privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

மோடி அறிவிக்கும் முன்னரே பணத்தை மாற்றிய பா.ஜ.க முதலைகள் !

-

“கட்சிகாரங்களுக்கு தகவல் சொல்லி முன்னாடியே அவங்க பணத்தை மாத்திருப்பாங்கப்பா. நாமதான் கஷ்டப்படனும்”

ஐநூறு, ஆயிரம் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த மறுநாள் அதன் பாதிப்புகள் குறித்து கேட்டபோது மளிகை கடை அண்ணாச்சி ஒருவர் கூறியது.

bjp_tweet
பா.ஜ.க-வின் பஞ்சாப் தலைவர்களில் சஞ்சீவ் கம்போஜ் அவரது டிவிட்டர் பக்கத்தில் புது நோட்டையே காட்டிவிட்டார். நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஊடக பிரச்சாரகர்கள் உள்ளிட்டு பலரும் மோடியின் ரூபாய் நோட்டு அறிவிப்பை மிக இரகசியமாக  செயல்படுத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்று வருணித்தார்கள். நடுத்தரவர்க்கமும் இப்படி தான் நினைத்திருந்தார்கள். தற்போது அண்ணாச்சி தன் அனுபவத்தில் கூறியது சரிதான் என்பதை உறுதி செய்யும்விதமாக ரூபாய் நோட்டு விவகாரத்தில் நடந்திருக்கும் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டது நவம்பர் 8-ம் தேதி. ஆனால் நவம்பர் 6-ம் தேதியே பா.ஜ.க-வின் பஞ்சாப் மாநில தலைவர்களில் ஒருவரான சஞ்சீவ் கம்போஜ் என்பவர் புதிய 2000 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தகவல் மட்டுமல்ல புதிய ரூ.2000-த்தின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அதோடு இந்த 2016 ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தின் அளவு மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. அதாவது ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தான் வைப்பு தொகை அதிகரிப்பது வழக்கம். குறிப்பாக மார்ச் காலாண்டில் 2 லட்சம் கோடி, ஜூன் காலாண்டில் 1 லட்சம் கோடியாக வளர்ந்து வந்த வைப்பு தொகை இந்த ஜூலை காலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு வளர்ந்துள்ளது. பார்க்க firstpost  – இணையத் தளத்தில் வந்துள்ள செய்தி.

Quarterly bank deposits
இந்த கலாண்டில் ஆறு லட்சம் கோடி அளவிற்கு உயர்ந்துள்ள வைப்புத் தொகை. ( நன்றி : firstpost )

ஆக பா.ஜ.க தலைவர்களுக்கு அரசின் முடிவு முன்னரே தெரிந்திருப்பதும், அதே சமயத்தில் டெபாசிட் தொகை வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக அதிகரித்ருப்பதையும் இணைத்து பார்க்கும் போது பா.ஜ.க-வின் கருப்புப் பண முதலைகளுக்கு முன்னரே தகவல் கொடுத்துவிட்டு இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. மோடி அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாள் மேற்கு வங்க பா.ஜ.க-வின் வங்கி கணக்கில் ஒரு கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறது, மார்க்சிஸ்டு கட்சி

இதுமட்டுமல்ல் இந்தி பத்திரிகையான தைனிக் ஜார்கன்,அக்டோபர் 27-ம் தேதியே அரசின் புதிய ரூபாய் நோட்டு குறித்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியிலிருக்கும் தனது தொடர்புகள் மூலம் இத்தகவலை பெற்று வெளியிட்டிருக்கிறார் பத்திரிகையாளர் பிரஜேஷ் துபே.

கருப்பு பணம் என்பது பெருமளவில் வெளிநாட்டு வங்கிகளிலும், அந்நிய நிதி மூலதனமாகவும் பல்வேறு பெயர்களில் பங்கு சந்தைகளிலும் சுற்றிவருகிற ஒன்று. அதே நேரம் ரூ.500, ரூ.1000 என்று பணமாக பதுக்கி வைத்திருப்பது சிறிய அளவிலானது. அதனால் மோடியின் நடவடிக்கை முதலாளிகளின் கருப்பு பணவிசயத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதும் இது மக்கள் மீதான தாக்குதல் என்பதை முன்னரே எழுதியிருந்தோம். ஆனால் உள்நாட்டில் இருக்கும் இந்த சிறிய அளவு கருப்புப் பணத்தைக் கூட பா.ஜ.கவின் கூட்டாளிகளான முதலாளிகள், தொழிலதிபர்கள், கட்சிப்பிரமுகர்கள் வெள்ளையாக்கி வங்கிகளில் முன்னெச்சரிக்கையாக சேர்த்திருப்பது அம்பலமாயிருக்கிறது.

ஆக இந்த சர்ஜிக்கல் ஸ்டைரக் நடத்தப்பட்டிருப்பது மக்களிடம் மட்டும் தான். மக்களுக்கத்தான் இந்த செல்லாத நோட்டுப் பிரச்சினை தெரிந்திருக்கவில்லை. ஆனால் கருப்பு பண முதலைகளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. அதனால் தான் எந்த கருப்பு பண முதலைகளும் வங்கியின் வாசலில் நிற்கவில்லை. கருப்பு பணத்தின் மூலவர்களில் ஒருவரான ரஜினிகாந்த் உள்ளிட்டு சினிமா பிரபலங்கள், ஐ.பி.எல் விளையாட்டு வீரர்கள் மோடியை ஆதரிக்கிறாரகள். ஆனால் அப்பாவி மக்கள் தான் வங்கியில் நிற்கிறார்கள். மோடி அறிவித்த இரவில் பணம் இருந்தும் சோறு கிடைக்காமல் இருந்தார்கள்.

இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய பா.ஜ.க பேச்சாளர்கள் உள்ளிட்டு சிலர் ஒரு சிறிய அளவிலாவது கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்று கூறிவந்தார்கள். அப்ப்டி சிறிய அளவில் கூட எதையும் மோடியின் அறிவிப்பு சாதிக்கவில்லை என்பதோடு அதிலும் ஊழலும் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

இத்தனையும் செய்துவிட்டு ஐநூறு, ஆயிரம் ரூபாய் செல்லாது என மோடி அறிவித்திருப்பது கருப்புப் பணத்தை திரும்ப கொண்டு வரும் என்றும் அதை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள் என்றும் பிரச்சாரம் செய்கிறார்கள் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள். அர்னாப் முதல் பாண்டே வரை இதே பல்லவியை சலிக்காமல் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

BJP (Bharatiya Janata Party) spokesperson Meenakshi Lekhi during a press conference in Kolkata on Oct.27, 2013. (Photo: IANS)
பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி

ஆனால் பா.ஜ.க – கட்சியே இந்நடவடிக்கை கருப்பு பண விவகாரத்தை திசை திருப்பக்கூடிய செயல் என்றும், பொதுமக்களுக்கு எதிரான ஒன்று என்றும் அறிவித்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதிர்ச்சியடைய தேவையில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் போது தவிர்க்க இயலாமல் சில உண்மைகளை பேசுவது அவசியமாகிறது. அப்படியான சூழலில் பா.ஜ.க தெரிவித்த கருத்து தான் அது.

இன்னும் விளக்கமாக சொல்ல வேண்டும் என்றால் முன்னர் காங்கிரஸ் ஆட்சியின் போது 2005-ம் ஆண்டில் முந்தைய ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ன மாற்றப்போவதாக அறிவித்தார்கள். அப்போது பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லெகி தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்.

“நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது. சகல துறைகளிலும் அரசு திணறி வருகிறது. வாராக்கடன் அதிகரித்து பொருளாதாரம் சிக்கலில் இருக்கிறது. இச்சூழலில் ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்து மாற்றும் அரசின் மாய்மாலம், மக்களின் கவனத்தை திசை திருப்பக்கூடிய செயல்.

ரூபாய் நோட்டை செல்லாது என்று அறிவிக்கும் ப.சிதம்பரத்தின் இந்த திட்டம் பணக்காரர்களுக்கானது. மக்களுக்கு எதிரானது. இத்திட்டத்தின் மூலம் சுவிஸ் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு வரமுடியாது. அதே சமயத்தில் வங்கி கணக்கு இல்லாத ஏழை மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். தங்கள் பணத்தை அமெரிக்க டாலரிலும், யூரோவிலும், பவுண்டிலும் வைத்திருப்பவர்களை பாதிக்காது, ஆனல் சாதாரண மக்களின்ஒவ்வொரு பைசா சேமிப்பையும் பாதிக்கும்.

இது போன்ற திசை திருப்பும் நடவடிக்கையாயால் படிப்பறிவில்லாத, வங்கி வசதியில்லாத சாதரண மக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். இத்திட்டம் ஏழைகளுக்கு எதிரானது. 65% இந்திய மக்கள் வங்கியில்லாமல் ரூபாய் நோட்டாகத்தான் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள். சிறிய அளவில் சேமிப்பு வைத்திருப்பவர்கள், வங்கி கணக்கு இல்லாதவர்கள், தங்கள் சிறிய வாழ்நாள் சேமிப்பை வைத்திருப்பவர்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். இத்திட்டம் பொதுமக்களை இடைத்தரகர்களுக்கு இரையாக்கும்.

இத்திட்டம் கருப்புப் பணத்தை ஒழிக்காது. கருப்புப் பண முதலைகள் எந்த சிரமும் இல்லமால் தங்கள் பணத்தை மாற்றிக்கொள்வார்கள். அதற்கு தேவையான வேலைகளை செய்துகொள்ள ஆட்களை அமர்த்தி பணத்தை மாற்றிக்கொள்வார்கள்.

சுவிஸ் எச்.எஸ்.பி.சி வங்கி கணக்குகளின் விவரங்கள் அரசிடம் இருக்கிறது. ஆனால் அதை வைத்து கருப்பு பண முதலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.”

ஆக தாங்கள் தற்போது எடுத்துள்ள நடவடிக்கை எத்தையது என்பதையும் அதன் தாக்கம் என்ன என்பதுமல்லாமல் அதன் நோக்கத்தையும் தன் வாயிலேயே அறிவித்திருக்கிறார்கள். மக்களை வதைப்பதில் இவர்கள் எவ்வளவு கைதேர்ந்தவர்கள் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும் ? வீடியோவை பாருங்கள் பகிருங்கள்.

 

மேலும் தகவல்கள் :