privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்சி.பி.ஐ - சி.பி.எம்ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

-

யுத பூஜை கொண்டாடும் உழைக்கும் மக்களிடம் பேச விரும்பி கிண்டி தொழிற்பேட்டையை அடைந்திருந்தோம்.

தள்ளுவண்டி கடைவைத்திருந்த இரண்டு பெண்களிடம் பேசினோம்.

“என்னக்கா ஆயுத பூஜை ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு”?

”ஒரு ஆப்பிள் பழம் 40 ரூபானுரான். இதெ வெச்சி எத்தனை பேருக்கு பங்கு போடமுடியும்?”

“அப்போ ஆப்பிள் சாமிக்கு இல்லையா?”

சிரித்துக்கொண்டே…. “சாமிக்கு தான். ஆனால் சாமி பேரை சொல்லி ஆசாமிதான சாப்பிடுறோம்.”

ஆமாப்பா கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா
“ஆமாப்பா கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா”

“முன்னாடி அடுத்த நாள் சாப்பிடவரவங்களுக்கும் பொட்டலம் போட்டு பொறி பழம் கொடுப்போம். இப்போ பாரு சாமிக்கே ஒரு பார்சல் கொடுக்க முடியல. பொரட்டாசி மாசம் கடை ஓடாது. பசங்கள படிக்க வெச்சிருக்கேன். வட்டி வேற கட்டனும், கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா.”

“சாமியே கைவிட்டுருச்சா?”

“வேலை செய்யுறப்ப கையில கத்தி, எண்ணெய் கொட்டிரக்கூடாதுனு வேண்டிக்கினு கும்புடுறோம். இதோ பாரு பல தடவை கொட்டிருச்சி. என்ன பண்றது. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.”

”ம். ஆயுத பூஜைக்கு நீங்க கத்தியில பொட்டு வெக்குறீங்களே. ஆஸ்பிட்டல் டாக்டருங்க ஆப்பரேசன் கத்தியில பொட்டு வெச்சா ஒத்துப்பீங்களா?

“அதெப்படி செஃப்டிக் ஆயிரும்ல. வேணும்னா மெசினுக்கு வெச்சிகலாம்.”

“வர்ரப்ப ஒரு ஈ.பி ஒயர்மேன பாத்தேன். அவரு எப்படிங்க சாமி கும்பிடனும். கரண்டு ஒயர்ல சந்தனம் குங்குமம் வெக்கனுமா?”

“ஹா ஹா. தம்பி அவரு கரண்டு ஒயருக்கு பொட்டு வெச்சா அவருக்கு யாராவது பொட்டு வெச்சிருவாங்க”

அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை நிகழ்ச்சியை அறிவிக்கும் விதமாக பாடல்கள் காதை கிழித்தன. அங்கு மைக் செட் சவுண்ட் சர்வீஸ் ஏற்பாடு செய்து கொண்டிருந்த சேகர் என்பவரிடம் பேசினோம்.

auto-stand1
”ஆயுத பூஜைக்கு அவங்க தொழில் செய்றத பொருளை வெச்சி கும்பிடனும்னு சொல்றீங்க. டாஸ்மாக்குல எதை வெச்சி கும்பிடனும்”

”எல்லாருக்கும் இன்னிக்கு ஆயுத பூஜைனா எங்களுக்கு 10 நாள் கழிச்சிதான். எல்லாரும் கொண்டாடும் போது நாங்க கொண்டாடுனா அவ்வளவு தான். இந்த சமயத்தில தான் ஆர்டர் கிடைக்கும்”

”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா?”

“சினிமா பாட்டு போட்டாத்தான் ஆயுத பூஜை. பக்தி பாட்டு போட்டா வேற எதுனா கோயில் திருவிழானு நெனச்சிப்பாங்க”

“ஆயுத பூஜைக்கு அவங்க தொழில் செய்றத பொருளை வெச்சி கும்பிடனும்னு சொல்றீங்க. டாஸ்மாக்குல எதை வெச்சி கும்பிடனும்”

”நீ ராங்கா கேக்குறீயே”. “ ஆனாலும் நீ கேக்குறது சரிதான். நியாயமா பாட்டில வெச்சி தான் கும்பிடனும். ஆனா எனக்கு தெரியலியே”. ஆனா நாங்க தெனமும் அத வெச்சி கும்பிடுறோம் ” என்றார் விளையாட்டாக.

”சரி.ஆயுத பூஜைனா எல்லாத்தையும் கழுவி சுத்தம் பண்ணி பொட்டு வெக்கனும்னு சொன்னாங்க. நீங்க ஸ்பீக்கர், மைக் செட்டால் நல்ல தண்ணில முக்கி  கழுவுவீங்களா? ”

(சிரித்துக்கொண்டே) நீ திரும்ப திரும்ப ராங்கா கேக்குற. ஆட்டோகாரன் தண்ணில முக்கி கூட எடுப்பான்.பிரச்சனையில்ல. நமக்கு தொடச்சி பொட்டு வெச்சா போதும்.

“பஸ் டிப்போல ஒரு சத்தமும் இல்லையே. ஏன்”

“அம்மா அப்பல்லோல முடியாம படுத்திருக்காங்கல. அதுனால கொண்டாடக்கூடாதுனு உத்தரவு போட்டிருக்காங்க.”

“ஓ. அப்படினா கடவுள விட அம்மா தான் பெரிய ஆளு போல”

வசந்தி செருப்பு தைக்கும் தொழிலாளி

”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா”
”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா”

”என்னாம்மா இந்த தடவை ஆயுத பூஜை ஒரு சத்தமுமே காணோமே”

“ஆமா. (அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தை காட்டி) ஃபயர் சர்வீஸ்ல கூட ஆயுத பூஜை கெடயாதுனுட்டாங்களாம். அம்மா உடம்பு சரியில்லை அதுனால கொண்டாடக்கூடாதுனு ஆடர் போட்ருக்காங்களாம்.”

“ஓ”

”பொருள் வெச்சி கும்பிடப்போறியா இல்ல அம்மாவெ வெச்சி கும்பிடப்போறியானு- கேட்டுனு வந்தேன்”

“சரி நீங்க எத வெச்சி கும்பிடப்போறீங்க”

”இந்த ஊசி இதுகள வெச்சிதான்”

“உங்ககிட்ட செருப்பு தைக்கிறதுக்கு வாரவங்க இன்னிக்கு வீட்டுல செருப்புக்கு பூஜை போடுவாங்களா?”

“ஆமா. பத்து பைசாவுக்கு குங்குமம் வாங்குனாலும் அதை நெத்தில வெக்கிறோம். ஆயிரம் ரூபாவுக்கு செருப்பு வாங்கினாலும் அதை வாசல்ல தான் போட முடியும்”.

சேவைச் சாதியினரை இழிவாக நடத்தும் பார்ப்பனியத்தின் பார்வையில் சேவை வேலை செய்யும் மக்களின் கருவிகளோ இல்லை பொருட்களோ பூஜைக்குரியதாக இல்லை.

—–

அப்பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்தவர்களிடம் பேசினோம்.

”பிரதமர் மோடி தூய்மை இந்தியானு திட்டம் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா நாம் வருசத்துக்கு ஒரு நாள் தானே எல்லாத்தையும் கிளீன் பண்ணி ஆயுத பூஜை கொண்டாடுறோம். தினமும் கொண்டாட வேண்டாமா?”

“தினமுமா நமக்கு வேலை இருக்கு. வீட்டுல சும்மா இருந்தாதான் தினமும் அப்படி செய்ய முடியும்.”

“ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடாத வெள்ளக்காரன் தான் நிறைய கண்டுபிடிப்புகள் செய்யுறான் அறிவாளியா இருக்கான். நம்ம சாமிக்கு சக்தி இல்லையா?”

”அப்படிலாம் இல்ல. என் பேரன் இவ்ளோ தான் இருக்கான். இப்பவே இங்கிலீஷ் பேசுறான்”.

ஆங்கிலம் பேசுவதையே அறிவுக்கான அளவீடாக பார்க்கிறார் இப்பெரியவர். ஆனால் சரஸ்வதிக்கு ஆங்கிலம் தெரியாதே என்ன செய்ய?

பேச்சு அப்படியே காவிரி நீர் பிரச்சினை பற்றி சென்றது.

”சரி காவிரில கர்நாடகாகாரன் தண்ணிவிட மாட்டுறானே. வருசாவருசம் ஆயுத பூஜை கொண்டாடுறோமே அந்த கடவுள்கள் ஏன் எதுவும் பண்ணமாட்டுது? அப்போ சாமி இல்லையா?”

”சாமிக்கு கை கால் இருந்தா அது தானாவே குளிச்சிகுமே. நாம ஏன் குளிப்பாட்டுறோம். கல்ல வெச்சி சாமினு கும்புடுறோம். அதுல சாமி இருக்கா இல்லையானு அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். ஆனா கடவுள்னு ஒருத்தன் இருக்கான்”.

இந்த புரிந்தும் புரியாததுமான குழப்பத்திற்கிடையே தான் கடவுள் உயிர் வாழ்கிறார். ஒரு வகையில் வாழ்க்கை தோற்றுவிக்கும் குழப்பமும் கூட!

——

தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது.
தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது.

சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட போலிகம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தான் ஆயுத பூஜை விழாக்களில் முன்னணியில் இருக்கிறார்கள். அச்சங்கத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியில் எதையும் இக்கட்சிகள் பயிற்றுவிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மே1 தொழிலாளர் தினம் கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்

ஏ.ஐ.சி.டி.யூ (AICTU) தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

”மே 1- க்கு என்ன பண்ணுவீங்க”

”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”.

“ஆயுத பூஜை கொண்டாடுகிறீர்களே இத பத்தி காரல் மார்க்ஸ் என்ன சொல்லிருக்காறர்”

”அப்படினா?”. காரல் மார்க்ஸ் ஒரு உயர் தினையா, அஃறினையா என்பதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே அடுத்த கேள்விக்கு தாவிவிட்டோம்.

”வண்டிக்கு எல்லா எடத்துலேயும் சூடம் காட்டுறீங்க. பெட்ரோல் டேங்க்ல மட்டும் ஏன் காட்டமாட்டுறீங்க”

யோசித்தவர். ”எல்லா இடத்திலேயும் காட்ட தேவையில்லை.”

”நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?”

”அவனுக்கு கண்டுபிடிக்க ஆயிரம் விசயம் இருக்கு.  நமக்கு இருக்கிறது ஒரு ஆட்டோ தான. அதனால நாம இது கொண்டாடுறோம். அவன் கண்டுபிடிக்கிறான்.”

இவர் வாரம் வாரம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ரூ.250-க்கு மேல் கோவில் பூஜைகளுக்கு செலவு செய்வதாக கூறினார்.

குறிப்பாக ஓலா கேப்கள் வருகை இவர்களின் தொழிலை பாதித்திருக்கிறது. தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது. எப்படியாவது இதிலிருந்து வெளிவந்து விட முடியாதா என்று ஏங்குகிறார்கள்.

மற்றும் சில ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசியதிலிருந்து ஓலா வருவதற்கு முன்னரே டாடா மேஜிக் வாயிலாக தாங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அது தீவிரமாகியிருக்கிறது என்றும் கூறினார்கள்.

”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”
”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”

இறுதியாக ஏ.ஐ.சி.டி.யூ கிளை செயலாளரிடம் பேசினோம்.

”ஒரு ரிப்போர்ட்டுக்காக வந்திருக்கோம். உங்க ஸ்டாண்ட் பூஜையை போட்டோ எடுத்துகலாமா”

“தாராளமா எடுங்க. ஆனா ஒரு கண்டீசன். அம்மா மருத்துவமனையில் படுத்து கிடக்கும்போது இப்படி விழா கொண்டாடுறாங்கனு கடைசி வரியில முடிச்சி எழுதீராதிங்க. எங்களுக்கு சங்கடமாயிரும்”

“நீங்க அண்ணா தொழிற்சங்கமா இல்லை ஏ.ஐ.சி.டி.யூ-வா”

“நாங்க ஏ.ஐ.சி.டி.யூ-ங்க. அதாங்க தா,.பாண்டியன் கட்சி”

“அப்போ இரண்டும் ஒன்னுதானே”

“பாத்தீங்களா அரசியல் பேசுறீங்க”

”இல்ல கம்யூனிஸ்டுங்கனா கடவுள் இல்லைனு சொல்லுவாங்க அதுதான்”

“அது, இப்போ ரோடுல போரீங்க ஒரே மாதிரியாவா இருக்கு. குண்டு குழி இருக்கிறதில்ல. அதுபோல தான். விடவேண்டிய விசயத்தை விடனும் இழுத்து பிடிக்கவேண்டிய விசயத்தை இழுத்து பிடிக்கனும்” என்று தங்கள் சந்தர்ப்பவாதத்திற்கு புதுவிளக்கம் கொடுத்தார்.

நாம் பேசிய தொழிலாளர்களில் எவரும் கடவுள் குறித்த கேள்விகளுக்காக நம்மிடம் கோபித்துகொள்ளவில்லை. நீங்கள் கேட்பது சரிதான் என்று அங்கீகரிக்கிறார்கள். அது குறித்து யோசித்து விட்டு சிரிக்கிறார்கள். தமிழகத்தில் தான் இது சாத்தியம்.  வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அடித்து கொலை செய்யும் பார்ப்பனிய கலாச்சாரத்திலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது.

கடவுளை விமர்சன பூர்வமாக பார்ப்பதை ஆதரித்தாலும் தங்கள் வாழ்க்கையில் நிச்சயமின்மை குறித்த பயம், பெருகி வரும் வாழ்க்கை நெருக்கடி மக்களை மதங்களின் பின்னால் அணிவகுக்க வைப்பதாக இருக்கிறது. சரஸ்வதி பூஜை, ஆயது பூஜை எல்லாம் தமிழகத்தில் ஏதோ அர்த்தமற்ற சடங்காக மட்டுமே இருக்கிறது. இல்லையேல் அம்மா அப்பல்லோவில் இருப்பதால் பூஜையை கொண்டாடுவது தவறு என்று ஒரு தா.பாண்டியன் கட்சிக்காரர் சொல்வாரா?

– நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்.