Saturday, July 4, 2020
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா ?

மோடி டீக்கடை வரலாறு என்றால் கீழடி ஆய்வு என்ன குப்பையா ?

-

வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப் புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம்

த்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையைச் (Archaeological Survey of India) சேர்ந்த அதிகாரிகளும் குஜராத் மாநிலம் வாத்நகருக்கு கடந்த ஞாயிறன்று விஜயம் செய்துள்ளனர். வாத்நகரின் இரயில்வே நிலையத்தைப் புனரமைத்து சுற்றுலாத் தலமாக்குவது திட்டம். மேலும் வாத்நகரை சுற்றுலாத் தளமாக்குவதற்கு சுமார் 100 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்று தயாராக உள்ளதாகவும், முதற்கட்டமாக 8 கோடி ரூபாயை மாநில சுற்றுலாத்துறை ஒதுக்கியிருப்பதாகவும் அகமதாபாத் மண்டல ரயில்வே மேலாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

வாத்நகருக்கும், அந்நகரத்தின் இரயில்வே நிலையத்திற்கும் அப்படி என்ன சிறப்பு? வேறொன்றுமில்லை, மோடியின் அவதாரம் நிகழ்ந்த வரலாற்றுச் சிறப்பை வாத்நகரும் அவர் தேனீர் விற்ற கடையை அந்நகரின் இரயில்வே நிலையமும் கொண்டிருக்கின்றன. மேற்படி தேனீர் கடையை அதன் பழமை மாறாமல் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு புனரமைக்கப் போவதாக அதிகாரிகள் நெக்குருகுகின்றனர்.

இதில் சுவாரசியம் என்னவென்றால், மோடி தேனீர் விற்ற கதையே பல்வேறு திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த கற்பனைக் கதை என்பது தான். 2014 தேர்தலுக்கு முன் மோடி தன்னைப் பற்றி எழுதியதிலோ பேசியதிலோ தேனீர் விற்ற ‘வரலாறு’ எங்குமே பதிவாகவில்லை. தேர்தல் பிரச்சாரங்களின் போது காங்கிரசின் மணிசங்கர் ஐயர், “மோடியால் பிரதமராகவெல்லாம் முடியாது.. வேண்டுமானால் பாராளுமன்ற வளாகத்தில் தேனீர் விற்க ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்” என்று கிண்டலாக குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து ”டீக்கடைப் பையன் மோடி” என்கிற வருணனையை பாரதிய ஜனதாவின் தேர்தல் பிரச்சாரக் குழு இறுகப் பற்றிக் கொண்டது.

”உத்தராகண்ட் நிலச்சரிவில் சிக்கிக் கொண்ட 17,000 குஜராத்திகளை 20 இன்னோவா கார்களில் சென்று காப்பாற்றிய சோட்டா பீம் மோடி” என்பது போன்ற காமிக்ஸ் கதைகளின் வரிசையில் “சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒருவர், தில்லி காங்கிரசு சுல்தானை எதிர்க்கிறார்” போன்ற ’டேவிட் – கோலியாத்’ கதைகளையும் பாரதிய ஜனதாவின் பிரச்சாரக் குழு உற்பத்தி செய்தது. உண்மையில் கான்ச்சி என்கிற வணிக சாதியில் பிறந்த மோடியின் தந்தை இரயில்வே துறையின் காண்டிராக்டுகளை எடுத்து செய்வதவர் என்று ஆக்கார் பட்டே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் காங்கிரசு ஆதரவாளர் தெஷீன் பூனாவாலா என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரயில்வே துறையிடம் “மோடி தேனீர் விற்ற” (கட்டுக்)கதையை உறுதிப்படுத்துமாறு கோரியிருந்தார். அதற்கு பதிலளித்த இரயில்வே துறை, நரேந்திர மோடி தேனீர் இரயில்வே நிலையத்தில் விற்றதற்கு தன்னிடம் ஆதாரம் ஏதும் இல்லை என பதிலளித்திருந்தது.

எனினும், மோடி தேனீர் விற்றது உண்மையா இல்லையா என்பதல்ல இப்போதைய பிரச்சினை.

விவசாயிகள் தற்கொலை, வேலையின்மை, பொருளாதார நெருக்கடி என சுற்றிச் சுற்றி ஏராளமான பிரச்சினைகளில் நாடே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, தன்னைப் பற்றிய கட்டுக்கதையில் இடம் பெற்ற பாத்திரம் ஒன்றை சுற்றுலாத்தலமாக்க கோடிக்கணக்கான ரூபாயை ஒருவர் ஒதுக்குகிறார் என்றால், அவர் எந்தளவுக்கு வக்கிரம் பிடித்தவராகவும் நார்ஸிஸ்ட்டாகவும் (சுயமோகப்பித்து பிடித்தவர்) இருக்க வேண்டும்?

இதே தமிழர்களின் பழம்பெரும் நாகரீகத்திற்கு சான்றாக உள்ள கீழடியில் மூன்றாக் கட்ட தொல்லியல் ஆய்வுக்கு வெறும் 40 லட்சம் ஒதுக்கியுள்ளது மோடி அரசு. கீழடியில் கிடைத்த 5,300 பழம் பொருட்களில் வெறும் இரண்டை மட்டுமே காலக்கணிப்பு ஆய்வுக்கு அனுப்பியுள்ள அரசு அதற்கு வெறும் 2 லட்சம் மட்டுமே ஒதுக்கியுள்ளது.

கொடூரமான பாசிஸ்டு கோமாளியின் ஆட்சியின் கீழ் நாமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பதற்கு இந்தச் செய்திகளை விட வேறு உதாரணங்கள் தேவையா என்ன?

செய்தி ஆதாரம்:

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. மோடியின் அடிமைகள் ஜெயாவின் அடிமைகளை விட திறமைசாலிகள்.. செத்த பிறகு கூட இன்னும் ஒரு மணி மண்டபம் கட்ட திராணி இல்லாமல் இருக்கிறார்கள் ஜெயாவின் அடிமைகள். அனால் கேடிக்கு உயிரோடு இருக்கும் போதே …..கலிகாலம் முத்திருச்சி……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க