privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !

BEML : தேசத்தின் சொத்தை விற்கும் மோடி அரசு !

-

தேசத்தின் சொத்தான BEML (Bharath Earth Movers Ltd) பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு தாரைவார்க்கிறது, “தேசபக்தர்” மோடி அரசு.

“வெற்றிக்கதைகளைக்” கேட்பது  நம்மில் பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆம், தனிமனிதனோ, நிறுவனமோ சந்தித்த சவால்கள், திருப்பங்கள், தோல்விகள், துரோகங்கள், வெற்றியின் “சூட்சமங்கள்”, தொழில் வெற்றிகள் அடங்கிய “வெற்றிக்கதை”புத்தகங்கள் சந்தையில் கொட்டிக்கிடக்கின்றன. அம்பானியின் திருட்டைக்கூட சாமர்த்தியம் என அடித்துப்பேசும் காரியவாதிகளுக்கு அந்த “வெற்றிக்கதைகள்’ அவ்வளவு அலாதியானது. ஆனால் பாருங்கள் தனி மனித/தனியார் நிறுவனங்களின் “வெற்றிக்கதை” தெரியும் அளவுக்கு நமக்கு பொதுத்துறை நிறுவனங்களின் வெற்றிக்கதைகள்  தெரிவதில்லை.

தேசபக்தியின் மொத்த குத்தகைகாரர்களான காவிவெறி மோடி அண்ட் கோ-வுக்கோ, பொதுத்துறையின் வெற்றிக்கதைகளே பிடிப்பதில்லை. எந்த அளவு பிடிக்காதென்றால், மாபெரும் லாபத்தில் இயங்கிவரும் எல்.ஐ.சி-யின் வைரவிழாவுக்கு போன அருண்ஜெட்லி, ஆட்டைப்பார்த்த ஓநாயைபோல வாயில் எச்சில் ஒழுக எல்.ஐ.சி-ஐ  தனியார்மயமாக்குவது குறித்து பேசியதைக்கேட்ட அதிகாரிகள் ஒரு நொடி ஆடிப்போய்விட்டார்கள்.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் தயாரிக்கும் மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும்

எல்.ஐ.சி-யைப் போலவே மோடி அண்ட் கோவிற்கு பிடிக்காத வேறு சில வெற்றிக்கதைகளும் இருக்கின்றன. அப்படி ஒரு வெற்றிக்கதைதான் BEML-ன் கதை.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பெங்களூரு மெட்ரோ ரயில் நிறுவனம் 150 ரயில் பெட்டிகளை செய்துதரும் வேலைக்கான ஒப்பந்தத்திற்கு டெண்டர் கோரியது. அத்துறையின் முன்னணியில் உள்ள பன்னாட்டு கம்பெனிகளுடன் கலந்து கொண்டு BEML டெண்டரில் வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் 1,421 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான BEML பெற்றுள்ளது. டெண்டரில் கலந்துகொண்ட மற்ற நிறுவனங்கள் ஒரு பெட்டிக்கு 34 கோடி ரூபாய் விலை நிர்ணயம் செய்திருந்த நிலையில், BEML நிறுவனம் 9 கோடி ரூபாயில் பெட்டியை தயாரித்து தருகிறது.

விலை குறைவு என்பதற்காக தரத்தில் எந்த குறையும் கிடையாது. BEML, 2016-ம் ஆண்டு பேங்க்காகில் நடைபெற்ற சர்வதேச மெட்ரோ ரயில் உற்பத்தியாளர்களுக்கான போட்டியில் (ICQCC-2016) மெட்ரோ ரயில்பெட்டிகளின் தரத்திற்காக தங்கப்பதக்கத்தை தட்டிவந்துள்ளது.

ஆனால் “மேக் இன் இந்தியா” புகழ் மோடியின் அமைச்சரவையோ, பாதுகாப்புத்துறையில் குறைந்தபட்ச தற்சார்புடன் விளங்க காரணமான BEML நிறுவனத்தில் அரசு கொண்டிருக்கும் 54% பங்குகளில் 28% -ஐ விற்று 26% என்ற அளவுக்கு கொண்டுவர முடிவெடுத்துள்ளது. இது  நிறுவனத்தை தனியார்மய புதைகுழியில் தள்ளி தொழிலாளர்களின் வாழ்வையும் மக்களின் சொத்தையும் நாசமாக்கும் நடவடிக்கையாகும். நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களில் அரசின் முதலீட்டை திரும்ப எடுப்பதன் மூலம் ரூ.56,000 கோடி திரட்ட மோடியின் ஏலக்கம்பெனி முன் கூட்டியே திட்டமிட்டுள்ளது.

BEML நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக்கொண்டு 1965-ல் உருவாக்கப்பட பொதுத்துறை நிறுவனமாகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய கனரக இயந்திரங்கள் உற்பத்தி மற்றும் அந்த துறையில் நாட்டின் 70% சந்தையை கையில் வைத்திருக்கக்கூடிய BEML-க்கு கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயல், மைசூர், பெங்களூரு மற்றும் கேரள மாநிலம் பாலக்காடு ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்திய ராணுவத்துக்கு தேவையான டிரக்குகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், சுரங்கங்களுக்கு தேவையான வெட்டியெடுக்கும்  கனிமங்களை இடம் மாற்றும் கனரக வாகனங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் மெட்ரொ ரயில் பெட்டிகள் இவைகளுக்கான உதிரிபாகங்கள் தயாரிப்பு என மிகப்பெரிய தற்சார்பு உற்பத்தி நிறுவனமாகும். இந்தியாவில் எல்லா யூனிட்டுகளையும் சேர்த்து 2,000 நிரந்தரத் தொழிலாளர்களும், 1,500 ஒப்பந்தத்தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.

1965-ல் தொடங்கப்பட்ட போது ஆண்டுக்கு ரூ.5 கோடி வர்த்தகத்தில் துவங்கி இன்று  ரூ.3,500 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாகும். உலகம் முழுதும் 56 நாடுகளில் BEML வர்த்தகம் செய்கிறது. சீனா, மலேசியாவைத் தொடர்ந்து பிரேசில், இந்தோனேசியாவில் நேரடி நிறுவனத்தை திறந்து தனக்கென வெற்றிகரமான, பரந்த வியாபாரத்தைக் கொண்டிருக்கிறது.

BEML

முற்றிலும் அரசு நிறுவனமாக இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வந்த BEML  நரசிம்மராவ் பிரதமராக இருந்த பொழுது (புதிய பொருளாதாரக் கொள்கையின் ஆரம்ப காலகட்டம் ) 1992-ல் 25% பங்குகளை விற்றதன்மூலம் அரசு, பெரும்பான்மை பங்குகளைக்கொண்ட வெறும் “பங்குதாரர்” ஆனது.

திட்டக்கமிசன் கலைக்கப்பட்டு அதற்கு பதில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பு பி.இ.எம்.எல், ஹெச்.ஏ.எல், பெல், ஓ.என்.ஜி.சி கோல் இந்தியா, எல்.ஐ.சி உள்ளிட்ட 44 பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் நிதி திரட்ட செப்டம்பர் 2016-ல் அரசுக்கு பரிந்துரை செய்தது.

அந்த திட்டத்தின் அடிப்படையிலேயே சேலம் உருக்காலையும் தனியார் மயமாக்கிவிட துடிக்கிறது அரசு. ஏனைய நிறுவனங்களைக் கூட திட்டமிட்டே நட்டத்தில் தள்ளி அதனைக் காரணம் காட்டி முதலைக்கண்ணீர் வடித்து, ஊடக வித்வான்களை வைத்து வாய்கிழிய நியாயம் பேசி, லாபம் வந்தால் அதை ஏன் விற்கப் போகிறோம் ? என்கிற ரீதியில் கதையளந்தார்கள்.

ஆனால், லாபகரமாக இயங்கிக்கொண்டிருக்கும், காலத்திற்கு ஏற்ப பழைய உற்பத்தி மட்டுமல்லாது மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தி செய்ய தன்னை தகவமைத்துக்கொண்டிருக்கும் BEML விஷயத்தில் அப்படிக்கூட அரசால் ஒரு பொய்க்காரணத்தை கூறமுடிவில்லை. அதாவது, மோடி தலைமையிலான பாசிசக் கும்பலுக்கு ஒரு ‘ஜனநாயக’ முகமூடி கூட தேவைப்படவில்லை. சர்வாதிகாரி குடிமக்களுக்கு ஏன்? எதற்கு? என காராணமெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டுமா என்ன?

BEML கடந்த ஆண்டு மெட்ரோ ரயில் பெட்டிகள் உற்பத்தியில் மட்டும் வரி கட்டியது போக நிகர லாபமாக ரூ. 53 கோடி ஈட்டியுள்ளது. மெட்ரோ ரயில் கோச்சுகள் உற்பத்தியில் அதன் முன்னேறிய தொழில் நுட்பத்தால் ஏனைய போட்டி நிறுவனங்களைவிட குறைந்த விலையில் உற்பத்தியை செய்து தருவதால் டெல்லி மெட்ரோ , பெங்களூரு மெட்ரோ, ஜெய்ப்பூர் மெட்ரோ என அதிகமான ஆர்டர்களை பெறுகிறது.

மோடி அரசு கொண்டுள்ள திட்டத்தின்படியே ஸ்மார்ட் நகரங்களை கொண்ட உள்கட்டமைப்புகள் பெருக்கப்பட்டு உருவாகப்போகும் “புதிய இந்தியாவில்” மெட்ரோ ரயில் உற்பத்திக்கு மிகச்சிறந்ததொரு எதிர்காலமும், வாய்ப்பும் இருக்கிறது. பிராசிஞ்சித் போஸ் என்கிற பொருளியலாளர், “ஒருமுறை வருகின்ற வருமானத்திற்காக எல்லா வகையிலும் லாபம் தரும் பிஇஎம்எல் பங்குகளை விற்பது பொருளாதார ரீதியில் அர்த்தமற்ற செயல்” என்கிறார்.

இந்த நிலையில்தான் இவையாவும் நன்றாக தெரிந்திருந்தும் தங்கமுட்டையிடும் வாத்தின் வயிற்றைக்கிழிக்கும்  அயோக்கியத்தனமான வேலையை செய்கிறது மோடி அரசு. மக்களின் வரிப்பணத்தில், தொழிலாளார்களின் உழைப்பில் உருவான இக்குழந்தையை கடத்திக்கொண்டு போய் விற்று, பன்னாட்டுக் கம்பெனிக்காக பிச்சையெடுக்க வைக்கப் பார்க்கிறார் மோடி.

BEML தொழிலாளர்கள் தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதன் தொழிற்சங்கத் தலைமையோ சீனிவாச ரெட்டி என்கிற பாஜக ஆதரவாளரிடமிருக்கிறது. பெயரளாவிளான அடையாளப் போராட்டத்தை அறிவிப்பது, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரை சந்தித்து கோரிக்கை வைப்பது என களவாணியிடமே தீர்ப்பு வேண்டி நிற்பது என்பதையெல்லாம் தான் செய்கின்ற “போராட்டமாக” தொழிலாளார்களை ஏய்க்கிறார்.

ஹெச்.ஏ.எல் (ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட்) தொழிற்சங்கமும், BEML தொழிற்சங்கமும் “BEML-ஐ காப்போம்; தேசத்தைக் காப்போம்” (Save BEML; Save Nation), “தேசத்தின் சொத்தை விற்காதே” என்கிற முழக்கங்களோடு ஒரு கூட்டு போரட்டக்குழுவை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

அரசு வெளியிட்டிருக்கும் செய்தியில் ஏதாவது வெளிப்படைத்தன்மை இருக்கிறதா? அரசு, நிறுவனத்தின் மதிப்பை எவ்வாறு கணக்கிடும் என்பதெல்லாம் புரியாத புதிரல்ல. “எங்கள் நிறுவனத்தின் போட்டி நிறுவனம் ஏதோ ஒன்றுக்கு அடிமாட்டு விலைக்கு தொழிற்சாலையும், நிறுவனத்தின் நிலம் உள்ளிட்ட சொத்துக்களும் விற்கப்பட இருப்பதை எங்களால்  புரிந்துகொள்ள முடிகிறது” என்று ஆதங்கப்படுகிறார்கள் தொழிலாளார்கள்.

ஆனால், இம்முறை தொழிலாளர்களின் கோரிக்கை வழக்கமான வேலை உத்திரவாதத்தை வழங்கு என்பது மட்டுமல்ல, “பொதுத்துறை நிறுவனத்தை காப்போம்; தேசத்தைக் காப்போம்” என்பதாக இருக்கிறது, மோடி கும்பல் தேசத்தை விற்பதை தொழிலாளார்கள் கண்டுணர்ந்து அதை இன்று பிரச்சாரமும் செயயத்தொடங்கி இருக்கிறார்கள், நாடு முழுதும் கார்ப்பரேட் காலை நக்கும் மோடி தலைமையிலான தேசதுரோக கும்பலின் தொடர் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துவது என்ன?

அன்று பாளையங்களையும், நகரங்களையும், துறைமுகங்களையும் கிழக்கிந்தியக் கம்பெனி கைப்பற்றியதைப்போல இன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெருமளவு நிலங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன; மாருதி தொழிற்சாலையைப் போல் “சட்டத்தின் ஆட்சியே” நிலவாத தொழிற்சாலைகள் நிறுவப்படுகின்றன; நாட்டுக்குள்ளேயே நிலவும் அந்நிய நிலப்பரப்பு, தாதுக்களுக்காக தண்டகாரண்யக் காடு, நியாம்கிரி-கஞ்சமலையும், மீத்தேனுக்காக காவிரி டெல்டாவையும் பெட்ரோலியத்துக்கு கோதாவரிப் படுகையையும் கைப்பற்றி இயற்கையும் மனித வாழ்வையும் அழிக்கின்றன; இவை தவிர, சாலைகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் மற்ற எல்லா வகையான உற்பத்திக்கேந்திரங்கள் கல்வி, மருத்துவம் என இன்றியமையாத எல்லாத் துறைகளும் பன்னாட்டுக் கபெனிகளின் ஆக்டோபஸ் கரங்களால் சுற்றி வளைக்கப்படும் போது, இவையாவும் தனித்தனி பிரச்சனைகளாக இனியும் இல்லை என்பதை உணர வேண்டும்.

அனைத்து தரப்பும் ஒருங்கிணைந்து போராடுவதால் மட்டுமே இந்த தேசவிரோத கும்பலை வீழ்த்த முடியும்!

தொகுப்பு:
பு.ஜ. செய்தியாளர், KGF.

  1. தேசத்தின் சொத்தை விற்று இசுறேலிடம் பில்லியன் டாலரில் ஏவுகணைகள் வாங்குகிறார் மோடி.யாரைக் காப்பாற்ற இந்த கண்கட்டி வித்தை. இப்படி மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் ஒவ்வொரு பொதுத்துறை நிருவனங்களையும் தனியாரிடம் தாரை வார்த்து விட்டு மக்கள் சரியில்லை அரசு பணியாளர்கள் சரியில்லை இலாபமில்லை என்று நம்மை பார்த்து தான் கைநீட்டுவார்கள் இந்த கயவர்கள்.

    2015 க்குள் இந்திய இராணுவத்தை அதிநவீனமாக்க 250 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்திருக்கிறார்களாம் இந்த களவாணிப பயல்கள். பாகிஸ்தானும் சீனாவும் தான் இந்தியாவின் பெரும் எதிரிகள் என்பது போன்ற பார்வையை நடுத்தர வர்க்கத்தின் மூளைக்குள் சொருகி விட்டிருக்கிறது இந்திய அரசு. இதற்கு பல்வேறு வகைகளில் டைம்ஸ் நவ் போன்ற ஊடகங்கள் ஒத்து ஊதி வருகின்றன.

    பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள், உட்கட்டமைப்பு குறைபாடுகள், டாஸ்மாக், ஊட்டசத்து குறைபாடு, சுற்றுசூழல் சீர்கேடு, மலேரியா, காச நோய் போன்ற உயிர்கொல்லி நோய்கள் உள்ளிட்டவைகளால் ஏற்படும் உயிரிழப்புகளை ஒப்பிடுகையில் தீவிரவததால் ஏற்படும் இழப்புகள் மிகவும் சொற்பமானவை. ஆனால் மேற்சொன்ன எந்த பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்னிறுத்தாமல் மேம்போக்காக தீவிரவாதத்தின் காரணமாக வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்வதில்லை என்று கூறி காசை கரியாக்கிறது இந்திய அரசு. ஆனால் அதே நேரத்தில் இந்திய அரசு அப்படியொன்றும் இராணுவம் வீரர்களை மரியாதையாக நடத்துவது போல தெரியவில்லை என்பதை இராணுவ வீரர்களின் வாட்ஸ் அப் வீடியோக்கள் கூறுகின்றன.

    தண்ணீர் தனியார்மயம், கல்வி தனியார்மயம், இயற்க்கை வளங்களை சூறையாடுதல், ஏழை மக்களை சோதனை சாலை எலிகலாக்குவது, இந்திய மக்களின் வரிபணத்தை தீவிரவாதம் என்று பயமூட்டி பாதுகாப்புக்கு என்று திருப்பி விட்டு கார்பொரெட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க வலி செய்வது என்பதில் இருந்து பசுவின் பெயரால் இந்து இசுலாம் கிருத்துவ உள்ளிட்ட அனைத்து மக்களையும் தாக்குவது கொல்லுவது சிறையில் அடைப்பது, கல்வியில் இந்துத்வாவை புகுத்துவது, பார்பனியத்தின் ஒற்றை கலாச்சாரமாக இந்தியாவை மாறுவது என பார்பனியமும் முதலாளித்துவமும் ஈறும் பேனுமாக பின்னி பிணைந்து நாட்டை சுடுகாடாக்கி வருகின்றன.

    ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட மக்கள் விரோத பயங்கரவாத அமைப்புகளை தனிமைபடுத்தி அழிப்பதன் வாயிலாக தான் இந்தியாவின் உண்மையான விடுதலை சாத்தியமாகும்.

  2. I am not casting my vote to BJP ***. Why the families of PSU, railways, LIC, banks voting to the ******. After the evils of demonetization, why the UP people doing blow job to bjp.

  3. திரு செல்வம். நீங்கள் தயக்கத்தோடு “இந்திய அரசு அப்படியொன்றும் இராணுவம் வீரர்களை மரியாதையாக நடத்துவது போல தெரியவில்லை” என்று எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. இதைச் சொல்வதற்கு யோசிக்கவே வேண்டாம். இராணுவமும் போலிசும் மேல் வர்க்கத்தின் குண்டர் படை மட்டுமேதான். வேறொன்றும் இல்லை, மக்கள் நலனுக்காக என்று இருக்கவும் முடியாது.

    வெள்ளைக்காரனுக்கு மாமா வேலை பார்த்து, அவனிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய பார்ப்பன அயோக்கியர்கள் தங்களது மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள ராணுவத்தைப் பயன்படுத்தி மிரட்டி இந்த நாட்டை இன்னும் இந்தியாவாகவே வைத்திருக்கின்றார்கள். அப்படி வைத்திருப்பதால் யாருக்குப் பயன் என்றால், இன்று இந்தியா முழுவதும் அதன் வளங்களைப் பெருமளவு கட்டுப்படுத்தும் பார்ப்பன- பனியா கும்பலுக்குத்தான்.

  4. வினவு வெளியிட்ட இன்னொரு article இல் இருந்து மேற்கண்ட (வெள்ளைக்காரன்…) வாசகத்தை எடுத்திருக்கிறேன்.

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க