழர்கள் தான் எனறும், உலகத்தின் மிகச்சிறந்த நாகரீகமடைந்த மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தமிழர்கள்தான் எனப் பல வெளிநாட்டு ஆய்வாளர்கள் இன்று ஆதாரப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். ஆனால் இவ்வளவு பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழினம் இமயம் முதல் குமரி வரை பரவி வாழ்ந்த நம் தமிழினம் இன்று தமிழ்நாடு என்ற குறுகிய பகுதிக்குள் சுருங்கியது எப்படி என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?

இமயம் வரை பரவி வாழ்ந்து வந்த நம் திராவிட இனம், ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு கைபர் போலன் கனவாய் வழியே துருக்கி பகுதியில் இருந்து புகுந்த ஆரிய இனத்தால் வீழ்ந்தது தமிழினம். உள்ளே புகுந்த ஆரிய இனம் மெல்ல மெல்ல நம்மை வஞ்சகமாக புராணம், இதிகாசம் என்ற பெயரில் வீழ்த்தியது. அப்படி ஆரியர், திராவிடர்களுக்கு இடையே நடந்த போரில் ஆரியர்கள் திராவிடர்களை வஞ்சகமாக வெற்றி கொண்டதின் குறியீடகாவே, நம் தமிழ் மன்னார்களான இராவணர், நரகாசுரர், இரணியர் போன்றோர்களை அரக்கர்களாக, அசுரர்களாக சித்தரித்தது வந்தேரி ஆரிய பார்ப்பனிய இனம். புராணங்களில் வரும் அரக்கர்கள் அசுரர்கள் ஆகியோர் கருப்பாக இருப்பது என்பது அவர்கள் தமிழர்கள் தான் என்பதற்கு எளிய உதாரணம்.

அப்படி ஒன்றுதான் ஆரியர்கள் தங்களுக்காக எழுதிக்கொண்ட இராமாயணம். ஆரிய திராவிட போரையே இராமாயணம எனறும், இராமாயணத்தில் சொல்லப்படும் அரக்கர்கள், குரங்குகள் என்பவை எல்லாம் திராவிடர்களைத்தான் என்றும் பண்டித ஜவர்களால் நேரு, விவேகானந்தர், பி.டி.சீனிவாசய்யங்கார் போன்ற வரலாற்று ஆசிரியர்களும் தெளிவாக கூறியுள்ளனர். அதில் தமிழ் மாமன்னராகிய இராவணன் அவர்களை அரக்கனாக, அசுரனாக சித்தரித்து, ஆரிய இராமனை கதாநாயகனாக சித்தரித்து மகிழ்ந்தது வந்தேரி ஆரிய இனம். இராவணன் கற்பனை பாத்திரம் என்றாலும், அவர் திராவிட இனத்தின் குறியீடாக உயர்ந்து நிற்க்கிறார். அத்தகைய இராவணனை அவரது குடும்ப உறுப்பினர்களான மேகநாதன், இந்திரஜித் ஆகியோரையும் உருவ பொம்மைகளாக செய்து, இந்த மாவீரர்களை நெருப்பில் போட்டுக் கெளுத்தும் இராமலீலாவை டெல்லியில் ஆண்டுதோறும்  உற்சாகமாக கொண்டாடி தென்னாட்டு மக்களை திராவிடர்களை பார்ப்பனர்கள் அவமதித்து வருகிறார்கள்.

முதன் முதலில் இராவணன் எங்கள் பாட்டன் என்ற குரல் பொது வெளியில் ஓங்கி ஒலித்தது தமிழகத்தில்தான். இராவணனை திராவிட மன்னன் என்று பெரியார், அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தலைவர்கள் சொன்னார்கள். இராமாயன எரிப்பு என்றளவில் போராட்டம் நீண்டது. இராம லீலாவுக்கு எதிராக இராவண லீலாவை நடத்தி1974ஆம் ஆண்டு இராமனின் உருவத்தை எரித்தது அன்றைய

திராவிடர் கழகம். 1996ஆம் ஆண்டில் அன்றைய பெரியார் திராவிடர் கழகம் தோற்றம் கொண்ட பிறகுதான் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அரசின் தடைகளை மீறி இராமன் உருவ பொம்மைகளை எரித்து ராமலீலாவுக்கு பதிலடி தரப்பட்டது. அதற்காக  தோழர்கள் கைது செய்யப்பட்டு வழக்குகளை சந்தித்தனர்.

பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம் !
பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம்

அதன் பிறகு 20 ஆண்டுகள் ஆரிய திமிருக்கு பதிலடிதராமல் விட்டுவிட்டோம். ஆனால் இன்று ஆரிய பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்சின் கைப்பாவையான ஆளும் மோடி அரசால் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பார்ப்பனர் அல்லாத மக்கள் ஆகிய அனைவரின் மீதான ஒடுக்கு முறைகள் தலை விரித்து ஆடும் சூழலில் இராமலீலாவுக்கு பதிலடியாக இராவணலீலாவுக்கு தயாராக வேண்டிய நிலையை பார்ப்பனர்களே உருவாக்கி உள்ளனர். ஆக தமிழர்களான நம்மை இழிவுபடுத்தும் நோக்கில் ஆரிய பார்ப்பனர்கள் வடநாட்டில் தசராவின் இறுதி நாளன்று இராம லீலா என்ற பெயரில் நடத்தி வருவதற்கு பதிலடிதரும் வகையில் அதே நாளில் இராவண லீலா நடத்தி நம் தமிழ் மாமன்னரான இராவணன் அவர்களை கொண்டு ஆரிய இராமனின் உருவத்தை எரிக்க உள்ளோம்.

ஆரிய பார்ப்பனியத்தை வீழ்த்திய பெரியார் பிறந்த மண்ணில் இராவணன் வாழ்க என்ற முழக்கத்தோடு ஆரிய இராமனுக்கு எதிராக தீமூட்டுவோம். அதில் இந்திய தேசிய பார்ப்பன வர்க்கத்தையும், துரோகத்தையும் சேர்த்து எரிப்போம்.

 ஆரிய இராமனை எரிப்போம் !!
திராவிடர் சுயமரியாதை மீட்போம் !!!

( தந்தை பெரியார் திராவிடர் கழக பிரசுரத்தில் இருந்து )

தகவல் :

தந்தை பெரியார் திராவிடர் கழகம்
சென்னை மாவட்டம்.
தொடர்புக்கு : 98417 09129,
98410 28111, 94440 11124

சந்தா