privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !

புதுவை அதிமுக அடிமைகள் : அம்மா காலில் விழுவதே பகுத்தறிவு !

-

நான் என்ற மனோபாவம் கொண்ட, தன்னகங்காரம் பிடித்தவர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. எனக்கு பிறகு … பேரழிவு தான் என்று பிரெஞ்சு புரட்சியில் தலையை இழந்த மன்னன் நான்காம் லூயி கூறியதாக சொல்வதுண்டு. எம்.ஜி.ஆரும் சரி, ஜெயலலிதாவும் சரி, இருவருமே தனக்கு பிறகு கட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியவர்கள் அல்ல. தனக்கு பின்னர் கட்சியும் ஆட்சியும் சீர்குலைந்தால் தான் தனது அருமையை உலகம் உணரும் என்பதே அவர்களுடைய மனோபாவம். தனக்கு அடுத்தபடி இன்னார் என்று சொல்வது கூட இன்னொரு நபரை தனக்கு நிகரானவர் என்று தானே ஒப்புக் கொண்டதாகிவிடும் என்று அஞ்சுபவர்கள். இவர்கள் தன்னுடன் சேர்த்து தனது மனைவிமார்களையும், அடிமைகளையும்  பிரமிடுக்குள் புதைக்க சொன்ன எகிப்திய மன்னர்களை போன்றவர்கள்.

Pudhucherry (15)

ஆம். ஜெயலலிதா ஒரு பாசிஸ்ட். இந்த பாசிஸ்ட் மரணத்தின் போது பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள், என எதுவும் ஓடவில்லை. தமிழகமே வெறிச்சோடி போக வேண்டும் என்று ஆளும் வர்க்கம் திட்டமிட்டே “கலவரம் நடக்கும் என்று பய பீதியை கிளப்பி”  மக்களை வீட்டிலேயே முடக்கியது.

புதுச்சேரியிலும் இதே நிலைமை தான் என்றாலும் அன்று மாலை  6 மணிக்கு சில கடைகளை திறக்க ஆரம்பித்து விட்டனர். மக்கள் நடமாட்டமும் ஓரளவிற்கு இருந்தது. அன்று மாலையே “இந்த பாசிஸ்டின்  மரணத்திற்கு கண்ணீர் சிந்த தேவையில்லை” என்று புதுச்சேரியில்  புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் கூட்டமாக உள்ள இடத்தில் தெருமுனை  பிரச்சாரம் செய்தனர்.

அப்பொழுது   டீக்கடை உரிமையாளர் அ.தி.மு.க-வின் அடிப்பொடி ஒருவர்  மட்டும் கடைகள் திறந்திருப்பதை பார்த்துவிட்டு பார்த்து எங்க அம்மா செத்துடாங்க. எல்லாரும் கடையை மூடுங்கடா என்று குடித்து விட்டு கத்திக்கொண்டு இருந்தார். அவருடைய கடை எதிரே பைக் ஸ்டான்ட் உள்ளது. அங்கே வண்டியை நிறுத்தியவர்கள்  எடுக்கச் சென்ற போது அவர்களோடும் சண்டை போட்டார், அந்த குடிகாரர்.

Pudhucherry (14)தோழர்கள் அவரிடம் சென்று , ஏன் எல்லார் கிட்டயும் பிரச்சன பண்ற… உங்க அம்மா செத்துட்டா நீ கடைய மூடு, அழுவு, காரியம் பண்ணு ஏதாவது பண்ணு எதுக்கு போற வரவங்க கிட்ட சண்ட போடற என்று கேட்டதுக்கு.., அம்மா நாட்டுக்காக தியாகம் பண்ணிருக்காங்க. கல்யாணமே பண்ணிக்கல என்று பி.ஜே.பி காரர்கள் போன்று தேசப்பற்று பாடலை பாடினார்.

அதற்கு தோழர்கள், எம்.ஜி.ஆருக்காக அவர் செய்த தியாகத்தை எடுத்துக் கூறியதும் ஒரு கணம் அமைதியானவர்,…

“எங்க அம்மாவையே இப்படி சொல்றியா… இங்கே இருங்கடா ஆளை கூட்டி வறேன்” என்று சொல்லி போனை காதில் வைத்தவாறே சென்று விட்டார்.

கடந்த 18ம் தேதி  “செத்தவன் எல்லாம் உத்தமன் ஆவதில்லை” என்ற தலைப்பில் சுவரொட்டி புதுச்சேரி  முழுவதும் ஒட்டப்பட்டது. இந்த சுவரொட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. போஸ்டரில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு பலர்  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருபுவனையில் ஒட்டிய சுவரொட்டியை அந்த டீக்கடைக்காரர் கிழித்து விட்டு, தோழர் மகேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தார். தோழர் வீட்டில்  இல்லை.  அவருடைய மனைவியிடம் “ஏ….’மா உன் புருஷன் பண்றதெல்லாம் சரியில்லை. அம்மாவ திட்டி ஏதாவது பண்ணிகினு இருக்கான். சொல்லி வை. என்றி கூறிவிட்டு ஒழுங்கா அவன “டைவேர்ஸ்” பண்ணிடுமா என்று அட்வைஸ் செய்துள்ளார்.”

அதிமுக வின் அடிப்பொடிகள் போன் பன்னி,   ஏன்டா ……….! அம்மாவ எதிர்த்து போஸ்டர் போட்டிருக்க. போஸ்டர்ல அம்மாவுக்காக கண்ணீர் சிந்தறது  தமிழகத்தின் பகுத்தறிவு, சுயமரியாதைக்கு கேவலம்னு போட்டிருக்க. இப்ப தான் தமிழினம் பத்தி தெரியுதா…….? கொத்து… கொத்தாக ஈழத் தமிழனை கொன்னாங்களே அப்பலாம் தமிழினமா தெரியலையா….? அப்பல்லாம் எங்கடா போயிருந்த… உன் வாயில என்ன வச்சிருந்த…. அப்ப தமிழினத்த பத்தி பேச வேண்டியது தான… இப்ப வந்து பேசற….என்று ஆவேசமாக கேட்டார்.

Pudhucherry (12)ஈழத் தமிழர பத்தி பேசுறிங்களே “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ஜெயலலிதா  தான் சொன்னார். உங்களுக்கு தெரியாதா என்று தோழர் பொறுமையாக கேட்க…” உடனே  இணைப்பை துண்டித்து விட்டார் அம்மாவின் அடிமை.

அடுத்த ஒருமணி நேரம் கழித்து மற்றொரு அழைப்பு  வந்தது.  டேய்…! பகுத்தறிவு பத்தி பேசறிங்க… பகுத்தறிவுன்னா என்னனு தெரியுமா உங்களுக்கு என்று கேட்டார்.

“இப்ப பகுத்தறிவு பற்றி பேச வேண்டிய அவசியம் என்னங்க என்று தோழர் கேட்க…,” நீங்க தான் உங்க போஸ்டர்ல பகுத்தறிவு பத்தி போட்டிருக்கிங்க என்று கூறினார்.

சரி, பகுத்தறிவு பற்றி உங்களுக்கு விளக்கனுமா?

நீங்க எங்களுக்கு விளக்க வேணாம்…. “எங்க அம்மா கால்ல விழறது தான் எங்களுக்கு பகுத்தறிவு” என்று கூறி புதிய விளக்கம் அளித்தார். எங்க அம்மா கால்ல விழறது எங்களுக்கு புண்ணியம் கெடச்ச மாதிரி. அதனால் ஒழுங்க ஒட்டின போஸ்டர எல்லாம் கிழிச்சிடுங்க என்று கூறி வைத்துவிட்டார்.

அடுத்து மூன்றாவது ஒரு அழைப்பு வந்தது. ஆரம்பிக்கும் போதே உன் பொண்டாட்டி செத்துட்டா நீ அழ மாட்டியா, என்று கேட்டார்.

Pudhucherry (17)

Pudhucherry (1)“என் மனைவி  மக்களுக்கான பிரச்சினையில பங்கெடுத்து கொண்டு சமூக அவலங்களை மாற்ற போராடுறாங்க. ஜெயலலிதா  நாட்டுக்கு ஒன்னும் செஞ்சிடல, எங்க வீட்ல இருக்க ஒரு ரூபா, ரெண்டு ரூபாயையும் திருடர ஒரு திருடியா தான் இருந்தாங்க. அதனால தான் அவங்க இறப்புக்கு கண்ணீர் சிந்த வேணாம்னு  சொல்லியிருக்கோம்.”

அதோட இல்லாம “மணல் மாபியா, கிரானைட் கொள்ளை போன்றவற்றை ஆதரித்துக் கொண்டு இருக்காங்க. இந்த மாஃபியாவோட  என் மனைவிய ஒப்பிட்டு பேசறது தப்பு. ஜெயலலிதா ஒரு பெண்ணாக சக பெண்களையே மதிக்காதவங்க, எல்லாரையும் கால்ல விழ வச்சவங்க என்று சொன்னதை அமைதியாக  கேட்டுவிட்டு….

இந்த கம்யுனிஸ்ட்ங்களே  இப்படி தான்’யா பேசுவிங்க. சம உரிமை, மயிறு மட்டன்னு… உங்ககிட்ட பேசனா ஆயிரத்தெட்டு விளக்கம் குடுப்பிங்க என்று சொல்லி விட்டு இணைப்பை துண்டித்துக் கொண்டார்..

இந்த அனுபவங்களை கொண்டு 22-ம் தேதி “அடிமைப் புத்தியையும், அரசியலற்ற கழிசடை தனத்தையும் எதிர்த்து முறியடிப்போம்” என்ற தலைப்பில் பிரசுரம் அச்சடித்து புதுச்சேரி ,திருபுவனை ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தனர்.

நோட்டிசை வாங்கிய பலர் அமைதியாக சென்று விட்டனர். ஒரு சிலர் மட்டும், “ஏங்க… அந்தம்மா உயிரோடு இருக்கும் போது தான் அந்த வாட்டு வாட்டினிங்க. செத்த பிறகும் விடமாட்டிங்களா என்று புலம்பியவாறே சென்றனர்.”

ஜெயலலிதா இறந்து விட்டார். எனவே இவர் செய்த பாவங்களை மன்னித்து  விடு! என்று அவர்களை புனிதமாக்க முயற்சிப்பது பார்ப்பனிய அடிமை புத்தி. அதிமுக என்ற கட்சியை கைப்பற்ற  தமிழகத்தில் பாஜக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளும் சரி, மன்னார்குடி மாஃபியாகளும் சரி  தற்போது அரங்கேற்றி வரும் அருவருக்கத்தக்க காட்சிகளை காண சகிக்கவில்லை. யார் வந்தாலும் அதனை ஏற்றுகொள்ளும் இழிந்த மனோபாவம் தமிழகத்தில் உருவாகி வருகிறது.

ராமாயணத்தில் ராமன் வனவாசம் சென்றே பிறகு அவனது செருப்பை கொண்டு வைத்து ஆட்சி செய்வான் பரதன். அதனை பெருமை என்று நினைத்து கொண்டாடினான். ஏறக்குறைய தமிழகத்தின் நிலையும் அது தான். இதனை இனிமேலும்  அனுமதிக்கலாமா? சொரணையுள்ள தமிழர்கள் சிந்திக்கவும்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

-வினவு செய்தியாளர்.