Friday, May 2, 2025
முகப்புமறுகாலனியாக்கம்சிறு தொழில்கள்ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் - வீடியோ

ஜி.எஸ்.டி -யால் திண்டாடும் சிறுவணிகர்கள் – வீடியோ

-

டந்த ஜுலை 1, 2017 முதல் நாடெங்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அமல்படுத்தியதால் பல்வேறு சிறு தொழில்கள் முடங்கி உள்ளன. பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி.எஸ்.டி-யை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  சிறுவணிகர்கள் GST எண் வாங்க முடியாமலும், எப்படி வாங்குவது  என்று தெரியாமலும் பழைய பொருட்களையே விற்பனை செய்து வருகின்றனர். GST விலை குறித்த தெளிவான வறையரை இல்லை என்பதால் பலரும் பழைய விலையிலேயே விற்பனை செய்து வருகின்றார்கள். ஏற்கனவே பண மதிப்பு நீக்கத்தின் விளைவால் சரிந்த வணிகர்கள் இன்று வரை எழுந்திருக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். தற்பொழுது கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி வரி சிறுவியாபாரிகளை அதளபாதாளத்திற்கு நெட்டி தள்ளியுள்ளது. இது குறித்து  சென்னை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் வணிகர்கள் கூறியதை பாருங்கள் – பகிருங்கள்!

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க