Wednesday, May 7, 2025
முகப்புபோலி ஜனநாயகம்போலீசுகோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !

கோவையில் தடையை மீறி மாட்டுக்கறி திருவிழா !

-

சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக கோவையில் 31.05.2017ல் “மாட்டுக்கறித் திருவிழா” நடத்த முடிவெடுத்து கோவை மக்கள் அதிகாரம் சார்பாக நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. மாலை 5 மணிக்கு காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக கோவை பகுதி ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி தலைமையில், ப்ளெக்ஸ், கொடி, முழக்க அட்டை, சீருடை அணிந்த தோழர்கள் தடையை மீறி அதிரும் முழக்கங்களுடன் குவிந்திருந்த போலீசை நோக்கி பேருந்துகள் மற்றும் மக்கள் நெருக்கம் கொண்ட நுழைவாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அத்தனை பேரிலும் எப்படியோ மோப்பம் பிடித்த போலீசு அதிகாரி ஓடிவந்து தோழர் கையில் வைத்திருந்த மாட்டுக்கறியை பறித்து பிடுங்கியது. “உனக்கு வேணும்னா கேட்க வேண்டியதுதானே” என்பது போன்ற நடவடிக்கையாக தோழர்களும் இழுத்து பிடித்தும் ஆர்வவெறியால் போலீசே வென்றது. இதை ஊடகங்களும் படம்பிடித்தன. தினமும் போலீசிடம் மாமுலாக, தான் விற்கும் பொருளை (பரோட்டா முதல் புண்ணாக்கு வரை) இழக்கும் வியாபாரிகளும், சாமர்த்தியமாக மாட்டுக்கறியை தட்டிபறிக்கும் போலீசை பார்த்து வியந்தனர். போராட்டத்தை காட்சிகளை மறைக்கும் விதமாக போலீசு வாகனத்தை குறுக்கே நிறுத்தி ஊடகத்தையும் தடுக்கமுயன்றது.

மோடியின் மதவெறியை அம்பலப்படுத்தும் முழக்கங்களை பொறுக்க முடியாத போலீசு அவசர அவசரமாக கைது செய்ய முயற்சித்தது, ஆனால் தோழர்கள் கட்டுக்கு அடங்காமல் தொடர்ந்து கைதாக மறுத்து முழக்கமிட்டனர். ஊடகத்திற்கும்பேட்டி கொடுக்கபட்டது. இறுதியில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்திற்கு கொண்டு சென்றது போலீசு. வேனில் செல்லும் பொழுது வழியெங்கும் தொடர்ந்து தோழர்கள் முழங்கிய முழக்கங்களால் எரிச்சலடைந்த போலீசு மண்டபத்திற்கு வேனிலிருந்து இறங்கும் பொழுது முழக்கம் கூடாதென மிரட்டியது. தோழர்கள் அதையும் மீறி முழக்கமிட மீண்டும் தள்ளுமுள்ளு ஆனது. மண்டபதிற்கு முன்பாகவும் SP அலுவலகத்திற்கு முன்பாகவும் மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம் போல் நடந்தேறியது. பெண் உதவி ஆய்வாளர் உட்பட போலீசு யாவும் ரௌடிக் கூட்டம் போல் செயல்பட்டது. “ரிமான்ட் பண்ற பாரு” என பெண் ரௌடி SI யும் உ(எ)ளவு துறை போலீசு ஒருவரும் மிரட்டினர்.

பதிலுக்கு பதில் தோழர்கள் போராட்ட குணத்துடன் பேசியதை பார்த்து அப்பகுதயில் திரண்டிருந்த மக்கள் கவனம் நம் பக்கம் திரும்பியது, மிரட்டிப் பார்த்த போலீசு தகவல்களை மட்டும் எழுதிக்கொண்டு அடுத்த ஒரு மணிநேரத்தில் ஆர்பாட்டத்தில் பிடுங்கி ஓரமாக பதுக்கிய மாட்டுக்கறிப் பையை திரும்பக் கொடுக்க முற்பட்டனர். அது (மாட்டுக்கறி) அங்கிருந்து தாமதமாக எடுத்து  வரப்பட்டதால்  அதனை வாங்க தோழர்கள் மறுத்து விட்டனர். கைது செய்து சிறையில் அடைப்பேன் என்ற போலீசு, நாம் கலந்துரையாடலை தொடங்கிய உடனே நீங்கள் விடுதலை என அழுத்தமாக சொல்லி நாம் தயாராவதற்கு முன்பே மண்டப விளக்குகளை அனைத்தது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க