Friday, June 2, 2023
முகப்புசெய்திநேரலைநேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates

நேரலை : டெல்லிக்கு எதிராக தமிழக எழுச்சி 21/01/2017 – Live updates

-

jallikattu-vinavu-live-3

ல்லிக்கட்டுப் போராட்டம் அடுத்தக்கட்டத்தை எட்டிவிட்டது. ஒட்டு மொத்த தமிழகமே திரண்டெழுந்து போராடிக் கொண்டிருக்கிறது. தென்குமரி முதல் மெரினா வரை கீழத்தஞ்சை முதல் மேற்கு தொடர்ச்சி மலை வரை முழு தமிழகமும் இரண்டிலொன்று பார்த்து விடுவது என்ற உறுதியுடன் ஆர்ப்பரிக்கிறார்கள். அம்மா சமாதி ‘புகழ்’ மெரினா கடற்கரையில் மோடிக்கு பாடைகட்டி ஒப்பாரியும் செய்திருக்கிறார்கள் கட்டிளங் காளையான இளைஞர்கள். சாதி, மத, பாலின பேதங்களை கடந்து உழைக்கும் தமிழ் மக்களின் போராட்டக் குரல் தமிழகமெங்கும் மாபெரும் மக்கள் இசையாய் அணிதிரட்டி வருகிறது. கோமாதாவை கொண்டு மக்களை பிளவுபடுத்த முயன்ற காவி கும்பல்களை காளைகளை கொண்டு எதிர்கொள்கிறார்கள் தமிழ் மக்கள்.

அரசு, நீதிமன்றம், ஓட்டுக் கட்சிகள் எதையும் மக்கள் நம்ப தயாராக இல்லை. காவிரி, முல்லை பெரியாறு, சமஸ்கிருத மற்றும் இந்தி திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் அரசியல், பண்பாட்டு தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபம் ஜல்லிக்கட்டு வழியாக வெடித்திருக்கிறது. அரசுகளையும், ஆளும் வர்க்கத்தையும் அந்தக் குரல் இடையறாது அச்சுறுத்துகிறது. மைய ஊடகங்கள் அனைத்தும் இந்தப் போராட்டத்தின் அரசியல் முழக்கத்தை மறைத்து விட்டு வெறுமனே அடையாள போராட்டமாக காட்ட முயற்சிக்கின்றன. ஆனால் போராட்டத்தில் பங்கு பெறும் மக்களோ மாணவர்களோ மோடியைத் திட்டாமல் தமது மூச்சைக் கூட விடுவதில்லை. மோடி அல்லது மோடி அரசு என்பது நூற்றாண்டுகளாக இந்தியாவின் பூர்வகுடி மக்களை ஒடுக்கி வரும் பார்ப்பனியத்தின் இன்றைய குறியீடு. டெல்லியில் இருந்து கொண்டு பார்ப்பன பனியாக்கள் ஒட்டு மொத்த இந்தியாவையும் தடியால் ஒடுக்கும் அடக்குமுறைதான் மோடி அரசு. இளைஞர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். முழங்குகிறார்கள்.

  • ஆம். இந்த் ஜல்லிக்கட்டின் பெயர் டெல்லிக்கட்டு.
  • தமிழகம் புதிய போராட்ட வரலாற்றில் நுழைந்துவிட்டது.
  • முடிந்த வரை இந்த போராட்ட பெருங்கடலின் முத்துக்களை வினவு தேடி எடுத்து தர முயல்கிறது.
  1. வெறும் ஜல்லிகட்டு கோரிக்கையாக மட்டும் அல்லாமல், நாடு தழுவிய விவசாயிகளின் போராட்டமாக இதை முன்னெடுத்து செல்ல முடியுமா? படித்த இளைஞர்கள் விவசாயத்துறையில் சாதனை படைக்க இதுவே தருணம்! தொழில்துறையினரை விட அதிக சமூக பயன் தரும் விவசாய துறையை அரசு முன்னுரிமை கொடுத்து வளர்க்க வேண்டும்! அகில இந்திய விவசாயி மற்றும் மாணவர் போராட்டமாக பரிணமிக்க வேண்டும்! படித்தவர்கள் அனைத்து மானில மாணவர்களிடம் தொடர்பு கொண்டு பேசலாமே!

  2. இந்தப் போராட்டத்தின் இலக்குகளைப் பற்றி முழுமையாகச் சிந்திப்பதற்கு முன்னால், தமிழ்நாட்டின் விவசாயிகள் போராட்டமாக மாற்றுவதற்கு முன்னால் இன்று 23/01/17காலையில் மெரீனாவில் போலீசாரைக் கொண்டு தடியடி நடத்தி மாநில அரசு அராஜகமாக அதைக் கலைத்துவிட்டது. மதுரை, திருச்சி, கோவை போன்ற பிற ஊர்களிலும் இதே அடக்குமுறை நிலைதான். வேறுவழியின்றி மாணவர்களும் கலைந்து சென்றுள்ளனர். ஆனால் நிச்சயம் போராட்டம் தொடரும்.

  3. //அவசரச் சட்டம் எனும் போங்காட்டம் வேண்டாம்//

    21st January Ordnance declared,than 23rd January itself ‘Ordnance draft’ passed in TN assembly.

    Why than this high drama of Ordnance route as just Pongal festival already over.
    Directly Government should have gone directly to assembly.

    This VK Sasikala and OPS want to celebrate first “FIRST NIGHT(In the presence of Modi)”
    and than go for next to next day for marriage

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க