Friday, May 14, 2021
முகப்பு கட்சிகள் சி.பி.ஐ - சி.பி.எம் ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

ஆயுதபூஜை பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொன்னார் ?

-

யுத பூஜை கொண்டாடும் உழைக்கும் மக்களிடம் பேச விரும்பி கிண்டி தொழிற்பேட்டையை அடைந்திருந்தோம்.

தள்ளுவண்டி கடைவைத்திருந்த இரண்டு பெண்களிடம் பேசினோம்.

“என்னக்கா ஆயுத பூஜை ஏற்பாடெல்லாம் எப்படி போயிட்டு இருக்கு”?

”ஒரு ஆப்பிள் பழம் 40 ரூபானுரான். இதெ வெச்சி எத்தனை பேருக்கு பங்கு போடமுடியும்?”

“அப்போ ஆப்பிள் சாமிக்கு இல்லையா?”

சிரித்துக்கொண்டே…. “சாமிக்கு தான். ஆனால் சாமி பேரை சொல்லி ஆசாமிதான சாப்பிடுறோம்.”

ஆமாப்பா கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா
“ஆமாப்பா கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா”

“முன்னாடி அடுத்த நாள் சாப்பிடவரவங்களுக்கும் பொட்டலம் போட்டு பொறி பழம் கொடுப்போம். இப்போ பாரு சாமிக்கே ஒரு பார்சல் கொடுக்க முடியல. பொரட்டாசி மாசம் கடை ஓடாது. பசங்கள படிக்க வெச்சிருக்கேன். வட்டி வேற கட்டனும், கடவுள் கூட இருக்குறவன் பக்கம் தான். இல்லாதவங்க பக்கம் யாரிருக்கா.”

“சாமியே கைவிட்டுருச்சா?”

“வேலை செய்யுறப்ப கையில கத்தி, எண்ணெய் கொட்டிரக்கூடாதுனு வேண்டிக்கினு கும்புடுறோம். இதோ பாரு பல தடவை கொட்டிருச்சி. என்ன பண்றது. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்.”

”ம். ஆயுத பூஜைக்கு நீங்க கத்தியில பொட்டு வெக்குறீங்களே. ஆஸ்பிட்டல் டாக்டருங்க ஆப்பரேசன் கத்தியில பொட்டு வெச்சா ஒத்துப்பீங்களா?

“அதெப்படி செஃப்டிக் ஆயிரும்ல. வேணும்னா மெசினுக்கு வெச்சிகலாம்.”

“வர்ரப்ப ஒரு ஈ.பி ஒயர்மேன பாத்தேன். அவரு எப்படிங்க சாமி கும்பிடனும். கரண்டு ஒயர்ல சந்தனம் குங்குமம் வெக்கனுமா?”

“ஹா ஹா. தம்பி அவரு கரண்டு ஒயருக்கு பொட்டு வெச்சா அவருக்கு யாராவது பொட்டு வெச்சிருவாங்க”

அருகிலிருந்த ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை நிகழ்ச்சியை அறிவிக்கும் விதமாக பாடல்கள் காதை கிழித்தன. அங்கு மைக் செட் சவுண்ட் சர்வீஸ் ஏற்பாடு செய்து கொண்டிருந்த சேகர் என்பவரிடம் பேசினோம்.

auto-stand1
”ஆயுத பூஜைக்கு அவங்க தொழில் செய்றத பொருளை வெச்சி கும்பிடனும்னு சொல்றீங்க. டாஸ்மாக்குல எதை வெச்சி கும்பிடனும்”

”எல்லாருக்கும் இன்னிக்கு ஆயுத பூஜைனா எங்களுக்கு 10 நாள் கழிச்சிதான். எல்லாரும் கொண்டாடும் போது நாங்க கொண்டாடுனா அவ்வளவு தான். இந்த சமயத்தில தான் ஆர்டர் கிடைக்கும்”

”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா?”

“சினிமா பாட்டு போட்டாத்தான் ஆயுத பூஜை. பக்தி பாட்டு போட்டா வேற எதுனா கோயில் திருவிழானு நெனச்சிப்பாங்க”

“ஆயுத பூஜைக்கு அவங்க தொழில் செய்றத பொருளை வெச்சி கும்பிடனும்னு சொல்றீங்க. டாஸ்மாக்குல எதை வெச்சி கும்பிடனும்”

”நீ ராங்கா கேக்குறீயே”. “ ஆனாலும் நீ கேக்குறது சரிதான். நியாயமா பாட்டில வெச்சி தான் கும்பிடனும். ஆனா எனக்கு தெரியலியே”. ஆனா நாங்க தெனமும் அத வெச்சி கும்பிடுறோம் ” என்றார் விளையாட்டாக.

”சரி.ஆயுத பூஜைனா எல்லாத்தையும் கழுவி சுத்தம் பண்ணி பொட்டு வெக்கனும்னு சொன்னாங்க. நீங்க ஸ்பீக்கர், மைக் செட்டால் நல்ல தண்ணில முக்கி  கழுவுவீங்களா? ”

(சிரித்துக்கொண்டே) நீ திரும்ப திரும்ப ராங்கா கேக்குற. ஆட்டோகாரன் தண்ணில முக்கி கூட எடுப்பான்.பிரச்சனையில்ல. நமக்கு தொடச்சி பொட்டு வெச்சா போதும்.

“பஸ் டிப்போல ஒரு சத்தமும் இல்லையே. ஏன்”

“அம்மா அப்பல்லோல முடியாம படுத்திருக்காங்கல. அதுனால கொண்டாடக்கூடாதுனு உத்தரவு போட்டிருக்காங்க.”

“ஓ. அப்படினா கடவுள விட அம்மா தான் பெரிய ஆளு போல”

வசந்தி செருப்பு தைக்கும் தொழிலாளி

”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா”
”ஆயுத பூஜைனு சொல்லிட்டு சினிமா பாட்டா போடுறீங்களே. சாமி பாட்டு போடமாட்டீங்களா”

”என்னாம்மா இந்த தடவை ஆயுத பூஜை ஒரு சத்தமுமே காணோமே”

“ஆமா. (அருகில் இருக்கும் தீயணைப்பு நிலையத்தை காட்டி) ஃபயர் சர்வீஸ்ல கூட ஆயுத பூஜை கெடயாதுனுட்டாங்களாம். அம்மா உடம்பு சரியில்லை அதுனால கொண்டாடக்கூடாதுனு ஆடர் போட்ருக்காங்களாம்.”

“ஓ”

”பொருள் வெச்சி கும்பிடப்போறியா இல்ல அம்மாவெ வெச்சி கும்பிடப்போறியானு- கேட்டுனு வந்தேன்”

“சரி நீங்க எத வெச்சி கும்பிடப்போறீங்க”

”இந்த ஊசி இதுகள வெச்சிதான்”

“உங்ககிட்ட செருப்பு தைக்கிறதுக்கு வாரவங்க இன்னிக்கு வீட்டுல செருப்புக்கு பூஜை போடுவாங்களா?”

“ஆமா. பத்து பைசாவுக்கு குங்குமம் வாங்குனாலும் அதை நெத்தில வெக்கிறோம். ஆயிரம் ரூபாவுக்கு செருப்பு வாங்கினாலும் அதை வாசல்ல தான் போட முடியும்”.

சேவைச் சாதியினரை இழிவாக நடத்தும் பார்ப்பனியத்தின் பார்வையில் சேவை வேலை செய்யும் மக்களின் கருவிகளோ இல்லை பொருட்களோ பூஜைக்குரியதாக இல்லை.

—–

அப்பகுதியில் இருந்த ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்தவர்களிடம் பேசினோம்.

”பிரதமர் மோடி தூய்மை இந்தியானு திட்டம் ஆரம்பிச்சிருக்காரு. ஆனா நாம் வருசத்துக்கு ஒரு நாள் தானே எல்லாத்தையும் கிளீன் பண்ணி ஆயுத பூஜை கொண்டாடுறோம். தினமும் கொண்டாட வேண்டாமா?”

“தினமுமா நமக்கு வேலை இருக்கு. வீட்டுல சும்மா இருந்தாதான் தினமும் அப்படி செய்ய முடியும்.”

“ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடாத வெள்ளக்காரன் தான் நிறைய கண்டுபிடிப்புகள் செய்யுறான் அறிவாளியா இருக்கான். நம்ம சாமிக்கு சக்தி இல்லையா?”

”அப்படிலாம் இல்ல. என் பேரன் இவ்ளோ தான் இருக்கான். இப்பவே இங்கிலீஷ் பேசுறான்”.

ஆங்கிலம் பேசுவதையே அறிவுக்கான அளவீடாக பார்க்கிறார் இப்பெரியவர். ஆனால் சரஸ்வதிக்கு ஆங்கிலம் தெரியாதே என்ன செய்ய?

பேச்சு அப்படியே காவிரி நீர் பிரச்சினை பற்றி சென்றது.

”சரி காவிரில கர்நாடகாகாரன் தண்ணிவிட மாட்டுறானே. வருசாவருசம் ஆயுத பூஜை கொண்டாடுறோமே அந்த கடவுள்கள் ஏன் எதுவும் பண்ணமாட்டுது? அப்போ சாமி இல்லையா?”

”சாமிக்கு கை கால் இருந்தா அது தானாவே குளிச்சிகுமே. நாம ஏன் குளிப்பாட்டுறோம். கல்ல வெச்சி சாமினு கும்புடுறோம். அதுல சாமி இருக்கா இல்லையானு அந்த ஆண்டவனுக்குதான் வெளிச்சம். ஆனா கடவுள்னு ஒருத்தன் இருக்கான்”.

இந்த புரிந்தும் புரியாததுமான குழப்பத்திற்கிடையே தான் கடவுள் உயிர் வாழ்கிறார். ஒரு வகையில் வாழ்க்கை தோற்றுவிக்கும் குழப்பமும் கூட!

——

தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது.
தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது.

சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி உள்ளிட்ட போலிகம்யூனிஸ்டு தொழிற்சங்கங்கள் தான் ஆயுத பூஜை விழாக்களில் முன்னணியில் இருக்கிறார்கள். அச்சங்கத்தில் இருப்பவர்களுக்கு அரசியல் ரீதியில் எதையும் இக்கட்சிகள் பயிற்றுவிப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மே1 தொழிலாளர் தினம் கூட அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்

ஏ.ஐ.சி.டி.யூ (AICTU) தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.

”மே 1- க்கு என்ன பண்ணுவீங்க”

”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”.

“ஆயுத பூஜை கொண்டாடுகிறீர்களே இத பத்தி காரல் மார்க்ஸ் என்ன சொல்லிருக்காறர்”

”அப்படினா?”. காரல் மார்க்ஸ் ஒரு உயர் தினையா, அஃறினையா என்பதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே அடுத்த கேள்விக்கு தாவிவிட்டோம்.

”வண்டிக்கு எல்லா எடத்துலேயும் சூடம் காட்டுறீங்க. பெட்ரோல் டேங்க்ல மட்டும் ஏன் காட்டமாட்டுறீங்க”

யோசித்தவர். ”எல்லா இடத்திலேயும் காட்ட தேவையில்லை.”

”நாம ஆயுத பூஜை சரஸ்வதி பூஜைனு கொண்டாடுறோம். ஆனா இதெல்லாம் கும்பிடாத வெள்ளக்காரந்தான பல்புலருந்து ஆட்டோ வரைக்கும் கண்டுபிடிக்கிறான். ஏன்?”

”அவனுக்கு கண்டுபிடிக்க ஆயிரம் விசயம் இருக்கு.  நமக்கு இருக்கிறது ஒரு ஆட்டோ தான. அதனால நாம இது கொண்டாடுறோம். அவன் கண்டுபிடிக்கிறான்.”

இவர் வாரம் வாரம் வெள்ளி செவ்வாய் கிழமைகளில் ரூ.250-க்கு மேல் கோவில் பூஜைகளுக்கு செலவு செய்வதாக கூறினார்.

குறிப்பாக ஓலா கேப்கள் வருகை இவர்களின் தொழிலை பாதித்திருக்கிறது. தொழில் மோசமாக மோசமாக கடவுள் மீதான் பக்தி முன்னைவிட அதிகரிக்கிறது. எப்படியாவது இதிலிருந்து வெளிவந்து விட முடியாதா என்று ஏங்குகிறார்கள்.

மற்றும் சில ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசியதிலிருந்து ஓலா வருவதற்கு முன்னரே டாடா மேஜிக் வாயிலாக தாங்கள் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் இப்போது அது தீவிரமாகியிருக்கிறது என்றும் கூறினார்கள்.

”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”
”மே-1 விவசாயிகள் நாள் அதுக்கு லீவு உடணும். நாம என்ன பண்றது”

இறுதியாக ஏ.ஐ.சி.டி.யூ கிளை செயலாளரிடம் பேசினோம்.

”ஒரு ரிப்போர்ட்டுக்காக வந்திருக்கோம். உங்க ஸ்டாண்ட் பூஜையை போட்டோ எடுத்துகலாமா”

“தாராளமா எடுங்க. ஆனா ஒரு கண்டீசன். அம்மா மருத்துவமனையில் படுத்து கிடக்கும்போது இப்படி விழா கொண்டாடுறாங்கனு கடைசி வரியில முடிச்சி எழுதீராதிங்க. எங்களுக்கு சங்கடமாயிரும்”

“நீங்க அண்ணா தொழிற்சங்கமா இல்லை ஏ.ஐ.சி.டி.யூ-வா”

“நாங்க ஏ.ஐ.சி.டி.யூ-ங்க. அதாங்க தா,.பாண்டியன் கட்சி”

“அப்போ இரண்டும் ஒன்னுதானே”

“பாத்தீங்களா அரசியல் பேசுறீங்க”

”இல்ல கம்யூனிஸ்டுங்கனா கடவுள் இல்லைனு சொல்லுவாங்க அதுதான்”

“அது, இப்போ ரோடுல போரீங்க ஒரே மாதிரியாவா இருக்கு. குண்டு குழி இருக்கிறதில்ல. அதுபோல தான். விடவேண்டிய விசயத்தை விடனும் இழுத்து பிடிக்கவேண்டிய விசயத்தை இழுத்து பிடிக்கனும்” என்று தங்கள் சந்தர்ப்பவாதத்திற்கு புதுவிளக்கம் கொடுத்தார்.

நாம் பேசிய தொழிலாளர்களில் எவரும் கடவுள் குறித்த கேள்விகளுக்காக நம்மிடம் கோபித்துகொள்ளவில்லை. நீங்கள் கேட்பது சரிதான் என்று அங்கீகரிக்கிறார்கள். அது குறித்து யோசித்து விட்டு சிரிக்கிறார்கள். தமிழகத்தில் தான் இது சாத்தியம்.  வீட்டில் மாட்டுக்கறி வைத்திருந்ததாக கூறி அடித்து கொலை செய்யும் பார்ப்பனிய கலாச்சாரத்திலிருந்து இது முற்றிலும் வேறுபட்டது.

கடவுளை விமர்சன பூர்வமாக பார்ப்பதை ஆதரித்தாலும் தங்கள் வாழ்க்கையில் நிச்சயமின்மை குறித்த பயம், பெருகி வரும் வாழ்க்கை நெருக்கடி மக்களை மதங்களின் பின்னால் அணிவகுக்க வைப்பதாக இருக்கிறது. சரஸ்வதி பூஜை, ஆயது பூஜை எல்லாம் தமிழகத்தில் ஏதோ அர்த்தமற்ற சடங்காக மட்டுமே இருக்கிறது. இல்லையேல் அம்மா அப்பல்லோவில் இருப்பதால் பூஜையை கொண்டாடுவது தவறு என்று ஒரு தா.பாண்டியன் கட்சிக்காரர் சொல்வாரா?

– நேர்காணல், படங்கள்: வினவு செய்தியாளர்கள்.

 1. ஆட்டோ சங்கம்- ஏஐடியுசி (AITUC) என திருத்தவும்.மேலும் அப்பல்லோவில் அம்மா இருப்பதால் அதிமுக,அரசு போக்குவரத்துக் கழகங்கள்,மற்றும் அரசு நிறுவனங்களில் ஆயுத பூஜைகளை தவிர்த்துள்ளனர்.இது நிச்சயம் அவர்களுக்கு மகிழ்ச்சிதான்,காசு மிச்சமென்பதால்.

 2. காசு மிச்சமென்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், ஆயுத பூஜையை கொண்டாட முடியவில்லை என்ற வருத்தமும் மக்களிடம் உள்ளது.

 3. “ஆயுத பூஜை கொண்டாடுகிறீர்களே இத பத்தி காரல் மார்க்ஸ் என்ன சொல்லிருக்காறர்”

  ”அப்படினா?”. காரல் மார்க்ஸ் ஒரு உயர் தினையா, அஃறினையா என்பதில் அவருக்கு சந்தேகம் ஏற்படவே அடுத்த கேள்விக்கு தாவிவிட்டோம்.

  கொடுமைடா….

  • என்னங்க சி.பி.எம் கட்சியில இருக்கேன்னு சொல்றீங்க.குடிக்கிறிங்க, மனைவிய அடிக்கிறிங்க, அ.தி.மு.க வாடு மெம்பர ஊருக்குள்ள வலம் வாரிங்க. கம்யூனிஸ்டுக்கான எந்த பண்பும் உங்கள்ளட இல்லையே?!
   “என் மனைவி ஜென்னியா இல்லை. அதனால நான் காரல் மார்க்ஸா இருக்க முடியல”ன்னாரு. இதுக்கு என்ன சொல்றிங்க.

 4. ஜெயந்த் , மணிகண்டன்…., ஆயுத பூசை கொண்டாடுவதை வினவுகாரங்க கிண்டல் செய்யறாங்க…! கோபம் வரல? நீங்க சிலித்துக்கிட்டு விவாதத்துக்கு வரல? அப்ப உங்க மவுனம் சம்மதத்துக்கு அறிகுறியா ?

 5. வினவின் அயோக்கியத்தனம் எல்லாம் தெரிந்த விஷயம் தானே, இதே வினவு ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் போது அந்த மக்களிடம் இப்படி பேச சொல்லுங்களேன் பார்ப்போம். அடுத்த ரம்ஜான் பண்டிகையின் போது வினவு இதேபோல் இஸ்லாமிய மக்களிடம் கேள்விகளை கேட்க சொல்லுங்கள் பார்ப்போம். சவாலை ஏற்க வினவு தயாரா ?

  ஊருக்கு இளிச்சவாயன் ஹிந்து மதம், யார் எப்படி வேண்டுமானாலும் அவமதிக்கலாம் கேட்பதற்கு யாரும் இல்லை அதனால் வினவு போன்ற பாக்கிஸ்தான் கைக்கூலிகள் இப்படி தான் நடந்துகொள்வார்கள்.

  • மணிகண்டன்,

   இசுலாமிய மதவாதத்தை மட்டுமில்லை – கிருஸ்தவ முட்டாள்தனங்களையும் கூட வினவு விமர்சித்துள்ளது. இசுலாமிய மதவாதிகள் கும்பலாக நேரில் வந்து மிரட்டிச் செல்லும் அளவுக்கு அந்த விமர்சனம் கடுமையாகவும் இருந்தது.

   இதே தளத்தின் தேடு பெட்டிக்குள் இசுலாமிய மதவாதம் என்று தேடிப்பாருங்கள் – ஆனால் நீங்கள் தேடமாட்டீர்கள் ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தானே முதன்மையான பாகிஸ்தான் கைகூலிகள்? கேவலம் பாவடையை பார்த்து கொள்ளு விட்டு இராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றவர் தானே உங்கள் வருண்காந்தி.

   மற்றபடி இவர்கள் இந்தியாவில் இருப்பதால், ஆர்மீனியர்கள் பற்றி அதிகம் பேச முடியாது

  • என்ன மணிகண்டன், உங்க மூளையை எடுத்து பொறத்தாண்ட வச்சிண்டு பேசுறீங்களா? வினவு எழுப்பும் ஆய்த பூசை பற்றிய அறிவார்ந்த கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் அளிக்க துப்பு இல்லாமல் ரம்ஜான்,கிறிஸ்மஸ் பற்றி பேசலையே என்று வெம்புறீங்களே! வினவு ஹிந்து மக்களிடம் எடுத்த அந்த நேர்காணலை நீங்கள் கண்ட பின்னும் சலம்பறீங்களே ! இது நன்னாவா இருக்கு? முதலில் இங்கு வினவு இந்த கட்டுரையில் எழுப்பும் கேள்விகளுக்கு பொறுமையா பதில் சொல்லுங்க ஒய்! அதுக்கு பின்னால உங்கள் கேள்விகளுக்கு நான் நிறுத்தி நிதானமாக பதில் செல்றேன்.

   ஒரு சாம்பிளுக்கு என் பதில் கீழே :

   நாம ஹிந்துக்கள் பிரதோஷம், பௌர்ணமி, சஷ்டி,கார்த்திகை ஏகாதசி நாட்களில் விரதம் மேற்கொள்கின்றோம். நம் முன்னோர்களை நினைத்து அமாவாசை நோன்பு கொள்வது இன்றும் நாம் காணலாம். மேலும் செவ்வாய் வெள்ளி கிழமைகளிலும் அதிக பெண்கள் வரலட்சுமி விரதமும் இருக்கின்றனர். சனிக் கிழமைகளில் விரதம் மேற்கொள்பவர்களும் உண்டு. இதேபோல், இஸ்லாம் மதத்தில் ரம்ஜான் நோன்பு பிரசித்தி பெற்றது. அந்த மாதத்தில் உமிழ் நீரைக்கூட உள்ளிறக்க மாட்டார்கள் பாய்ங்க. மாலை 6 மணிக்கு மேல் கடவுளை வணங்கி நோன்புக் கஞ்சி அருந்துவார்கள். (கஞ்சியில் மட்டன் பீஸ் எல்லாம் இருக்கும்… சுவையும் கூடத்தான் இருக்கும்..அடுத்த ரம்ஜானின் போது அருந்திப் பாருங்க ஒய்…)

   இப்ப வினாவுக்காரங்கள என செய்ய சொல்றீங்க மணிகண்டன்…இன்னிக்கு சஷ்டிக்கு விரதம் இருப்பவங்கள , ரம்ஹானுக்கு விரதம் இருப்பவங்கள தடுத்து வாயில உணவை திணிக்கச் சொல்கின்றீரா? புரியும் படியா பேசுங்க மணி….

  • இஸ்லாத்தில் இரண்டு பெரிய விழாக்கள், ஒன்று ராமதானில் நோன்பு இருப்பது, இதில் இல்லாதவருக்கு உதவுவது, இரண்டாவது ஹஜ் பெருநாள் இதில் ஆட்டை யோ மாட்டையோ அறுத்து தர்மம் செய்வது, உங்கள் பண்டிகைகளில் ஒரு குறிப்பிட்ட சாதியினர் தான் உண்டு கொழுப்பார்கள், நீங்கள் அறிவு உள்ளவர் என்றால் நன்கு ஆராய்ந்து பதிவு போடுங்கள்

 6. மணி அண்ணனை பொறுத்தவரை ஆயுத பூஜை மோசடியானது என்பதை ஏற்றுக் கொள்கிறார். அதே சமயத்தில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகையையும் பேசுங்களேன் என்று சவடால் விடுகிறார்.

  இசுலாம் மற்றும் கிறுத்துவம் மதம் என்ற வகையில் பிற்போக்குத்தனமானது தான். ஆனால் அந்த மாதங்கள் பிறப்பு அடிப்படையில் ஏற்றதாழ்வுகளை உருவாக்கி அதற்கென பண்டிகைகளையும் உருவாக்கி விழாக்களாக்கி கொண்டாடவில்லை.

  சரஸ்வதி பூஜை ஆபாசத்தை பற்றி இந்து மத வெறியர்கள் அனைவரையும் நாக்குபுடிங்கி சாகுற மாறி அன்றே கேள்வியொன்றை பெரியார் கேட்டார்.

  இந்து மதம் என்ற ஒன்றே வரலாற்றில் கிருத்துவர்களால் உருவாக்கப்பட்டு ஒரு 200 ஆண்டுகள் தான் ஆகியிருக்கும்.

  மதங்கள் அடிப்படையிலேயே அறிவியலை ஏற்று கொள்ளுமானால் இந்து மதம் இது போன்ற பிற்போக்குத்தனமான கலாச்சாரங்களை ஒதுக்கித் தள்ளியிருக்கும்.

  கிருத்துவம் தனது மதக் கோட்பாட்டின் அடிப்படையில் பரினாமத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனினும் இன்றைய 21 நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சி அதை ஏற்று கொள்ளுமாறு நிர்பந்திக்கிறது. அதனால் தான் போப் அதை ஏற்றுக் கொள்கிறார்.

  ஆனால் இந்து மதம் அப்படியல்ல. இன்றும் கூட பசு மூத்திர சாணி ஆராய்சிக்காக கிருத்துவர் இசுலாமியர் உள்ளிட்ட மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி கும்பல்கள் கொட்டுகின்றன.

  ////////////வெள்ளைக்கார தேசத்தில் சரஸ்வதி என்கின்ற பேச்சோ கல்வி தெய்வம் என் கின்ற எண்ணமோ சுத்தமாய்க் கிடையாது.
  அன்றியும் நாம் காகிதத்தையும், ஒழுக்கத்தையும் சரஸ்வதியாய்க் கருதித் தொட்டு கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்குக் கல்வி இல்லை. ஆனால் வெள்ளைக்காரன் மல உபாதைக்குப் போனால் சரஸ்வதியைக் கொண்டே மலம் துடைத்தும், அவர்களில் நூற்றுக்கு நூறு ஆண்களும் நூற்றுக்கு அறுபது பெண்களும் படித்திருக்கிறார்கள். உண்மை யிலேயே சரஸ்வதி என்ற ஒரு தெய்வ மிருக்குமானால் பூஜை செய்பவர்களை தற்குறிகளாகவும் தன்னைக் கொண்டு மலம் துடைப்பவர்களை அபார சக்தி வாய்ந்த அறிவாளிகளாகவும். கல்வி வான்களாகவும் செய்யுமா? என்பதை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

  உண்மையிலேயே யுத்த ஆயுதம், கைத் தொழில் ஆயுதம், வியாபார ஆயுதம் ஆகி யவை உண்மையிலேயே சரஸ்வதி என்னும் தெய்வ அம்சமாயிருக்குமானால் அதை பூஜை செய்யும் இந்த நாடு அடிமைப்பட்டும் தொழிலற்றும் வியாபார மற்றும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கவும், சரஸ்வதியை கனவிலும் கருதாததும் சரஸ்வதி பூஜை செய்கின்றவர்களைப் பார்த்து முட்டாள்கள், அறிவிலிகள், காட்டுமிராண்டிகள் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நாடு சுதந்திரத்துடனும், வியாபாரிகள், அரசாட்சியுடனும் தொழி லாளர் ஆதிக்கத்துடனும் இருக்க முடியுமா என்பதையும் யோசித்துப் பாருங்கள்! இந்த பூஜையின் மூலம் நமது முட்டாள்தனம் எவ்வளவு வெளியாகின் றது பாருங்கள்!/////////////

  • ஏன் RSS தான் ஹிந்து மக்களுக்காக பேச வேண்டும்மா ? எங்களை போன்ற சாதாரண பொதுஜனம் பேச கூடாதா ? வினவு போன்றவர்கள் ஹிந்து பண்டிகைகளையும் கடவுளையும் கேவலமாக பேசி சாதாரண ஹிந்து மக்களிடம் கூட மதவாதத்தை தூண்டி விட்டு கொண்டு இருக்கிறது, உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம் உள்ள ஹிந்துக்களிடம் தான் அதன் கடவுளை பற்றியும் அதன் மதத்தை பற்றியும் கேவலமாக பேசுகிறார்கள். மீண்டும் மீண்டும் அந்த மக்களின் சகிப்பு தன்மையை சோதித்து அவர்களை மதவாதிகளாக மாற்ற பார்க்கிறார்கள்.

   • “உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம்” உள்ள ஹிந்துக்கள் தான் மாட்டுக்கறி தின்றார்கள் என்று கூறி மக்களை படுகொலை செய்கிறார்கள்!

    சகிப்புதன்மை தான் சாதிய சமூகத்தின் அடிப்படை. தாழ்த்தப்படும், ஒடுக்கப்படும் மக்கள் சகிப்புத்தன்மையுடன் தங்கள் மீதான ஒடுக்குமுறையை ஏற்றுக்கொள்ளும் வரை தான் இந்து மதம் உயிர் வாழும்.

    இந்த சகிப்புத்தன்மையை அம்மக்கள் வைத்திருக்க வேண்டுமா? விட்டுவிட வேண்டுமா? என்பது தான் கேள்வி.. உங்கள் பதிலென்ன?

    அந்த சகிப்புத்தன்மையை கேள்வி கேட்டு, அதை அம்மக்களிடமிருந்து சகிப்புதன்மையை களைவதற்கு பிரச்சாரம் செய்வதால், போராடுவதால் தான் நீங்கள் இப்படி பைரவராக மாறி எதைச் சொன்னாலும் ‘லொள்.. லொள்..’ என்று சொன்னதையே திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.

    ஆக, அந்த சகிப்புத்தன்மை உங்களுக்கு தேவையாக இருக்கிறது.

    எனில், இரும்படிக்கும் இடத்தில் ஈ-க்கு என்ன வேலை? அது அதன் இயல்புப்படி ‘பீ’யை அல்லவா தேடிப்போக வேண்டும்?

   • ///உலகிலேயே சகிப்பு தன்மை அதிகம்///
    இந்த கிரகத்துக்கு,
    உன்னேட சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் “கையப் பிடிச்சு இழுத்தியா’ கமெண்டுகளையெல்லாம் வெளியிடுறாங்களே இந்த வினவுக்காரங்க.. அவங்க சகிப்புத்தன்மைய சொல்லனும்…

   • அட்ராசக்கை….
    அய்யா, உங்க நாடி நரம்பு எங்கும் பொடச்சு இருக்குற சாதி வெறி அம்பலமாகி வேகுகாலமாச்சே.

    இந்து மதம் சகிப்பு தன்மை கொண்டதுன்னு நீங்க உடுற பீலாவுக்கு முழு முதல் காரணம் தலித் மக்கள் தான். ஏன்ன அத்தன கொடும பண்ணியும் திருப்பி அடிக்காம இருந்தாங்களே அதுதாங்க உண்மையான டாலரன்ஸ். அதுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு ஒங்க பொந்து மதமே சகிப்புத் தன்மை கொண்டதுன்னு அட்ச்சு விடுறீங்களே பாஸ்.

    இந்து மதத்தை தோலுரிப்பதில் கொஞ்சம் கூட டாலரன்ஸ் காமிக்க கூடாது என்பதே என் கருத்து.

  • வினவிற்கும் அவர்களின் வாசகர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம் அது அவர்களின் இஷ்டம் ஆனால் அதற்காக ஹிந்து வணங்கும் கடவுளை அவமதிப்பது அந்த மக்களின் மனதை புண்படுத்துவது எந்த வகையில் நியாயம் ?

   உலகிலேயே கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வியை கேட்கும் உரிமையை தந்து இருக்கும் ஒரே மதம் ஹிந்து மதம் தான். இஸ்லாமிய மதத்தில் அப்படி கேட்டால் கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள் ஆனால் ஹிந்து மாதத்தில் அப்படி கேள்வி கேட்கும் வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்கள். அந்த மாதிரியான விவாதத்தின் மூலம் தான் கடவுளை மனிதன் கண்டுகொள்ள முடியும் என்பது ஐதீகம்… ஆனால் வினவு போன்றவர்களின் ஹிந்து மத எதிர்ப்பு என்பதை நான் பாகிஸ்தான் சீனா சதி திட்டங்களில் ஒன்றாகவே பார்க்கிறேன், இந்த நாட்டை ஒன்றிணைக்கும் சில விஷயங்களில் ஹிந்து மதமும் ஒன்று (அதனால் தான் காஷ்மீரில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது ஜம்மு அமைதியாக இருக்கிறது), அதனால் நாட்டின் ஒற்றுமையை குலைக்க ஹிந்து மதத்தை குறி வைத்து தாக்குகிறார்கள், இதன் பலன் இன்று இல்லாவிட்டாலும் பல வருடங்கள் கழித்து தேசத்தை பலவீனபடுத்தும்…

   சீமான் நெடுமாறன் வைகோ கருணாநிதி வினவு இவர்கள் அனைவருக்கும் இருக்கும் ஒற்றுமை ஹிந்து மத எதிர்ப்பு

   இவர்கள் அனைவருக்கும் இருக்கும் அடுத்த ஒற்றுமை இந்தியா தேசத்தை பலவீன படுத்தி அதன் பிறகு பிரிவினையை தூண்ட வேண்டும் என்ற நீண்ட கால சதி திட்டம்.

   • அய்யா மணிகண்டன்,

    ஒற்றுமை அப்படிங்குற சொல்லை சொல்வதற்கு கூட உங்க ஆளுகளுக்கு யோக்கியதை கிடையாது.

    நாடு முழுவதும் தலித்துக்களுக்கு எதிராக தாக்குதல்கள் என்ன சீன,பாகிஸ்தான் சதியா இருக்குமோ?

    வினவுதான் ஆதிக்கசாதி சொறிநாய்களை தூண்டிவிட்டு கவுரவ கொலைகள் செய்திருக்குமோ?

    சரிபாதி பெண்களை அடிமைகளை போல பிளவுபடுத்தியிருப்பது ரசியாகாரங்களோ?

    சரி இந்துமதத்தில் அப்படி கேள்வி கேட்கும் உரிமையை கொடுத்து சமணர்களை கழுவில் ஏற்றி விட்டீர்களே? நந்தனை வள்ளலாரை எரித்து விட்டீர்களே? சார்வகர்களை கொன்று போட்டீர்களே?

    இப்படி அடிப்படையிலேயே நாட்டை பிளவுபடுத்தி இருப்பது உங்கவவா இல்லை வினவா?

   • ஹிந்து மதத்தை யார் அவமானப்படுத்துவது?

    1) நித்தியானந்தாவின் செயல்கள் மதத்தை வளர்ப்பதற்கானதா?
    2) அசாராம் பாபு, கல்கி, ஜெயேந்திரன், பிரேமானந்தா, அசீமானந்தா போன்றவர்கள் இந்து மதத்திற்கு பெருமையா?
    3) சாதி இழிவுகள் இந்து மதத்திற்கு பெருமையா?
    4) விதவைகளுக்கு மொட்டையடித்ததும், நெருப்பில் தூக்கிப் போட்டதும் பெருமை மிகு செயல்களா?
    5) பாலிய விவாகம் இந்து மதத்திற்கு பெருமை தேடித் தந்ததா?
    6) புராணங்களில் வரும் இந்திரன் பார்த்த மைணர் வேலைகள் இந்து மதத்திற்கு பெருமையானதா?
    7) இந்துக் கடவுள்களின் பிறப்பு இரகசியங்களை அம்பேத்கார் ஆய்வு செய்து எழுதியுள்ளாரே அதெல்லாம் பெருமையான கதைகளா?

    நாத்திகம் இந்து மதத்தின் பெருந்தன்மையா? ஏன், கிருஸ்தவ, யூத, இசுலாமிய, பௌத்த, ஜைன சீக்கிய கன்பூசிய மதங்களில் பிறந்தவர்கள் கூட நாத்திகர்களாக இருக்கிறார்களே?

    யூதராக பிறந்த கார்ல் மார்க்சை விட பெரிய நாத்திகர் வேறு யார்?

    • விட்டா ஆதிகாலத்தில் இந்தியர்கள் இலை தழைகளை தானே கட்டி கொண்டு இருந்தார்கள் அதற்கு ஹிந்து மத சதி தான் காரணம் என்று கொள்வீர்கள் போல 🙂

    • இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களில் கடவுள் இல்லை என்று மறுக்கும் உரிமையில்லை, முதலில் இதையெல்லாம் தெரிந்து கொண்டு பேச வாருங்கள்.

     • பதில் பேச துப்பு இல்லாம உளறிக்கிட்டு இருக்கிங்க மணிகண்டன். உங்கள் நேரமும் பிறரின் நேரமும் வீணாகின்றது அல்லவா? கடவுள் மறுப்பு வாதம் உலகலாவியது…

      • நான் ஒரு சவால் விட்டுருக்கேன் அதை ஏற்க ஒருவருக்கும் துப்பில்லை, பேச வந்துவிட்டார்கள்…

       கடவுளை மறுக்கும் உரிமை இஸ்லாமிய கிறிஸ்துவ மாதங்களில் கிடையாது. குரானை நீங்கள் பகவத் கீதையை அவமதிப்பது போல் அவமதித்தல் உங்களை கல்லால் அடித்தே கொன்று விடுவார்கள்.

       எப்படி ராமனை பற்றி நீங்கள் எல்லாம் கேவலமாக பேசுகிறீர்களோ அதேபோல் அல்லாஹ்வை பற்றி இஸ்லாமிய மக்களிடம் கேவலமாக பேசி பாருங்களேன், எப்படி ராமாயணம் பகவத் கீதை போன்ற ஹிந்து மத புனித நூல்களை கேவலமாக பேசுகிறீர்களா அதேபோல் கேவலமாக குரான் மற்றும் பைபிள் பற்றி பேசி பாருங்களேன்…

       மீண்டும் கேட்கிறேன் சவாலை ஏற்க தயாரா ? வினவில் குரானை பற்றி கேவலமாக ஒரு கட்டுரை வெளியிட தயாரா ? துணிவு இருக்கிறதா ?

       நிச்சயம் கிடையாது காரணம் குரானை பற்றி மட்டமாக எழுதினால் என்ன நடக்கும் என்று வினவிற்கும் தெரியும் அதன் வாசகர்களுக்கும் தெரியும்…

       என் நோக்கம் குரானை அவமதிப்பது அல்ல, எப்படி நீங்கள் குரான் போன்ற புனித நூல்களுக்கு மதிப்பு கொடுக்கிறீர்களோ அதேபோல் ஹிந்து மத புனித நூல்களுக்கும் மதிப்பு கொடுங்கள் என்பதே, எப்படி நீங்கள் இஸ்லாமிய மக்களின் உணர்வு மதிப்பு கொடுக்கிறீர்களோ அதேபோல் ஹிந்து மக்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுங்கள்.

       • என்னங்க மணி…. பதிலையே காணவில்லை…. பேசுங்க சார்…… வினவு ரம்ஜான் கொண்டாட்டத்தை ஆதரிக்கனுமா அல்லது எதிக்கனுமா ? அல்லது சீனாவில் ஆதரித்து விட்டு …. இந்தியாவில் மட்டும் எதிர்கனுமா? எம்மாம் பெரிய குழப்பவியாதியா இருகீங்க நீங்க !

       • முதலில் நீங்கள் ஒரு மொக்கை உங்கள் சோ கால்ட் சவால் அதை படுமொக்கை

        வினவில் பைபிளை விமர்சித்து கட்டுரை வந்துள்ளது. இசுலாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான விமர்சன கட்டுரைகளில் குரான் விமர்சனங்கள் உண்டு. இதே தமிழ்வலை உலகில் ம.க.இ.கவைச் சேர்ந்த தோழர் ஒருவர் தொடர்ந்து குரானின் ஒவ்வொரு வரியையும் பிரித்து மேய்ந்து கட்டுரைத் தொடரே எழுதியுள்ளார் – அதுவும் சவுதியில் வேலை பார்த்துக் கொன்டிருக்கும் போதே

        நான் உங்களுக்கு வைத்த சவால்கள் அப்படியே இருக்கின்றன

        ஹிந்து மதத்தை யார் அவமானப்படுத்துவது?

        1) நித்தியானந்தாவின் செயல்கள் மதத்தை வளர்ப்பதற்கானதா?
        2) அசாராம் பாபு, கல்கி, ஜெயேந்திரன், பிரேமானந்தா, அசீமானந்தா போன்றவர்கள் இந்து மதத்திற்கு பெருமையா?
        3) சாதி இழிவுகள் இந்து மதத்திற்கு பெருமையா?
        4) விதவைகளுக்கு மொட்டையடித்ததும், நெருப்பில் தூக்கிப் போட்டதும் பெருமை மிகு செயல்களா?
        5) பாலிய விவாகம் இந்து மதத்திற்கு பெருமை தேடித் தந்ததா?
        6) புராணங்களில் வரும் இந்திரன் பார்த்த மைணர் வேலைகள் இந்து மதத்திற்கு பெருமையானதா?
        7) இந்துக் கடவுள்களின் பிறப்பு இரகசியங்களை அம்பேத்கார் ஆய்வு செய்து எழுதியுள்ளாரே அதெல்லாம் பெருமையான கதைகளா?

        &*&*&*&*&*&&**&*&*&&*&&*

        நான் ஆகமவிதிகள் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் – நவகிரக சிலைகள் பிரதிஷ்ட்டை செய்வதற்கான விதிகள் வேறு. அதில் எங்குமே சூரியனை கோள்கள் சுற்றுவதால் அது மத்தியில் இருக்க வேன்டும் என்று சொல்லப்படவில்லை.

        உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

        *&*&*&*&*&*&*&*&*&*&*
        காஷ்மீரிகளுக்கு ஆதரவளித்த வினவின் எந்தக் கட்டுரையில் இருந்தாவது பாகிஸ்தானை ஆதரித்து ஒரே ஒரு வரியை எடுத்துப் போடுங்கள் பார்க்கலாம். மாறாக காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானை விமர்சித்த கட்டுரைகள் உள்ளது.

        வெ.மா.சூ.சொ இருந்தால் செய்யவும்.

        • காஷ்மீர் பிரிவினையை ஆதரிப்பதே பாகிஸ்தானை ஆதரிப்பதாக தானே அர்த்தம் இது கூட தெரியாத மொக்க பீசா நீங்க ஐயோ ஐயோ 🙂 🙂

         • மணிகண்டன் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஏன் தேசதுரோகிகள்? இதோ நிரூபனம் :

          வினவு காஷ்மீரிகளை ஆதரிக்கிறது – காஷ்மீரிகளின் நியாயமான கோரிக்கையை ஆதரிக்கிறது. காஷ்மீரிகளின் கோரிக்கை பாகிஸ்தானுக்கு ஆதரவானதல்ல; மாறாக அது பாகிஸ்தானின் தலையீட்டுக்கும் சேர்த்தே எதிரானது.

          காஷ்மீரிகளுக்கு அளிக்கப்படும் ஆதரவை பாகிஸ்தானுக்கு ஆதரவு என திரிப்பதற்கு காரணம் அந்த மாநில மக்களை ஆர்.எஸ்.எஸ் கும்பல் பாகிஸ்தானியர்கள் எனக் கருதுவதை நிரூபிக்கிறது.

          அதாவது காஷ்மீர் என்பது பாகிஸ்தான் தான் என சொல்கிறீர்கள். இது மாபெரும் தேசதுரோகமாகும். ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தேசதுரோகிகள் என்பதற்கு இதுவே நிரூபனம்.

        • நான் கடந்த 4 அல்லது 5 மாதங்களாக வினவு படித்து கொண்டு இருக்கிறேன், இந்த 5 மாதங்களில் வாரம் 3 கட்டுரைகளாவுது ஹிந்து மதத்தை எதிர்த்து வந்து இருக்கின்றன ஆனால் இந்த 5 மாதத்தில் ஒரு கட்டுரை கூட குரானை பற்றியோ அல்லது பைபிள் பற்றியோ வந்தது இல்லை.

         அதனால் நீங்கள் சொல்வது பொய், சவாலை ஏற்க நீங்கள் தயாராக இல்லை.

         • அதாவது மிஸ்டர் “தேசதுரோகி” என்ன சொல்றாருன்னா…

          “எனக்கு யானையின் தும்பிக்கை மட்டுமே தெரியும் அதனால் யானையின் உருவமே அசையும் உருளை வடிவமானது” என்கிறார்.

          முதலில் முழுதாக யானையைத் தடவிப் பார்த்து விட்டு வந்து பேசவும். எதையும் படிக்காமல் அறைகுறையாக வாந்தி எடுக்க வேன்டாமே

        • நீங்கள் எப்படி பகவத் கீதையை அவமான படுத்துகிறீர்களோ அதேபோல் குரானை பற்றி பேசி கட்டுரை வெளியிடுங்கள் பிறகு பார்ப்போம். இஸ்லாமிய அடிப்படை வாதம் பற்றி கட்டுரை வெளியிட்டோம் என்ற பம்மாத்து எல்லாம் வேண்டாம்…

         அப்படி உங்களால் குரானை அவமதிக்க முடியாது என்றால் இனி ஹிந்து மத புனித நூல்களை அவமதிக்க மாட்டோம் என்று சொல்லுங்கள்.

     • அடடா…

      இங்கே மட்டும் நாங்க பர்மிசன் கேட்டு… நீங்க change management control போட்டு அப்ரூவல் கொடுத்து… அத நாங்க எக்சிக்யூட் பண்ணி…. ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா… முடியலடா சாமி

  • பெரியார் வார்த்தைகளில் சொல்வது என்றால் உங்கள் கருத்து ஒரு வெங்காயம்.

   ஆங்கிலேய அடிமை புத்தியில் பெரியார் சொன்ன கருத்துக்களை வைத்து கொண்டு பேச வேண்டாம்.

   Copernicus உலகம் பூமியை சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்து சொன்னார், உங்கள் பெரியார் வார்த்தைகளில் சொன்னால் Copernicus அறிவாளி இந்தியர்களாகிய நாங்கள் முட்டாள்கள்… ஆனால் Copernicus இதை கண்டுபிடிப்பதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் இதை கோவில்களில் நவக்கிரக சன்னதியில் பார்க்கலாம், சூரியனை சுற்றி மற்ற கிரகங்கள் இருப்பதை… இதை ஹிந்து மத வேதம் சொன்னது அதனால் இது மூட நம்பிக்கை என்று உங்களை போன்றவர்களும் பெரியாரும் சொல்லலாம். டெலெஸ்கோப் வசதி இல்லாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நவகிரகங்கள் பற்றி கண்டு பிடித்து இருக்கிறார்கள் சரஸ்வதியை வழிபட்ட இந்தியர்கள்

   ஹிந்து மத வேதங்களில் இப்படி எத்தனையோ விஷயங்கள் உள்ளது உங்களை போன்றவர்களுக்கு புரியவில்லை தெரியவில்லை என்பதற்காக அவையெல்லாம் முட்டாள்தனம் மூட நம்பிக்கை ஆகாது.

   சமஸ்கிரத எதிர்ப்பினால் நாம் இழக்க போவது சாதாரண விஷயம் அல்ல…

   நான் இந்தியன் என்பதில் பெருமையும் கர்வமும் அடைகிறேன். உங்களை போன்ற ஆட்கள் வினவு போன்றவர்கள் வேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தான் உயர்ந்தவர்கள் என்று அடிமை புத்தியோடு இருங்கள்.

   • பில் கிளிண்டனை வாராது வந்த கலியுக கிரிஷ்ணனை போல இருகரம் கூப்பி வரவேற்றது எந்த வாய்? பெரியாரின் வாயா?

    அமெரிக்காகாரன் விசா குடுக்காததையே நினைத்து நினைத்து புழுங்கி செத்தது யார் பெரியாரா?

    ஆமாம் ஆமாம் உலகம் உருண்டைனு சொன்னது இந்துக்கள் தான். பூமியை பாயாக சுருட்டி கடலுக்குள் கொண்டு செல்லலாம் என அறிய அறிவியல் கண்டுபிடிப்பை சொன்னதற்காக நோபல் பரிசே கொடுக்கலாம்.

    உங்க புருடாவியல்(ஜோதிடவியல்) படி சூரியன் மையத்தில் இருக்கானா பூமியா? ராகு கேது எந்த கேலக்சில ஒளிஞ்சு இருக்கானுங்க? நிலா கிரகமா இல்லை நட்சத்திரமா? உண்மையிலேயே சூரிய குடும்பத்துல ஒன்பது பேர் தான் இருக்காங்களா எல்லாருமே கிரகம் தானா?

    வெறும் கண்ணால பத்து கோள்களையும் நட்சத்திரங்களையும் உலகம் முழுக்க கண் இருந்தவக எல்லோரும் தான் பாத்தாங்க. இந்தியாவை சேர்ந்தவர்களும் பார்த்து இருப்பாங்க தான்( இந்துக்கள் இல்லை அன்றைய இந்திய மக்கள்). அதுல உண்மையிலேயே அறிவியல் ஆர்வம் உள்ளவர்கள் முன்னேறி சூரிய குடும்பத்துக்கே ராக்கெட் விடற அளவிற்கு வளந்துட்டாங்க. உங்க அவா அந்த கடின உழைப்பை ஆட்டைய போட்டு தான் செவ்வாய்க்கு ராக்கெட் விட்டீங்க.

    மாட்டு மூத்திர ஆராய்ச்சி, இல்லாத சரஸ்வதி நதியை மோப்பம் பிடிப்பது, புருடாவியல், புஷ்பக விமானம், பூமியை பாயாக்குவது, உலகின் முதல் தொலைகாட்சி திருராச்டிரனுக்கு சண்டைகாட்சிகளை லைவ் டேலகாஸ்ட் பண்ணியது இதெல்லாம் தான் உங்க அறிவியல்னா இவையெல்லாம் தான் இந்திய வளர்ச்சிக்கு முட்டுகட்டைகள். இவற்றையெல்லாம் உருட்டுக்கட்டை கொண்டு அடிக்காவிட்டால் காலத்துக்கும் இந்திய மக்கள் முட்டாளாகவே தான் இருக்கணும்.

    • உங்களை எல்லாம் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது… நீங்கள் எல்லாம் வெள்ளை தோலுக்கு இந்தளவுக்கு அடிமையாக இருப்பீர்கள் என்று நினைத்து கூட பார்க்கவில்லை, பெரியாரின் வெள்ளைக்கார அடிமை புத்தி அப்படியே உங்களிடமும் இருக்கிறது. Copernicus ஏன் இந்திய வேதத்தில் இருந்து சுட்டு உலகம் உருண்டை என்று சொல்லியிருக்க கூடாது… அப்படி இல்லை என்று உங்களால் நிரூபிக்க முடியும்மா ? Copernicus தனது தியரியில் பயன்படுத்திய Pi value 3.1416 என்று ஆயிரம் வருடங்களுக்கு முன்பே ஆரியபட்டா சொன்னார், பெரியார் போற்றிய ஐரோப்பியர்கள் 1761 பிறகு தான் pi value கண்டு பிடித்தார்கள்.

     உங்களுக்கு தெரியவில்லை புரியவில்லை என்பதற்காக இந்திய வேதங்களை புறக்கணிப்பது முட்டாள் தனம் நம் முன்னோர்கள் தவம் இருந்து மனித குல முன்னேற்றத்திற்காக விட்டு சென்றவை தான் நம் வேதங்கள், அதை புறக்கணிப்பதால் இழப்பு நமக்கு தான்.

     இம்மாதிரியான வேத பொக்கிஷங்கள் உலகின் எந்த ஒரு நாட்டிலும் கிடையாது, அவைகளை பாதுகாக்க வேண்டியது அனைவரது கடமையும் கூட.

   • இந்தியர்கள் மட்டுமே டெலெஸ்கோப் வசதி இல்லாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நவகிரகங்களை கண்டுபிடித்ததாக கூறுவது பொய், பித்தலாட்டம், மொள்ளமாறித்தனம்.

    இந்தியாவில் மட்டுமின்றி கிரேக்க, ரோம, சீன, பாரசீகம் போன்ற பல்வேறு நாகரீகங்களும் கூட டெலெஸ்கோப் வசதி இல்லாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வான் கோள்களை கண்டறிந்துள்ளனர்.

    ஆனால், அவர்களது அறிவு வரம்புக்குட்பட்டிருந்த காரணத்தால் ஒரு அளவுக்கு மீறி அவர்களால் கண்டறிய முடியவில்லை. அதனால் சில தவறுகளும் இருந்தன. மற்ற நாடுகளில் யாரும் டெலெஸ்கோப் வசதி இல்லாமலேயே கண்டுபிடித்தோம் என்று யாரும் பீற்றிக் கொள்வதில்லை.

    இந்து நம்பிக்கைகளின் அடிப்படையில் சூரியன் (Sun), சந்திரன் (Moon), செவ்வாய் (Mars), புதன் (Mercury), குரு (Jupiter), சுக்கிரன் (Venus), சனி (Saturn), ராகு (Raghu), கேது (Kethu) – ஆகியன நவகிரகங்களாக கூறப்படுகின்றன.

    இவற்றில் சூரியன் ஒரு கிரகம் (கோள்) அல்ல, அது ஒரு நட்சத்திரம்.
    சந்திரனும் கூட ஒரு கிரகம் (கோள்) அல்ல, அது பூமியின் ஒரு துணைக் கோள்.
    ராகு மற்றும் கேது ஆகியவை கற்பனை பாத்திரங்கள்.

    பூமிக்கு ஒரு சாமிய வச்சு அதுக்கு பூமா தேவின்னு பேரு வச்சு அதுக்கு புராணக்கதைகளை உற்பத்தி செய்தவர்கள் ஏன் நவகிரக அமைப்பில் பூமியை விட வேண்டும்?

    ஏனைய பண்டைய நாகரீகங்களைப் போலவே இந்திய வான சாஸ்திரமும் கூட ஆரம்பத்தில் புவிமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான். அந்த புவிமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான் இந்து நவக்கிரக அமைப்பு. அதனால் தான் நவக்கிரக அமைப்பில் நமது பூமி மிஸ்ஸிங்..

    இது தவிர நமது சூரியக் குடும்பத்தில் யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்களும் அங்கமாக உள்ளன. இவையும் நவகிரக அமைப்பில் மிஸ்ஸிங். இந்த யுரேனஸ், நெப்டியூனுக்கும் ராகு மற்றும் கேதுவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. ராகு கேதுவையும், சூரிய சந்திர கிரகணங்களையும் உள்ளடக்கி தனியாக கட்டுக்கதைகள் இருக்கின்றன.

    இவை இந்து வான சாஸ்திரத்தின் – நவக்கிரக அமைப்பின் தவறுகள் – இதில் பெருமை பீத்திக்கொள்ள என்ன இருக்கிறது?

    இந்தியர்கள் மட்டுமே டெலெஸ்கோப் வசதி இல்லாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நவகிரகங்களை கண்டுபிடித்ததாக கூறுவது, கோபர்நிகஸ், டைக்கோ பிராஹே, கலீலியோ, கெப்லர், நியூட்டன் போன்றோரின் பங்களிப்பை புறக்கணிப்பதற்கு சமம்.

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கோபர்நிகசின் சூரியமையக் கோட்பட்டை கண்டுபிடித்தது நாங்கள் தான் என்று சொல்வது பித்தலாட்டம். இதை வெளியே சொன்னால் உலகம் வாயால் சிரிக்காது..

    அதோடு பூமிக்கு இருப்பது போல் செவ்வாய்க்கு இரண்டு துணைக் கோள்களும், வியாழனுக்கு (குரு) 67 துணைக் கோள்களும், சனிக்கு 62 துணைக் கோள்களும், மேலும் சூரியக் குடும்பத்தில் எண்ணற்ற விண்கற்களும், இதர பிறவும் கூட இருக்கின்றன. இவை அனைத்துமே நவீன அறிவியல் வளர்ந்து கண்டறிந்தவை தான்.

    எனவே, நாங்கள் அப்போதே அனைத்தையும் கண்டறிந்து விட்டோம் என்ற இந்துத்துவ வானரங்களின் கூற்று – “எங்களுக்கு குண்டி இருப்பதாலேயே உலகுக்கே ‘பீ’ப்பேள்வதற்கு கற்றுத் கொடுத்தது நாங்கள் தான்” என்று சொல்லிக் கொள்வதற்கு ஒப்பானது.

    உங்களுக்கு வாய் இருப்பதால் எதை வேண்டுமானாலும் வாந்தி எடுக்கலாம், அது உங்கள் உரிமை. ஆனால் வாந்தி எடுத்துவிட்டு “உலகம் வாய்வழியாக தான் கழிக்கிறது” இதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடியே நாங்கள் கண்டறிந்தது விட்டோம் என்று சொன்னால், அதை உலகம் நம்ப வேண்டுமே! 🙂

    • ரோம – கிரேக்க கடவுளரும் கோள்களும்.

     கிரேக்க தொன்மங்களின் படி அவர்களது கடவுள்களின் தலைவன், அரசன் – Jupiter – வியாழன்.
     காதல் மற்றும் அழகின் தேவதை – Venus – சுக்கிரன்
     போர் கடவுள் – Mars – செவ்வாய்
     விவசாயம் மற்றும் அறுவடைக்கான கடவுள் – Saturn – சனி
     கடவுள்களின் தூதர் – Mercury – புதன்

     – இவை கிரேக்கர்கள், ரோமானியர்கள் டெலெஸ்கோப் வசதி இல்லாமல் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே வான் கோகளைக் கண்டறிந்ததற்கான ஆதாரங்கள்.

     இதற்காக எந்த கிரேக்கனோ அல்லது ஐரோப்பியனோ பெருமப் பீற்றிக் கொள்வதில்லை.

     ***

     சமோசின் அரிஸ்டார்சஸ் (கி.மு 310) கோபர்நிகசுக்கு 17 நூற்றாண்டுகளுக்கு முன்பே சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார். அது அரிஸ்டாட்டிலின் புவி மையக் கோட்பாட்டின் மூலம் புறக்கணித்து நிராகரிக்கப்பட்டது.

     இந்திய வானியலின் முன்னோடிகளாக கருதப்படும் ஆரியபட்டர் கி.பி 5-ம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவருக்கு பின் வந்தவர்கள் தான் வராகமித்திரர், பிரம்ம குப்தர், பாஸ்கரா போன்றோர்.

     இதன் படி பார்த்தாலும் கூட கோள்களை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தோம் என்றும் சூரிய மையை கோட்பாட்டை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடித்தோம் என்றும் சொல்வது, பீற்றிக்கொள்வது பொய், பித்தலாட்டம், மொள்ளமாறித்தனம்! 🙂

     I am done. i expect refute / reply with evidence from Jayanth and Manikandan.

   • ஓ மை மோடி….

    அப்படியே பிள்ளையாருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி, முன்னும் பின்னும் மேலும் கீழும் பறக்கும் அதிசய விமானம், மகாபாரதத்தின் சாட்டிலைட் தொலைக்காட்சி என்று போய்க் கொன்டே இருக்க வேன்டியது தானே?

    நான் ஆகமவிதிகள் அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன் – நவகிரக சிலைகள் பிரதிஷ்ட்டை செய்வதற்கான விதிகள் வேறு. அதில் எங்குமே சூரியனை கோள்கள் சுற்றுவதால் அது மத்தியில் இருக்க வேன்டும் என்று சொல்லப்படவில்லை.

    உங்களுக்கு வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் அதை நிரூபித்துக் காட்டுங்கள் பார்க்கலாம்.

   • ஐயா மணிகண்டன்,

    இது தான் உங்கள் “ஹிந்து” வீரமா?
    கொஞ்சமாவது அறிவு நாணயம் இருந்தால், உங்கள் உரிமைகோரலுக்கு (claim) ஆதாரம் கொடுக்க வேண்டும். அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். பொய்களை அள்ளிவீசிவிட்டு ஓடிப்போகக் கூடாது.

    /சூரியனை சுற்றி மற்ற கிரகங்கள் இருப்பதை… இதை ஹிந்து மத வேதம் //

    சூரிய மையக் கோட்பாடு இந்து மதத்தின் எந்த வேதத்தில், எந்த சுலோகத்தில், அல்லது எந்த உபநிசத்தில் சொல்லப்பட்டுள்ளது? ஆதாரம் வேண்டும்.

    நான் ஆதாரப்பூர்வமாக உங்கள் பொய்களை அம்பலப்படுத்தி 4 நாட்கள் ஆகிறது.

    I am waiting!

    • நீங்கள் எல்லாம் நிச்சயம் பரிதாபத்திற்குரியவர்களாக தான் இருக்கிறீர்கள், இந்த நாட்டின் முன்னோர்களின் அருமை பெருமை தெரியாதவர்களாக இருப்பது வேதனையாக இருக்கிறது… நியூட்டனை பற்றி தெரிந்தவர்களுக்கு ஆரியபட்டா பற்றி தெரியாதது வெட்கக்கேடு. நீங்கள் எல்லாம் பெரியாரின் புத்திரர்களாச்சே (வெள்ளையர்களின் கொத்தடிமைகள்) உங்களுக்கு எல்லாம் இந்தியர்கள்(ஹிந்துக்கள்) என்றால் முட்டாள்கள் என்ற நினைப்பு புரையோடி போய் இருக்கிறது.

     மனித இனத்தின் வானசாஸ்திரத்தின் முதல் நூல் வேதாங்க ஜ்யோதிஷ அதில் தான் கோள்களை பற்றிய விரிவான விவரங்கள் கூறப்பட்டு இருக்கிறது. கிரேக்கர்கள் 4ம் BCக்கு பிறகு தான் வானசாஸ்திரம் பற்றி பேசுகிறார்கள் ஆனால் இந்தியர்களின் வானசாஸ்திரம் அதற்கும் முன்பானது… வேதாங்க ஜ்யோதிஷ படியுங்கள் அதில் உங்கள் கேள்விகளுக்கு விடை இருக்கிறது.

     வினவு போன்றவர்களின் சமஸ்கிரத எதிர்ப்பு என்பது சாதாரண விஷயமாக நான் பார்க்கவில்லை, இந்த நாட்டின் மிக பெரிய அறிவு பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் ஒரு சதி திட்டமாகவே இதை நான் பார்க்கிறேன், இதே வினவு வைகோ சீமான் நெடுமாறன் போன்ற தேசத்துரோகிகள் பள்ளிகளில் அரேபிய மொழி சொல்லி கொடுப்பதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிப்பது இல்லை, இவர்களின் எதிர்ப்பு எல்லாம் சமஸ்கிரதம் கூடாது என்பதில் தான் இருக்கிறது. எவ்வுளவு பெரிய நயவஞ்சகம் இது.

     • Arabian language is being taught in the minority educational institutions ie madarasas and not in public schools meant for students from all religions.But,the NEP says that Sanskrit will be taught compulsorily in all schools/colleges/universities.Do you know the difference?You can wake up a sleeping man and not a person who pretends that he is sleeping.

      • சார் நீங்க அரேபிய மொழியை உங்கள் மாணவர்களுக்கு கற்று கொடுப்பது சரி என்று சொல்லும் நீங்க ஏன் சார் சமஸ்கிருதத்தை இந்திய (ஹிந்து) மாணவர்களுக்கு கற்று கொடுப்பதை தவறு என்கிறீர்கள் ?

       சமஸ்கிரத மொழியை இந்தியாவில் இந்திய மாணவர்களுக்கு கற்று கொடுக்கவில்லை என்றால் வேறு யார் கற்று கொடுப்பார்கள். இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் விருப்பம் இல்லை என்றால் சமஸ்கிரதம் கற்க வேண்டாம் ஆனால் விருப்பம் உள்ள மற்ற மாணவர்களை ஏன் தடுக்கிறீர்கள் ? சமஸ்கிரதம் கற்கும் வாய்ப்பை ஏன் அவர்களுக்கு மறுக்கிறீர்கள் ? அதற்கு என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு எல்லாம் ?

       என்னை கேட்டால் சமஸ்கிரத்தை ஹிந்துக்கள் மட்டும் அல்ல இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் கற்றுகொள்வது நல்லது என்பேன் காரணம், நம் நாட்டின் பாரம்பரிய அறிவு அனைத்து மக்களிடமும் சென்றடையும்… இதை மதத்தின் அடிப்படையில் கூறவில்லை, இதை நான் அறிவின் அடிப்படையில் கூறுகிறேன், நம் நாட்டின் அறிவு வளம் அழிந்து விட கூடாது என்ற அடிப்படையில் சொல்கிறேன்.

       • அரேபிய மொழி இசுலாமியருடையது சரி.
        யார் யாருக்கு அரேபிய மொழியைக் கற்றுக் கொடுக்கிறார்கள்?இசுலாமியருக்கு தானே கற்றுக்கொடுக்கிறார்கள்? அதில் உமக்கு என்ன குமைச்சல்? அது என்ன அரசு நடத்தும் நிறுவனமா? தனியார் நிறுவனம் தானே.

        இப்போ சமஸ்கிருதம் என்பது யாருடைய தாய் மொழி? தமிழருடைய தாய் மொழியா? இல்லை இந்தியர்கள் அனைவருடைய தாய் மொழியா? செத்துப் போன மொழியை கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது? உண்மையில் சமஸ்கிருதத்தில் சில நல்ல விசியங்கள் அதுவும் நாத்திகர்களுடைய பங்களிப்பாக தான் இருக்கிறது.

        சமஸ்கிருதத்தில் இருக்கும் கழிவுகளை கற்றுக் கொள்ள அரசு நிறுவனங்கள் தான் கிடைத்தனவா? பாப்பானுங்களுடைய தனியுடைமையா அரசு நிறுவனங்கள்?

        இந்து, முஸ்லிம்,கிருத்துவர், கம்யுனிஸ்டுகள், நாத்திகர் , விவசாயிகள், தொழிலாளிகள் என அனைவருடைய வரிப் பணத்தில் நடக்கும் அரசு நிறுவனங்களில் சமஸ்கிருதம் ஏன் கற்றுக் கொள்ள கட்டாயம்?

        உமக்கு சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வேண்டுமெனில் நிறுவனங்களை தனியே நடத்து.

        இது எப்படி இருக்கிறது எனில் அனைத்து சாதி மத மக்கள் வாழும் ஒரு ஊரின் பொது சொத்தான குளத்தையோ குட்டையையோ ஒரு இந்து கோயிலுக்கு நேர்த்தி கொடுப்பதை போலதான்.

        உண்மையில் சம்ஸ்கிருதம் என்கின்ற பிணத்தையாவது பராமரிக்க வேண்டுமென்றாலும் அதில் உள்ள நாத்திகக் கருத்துக்கள் வழியாக தான் செய்ய முடியுமே ஒழிய ஸ்ம்ரிதி,புராணம்,இதிகாசம் போன்ற புருடாக்களால் அல்ல.

     • “2014-Rs170 crore grant for universities for development of Sanskrit.
      2015-Rs 470 crore allotted for observing “Sanskrit week”.
      23-7-2015-Rs 320 crore allotment for developing Sanskrit language in CBSE schools.
      July,2015-Allotment of Rs200 crore for the Sanskrit Conference at Bangkok.
      2016-Rs70 crore allotted for doing research on Sanskrit language by students in the Rashtriya Sanskrit Sanasthan.
      For development of Sanskrit language,creation of “Vedic Board”
      In northern states,all Urdu teachers should undergo compulsory training in Sanskrit.
      All schemes/plans launched by the central govt are having Sanskrit/Hindi names”-Viduthalai.
      In the draft report on New Education Policy,2016,the following four paragraphs were exclusively devoted to development of Sanskrit.
      6.13.19-The study of Sanskrit requires special emphasis,as it is still inextricably linked with the life,rituals,ceremonies and festivals of the people and is a window to the rich cultural,philosophical,artistic and scientific heritage of India.Knowledge of Sanskrit is a window to languages and cultures in many states.
      6.13.20-Keeping in view the special importance of Sanskrit to the growth and development of Indian languages and its unique contribution to the cultural unity of the country,facilities for teaching Sanskrit at school and university stages should be offered on a more liberal scale.
      6.13.21-In some states,Sanskrit is already being taught as a compulsory subject from classes 6 to 8.Sanskrit may be introduced as an independent subject at a suitable point of the primary or the upper primary stage.At the secondary stage,Sanskrit may be offered as an additional option and at the higher secondary stage suitable elective courses in Sanskrit may be made available to all those students who wish to study it.Open school courses for Sanskrit may also be designed for learners at all levels.
      6.13.23-Development of new methods of teaching the language should be encouraged,and the possibility explored of including the study of Sanskrit in those courses ( such as Modern Indian languages,ancient Indian history,Indology and Indian philosophy)where such knowledge would be useful for an understanding of the subject is useful.
      Let Vinavu readers debate whether the contents in the above paragraphs of NEP draft report regarding Sanskrit is true or not.Whether Sanskrit,which is just one of the 22 languages in the 8th schedule of the Indian Constitution,and being spoken by only 16000 people in our country,which divide the people as per Varnashramadharma,which has damaged the core of Telugu,Kannada,Malayalam and Thulu languages(it could not do so to Tamil because of its inherent strength),which is not the window of Tamil culture(and also in many states like North East states) deserve this preferential treatment at the cost of other languages?
      There is a news report saying that 5 Sanskrit schools in Kerala got closed due to lack of students and that the authorities are planning to do door to door propaganda to get students for such Sanskrit students.

      • The last sentence may be read as follows’-“There is a news report saying 5 Sanskrit schools in Kerala got closed due to lack of students and that the authorities are planning to do door to door enrollment drive for such schools”

     • மணிகண்டன்,

      நீங்கள் உங்கள் முட்டாள்தனத்தை ஏதோ பெரிய அறிவுஜீவித்தனமாக காட்டுவதற்கு முக்கி முனகுவது அப்பட்டமாக தெரிகிறது.
      Dont come with out reading my replies. I am sorry my dear, i already refuted these claims..
      Dont do false claims! You better get help from Aravindan neelakandan.

      கீழுள்ள என்னுடைய எல்லா கேள்விகளுக்கு பதில் சொல்லவும். ஜ்யோதிஷ-வில் உள்ள சுலோகக்களை, சூத்திரங்களை ஆதாரமாக போட்டு பதில் சொல்ல வேண்டும்.

      1) ஜ்யோதிஷ எந்த ஆண்டு யாரால் எழுதப்பட்டது? ஜ்யோதிஷ-விற்கும் வேதத்திற்கும் என்ன சம்பந்தம்? வேதம் எழுதியவர்களே ஜ்யோதிஷ-வை எழுதினார்களா? அல்லது…

      2) நவக்கிரக அமைப்பில் சூரியம் மையத்தில் இல்லை. மேலும் சூரியன் கோள் அல்ல, நட்சத்திரம். இவை பற்றி விளக்கம் ?

      3) //சமோசின் அரிஸ்டார்சஸ் (கி.மு 310) கோபர்நிகசுக்கு 17 நூற்றாண்டுகளுக்கு முன்பே சூரிய மையக் கோட்பாட்டை முன்வைத்திருந்தார். அது அரிஸ்டாட்டிலின் புவி மையக் கோட்பாட்டின் மூலம் புறக்கணித்து நிராகரிக்கப்பட்டது.

      இந்திய வானியலின் முன்னோடிகளாக கருதப்படும் ஆரியபட்டர் கி.பி 5-ம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவருக்கு பின் வந்தவர்கள் தான் வராகமித்திரர், பிரம்ம குப்தர், பாஸ்கரா போன்றோர். //
      – இது வரலாறு.. மனித இனத்தின் வானசாஸ்திரத்தின் முதல் நூல் ஜ்யோதிஷ என்றால் ஆதாரம் ?

      3) //பூமிக்கு ஒரு சாமிய வச்சு அதுக்கு பூமா தேவின்னு பேரு வச்சு அதுக்கு புராணக்கதைகளை உற்பத்தி செய்தவர்கள் ஏன் நவகிரக அமைப்பில் பூமியை விட வேண்டும்?

      ஏனைய பண்டைய அறிவியல் கருத்துக்களைப் போலவே இந்திய வான சாஸ்திரமும் கூட ஆரம்பத்தில் புவிமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான். அந்த புவிமையக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது தான் இந்து நவக்கிரக அமைப்பும். அதனால் தான் நவக்கிரக அமைப்பில் நமது பூமி மிஸ்ஸிங்..//
      – இவை பற்றி விளக்கம் ?

      4) //பூமிக்கு இருப்பது போல் செவ்வாய்க்கு இரண்டு துணைக் கோள்களும், வியாழனுக்கு (குரு) 67 துணைக் கோள்களும், சனிக்கு 62 துணைக் கோள்களும், மேலும் சூரியக் குடும்பத்தில் எண்ணற்ற விண்கற்களும், இதர பிறவும் கூட இருக்கின்றன. வியாழனின் கேனிமெட், கால்லிச்டோ, மற்றும் சனியின் டைட்டன் ஆகிய துணைக் கோள்கள் நமது சந்திரனை விட பலமடங்கு பெரியவை. வியாழனின் இயோ துணைக் கோள் நமது சந்திரனை ஒத்த அளவுள்ளது. நவக்கிரகத்தில் பூமியின் துணைக் கோளான சந்திரன் மட்டும் இருக்கும் போது இவை ஏன் இல்லை ? //

      இந்த துணைக் கோள்கள் அனைத்தும் ஜ்யோதிஷ-வில் இருக்கின்றனவா?

      ஆதாரத்துடன் மறுத்துப் பேச வேண்டும். அதை விட்டுவிட்டு சும்மா கழிந்து வைக்கக் கூடாது. Dont do false claims! You better get help from Aravindan neelakandan.

     • மணிகண்டன்,

      அப்ப விவேகானந்தர் பொய் சொல்லிட்டாரா?

      ///வினவு போன்றவர்களின் சமஸ்கிரத எதிர்ப்பு என்பது சாதாரண விஷயமாக நான் பார்க்கவில்லை, இந்த நாட்டின் மிக பெரிய அறிவு பொக்கிஷங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதை தடுக்கும் ஒரு சதி திட்டமாகவே இதை நான் பார்க்கிறேன்///

      என் தாத்தாவுக்கு கல்வி அறிவு கிடையாது. இத்தனைக்கும் அவர் பார்ப்பனர்களுக்கு அடுத்தநிலை சாதியை சேர்ந்த மிகப்பெரிய குத்தகை விவசாயி. அவரும் அவருக்கு முந்தைய என் மூதாதையர்கள் -அவர்கள் இந்துக்கள்- யாரும் வேதத்தையோ, சம்ஸ்கிருதத்தையோ படித்ததில்லை. ஐயர் ஓதும் மந்திரங்களை மட்டும் கேட்டிருக்கிறார்கள்.

      ஆயிரம் ஆண்டுகளாக வேதம் / சமஸ்கிருதத்தை பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாது என்று பெரும்பாண்மை மக்களை ஒதுக்கி வைத்து யார் வினவா? பெரியாரா? அல்லது வெள்ளையர்களா? யார்?

      பார்ப்பனர்கள் தான். பார்ப்பனர்கள் சதி செய்து ஆயிரம் ஆண்டுகளாக வேதம் / சமஸ்கிருதத்தை பார்க்கவோ, படிக்கவோ, கேட்கவோ கூடாது என்று பெரும்பாண்மை மக்களை ஒதுக்கி வைத்தார்கள் என்பதை ஏற்கிறீர்களா இல்லையா?

      பார்ப்பனர்களின் நயவஞ்சகத்தால் தான் பெரும்பான்மை மக்களுக்கு அறிவு போய்ச் சேரவில்லை என்பதை ஏற்கிறீர்களா?

      இந்து மதமே சாதிக்கு ஒரு சலுகை, சாதிக்கு ஒரு நீதி என்று தான் இருந்தது, இருக்கிறது. இதை விவேகானந்தர் கூட சுட்டிக்காட்டியிருக்கிறார். இதை ஏற்கிறீர்களா? இல்லையா?

      அப்ப விவேகானந்தர் பொய் சொல்லிட்டாரா? 🙂

 7. வினவில் பிற மதத்தில் கூட கடவுளின் பெயரால் சிறுபான்மை மக்கள் ஓடுப்பப்படுவதை பேசியிருக்கும் கட்டுரைகள் தான் இருக்கே தவிற பண்டிகைளை ஆதரிக்கும் பிற்போக்கு கட்டுரைகள் எது என்று எடுத்து கூறுங்கள் அய்யா மணிகண்டன்

  • காஷ்மீர் பற்றி வினவில் வரும் கட்டுரைகளை வைத்து வினவு ஒரு பாக்கிஸ்தான் கைக்கூலி என்று குற்றம்சாட்டுகிறேன்… பாக்கிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே வினவு செயல்படுகிறது.

   • இந்து பாசிட்டுகளை எதிர்ப்பதால் வினவு பாகிஸ்தான் கைக்கூலி என்றால் கைக்கூலித்தனதையே தமது முதலீடாக வைத்திருக்கும் பார்ப்பனியத்தையும் அதன் அடிவருடிகளையும் என்ன சொல்லி அழைப்பது?
    அய்யகோ!!!!

    அதனால் இந்து வெறியர்களை பாசிஸ்டுகள் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

   • பாகிஸ்தான் இராணுவத்து தேச இரகசியங்களை விற்பவரை என்ன சொல்லலாம்?

    காஷ்மீரிகளுக்கு ஆதரவளித்த வினவின் எந்தக் கட்டுரையில் இருந்தாவது பாகிஸ்தானை ஆதரித்து ஒரே ஒரு வரியை எடுத்துப் போடுங்கள் பார்க்கலாம். மாறாக காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானை விமர்சித்த கட்டுரைகள் உள்ளது.

    வெ.மா.சூ.சொ இருந்தால் செய்யவும்.

 8. வினவு பாகிஸ்தான் கைக்கூலிகள் எந்த அடிப்படையில் சொல்கீரீர்கள்

 9. இந்து யார் கைக்கூலி> ஆர் ஸ் ஸ் எந்த வகை கூலி> கோவை பிரியானி திருடன் யார்

 10. கலவரம் நடத்தியது யார். கடைக்குள் புகுந்து செல்போன் திருடியது யார்.

 11. K.S.K அவர்களே,
  ஆயுத பூஜையைப் பற்றிக் கிண்டல் செய்யவில்லை. உழைக்கும் மக்களின் மனதில் இருந்து வெளிப்பட்டவையே இந்தப் பதிவு.

  • இடானியா…,

   கட்டுரையை சரியாகத்தான் புரிந்துக்கொண்டேன். எனக்கு ஏற்புடையதே ! அந்த பின்னுட்டம் மணிகண்டன் மற்றும் ஜெயந்த் போன்றவர்களுக்கே உரியது. அந்த பின்னுட்டம் தவறான புரிதலை ஏற்படுத்தியமைக்காக மன்னிகவும். காலையில் இருந்து மின்வெட்டு காரணமாக மணிகண்டனுக்கு என்னுடைய பதிலை உடனடியாக அளிக்க முடியவில்லை. இப்போது அளித்துவிட்டேன்.

   (கூப்பிட்டு வெச்சி கும்மாங் குத்து கொடுப்பதற்கு கொஞ்சம் தாமதம் ஆயிற்று.)

 12. மணி அவர்களுக்கு யார் கைக்கூலிகள் என்பது தெரியவில்லை போலும். R.S.S, ABVP போன்ற அமைப்புகள் செய்யும் வேலையை என்னவென்று கூறுவது

 13. வினவு பலமுறை இஸ்லாம், கிறுத்தவம் உள்ளிட்ட சிறுபான்மை மதங்களை விமர்சித்துள்ளது. எந்த மதம் பெரும்பான்மையோ அதுவே அதிகம் விமர்சிக்கப்படும். வோல்டையர், இங்கர்சால், டாக்கின்ஸ் போன்றோர் கிறுத்துவத்ததை விமர்சித்தனர். பெரியார், அம்பேத்கர் போன்றோர் இந்து மதத்தை விமர்சித்தனர். இபின் வாராக், அலி ஸிஇனா போன்றோர் இஸ்லாமை விமர்சித்தனர். ஆன்மீக மலரில் 32 பக்கத்தில் 30 இந்து, 1 இஸ்லாம், 1 கிறிஸ்தவம. அங்கும் நீங்கள் சம இட ஒதுக்கீடு கேட்பீறோ? உங்கள் மதத்தை விமர்சித்தால் பதில் சொல்ல துப்பு இருந்தால் சொல்லுங்கள். இல்லை என்றால் நவ துவாரங்களையும் மூடி அசுத்த வாயுக்களை உள்ளேயே வைத்துக்கொள்ளவும்.

 14. என் சவாலை மீண்டும் படிக்கவும் இஸ்லாமியர்களை விமர்சித்தார்கள் என்ற பம்மாத்து வேலையெல்லாம் வேண்டாம்…

  • பாகிஸ்தானில் பெரும்பான்மை மதத்தை நீங்கள் விமர்சிக்க முடியும்மா ? அரேபியாவின் பெரும்பான்மை மதத்தை நீங்கள் விமர்சிக்க முடியும்மா ? அப்படி அந்த நாடுகளில் விமர்சித்து விட்டு உயிரோடு இருக்க முடியும்மா ?

   ஊருக்கு இளிச்சவாயர்கள் ஹிந்துக்கள் அவர்களின் கடவுளை விமர்சித்தால், அவர்களின் மதத்தை கண்டபடி விமர்சித்தால் கேட்பதற்கு யாரும் இல்லை என்பதற்காக தானே இப்படி வக்கரபுத்தியோடு ஹிந்து மதத்தையே அழிக்க வேண்டும் என்று நிற்கிறீர்கள்… உங்களை போன்றவர்களின் இந்த மாதிரியான செயல் எந்த வகையில் நியாயம் ?

   • அய்யா மனிகன்டரே,

    எளிமையான பதில். முதலில் நம்முடைய வாயில் இருக்கும் அசிங்கத்தை துடைப்போம். அப்புறம் அடுத்தவன் தட்டில் இருக்கும் அசிங்கத்தை சுத்தம் செய்யலாம்.

    • ஹி ஹி ஹி ஹி ஐயோ பாவம் என் கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல முடியாத நிலையில் கடைசியில் நம்முடைய அசிங்கத்தை துடைப்போம் என்ற சப்பைக்கட்டு… அதற்கு முதலில் நீங்கள் ஹிந்து மதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும், ஹிந்து கடவுளை நம்ப வேண்டும். ஹிந்து மதத்தை சேராத (அல்லது நம்பாத) உங்களை போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது ஹிந்து மதத்தை விமர்சிக்க ? உங்கள் அடிப்படையே வீக்காக இருக்கிறதே

     • நால்லா மான் கராத்தே கத்து வச்சு இருக்கீங்க.

      ஹிந்து மதத்தின் அசிங்கத்தை துடைக்க ஹிந்துவாக இருக்க வேண்டும்.

      சரி யாரெல்லாம் ஹிந்துன்னு கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் வரலைங்கோ…..

      அதுக்கு பதிலை அவுத்து வுட்டீங்கனா மேற்கொண்டு பேச வசதியா இருக்கும்.

     • Manikandan,

      விவேகானந்தருக்கும் அடிப்படை வீக்கா?
      விவேகானந்தர் பொய் சொல்லிட்டாரா – என்ற என் கேள்வியை படிக்கவில்லையா?

  • மற்ற மதங்களை ஏன் கேட்கவில்லை என்பதை விட, உங்கள் மதத்தைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை முதலில் சிந்தியுங்கள். நம்மிடம் இருக்கும் தவறை சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள வேண்டும்.அதை விட்டுவிட்டு மற்றவர்களிடம் உள்ளக் குறையைக் கிளறுவது. உங்களைப் போன்ற கும்பல் தான் மாட்டு மூத்திரத்தைக் குடித்தால் புற்று நோய் குணமாகும் என்று சொல்கிறது.

   • நீங்கள் ஹிந்து மதத்தை மட்டுமே குறி வைத்து அழிக்கும் நோக்கில் (குறைகளை களையும் நோக்கில் அல்ல) கண்டபடி அவதூறாக பேசும் போது, மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லி கொள்ளும் உங்களை போன்றவர்களை பார்த்து இயற்கையாகவே ஏழும் கேள்வி நீங்கள் ஏன் மற்ற மதங்களை இதேபோல் விமர்சனம் செய்யவில்லை என்பது தான். பகவத் கீதையை நீங்கள் கண்டபடி அவதூறாக விமர்சனம் செய்யும் போது ஏன் நீங்கள் குரான் மற்றும் பைபிள் போன்ற புனித நூல்களை விமர்சனம் செய்யவில்லை என்ற கேள்வி நியாயமான ஒன்று, இதற்கான பதிலை சொல்ல வேண்டிய கடமை உங்களை போன்றவர்களுக்கும் வினவிற்கும் இருக்கிறது.

    பதிலை சொல்லாமல் உங்கள் மதத்தில் இருக்கும் குறைகளை மாட்டும் தான் நாங்கள் பேசுவோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம், மதச்சார்பற்றவர்கள் என்று நீங்கள் சொல்வது போலித்தனம் தானே, மதச்சார்பற்றவர்கள் என்ற போர்வையில் ஹிந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தானே செயல்படுகிறீர்கள்.

    ஹிந்து மதத்தை அழிவில் இருந்து காக்க ஹிந்து அமைப்புகள் வன்முறையில் இறங்க உங்களை போன்றவர்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்று குற்றம்சாட்டினால் அது நியாயம் தானே ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க