privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரலைநேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates

நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates

-

jallikattu-vinavu-live-3

ல்லிக்கட்டுப் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. தென்குமரி முதல் மெரினா வரை கீழத்தஞ்சை முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை முழு தமிழகமும் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற உறுதியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள். அம்மா சமாதி ‘புகழ்’ மெரினா கடற்கரையில் மோடிக்கு பாடைகட்டி ஒப்பாரியும் செய்திருக்கிறார்கள் கட்டிளங் காளையான இளைஞர்கள். சாதி, மத, பாலின பேதங்களை கடந்து உழைக்கும் தமிழ் மக்களின் போராட்டக் குரல் தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் இசையாய் அணிதிரட்டி வருகிறது. கோமாதாவை கொண்டு மக்களை பிளவுபடுத்த முயன்ற காவி கும்பல்களை காளைகளை கொண்டு எதிர்கொள்கிறார்கள் தமிழ் மக்கள்.

அரசு, நீதிமன்றம், ஓட்டுக் கட்சிகள் எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. காவிரி, முல்லை பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக வெடித்திருக்கிறது. அரசுகளையும், ஆளும் வர்க்கத்தையும் அந்தக் குரல் இடையறாது அச்சுறுத்துகிறது. மைய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தின் அரசியல் முழக்கத்தை மறைத்து விட்டு வெறுமனே அடையாள போராட்டமாக காட்ட முயற்சிக்கின்றன. ஆனால் போராட்டத்தில் பங்கு பெறும் மக்களோ மாணவர்களோ மோடியைத் திட்டாமல் தமது மூச்சைக் கூட விடுவதில்லை. மோடி அல்லது மோடி அரசு என்பது நூற்றாண்டுகளாக இந்தியாவின் பூர்வகுடி மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பனியத்தின் இன்றைய குறியீடு. டெல்லியில் இருந்து கொண்டு பார்ப்பன பனியாக்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தடியால் ஒடுக்கும் அடக்குமுறைதான் மோடி அரசு. இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். முழங்குகிறார்கள்.

  • ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு.
  • தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது.
  • முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.