privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை - பாகம் 1

எது கருப்புப் பணம் ? தோழர் மருதையன் உரை – பாகம் 1

-

ருப்புப் பணத்தை அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கட்டுக்கட்டாகக் கட்டி இரும்புப் பெட்டிக்குள் போட்டு பூமிக்கடியில் புதைத்து வைத்திருக்கிறார்கள்; கட்டிலுக்கு அடியில் மெத்தையில் வைத்துத் திணித்து தைத்து வைத்திருக்கிறார்கள் என்பது போன்ற கருத்துக்களை மக்கள் மத்தியில் திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன. திரைப்படங்கள் தோற்றுவிக்கும் இந்தக் கருத்தை மக்கள் மத நம்பிக்கைகளைப் போல ஏற்றுக்கொண்டுள்ளனர்.  ரஜினி நடித்த சிவாஜி சினிமாவிலாவது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கு ஆடிட்டர்களையும்,  பணக்காரர்களின் வீட்டு வேலைக்காரர்களையும் கூப்பிட்டு   “உங்க ஐயா பணத்தை எங்கே ஒளிச்சு வெச்சுருக்காருன்னு சொல். இல்லையென்றால் உதைப்பேன்” என்று இயக்குநர் சங்கர் மிரட்டுவார்.  அடையாளம் காட்ட மறுத்தவனை ஆள் வைத்து உதைத்து வழிக்குக் கொண்டுவருவார்.

அந்த மாதிரி பிரதமர் மோடி, கருப்பு பணத்தை எப்படி ஒழிப்பது என்று இயக்குநர் சங்கரிடம் ஆலோசனை கேட்டிருக்கலாம். பா.ஜ.க-வின் ஆடிட்டர் குருமூர்த்தியைக் கேட்டால் யார் யாரெல்லாம் கருப்புப் பண ஆடிட்டர்கள் என்பதை அவரே சொல்லி விடுவார். அந்த ஆடிட்டர்களைகருப்புப் பண முதலைகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு கருப்புப் பணத்துக்கு எந்த விதத்திலும் சம்பந்தமேயில்லாத கோடிக்கணக்கான ஏழை மக்களின் மீது தாக்குதலை நடத்தியிருக்கிறார் மோடி. இதனால் சில இடங்களில் மாரடைப்பினால் மக்கள் இறக்கும் நிலை கூட ஏற்பட்டுள்ளது. அந்த அளவிற்கு வணிகர்களுக்கும், சாதாரண மக்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இது தாங்கவொனாத் துயரத்தை அளித்திருக்கிறது.

இருந்தபோதிலும் கருப்புப் பணம், கள்ள நோட்டுக்கள் இந்த நாட்டிலிருந்து ஒழியுமென்றால் அதற்காக இந்தத் துன்பத்தை நாங்கள் சகித்துக் கொள்ள தயாராக இருக்கிறோம். ஒரு நல்ல நோக்கத்திற்காக நம்முடைய பிரதமர் நடவடிக்கை எடுத்தியிருக்கிறார். இருந்தாலும் மக்களுக்கு இவ்வளவு துன்பம் தராமல் செய்திருந்தால் இதை வரவேற்றிருப்போம் என்ற வகையில்தான் மக்களிடையே கருத்து நிலவுகிறது அல்லது ஊடகங்களால் அப்படித்தான் கருத்து உருவாக்கப்படுகிறது. உண்மையிலேயே இது கருப்புப் பணத்தை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கையா  என்பதுதான் எங்களுடைய கேள்வி.

எல்லோரும் சொல்வதைப் போல, இந்த நடவடிக்கையால் முழுமையாக கருப்புப் பணத்தை ஒழித்துவிட முடியாது அல்லது அரைகுறையாகத் தான் முடியும் என்றெல்லாம் நாங்கள் சொல்லவில்லை.

“இது கருப்புப் பண முதலைகளின் மீதான தாக்குதல் இல்லை; யார் கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணோ அவர்களுடைய சார்பில், அவர்களுடைய அரசான  இந்த மோடி அரசு மக்களின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது என்கிறோம். மக்கள் கையிலிருக்கிற சேமிப்பு, உழைத்து சம்பாதித்த பணம் இவற்றையெல்லாம், யார் கருப்புப் பணத்தை உருவாக்குகிறார்களோ அந்தப் பெருமுதலாளிகளின் கையில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்.”

கருப்புப் பணத்தை, இந்த நடவடிக்கையால் ஒழிக்க முடியும் என்று சொல்பவர்கள் அல்லது நம்புபவர்கள் அது எப்படி என்பதை விளக்க வேண்டும். இது ஏன் கருப்புப் பணத்தை ஒழிக்காது என்பதை விளக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மோடி எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையைப் போலத் தெரிகிறது. ஆனால் உண்மையில் அதுவல்ல.

இது தோற்றுப்போன மோடி அரசு எடுத்திருக்கும் அரசியல் நடவடிக்கை. 2014 தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோடி அளித்த வாக்குறுதிகள் பல. உலகத்திலேயே எந்த அரசியல் தலைவனும், டொனால்ட் ட்ரம்ப் போன்ற கேடுகெட்ட அரசியல் தலைவன் கூட அளித்திடாத வாக்குறுதியை மோடி அளித்தார். நான் ஆட்சிக்கு வந்தால் கருப்புப் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 இலட்சம் போடுவேன் என்று மோசடியாக வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே என்று கேட்டபோது ” அது சும்மானாச்சுக்கும் எலெக்சனுக்காக சொன்னது” என்று பதிலளித்தார் அமித் ஷா. அந்த அளவிற்கு நேர்மையோ  நாணயமோ இல்லாத அரசு இது.

மோடி பல நம்பிக்கைகளை உருவாக்கினார். வேலை வாய்ப்பை உருவாக்கப் போகிறேன். விலைவாசியை குறைக்கப் போகிறேன் என்று அளந்து விட்டார். வளர்ச்சி தான் என்னுடைய ஒரே கொள்கை என்று பேசினார். மேக் இன் இந்தியா , ஸ்டார்ட் அப் இந்தியா, சிட் டவுன் இந்தியா , டிஜிட்டல் இந்தியா, ஸ்வச் பாரத் என்று ’பஞ்ச டயலாக்’ திட்டங்களை அறிவித்தார். அடிக்கடி தொலைக்காட்சியில் தோன்றினார். வானொலியில் ’மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பேசினார். ஆனால் இரண்டாண்டுகள் தாண்டிய பிறகும் இன்னதை சாதித்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியாக மோடியால் எதையும் கூறமுடியவில்லை. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்தான் மிச்சம்.

இந்த சூழ்நிலையில் தனது செல்வாக்கை தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது தான் மோடி அரசின் முன்னாள் இருக்கின்ற கேள்வி. மோடி அரசு இதற்காகத் தொடர்ந்து இரண்டு முறைகளைக் கையாள்கிறது.  பொதுமக்களுடைய கருத்தை இரண்டு துருவங்களாகப் பிரித்து மோத விடுவது. ஒரு எதிரியை உருவாக்கி அவன்தான் நாட்டு மக்களின் எதிரி என்று காட்டுவது. அவர் எதிரியா இல்லையா என்பது பற்றி நாட்டு மக்களிடம் விவாதம் நடக்கும். இதுதான் தேசம் சந்திக்கும் முதன்மையான பிரச்சினை என்று ஒரு பிரச்சினையை அவர்கள் எழுப்புவார்கள். அதுகுறித்து ஆம் இல்லை என்று விவாதம் நடக்கும்.

பா.ஜ.க என்ற கட்சியே அப்படித்தான் ஆட்சிக்கு வந்தது..  இராமன் அயோத்தியில் தான் பிறந்தான். எனவே மசூதியை இடித்து கோயில் கட்டியே தீருவோம் என்றனர். இதற்கு எதாவது ஆதாரம் இருக்கின்றதா? அது மக்களிடையே விதைக்கப்பட்ட ஒரு மத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைத்து தேசம் முழுவதையும் இரண்டு கூறுகளாகப் பிளந்து, மதக்கலவரங்களை உருவாக்கி, அதன் மூலம் பெரும்பான்மை இந்து மதவெறியைத் தூண்டித்தான் ஆட்சிக்கு வந்தார்கள்.

இப்போது மோடி வந்ததில் இருந்து என்ன நடக்கிறது? பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள், அனுப்பபடுகிறார்கள். அதனால் தான் காசுமீர் பிரச்சினை என்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதிகளை அனுப்புகிறதா என்றால் ஆமாம் அனுப்புகிறது. ஆனால் அதுதான் காசுமீர் பிரச்சினைக்குக் காரணமா என்றால், இல்லை.

எல்லோருக்கும் பொருந்துகிற சட்டத்தை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். தலாக் தலாக் என்று மூன்றுமுறை சொன்னால் மணவிலக்கு என்று சொல்கின்றனர். இப்படி இசுலாமிய மதவாதிகள் பேசுகிறார்களா இல்லையா என்றால் ஆமாம் பேசுகிறார்கள். ஆனால் மதரீதியான சட்டங்கள் ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இந்துக்களிலும் இருக்கிறதா இல்லையா? ஆனால் இசுலாமியர்களுக்கு மட்டும் சலுகை வழங்கப்பட்டிருப்பது போல ஒரு சித்திரத்தை உருவாக்கி அதன் மீது ஒரு விவாதத்தை தொடங்குகிறார்கள். அடுத்ததாக இப்போது கருப்புப் பணம். கருப்புப் பணம் என்பது இன்னொரு இராம ஜென்ம பூமி.

கருப்புப் பணம் யார் வைத்திருக்கிறார்கள் என்பது இந்த அரசாங்கத்திற்கு தெரியாதா? இன்கம் டாக்ஸ் டிபார்ட்மென்டுக்கு தெரியாதாம். என்ஃபோர்ஸ்மென்ட்  டைரக்டரேட்டுக்கு தெரியாதாம். மோடிக்கும் தெரியாதாம். ரூ.1000-யும் ரூ.500-யும் முடக்குவதன் மூலம், அதாவது கொக்கு தலையில் வெண்ணை வைத்து கருப்புப் பணத்தை பிடிக்கப் போகிறார்களாம்!

மோடியின் ஸ்வச் பாரத்துடன் இதை ஒப்பிடலாம். திடீரென்று மோடி துடைப்பதுடன் கிளம்பினார். உடனே ஷாருக்கான், கமல ஹாசன் உள்ளிட்ட எல்லா நடிகர்களும் துடைப்பத்தை எடுத்தார்கள். இந்தியா தூய்மையாகி விட்டதா?

இந்தியாவின் தலைநகரத்தில் பிள்ளைகளை பள்ளிகூடத்துக்கு அனுப்ப வேண்டாம்; வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவிக்க வேண்டிய நிலைமை இருக்கிறது. காரணம், சுற்றுசூழல் மாசு. தூய்மை இந்தியா என்று துடைப்பத்தை எடுத்தாரே மோடி. ஏன் டெல்லி தூய்மையாகவில்லை?

“கார்கள், வாகனங்கள் உருவாக்கிய புகையை, ஆலைகள் உருவாக்கிய புகையை எவனாவது துடைப்பத்தை வைத்து சுத்தம் செய்ய முடியுமா? முடியாது. புகையைச் சுத்தம் செய்ய வேண்டும் என்றால் கார்களை தடுக்க வேண்டும், குறைக்க வேண்டும். அல்லது மாசு ஏற்படுத்தும் ஆலைகளை அப்புறபடுத்த வேண்டும்.  ஆட்டோமொபைல், கார்கள் விற்பனையை அதிகரிப்பதுதான் மோடியின் கொள்கை. எப்படி துடைப்பத்தை வைத்து புகையைச் சுத்தம் செய்ய முடியாதோ அது போல 500 ,1000 ரூபாய் நோட்டுக்களைத் தடை செய்து கருப்புப் பணத்தை ஒழிப்பதும் முடியாது.”

கருப்புப் பணம் என்றால் என்ன? முறைகேடான தொழில்களில் சேர்த்த பணம் கருப்பு பணம். அது ஒரு வகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் வரி ஏய்ப்பு செய்கிறார்கள். அந்த வரி ஏய்ப்பு செய்த பணமும் கருப்புப் பணம்.

முறைகேடு என்று எடுத்துக்கொண்டால் இலஞ்சம் வாங்குவது. அதிகாரிகள் இலஞ்சம் வாங்கி கோடிக்கணக்கில் சொத்து வைத்திருக்கின்றனர். அதுபோல அரசியல்வாதிகளிடமும் கோடிக்கணக்கில் பணம் இருக்கின்றது. அவர்களெல்லாம் வைத்திருக்கும் கருப்புப் பணத்தில் 30% வருமான வரி கட்டிவிட்டால் அது வெள்ளையாகிவிடுமாம்.

கிட்டத்தட்ட 65,000 கோடிக்கும் மேல் கருப்புப்பணத்தை வெளியே கொண்டு வந்திருக்கிறோம் என்று மோடி அரசு அறிவித்திருக்கிறது. 65,000 கோடி அரசாங்கத்தின் கைக்கு வந்துவிட்டதாக பலர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் சில நூறு பேர் தாங்கள் வைத்திருந்த 65,000 கோடிக்கு வரியையும் அபராதத்தையும் கட்டியிருக்கிறார்கள். அரசுக்கு 28,000 கோடி வரி வந்திருக்கிறது. அவ்வளவுதான்.

“எப்படி சம்பாதித்தீர்கள் என்று கேட்க மாட்டோம். வரியை மட்டும் கட்டி விடுங்கள்” என்று கருப்புப் பண பேர்வழிகளின், அவர்கள் காலில் விழாத குறையாகக் கெஞ்சித்தான் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். 65000 கோடி என்பது கஞ்சா விற்ற காசா, இலஞ்சம் வாங்கிய காசா என்பதை ஐ.டி. டிபார்ட்மென்ட் விசாரிக்கவில்லை.

ஆனால் பாமர மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? கருப்பு பண பேர்வழிகள் 500, 1000 த்தை வங்கியில் கொடுத்தால் சிக்கிக் கொண்டுவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது உண்மையல்ல, வரி  கொடுத்தால் எல்லாக் குற்றங்களும் மன்னிக்கப்பட்டுவிடும் என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா வழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா மீது வழக்கு தொடுக்கப்பட்டது. “அந்தப் பணத்திற்கு நான் வரி கட்டிவிட்டேன்” என்பதுதான் நீதிமன்றத்தில் அம்மா சொன்ன விளக்கம். ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு போட்டால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த ஒருவர் அந்த வருமானம் எப்படி வந்தது என்பதை சொல்லியாக வேண்டும். அதனால்தான் ஜெயாவின் வாதம் எடுபடவில்லை.

ஆனால் இந்த விதி மற்ற கருப்புப் பண முதலைகளுக்குப் பொருந்தாது. கருப்பை வெள்ளையாக்கும் மோடி அரசு உள்ளிட்ட எல்லா அரசுகளும் எனக்கு வரியை மட்டும் கொடுத்துவிடு. உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று சொல்லித்தான் கருப்பை வெள்ளையாக்குகின்றனர்.

500, 1000 ரூபாய் செல்லாது என்று இரவு 8:30 மணிக்கு மோடி அறிவித்த பிறகு விடிய விடிய சென்னை உள்ளிட்ட அனைத்து இந்திய நகரங்களிலும் நகைக் கடைகள் திறந்திருந்தன. இன்னொரு பக்கம் ஏ.டி.எம்-ல் மக்கள் கூட்டம். நாளைக்கு சோற்றுச் செலவுக்கு 400 ரூபாய் கிடைக்குமா என்று. ஒரே இரவில் கிராமுக்கு ரூ.1500, ரூ.2000 என தங்கம் விலை ஏறுகிறது. கருப்புப் பணத்தை பிடிப்பது தான் இந்த அரசாங்கத்தின் நோக்கமென்றால் நகைக்கடைக்கு வந்தவனையெல்லாம் அப்படியே வளைத்துப் பிடிக்க வேண்டியது தானே.

கருப்புப் பணத்தை காகிதப் பணமாக வைத்துக் கொள்ளாதீர்கள். தங்கமாக வாங்கி மாற்றி வைத்துக் கொள்ளுங்கள்; சொத்தாகவோ, ரியல் எஸ்டேட்டாகவோ ஷேராகவோ வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் காகிதப்பணமாக மட்டும் வேண்டாம் என்கிறது மோடி அரசு.

மோடி தன் உரையிலேயே சொல்கிறார். பணப்பொருளாதாரத்தை ஒழித்து அனைவரையும் வங்கிப் பொருளாதாரத்துக்குள் கொண்டுவரப் போகிறேன் என்கிறார். கருப்புப் பணம் தொடர்பான ஆய்வுகள் என்ன சொல்லுகின்றன. வங்கிப்பொருளாதாரத்தை தங்களுடைய பொருளாதார நடவடிக்கைக்கு அடிப்படையாக வைத்திருக்கும் மிகப்பெரிய தரகு முதலாளிகள் பன்னாட்டு நிறுவனங்கள்தான் கருப்புப் பணத்தினுடைய மிக முக்கியமான இருப்பிடம் என்று சொல்கின்றன.

இதே பா.ஜ.கவினர் முன்னர் சொன்னார்களே, அந்த 70 இலட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பது யார்? உள்ளூர் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளுமா? சிலர் அப்படி இருப்பார்கள். ஆனால் மிகப்பெரும்பான்மையாக இந்த கருப்புப் பணத்தை வைத்திருப்பவர்கள் இந்த நாட்டினுடைய மிகப்பெரிய தரகு முதலாளிகள் டாடா, அதானி, அம்பானி.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கருப்புப் பணம் இந்தியப் பொருளாதாரத்தில் உருவாகிறது. அதை உருவாக்குபவர்கள் இவர்கள் தான். எனவே வங்கிகளின் மூலம் உருவாகும் கருப்புப் பணம் என்பதுதான் முதன்மையானது. ரூ.500, ரூ.1000 – ஆக மாற்றி தேர்தல் நேரத்திலே விநியோகிப்பது, அல்லது மற்ற செலவுகளுக்குக் கருப்புப் பணமாகப் பயன்படுத்துவது என்பதெல்லாம் ஒரு கொசுறு.

அப்படிப்பட்ட கருப்பு பணம் இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவானது. முக்கியமான குற்றவாளிகள் யாரோ, இந்தக் கருப்புப் பொருளாதாரத்தின் ஊற்றுக்கண்கள் யாரோ, அவர்களைப் பற்றி எந்த ஊடகமும் பேசுவதில்லை. ஏனென்றால் எல்லா ஊடகங்களும் அவர்கள் கையில் இருக்கிறது. மோடியும் பேசுவதில்லை? ஏனென்றால் மோடி அவர்கள் பையில் இருக்கிறார். கருப்புப் பண முதலைகளில் மிக முக்கியமானவரான அதானி, அவருடைய சட்டைப்பையில் இருக்கும் மோடி, கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறாராம். நம்மை நம்பச் சொல்கிறார்.

இந்த மையமான விடயத்திலிருந்து திசைதிருப்பவே கருப்புப் பணத்தோடு கள்ளநோட்டையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் மோடி. பாகிஸ்தானிலிருந்து ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகளை அடித்து விடுகின்றனர். அது கணிசமான அளவிற்கு இந்தியப் பொருளாதாரத்தில் ஊடுருவியிருக்கின்றது. அதை ஒழிக்க வேண்டுமென்றால் இது போன்ற நடவடிக்கைகள் தவிர்க்கவியலாதவை என்று பாஜகவை சார்ந்தவர்கள் வாதாடுகின்றனர். கள்ள நோட்டுக்களை ஒழிப்பது தான் இவர்கள் நோக்கம் என்றால், மக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம். உங்களிடம் உள்ள ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து புதிய நோட்டுக்களை வாங்கிக்கொள்ளுங்கள்; அப்படி செய்யவில்லையென்றால் நீங்கள் வைத்திருக்கும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாதவையாகிவிடும்” என்று சொல்லியிருக்கலாம்.

இது ஒன்றும் புதியதல்ல, 2015-இல் அப்போதைய கவர்னராக இருந்த இரகுராம் ராஜன் 2005-ம் ஆண்டுக்கு முன்னர் அச்சிடப்பட்ட ரூ.500 நோட்டுக்களை குறிப்பிட்ட தேதிக்குள் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்று அறிவித்தார். கள்ள நோட்டைப் பிடிப்பதுதான்  நோக்கம் என்றால் அப்படி செய்திருக்கலாம். அப்படியே வைத்துக் கொண்டாலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அடிக்கத் தெரிந்தவர்களுக்கு இந்தப் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்களையும் அடிக்க முடியாதா என்ன?

இதற்கு பாஜக கட்சியினர் ஒரு பதில் வைத்திருக்கின்றனர். புதிய 2000 ரூபாய் நோட்டில் கம்ப்யூட்டர் சிப் (Chip) பொருத்தப்பட்டுள்ளதாம், அதனால் அதை வானத்திலிருந்தே பார்த்து எங்கே இருக்கின்றதென்பதைக் கண்டுபிடிக்கமுடியுமாம்.

”உலகத்தில் இதுவரை யாருமே இப்படி ஒரு தொழில்நுட்பத்தில் நோட்டு அடிக்கவில்லை, வதந்தியை நம்பவேண்டாம்” என்று ரிசர்வ் வங்கியே சொன்ன பிறகும் தொலைக்காட்சியில் பேசக்கூடிய பாஜக-வின் உண்மை விளம்பிகள் ரூ.2000 நோட்டில் சிப் இருக்கிறது என்று துணிந்து பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர்.

வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைப்பதற்கு கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகிப்பதைத் தவிர வேறு வழியில்லையா என்பது தான் அந்தக் கேள்வி. ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் இருக்கட்டும். பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) என்றொரு  நோட்டு இருக்கிறது. அது ரூபாய் நோட்டு அல்ல.

அந்த நோட்டில் தாவூத் இப்ராஹீம், ஹஃபீஸ் சையது அல்லது பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ போன்ற யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அதிலே யார் முதலீடு செய்கிறார்கள் என்று கேள்வி கேட்கக்கூடாது என்பது தான் அதிலிருக்கக்கூடிய முக்கியமான முதல் விதி. அதை பாகிஸ்தானிலிருந்து அனுப்ப வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நியூயார்க்கிலோ, வாஷிங்டனிலோ, இலண்டனிலோ அல்லது பாரீசிலோ அந்தப் பணத்தை முதலீடு செய்யலாம். வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் (Foreign Institutional Investors) வாயிலாக இந்தியாவில் இருக்கக்கூடிய BHEL அல்லது BSNL போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலோ அல்லது அம்பானி, அதானி நிறுவனங்களிலோ மூலதனம் போட முடியும்.

யார் அந்தப் பங்குகளை வாங்குகிறார்கள் என்று கேட்பதற்கான அதிகாரம் மோடி அரசுக்குக் கிடையாது. இப்படி அனாமதேயமாக மொட்டைக்கடுதாசியைப் போல யார் போடுகிறார்கள் என்றே தெரியாமல், அவன் கஞ்சா விற்பவனாக இருந்தாலும், விபச்சாரம் செய்பவனாக இருந்தாலும், ஆயுதக் கடத்தல் பேர்வழியாக இருந்தாலும் பாகிஸ்தான், அமெரிக்க உளவாளியாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் இந்தியப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய முடியும், அதை அரசாங்கம் சோதிக்க முடியாது என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தது யோக்கியர் என்று பெயர் பெற்ற வாஜ்பாயியின் ஆட்சி. அவர் காலத்தில் தான் இந்த பார்ட்டிசிபேட்டரி நோட் என்ற மொட்டைக்கடுதாசி முதலீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்றைக்கும் இது அமலில் இருக்கிறது. “ தாவூத் BHEL-லிலோ, BSNL-லிலோ, கோல் இந்தியாவிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ முதலீடு செய்திருப்பார். அவற்றிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகையையோ (டிவிடெண்ட்) அல்லது விற்றுக் கிடைக்கக் கூடிய வெள்ளைப் பணத்தையோ தீவிரவாதிகளுக்க வினியோகிப்பது சுலபமா? இல்லை, பாகிஸ்தானில் ஒரு அச்சகம் வைத்து அங்கே ரூ.500 மற்றும் சிப் பொருத்தப்பட்ட ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து, மூட்டையாகக் கட்டி, கழுதையின் முதுகில் ஏற்றி அதனை இமயமலையில் ஏற்றி அதற்குக் காவலாக இரண்டு தீவிரவாதிகளைப் போட்டு மலையின் மறுபக்கம் கொண்டுவந்து இந்திய பார்டர் செக்யூரிட்டி ஃபோர்சையும், கம்பிவேலிகளையும் தாண்டி, மூட்டைகளை இந்தப் பக்கம் தூக்கிப் போட்டு, இங்கேயுள்ள தீவிரவாதிகளிடம் பிரித்துக்கொடுத்து, அப்புறம் குண்டு வெடிக்கச்செயவது சுலபமா?

யாரிடம் கதை சொல்கிறார்கள் இவர்கள்? போதைமருந்து வியாபாரிகள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள், கருப்புப் பண முதலைகள் வரையில் எல்லா அயோக்கியர்களும் அடையாளம் தெரியாமல் முதலீடு செய்வதற்கான ஏற்பாட்டைச் செய்து கொடுத்திருப்பது உங்கள் அரசு. அப்படி வருகின்ற அந்நிய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க அதையே தன்னுடைய சாதனையாக மோடி சொல்லிக் கொள்கிறார். அதாவது கருப்புப் பணம் உள்ளே வருவதைத் தான் வளர்ச்சி என்று சொல்லுகிறார். ஆனால் இங்கே கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகவும், அதைப் பூமிக்கடியில் டிரங்குப் பெட்டிகளில் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அதைக் கண்டுபிடிக்கப் போவதாகவும் நமக்குக் காதிலே பூ சுற்றுகிறார் மோடி.

-தொடரும்

ஆடியோ : ஆடியோவை தரவிறக்கம் செய்ய சுட்டியில் வலது பொத்தானை அழுத்தி சேவ அஸ் ஆப்சனை தெரிவு செய்யவும்.

பிற பாகங்களுக்கு :

  1. ஆங்கில இதழ்களில் வரும் கட்டுரைகளைப் படித்தால் கூட இப்பிரச்சினையின் வேர்களை இவ்வளவு தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியாது. தோழர் மருதையனின் உரை மறுக்க முடியாத வாதமாக உள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை விவாத நிகச்சிகளுக்கு அழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    • என்னதான் அறிவார்ந்த கருத்தை வினவு வெளியிட்டாலும் மணிகண்டன் மற்றும் ஜெயந்த் போன்ற மோடி மயக்கவாதிகளின் அறிவுக்கண் திறக்கவா போகிறது ஐயா?

    • மணிகண்டன் திவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகள் ,வெடிகுண்டுகள் மட்டுமா இந்தியாவை நாசம் செய்கின்றன? இல்லையே அவற்றுடன் அவர்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் பணமும் கூடத்தானே இந்தியாவை நாசம் செய்கின்றன. P-Note பற்றிய விவரங்களை தங்களுக்கு அளிக்க மறந்து விட்டேன்… நல்ல வேலையாக தோழர் மருதையன் நினைவு படுத்தியுள்ளார்… இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடுகள் எத்தகையவை என்பது பற்றிய கேள்வியை கேட்டகாமல் இருக்க திரு வாஜிபாய் அவர்களின் பிஜேபி அரசால் கொண்டுவரப்பட்ட அந்நிய முதலீட்டுகளை ஈர்பதற்கான திட்டம் இது…

      ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் ,அதிகாரிகள் தங்கள் ஊழல் மூலம் கொள்ளையடித்த கருப்பு பணத்தை மீண்டும் இந்தியாவிலேயே முதலீடு செய்ய பிஜேபி அரசு செய்த சலுகை திட்டம் இது. மேலும் பாக்கிஸ்தானில் தங்கியுருக்கும் தாவுத் போன்ற திவிரவாதிகள் , IS திவிரவாதிகள் தங்கள் பணத்தை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் FII (Foreign Institutional Investors) என்ற பெயரில் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தே இந்தியாவினுள் அதன் பங்கு வர்த்தகத்தில் (NIFTY and SENSEX) முதலீடு செய்ய ஏற்ற திட்டம் இது.

      இந்த பார்ட்டிசிபேட்டரி நோட்(Participatory Note) முதலீட்டு பழக்கத்தை இன்னும் மோடியின் அரசு தடை செய்யாமல் திவிரவாதிகளை , ஊழல் அரசியல் வாதிகளை ,கருப்பு பண முதலைகளை இந்தியாவினுள் முதலீடு செய்து சம்பாரிக்க அனுமதி அளித்துக்கொண்டு உள்ளதே அது தேச விரோத செயலா இல்லையா மணிகண்டன்? அத்தகைய கருப்புப் பணம் இந்தியாவினுள் வந்து விட்டதே என்று மகிழ்ச்சி அடையாதிர்கள்… எப்போது வேண்டுமானாலும் அந்த முதலீட்டை அவர்கள் திரும்ப எடுத்துகொள்ள அமெரிக்க டாலர்களில் அவர்களுக்கு அனுமதி இருக்கிறது என்பதனையும் மறவாதிர்கள்…

      • தோழர் மருதையன் (அவரை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது) மற்றும் உங்களை போன்றவர்கள் எல்லாம் ரொம்ப பழைய காலத்திலேயே இருக்கீங்க…

        மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2014ல் SEBI இந்த விவகாரத்தில் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து இருக்கிறது… KYC மூலம் SEBI கேட்கும் போது participatory notes மூலம் முதலீடு செய்தவர்களின் விவரங்களை கொடுக்க வேண்டும்.

        விவரங்கள் economic times பத்திரிகையில் உள்ளது

        http://economictimes.indiatimes.com/markets/stocks/policy/sebi-issues-stricter-kyc-disclosure-regime-for-p-notes/articleshow/52691019.cms

        இந்த வாரம் பாங்கில் என்னுடைய பணத்தை செலுத்த சென்ற போது என்னை பற்றிய விவரங்களை முன்பே கொடுத்து விட்டேனா (KYC) என்று சரி பார்த்த பின்பு தான் பணத்தை செலுத்த அனுமதித்தார்கள்.

        • என்னுடைய கருத்துக்கு ஆதாரம் :

          The Supreme Court on Friday asked the Centre, the RBI, market regulator Sebi and CBI to respond on a plea that the offshore portfolio investors, who invest in the Indian stock market through participatory notes (P-Notes, should not be allowed to withdraw the money till further orders.

          A bench of Justices Dipak Misra and C Nagappan issued notices on an interim application, moved by advocate ML Sharma in his pending PIL that has sought a CBI probe against Indian offshore bank account holders named in the Panama papers.

          http://indianexpress.com/article/business/market/sc-notice-to-centre-rbi-cbi-on-p-notes-plea-2888685/

          • எல்லாவற்றுக்கும் என்னால் தெளிவாக ஆதாரபூர்வமாகவே பதில் சொல்ல முடியும்

        • மணிகண்டன் ,,

          P-Notes மூலமாக இந்தியாவுக்குள் கருப்புப் பணம் வரும் என்பது தெரிந்து தானே உங்களின் வாஜ்பாய் மற்றும் மோடியின் பிஜேபி அரசு அதனை அனுமதித்தார்கள்? KYC((know Your Client) படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்துவிட்டால் மட்டும் p_notes தொடர்பான எல்லா கருப்புப் பண பிரச்சனைகளும் தீர்த்து விட்டதா?

          மே மாதம் 2016 ல் P-Note க்கும் மோடியின் அரசுக்கும் எதிராக L.ஷர்மா என்ற வழக்கறிஞரால் சுப்ரீம் கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு பின் தான் செபி பதில் மனு கீழ் கண்டவாறு நீதிமன்றத்துக்கு அளித்தது.

          “On May 13, Sebi said that it would frame fresh regulation about the P-notes circulation.”
          -செபியின் பதில்

          அதற்கு L.ஷர்மா வின் பதில் என்ன தெரியுமா?
          “With about Rs 2.2 lakh crore, P-Notes in circulation they make up for about 10 per cent of total foreign investment inflows into Indian markets, as against over 55 per cent at the peak of stock market bull run in 2007”, argued Sharma. Due to corruption, he said billions of rupees have been siphoned off from India to foreign offshore accounts and a part of it has been circulating in stocks, which is amounting to more than Rs 25 lakh crores within the knowledge of the Sebi.

          பதில் வருமா மணிகண்டன் உங்களிடம் இருந்து?

          • இதற்கான பதில் SEBI இணையதளத்தில் உள்ளது. வெளிநாட்டில் இருந்து ஒரு முதலீடு வருகிறது என்றால் அந்த முதலீட்டாளர்களின் அனைத்து விவரங்களும் கொடுக்கப்பட வேண்டும்… இந்த முதலீட்டாளர்களின் பின்னணி பற்றி ஆராயப்படும், அதில் category 3ல் வருபவர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது.

            மேலும் வெளிநாட்டினராக இருந்தாலும் இந்தியாவில் முதலீடு செய்யும் போது விவரங்களை கொடுத்தே ஆக வேண்டும் (இந்திய சட்டம் எங்களுக்கு செல்லாது என்று அவர்கள் சொல்ல முடியாது)…

            Participatory notes விவகாரத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் வந்து விட்டன, மேலும் சில கட்டுப்பாடுகளை SEBI செய்ய போகிறது.

            • நன்றி மணிகண்டன்…. மன்மோகனின் காங்கிரஸ் அரசு , மோடி மற்றும் வாஜிபாயின் பிஜேபி அரசாங்கங்கள் இதுவரையில் பல இலச்சம் கோடி கருப்பு பணத்தை p-note திட்டத்தின் மூலமாக இந்தியாவின் பங்கு வர்த்தகத்துக்கு வர அனுமதி அளித்து உள்ளது என்பதனை உங்கள் வாக்கு மூலம் மூலமாக ஒத்துகொண்டமைக்கு மிக்க நன்றி மணிகண்டன்… பெரு முதலாளிகளின் வரிகடாத கருப்புபணம் மற்றும் ஊழல் அரசியல் வாதிகளின் கருப்பு பணத்தை மட்டும் இவர்கள் (மோடி,வாஜ்பாய் ,மற்றும் மன்மோகன்) அனுமதிக்கவில்லை… தாவுத் மற்றும் IS போன்ற திவிரவாதிகளின் பணமும் தான் இந்திய பங்கு வர்த்தகத்தில் இந்த p-note திட்டத்தின் மூலமாக இதுவரையில் புழங்கிக்கொண்டு உள்ளது என்பதனையும் ஏற்கின்றீர்கள் அல்லவா? அப்படி என்றால் மோடியின் அரசு திவிரவாதத்தின் உள்ளார்ந்த ( பணம் ) தாக்குதல்களை அனுமதிக்கின்றது/வேடிக்கை பார்கின்றது என்று தானே பொருள் ஆகின்றது?

              // Participatory notes விவகாரத்தில் ஏற்கனவே பல கட்டுப்பாடுகள் வந்து விட்டன, மேலும் சில கட்டுப்பாடுகளை SEBI செய்ய போகிறது.//

            • The unique characteristic of participatory note is the concerned investor need not give his personal details.Manikantan,give straight answer-whether this characteristic is removed or not?Investment from Mauritius during 2014-15 was$ 9.03 billion and from Singapore it was $6.4 billion.Maximum investment through participatory note has come from these two countries and not from any of the countries wooed by Modi.It is obvious that these investments are nothing but black money of Indians made as white through participatory notes.What were those restrictions imposed on p.notes by SEBI?What more restrictions are going to be brought about?If you have definite answers furnish straight forward reply.Do not evade.Even if some restrictions are brought about now,what is the use?KUDHIRAI KALAVU PONABIN LAAYATHAI POOTTI YENNA SEYYA?

        • மணிகண்டன்,

          உளறிக் கொட்டுவதை நிறுத்துங்கள் முதலில்

          பார்டிசிபேட்டரி நோட் இன்னமும் தடை செய்யப்படவில்லை. 2014 ஜனவரி மற்றும் 2016 மே ஆகிய இரண்டு சந்தர்பங்களில், செபி FPI / FII தொடர்பான கட்டுப்பாடுகள் சிலவற்றை அறிமுகம் செய்தது.

          ஆனால், தரவுகளின் (https://www.cdslindia.com/publications/FII/cms/commondocs/ODI2016_h.html) படி பார்த்தால் இந்த ‘கட்டுப்பாடுகளால்’ கருப்புப் பண முதலைகள் / அந்நிய நிதிமூலதச் சூதாடிகள் / மற்றும் உங்கள் உள்ளங்கவர் கள்வர்களான ‘தீவிரவாதிகள்’ ஆகியோருக்கு பெரியளவில் பாதிப்பு இல்லை என்பது தெரிகிறது.

          ஆனால், 2007 / 2008 ஆண்டுகளில் இருந்த அளவுக்கு (சுமார் 4.5 லட்சம் கோடிகள்) தற்போது இல்லை என்பது உண்மை தான். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம் – ஒன்று, அப்போதிருந்த உலகப் பொருளாதார பெருமந்தத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க அந்நிய நிறுவனங்கள் இந்திய சந்தையை நோக்கிப் படையெடுத்தது. இரண்டு, மேற்கே பொருளாதார நிலை சமன்பட்டதும் திரும்பிச் சென்றது – அதே சமயத்தில் – இங்கே செபி சில கட்டுப்பாடுகளை மெல்ல மெல்ல கொண்டு வந்தது.

          FII என்பது ஹெட்ஜ் பண்ட், ம்யூட்சுவல் பண்ட், பென்சன் பண்ட் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது. இதில் வெளிநாட்டில் உள்ள ஒரு முதலீட்டாளர் இந்திய பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமென தீர்மானித்து இங்கே செபியில் ஏற்கனவே பதிவு செய்துள்ள FPI நிறுவனம் ஒன்றை அணுகினால், அவரது பணம் இந்தியாவில் முதலீடாக மாற்றப்படும். இப்போது FPI தனது சோர்சை எப்படி வெளியிட முடியும்? இந்த முதலீட்டாளர் என்பவர் ஒருவர் – இவரைப் போல் பலரது பென்சன் பன்டுகள், ம்யூட்சுவல் பன்டுகள் உள்ளிட்டவைகள் Bundle செய்யப்படும் – இதை டெக்னிக்கலாகவே FPI / FII நிறுவனங்களால் வெளியிட முடியாது. ஏனெனில், அந்த கண்டிசனின் பேரில் தான் அவன் தனது நாட்டில் தனக்கென முதலீட்டை ஈர்க்கிறான்.

          இப்போது KYC மட்டும் என்ன செய்துவிடுமாம்? FII / FPI செய்யும் முதலீடுகள் முறையானதா என்பதை சோதிக்கச் சொல்லலாம் – எங்கள் நாட்டு சட்டப்படி சரியாகத் தான் உள்ளது என்று ஒரு அமெரிக்க அல்லது பிரிட்டிஷ் நிறுவனம் சொன்ன பின்னே செபியால் என்ன செய்ய முடியும்?

          எனவே, பார்டிசிபேட்டரி நோட் முறையே ஒட்டுமொத்தமாக பிராடுத்தனம் – இதில் ரெகுலேஷன் கொண்டு வந்திருக்கிறோம் என்பது வெறும் பீத்தக் கலயம்

          உங்களுக்கு தில் இருந்தால்
          1) பார்ட்டிசிபேட்டரி நோட் முறையை முற்றிலுமாக தடை செய்யுங்கள்
          2) அம்பானி அதானி மல்லையா ரூயா போன்றவர்களிடம் குவிந்துள்ள வாராக் கடன்களை வசூலியுங்கள்
          3) வருடம் தோரும் முதலாளிகளும் 5 லட்சம் கோடி அளவுக்கு வரிவிலக்கு அளிப்பதை நிறுத்துங்கள்
          4)ஹவாலா முறையில் அந்நிய தேசங்களில் இருந்து நிதி பெரும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட் அமைப்புகளை தடை செய்யுங்கள்
          5) ஏற்றுமதி / இறக்குமதி மதிப்பில் தில்லுமுல்லு செய்து கருப்புப் பணம் பதுக்கும் அம்பானி / அதானி / ஜின்டால் / ரூயா கும்பலைக் கைது செய்யுங்கள்

          இவற்றைச் செய்யும் திராணி இருக்கிறதா மணிகண்டன்?

          • நான் தடை செய்துவிட்டார்கள் என்று சொல்லவில்லையே… யாரும் தடை செய்ய மாட்டார்கள் தடை செய்யவும் கூடாது, இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் அவசியம் தேவை, அதனால் வெளிநாட்டு முதலீடுகளை முறைப்படுத்துகிறார்கள், இது சரியான செயலே… மேலும் உங்களை போன்றவர்களுக்கு சீனாவை விட இந்தியா அதிக வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதால் பொறாமையில் இப்படி பேசுகிறீர்கள்.

            • மணிகண்டன்,

              ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மனசாட்சியற்ற அயோக்கியர்கள் என்பதை திரும்பத் திரும்ப நிரூபிக்கிறீர்கள். நீங்கள் பி.ஜே.பியின் PR டீமைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது… அது தான் நாக்கூசாமல் புளுகுகிறீர்கள்.

              உங்களிடம் விவாதிப்பது வேஸ்ட்.

              உங்கள் கட்சியின் ஏழை / உத்தமர் ஜனார்தன் ரெட்டி வீட்டுக் கல்யாணத்துக்குப் போகலையா? வழக்கம் போல கட்சி காரியகர்த்தர்கள் வீட்டு விசேஷங்களுக்கு வியவஸ்தாபிரமுக் வேலைக்கு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களைத் தானே அழைப்பார்கள்.. போயி எச்சிலை எடுத்துப் போட்டு தேசபக்தியை நிரூபித்து விட்டு வாருங்களேன்

              • கார்த்திக் சார் என்ன இப்படி பண்ணிட்டிங்க! மோடியின் மீது மயக்கத்தில் சித்த சுவாதீனம் ஆன மணிகண்டனை கொஞசம் கொஞசமாக கேள்வி மேல கேள்வி கேட்டு பக்குவமா வெளியே கொண்டு வரலாம் என்று நான் திட்டம் போட்டால் நீங்க குறுக புகுந்து அதிரடியா அவரை தாகிட்டிங்களே ! நல்லாவா இருக்கு… இப்ப பாருங்க அவர் என்ன சொல்றார் என்று :

                ஊழல்வாதிகள்…, திவிரவாதிகள்…, வரிகட்டாத பெரு முதலாளிகள் ஆகியோர் பணம் இந்தியாவுக்குள் p-note route வழியா வருவது தப்பே இல்லை ஆணித்தரமாக கூறுகின்றார் பாருங்கள் இந்த தேச விரோத , மக்கள் விரோத மணிகண்டன்…!

                //நான் தடை செய்துவிட்டார்கள் என்று சொல்லவில்லையே… யாரும் தடை செய்ய மாட்டார்கள் தடை செய்யவும் கூடாது, இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு முதலீடுகள் அவசியம் தேவை, அதனால் வெளிநாட்டு முதலீடுகளை முறைப்படுத்துகிறார்கள், இது சரியான செயலே…//

            • மணிகண்டன் பதில் சொல்ல துப்பு வக்கு அறிவு எந்த மயிரும் இல்லை என்றால் என்னத்துக்கு சீனாவுக்கு ஓடுறிங்க? இந்த பொழப்புக்கு ———-. ஊழல்வாதிகள்…, திவிரவாதிகள்…, வரிகட்டாத பெரு முதலாளிகள் ஆகியோரின் பணம் இந்தியாவுக்குள் pnote வழியா வருவது வரவேற்க தக்கதே என்று கூருகின்றிகள் அல்லவா? வாழ்க மோடியின் அடிமை மனிகண்டன் தேச பக்தி… அட சீ…… தேச விரோதி மணிகண்டன்…….

              //இது சரியான செயலே… //

              • சூசூசூசூசூசூ யாப்பா இப்பவே கண்ணக்கட்டுதே…

                ஐயா சாமிகளா SEBI முதலீட்டாளர்களை மூன்று categoryயாக பிரித்து இருக்கிறார்கள் அதில் category 3ல் இருப்பவர்கள் தீவிரவாதிகள், இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தடை செய்யப்பட்டவர்கள், இவர்கள் யாரும் இந்தியாவில் முதலீடு செய்ய முடியாது என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன் அதற்கு பிறகும் நான் தீவிரவாதிகள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஆதரிக்கிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்.

                உங்களுக்கு எல்லாம் தமிழ் படித்து புரிந்துகொள்ளும் அளவிற்கு மூளை இல்லையோ என்னவோ… வடிகட்டின மக்குகள்.

                உங்களுக்கு எல்லாம் எங்கே இந்தியா சீனாவை விட பெரியளவில் முன்னேறிவிடுமோ என்று பொறாமை வயித்தெரிச்சல் அதனால் தான் இப்படி எல்லாம் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்… இந்தியாவின் காலை பிடித்து இழுக்கும் நண்டுகள் நீங்கள்.

                • இன்னும் லூசுதனமாக தான் உளறிக்கொண்டு இருகிங்க மணிகண்டன்…. உங்களால் திவிரவாதிகளை கிளாஸ் 3 குள் கொண்டு வரமுடியும் எனில் அவர்களால் கிளாஸ் 1 மற்றும் 2 க்கு தங்களை உருமாற்றம் செய்துகொள்ள முடியாதா என்ன ? சரி உங்கள் வாதத்துக்கே வருவோம்..செபியின் classificanin 3 அமல் ஆவதற்கு முன்பு வரையில் திவிரவாதிகளிடம் இருந்து வந்த முதலீடுகள் எல்லாம் என்னவாகியது… பங்கு சந்தையில் அவர்கள் அவற்றை பெருத்த லாபத்துடன் தானே மீண்டும் கொண்டு சென்று உள்ளார்கள்! ஒரு திவிரவாதியின் P-NOTE முத்லீட்டையாவது இதுவரையில் உங்கள் மோடியின் அரசு நிறுத்தி வைத்த வரலாறு உண்டா? மேலும் திவிரவாதிகள் மட்டும் தானே இந்த கிளாஸ் 3 வரையறைக்குள் வருகின்றார்கள்…? அப்ப ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் வரிகட்டாத பெரு முதலாளிகளின் P-NOTE முத்லீடுகள் எல்லாம் இந்திய பங்கு சந்தையில் இன்னும் அனுமதிக்கபடுகின்றனவே ! யோசிங்க மணிகண்டன்….

                • கருப்பு பணத்தை ஒழிபது பற்றி பேசும் போது சீனாவுக்கு ஓடுறிங்க…! ஆயுத பூசை பற்றி பேசும் போது ரம்ஜான்-சீனா வென்று ஓடுறிங்க… என்ன பிரச்சனை உங்களுக்கு மணி? சீன பங்கு சந்தையில் எவ்வளவு முதலீடு செய்து இருக்கீங்க? எப்பவுமே இந்தியாவின் பொருளாதார போட்டி பங்காளி சீனாவை பற்றியே நினைப்பாகவே இருக்கீங்களே! என்னா மேட்டரு?

                • அது சரி அரசியல்வாதிகளின் அதிகாரிகளின் ஊழல் பணத்தை எல்லாம் மற்றும் வரிகட்டாத கருப்பு பணத்தை எல்லாம் P-NOTE முத்லீடு மூலமாக மோடி அனுமதி அளித்துக்கொண்டு உள்ளாரே ஏன் ?

                  P-NOTE முத்லீடு விசயத்தில் கதவை திறந்து வைத்து விட்டு இதுவரையில் திருடன் வந்து இந்தியாவில் திருடிக்கிட்டு இருந்தானே அதுக்கு என்ன சொல்றிங்க என்று கேட்டால் கதவு திறந்து இருந்தாலும் இனிமே அந்த திருடன் வரமாட்டான் ஏன் என்றால் அந்த திருடனுக்கு ID card கொடுத்தாச்சு என்று சொல்றீங்க்களே இதுதான் மங்குனி மணிகண்டனின் பதிலா? என்ன போங்க மணி இம்புட்டு முட்டாளா.., வடிகட்டின முட்டாளா இருக்கீங்களே! திருடன் IDCard ஐ தூக்கி போட்டுட்டு வேற உருவம் எடுத்து வரமாட்டானா?

                  குறிப்பு:
                  திருடனுக்கு பதிலா திவிரவாதியினு மாத்தி படிங்க முட்டாள் மணிகண்டன்…

                  • வினவு போன்றவர்களை கூட நான் ஊழல்வாதிகளாக தான் பார்க்கிறேன், __________________இவர்கள் எல்லாம் எந்த முகத்தை வைத்து கொண்டு மற்றவர்களை ஊழல்வாதிகள் என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

                    அயோக்கியர்கள் வினவு

                    • மணிகண்டன்…, பதில் செல்ல இயலாத நிலையில் ரத்த கொதிப்பின் உச்சத்தில் இருக்கிங்க போல இருக்கே மணிகண்டன்…. pnote மூலம் தீவிரவாதிகளை, ஊழல்வாதிகளை ,வரி ஏய்ப்பாரர்களை அனுமதிக்கும் உங்கள் பிஜேபியின் மோடி அரசு பற்றி பேச திராணி இன்றி என்ன உளறிகிட்டு இருகிங்க? போங்க போய் நல்ல மருத்துவரை பார்த்து மாத்திரை வாங்கி சாப்பிடுங்க தேச விரோதி மணிகண்டன் அவர்களே!

                • மணிகண்டன் போன்று அந்நிய முதலீடு என்ற பெயரில் P-NOTES என்ற முறையில் தாய்நாட்டுக்கு துரோகம் செய்யும், தாய்நாட்டின் பொருளாதாரத்தை வேட்டையாடும் கயவர்களுக்கு இந்த விளக்கமும் கேள்விகளும்.. மணிகண்டன் முன்று வகையில் P-NOTES முதலீட்டாளர்கள் உள்ளதாக கூறுகின்றார். அந்த வகைமைகள் என்னவென்று முதலில் பாப்போம்.

                  CAT I • Foreign government, Government’s financial Institutions
                  • Highly secure institutions with high KYC norms adherence
                  • Can issue/buy/sell Participatory Notes (P-Notes)
                  CAT II • Mutual Funds, Pension Funds, University Funds
                  • Secure institutions with KYC norms adherence
                  • Can issue/buy/sell Participatory Notes (P-Notes), except certain risky institution listed by SEBI

                  CAT III • Not in CAT I and CAT II for ex. Hedge Funds
                  • Highly risky institutions with low KYC norms adherence
                  • Cannot buy/sell/subscribe to P-notes directly or indirectly

                  மணிகண்டன் என்ன ஒரு பித்தலாட்டம் இது. ! Hedge Funds முலமாக மட்டுமே திவிரவாதிகள் பணத்தை இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்கின்றார்கள் என்று உங்களுக்கு கூறிய மடையன் யார்?

                  1. CAT II குள்ளே நுழைந்து ஊழல் அரசியல்வாதிகளின் கருப்புபணம் , திவிரவாதிகளின் கருப்பு பணம் Mutual Funds, Pension Funds, University Funds முலமாக இந்திய பங்கு சந்தைக்கு வராது என்பத்ற்கு என்ன உத்திரவாதம் தருகின்றார் இந்த மோடிஜீயும் முட்டாள் மணிகண்டனும் ?

                  2. CAT Iமூலமாக இந்திய நாட்டின் பொருளாதார பங்காளி சீன அரசின் பெரும் பணம் இந்திய பங்கு சந்தைக்கு வந்துவிட்டு இந்திய பொருளாதரத்தை சீர்குலைக்க மீண்டும் திடீர் என்று வெளியேறாது என்பதற்கு என்ன உத்திரவாதம் தருகின்றார் இந்த மோடிஜீயும் முட்டாள் மணிகண்டனும் ? அதுபோன்றே பாக்கிஸ்தான் அரசின் பணம் அல்லது அல்கொய்த IS தீவிரவாதிகளின் பணம் பாகிஸ்தான் அரசு மூலமாக இந்திய பங்கு சந்தைக்கு வந்து வெளியேறாது என்பற்கும் ஏதாவது உத்திரவாதம் உண்டா PNOTES ஐ ஆதரித்துகொண்டு தாய் நாட்டை வேட்டையாடும் மணிகண்டன் அவர்களே?

                • முட்டாள் ,மங்குனி, தேச துரோகி மணிகண்டன் அவர்களே…,

                  இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்காகவே பல்வேறு நிறுவனங்கள் உலகம் எங்கும் உள்ளன. தன் அடையாளத்தை மறைத்து இந்தியாவினுள் முதலீடு செய்ய விரும்பும் ஒருவர் அந்த நிறுவனங்கள் மூலமாக வேண்டுமானாலும் PNOTES முறையில் இந்தியாவினுல் முதலீடு செய்யலாம். KYC இந்த முதலீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லுப்டியாகுமே தவிர தனி நபர்கள் தங்களின் அடையாளத்தோ தெரியபடுத்தவேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை… இந்த உண்மை கூட தெரியாமல் அல்லது தெரிந்தும் தெரியாதது போன்றே பாவனையுடன் எதற்காக வினவில் வந்து உளறிக்கொண்டு உள்ளீர்கள்?

                  உள்நாட்டில் பங்கு சந்தையில் முதலீடு செய்பவருக்கு உள்ள கட்டுப்பாடுகள் (KYC ,PANCARD etc) எதுவும் வெளிநாட்டில் இருந்து நிறுவனங்கள் மூலமாக PNOTES முறையில் முதலீடு செய்யும் திவிரவாதிகளுக்கு , இந்திய கருப்பு பண பெரு முதலாளிகளுக்கு , ஊழல் அரசியல்வாதிகளுக்கு இல்லை என்ற நிலையில் PNoTES திட்டத்தை ஆதரிக்கும் உங்கள் முக மூடி கிழிந்து அருவருப்பான உங்கள் நிஜ முகம் இப்பொது காட்சி அளிகின்றதே மணிகண்டன்…!

        • According to the link provided by Manikantan,stricter KYC &disclosure regime for p-notes were introduced by SEBI only in June,2016.The ET news says that the SEBI has issued its circular in this regard only on 10-6-2016.After allowing free run from its previous regime(p.notes were introduced only during Vajapayee regime)stricter KYC norms were introduced only in June,2016 after getting record investments from Mauritius and Singapore during 2014-15.

  2. Sasi Kumar

    மிகவும் தெளிவாக மக்களைச் சென்றடையும் வகையில் விளக்கம் தந்த மகஇக தோழர்களின் விளக்கம் மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.மோடி ஏதாவதொன்றை அறிவித்தாலே அது மோசடி தான் என்பது தொடர்ச்சியாக அம்பலப்பட்டு வரும் வேலையில் இப்பொழுது அறிவித்த இந்த கருப்புப் பண மீட்பு என்ற மோசடியான அறிவிப்பின் மூலம் 500,1000, ரூபாய் நோட்டுகளுடன் சேர்ந்து மோடியும் செல்லாக்காசாகிப் போனார். அதன் வெளிப்பாடு தான் இன்றைக்கு உயிருக்கு அச்சுறுத்தல், ஆணவப்போக்கு இல்லை, குடும்பத்தை விட்டேன், என்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார்!

    வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துக்கள்!

  3. Abdul Rahman
    ஆங்கில இதழ்களில் வரும் கட்டுரைகளைப் படித்தால் கூட இப்பிரச்சினையின் வேர்களை இவ்வளவு தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியாது. தோழர் மருதையனின் உரை மறுக்க முடியாத வாதமாக உள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்கள் இவரை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துக்கள்!

  4. Vijay Kanth
    நான் பொருளாதாரம் அறிந்தவனலல்ல. எனது சிறிய சந்தேகம் என்னவெனில் பணம் உழைப்பவர்கள் அதற்கான வரியினை கட்டிவிட்டால் போதுமானது தானே? வரியில்லாது பதிவிலும் சேராத பணத்தினால் தானே பொருளாதாரத்திற்கு பாதிப்பு ?
    மொத்தப் பொருளாதாரப்பெறுமதியின் 10% பணமாக அச்சிடப்படுவதாகவும் அந்தப் பணத்தினை முடக்கி வைப்பதால் பொருளாதாரத்திற்கு பாதிப்பு எனவும் எங்கோ வாசித்த ஞாபகம். ஆக திடீரென பணத்தினை செல்லாது என அறிவித்தது அந்த உறங்கும் பணத்தினை சுற்றோட்டத்தில் சேர்த்துவிடுவதற்கும் ஏதுவாக இருக்குமே…
    வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துக்கள்!

  5. Vishnupriya Nagamalai

    Hands off to vinavu…plz go ahead wt Ur true nd valuable points to this corrupted nations….plz be aware of all this…my request to all humans Don’t follow media nd newspaper. Just analysis nd then contribute your views to others…bcz all the person’s are not intellectual if they capitalist and other persons like modi…they won’t let them to survive.

    Mohamed Iqbal
    நன்பர்களே எல்லோருக்கும் ஒரு நல்ல விசயம் நம் உரிமைக்காக குரல் கொடுக்கும் ம க இ க வில் அனைவரும் தொடர்பு வைத்துக்கொள்ளவும் நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி

    Hemachandran Nirmalakanthan
    You are so Wise! Nice Explanation?

    Vijay Venkatesan
    right comment at the right time !

    Jeevanantham
    நல்ல விளக்கம்

    Suresh Veerabadiran
    Simply super…..

    Mohammed Muzammil
    Really superb explanation…

    வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வந்த கருத்துக்கள்!

  6. தமிழில் ஒரு பழமொழி உண்டு வேண்டாத மருமகள் கை பட்டால் குற்றம் கால் பாட்டால் குற்றம் என்று சொல்வார்கள் அது மாதிரி இருக்கு இந்த கட்டுரை… மோடி என்ன செய்தாலும் அது தவறு என்று சொல்பவர்களை திருத்த முடியாது.

    மோடி என்ன செய்தாலும் இவர்கள் இப்படி தான் பேசிக்கொண்டு இருப்பார்கள்

    • மணிகண்டன்…, இந்த கட்டுரையில் உள்ள அடிப்படை ஆதாரங்களுக்கு பதில் அளிக்க இயலாமல் உளறிக்கொண்டு உள்ளீர்கள்….

  7. [அ]பாவி மணிகண்டன் அவர்களே ..,

    மோடியின் இந்த செல்லா நோட்டு திட்டம் மூலம் வங்கிகளில் மக்களால் டெபாசிட் செய்யபட்ட மக்கள் பணத்தை கொள்ளையடிக்க இந்திய தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி வெளியிட்ட செய்திக் குறிப்பில் உள்ள விசத்தை காணுங்கள்… முன்பு அருண் ஜெட்லி அவர்கள் கூறிய விசயத்தை இவரும் வேறு வார்த்தைகளில் கூறுகின்றார்.

    “”இவ்வாண்டு மார்ச் மாத இறுதியில் நாட்டில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய்நோட்டுகளின் மதிப்பு ரூ.14.2லட்சம் கோடியாகும். இது புழக்கத்தில் இருந்த பண மதிப்பில் கிட்டத்தட்ட85%ஆகும். கணக்கு காட்ட வேண்டும் என்ற பயத்தின் காரணமாக இவற்றில் கணிசமான அளவு குறைந்த பட்சம் 20%- பணம் வங்கிகளுக்கு வராது. ஆனாலும், பெரும் பகுதி பணம் வங்கிகளின் நடப்பு அல்லது வைப்பு நிதிக் கணக்கில் வந்தால், வங்கிகள் நிதி நிலை பலமடங்கு அதிகரிக்கும். கணக்குக்கு வராத பணத்திற்கு மாற்றாக புதிய பணத்தை மத்திய ரிசர்வ் வங்கி உருவாக்கலாம் அல்லது அந்த லாபத்தை அரசிற்கு அளிக்கலாம்.
    பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ள நிலையில் தற்போதைய நிலையால் வட்டி விகிதத்தை குறைக்கும் அறிவிப்பை ரிசர்வ் வங்கி எடுக்கக் கூடும் என்று பானர்ஜி தெரிவித்துள்ளார்.””

    இதற்கு முன்பே மக்களின் பணம் ௮ லச்சம் கோடிகள் வரையில் இந்த பெரு முதலாளிகளிடம் வரா கடனாக இருக்க மீண்டும் மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி தான் மோடியின் செல்லா நோட்டு திட்டம் என்பதனை இப்போதாவது உணருகின்றீர்களா ?

  8. வினவு தோழர்களுக்கு!
    தெளிவான, அருமையான மருதையனின் உரையை பின்னணியில் ஒலிக்கவிடும் இசை பல இடங்களில் கெடுக்கிறது. யதார்த்தமாக இல்லாமல் துருத்திக்கொண்டு நாராசமாய் ஒலிக்கிறது. தயவு செய்து அதை சரி செய்யவும்.
    மேலும்
    இந்த பிரச்சினை தமிழக பிரச்சினை மட்டுமல்ல என்பதை கவனத்தில் கொண்டு வீடியோ பதிவில் ஆங்கில சப் -டைட்டில் போட்டால் இன்னும் சிறப்பாக நாடு முழுக்க, உலகம் முழுக்க போய்ச்சேரும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க