Sunday, April 2, 2023
முகப்புஉலகம்அமெரிக்காகத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி !

கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி !

-

த்தோலிக்க திருச்சபை விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது.

60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம்.

குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை.

ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது.

கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை.” என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். “Verhandelingen” என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? “திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்.” என்று நியாயம் கற்பித்தனர்.

Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது.இது குறித்து நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.

(குறிப்பு: Trouw என்ற அந்த நாளேடு நெதர்லாந்தில் கிறிஸ்தவ மத நிறுவனங்களின் ஊடகமாக ஆரம்பிக்கப்பட்டது.)

பிற்குறிப்பு: வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியளிக்கும் செய்தியல்ல. இந்தியாவில் இந்து மதம் “தேவதாசி” என்ற பெயரில் கோயில்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை நடத்தியது. அதே போல ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் தேவாலயங்களுக்கு அருகில் விபச்சார விடுதிகளை வைத்திருந்தது. புரட்டஸ்தாந்து கிளர்ச்சியாளர்கள் அதையும் ஒரு காரணமாக காட்டித் தான் பிரிந்து சென்றார்கள். மேலதிக தகவல்களையும் ஆதாரங்களையும் திரட்டிய பின்னர் அது பற்றி தனியான பதிவு இடுகிறேன்.

நன்றி: தோழர் கலையரசன் – கலையகம்
_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

 • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

 1. Some points to think…

  1. Curacao is a central American Island with Catholic population.
  2. It is under control of Kingdom of Netherlands, a Protestant nation
  3. Due to Army activities and foreign visits, there were frequent sexual assaults and rapes happening to the native women (who are, again, Catholics)
  4. So the Catholic Church asked for a solution for this problem. The negotiation between local police force, Catholic Church and Netherlands government resulted in opening of this brothel.
  5. The title given by you makes it look like Catholic Church is running the brothel, which is 100% incorrect.
  6. If you want to criticize Catholicism, there are hundreds of reasons to do that from child molestation to suppression of women. From clerical celibacy to laws against contraception and abortion. From homophobic rulings to spreading of superstition etc.
  7. Linking the Church to a brothel to which it is in no way connected is wrong.
  8. Comparing this with Devadasi system is again wrong. It is a false analogy. Devadasi system is religion sanctioned while Catholic religion (I am not talking about people who go against the religon) is against prostitution. Devadasi system is tied to rituals and caste system. This brothel is a private owned secular entity. There is nothing similar in these two.
  9. If you can produce any active or passive role of the Catholic Church in the running of the brothel, I am more than happy to accept. Else, do you have the intellectual honesty to change the title?

 2. The two links provided in the article are not having any valid citation. First link points to the author’s page in Dutch language (I used Google Translate and also did a word search for “katholiek” dutch word for Catholic) and has nothing to link with Catholic Church. I have also read the Dutch Wiki page on the Novel mentioned, Dubbelspel, which again have no reference to the Church. A google search for \\”dubbelspel” catholic church\\ didn’t produce any result either. I have also tried various searches like \\”Le Mirage” Catholic Curacao\\ (Le Mirage is the current name of brothel) and lot more. I couldn’t get any link on the connection between the two. If you can, please point me to the right link.

  The second link in your page is no longer valid. Give a valid link or at least any archived screenshot or saved html of the page.

 3. Finally found it for you… This is the correct link. https://www.trouw.nl/home/rk-kerk-stond-aan-wieg-bordeel~a364b89c/

  Do some research before you post. Don’t just copy paste from blogs. This is the section (poorly translated by Google). As you can see, Catholic Church had been pushed to accepted this brothel’s existence during World War. The people who brought out the human trafficking and rapes are also from a Catholic group. Local Catholic Church has condemned and organized protests against the brothel. Be intellectually honest and read the below passage and tell me if you still think Catholic Church is “running” the brothel.

  //The ‘whore camp already met quickly with objections, including from the Catholic side. Not only the local priest was strongly opposed whore visit – but what he said and threatened his male parishioners have visited no wanton less. Ministers pointed when all vain that Campo Alegre relaxed all the rules about women in his boot. And a petition of more than two thousand women Curaçao in 1951 to close the camp had the same effect as the complaints of the priest and ministers: no.
  Campo Alegre still exists – it has become the largest open-air brothel in the whole Caribbean. When the brothel a few years ago, wanted to hold a wide-announced open day, youth protested fiercely, Van Eysden – Catholic youths, who are not likely knew that they owed infamous brothel to include their own church.
  For decades Campo Alegre is an important conduit for Colombian and Dominican prostitutes sitting in the Netherlands in the windows and in clubs – until the nineties third of them according to researcher Marie-Louise Janssen came from Campo Alegre. Now this share is probably slightly lower, suspects Janssen, the stricter immigration rules.
  It is precisely these women where the nuns of the Foundation of Religious Against Trafficking in Women for emergence. “The project Campo Alegre really wrong unpacked. That should you call the irony of history, “said Ivonne van de Kar. “I can not imagine that the Roman Catholic Church now something like this up. Let’s call it new insights. ”
  Would it make sense to speak of the church led to the founding of Campo Alegre?
  Van de Kar does not look much. “It’s ever started with good intentions. Now I would say: let us not worry about the existence of brothels. Prostitution you really do not spell out. But let’s expose it to abuse, rape and trafficking in prostitution. ”
  That Coks of Eysden altogether Van de Kar once. “Before, I thought, man, if you want to whores, then you do only one knot. I am now so far behind that I accept that there are brothels. But I still get very angry when I hear about rape and trafficking in women. In my column I say then take the whore runner just off the affair. I hope that people, especially the customers, there about it to think. ”
  Historical context, best intentions, other times – but Van Eysden keeps gnawing. “I do wonder why they did not work Curacao girls in Campo Alegre. Beautiful protection for them, but why the prostitutes were from the Dominican Republic and Colombia then indeed be tainted? I would sometimes want to look into the minds of church planners. What views snaked there? ”
  The pragmatism of the vicar of Willemstad, once opened under whose responsibility Campo Alegre, somewhat similar to those of the Religious Against Trafficking in Women. Van de Kar: “Rome is very clear: no sex outside of marriage. But the reality is different, and there are religious who usually do not fall directly under papal authority, often to do with it. That will not categorically reject condom use – that people should know themselves. “//

  • நண்பரே, தோழர் கலையரசன் நெதர்லாந்தில் வாழ்ந்ததோடு டச்சு மொழியும் ஓரளவுக்கு அறிவார். நீங்கள் கூகிள் மொழிபெயர்ப்பில் போட்டிருக்கும் செய்தியை அவருக்கு தெரிவித்து பதிலை தருகிறோம். தோழர் கலையரசன் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வாழ்ந்ததோடு இன்னும் ஒரு தொழிலாளியாக அங்கு வாழ்கிறார். அங்குள்ள அரசியல் சூழல், பருண்மையான விவரங்கள் அவர் அறிந்தவையே. நன்றி!

 4. அனைவருக்கும் புரிய வேண்டும் என்பதற்காக தமிழில் பதிலளிக்கிறேன்:

  //Curacao is a central American Island with Catholic population.//
  சுருக்கமாக: குரசாவோ தற்போது நெதர்லாந்தின் கீழே உள்ள கடல் கடந்த பிரதேசம் (தன்னாட்சி அதிகாரம் பெற்ற காலனி) அது முன்பு ஸ்பானிஷ் காலனியாக இருந்தது. அங்கிருக்கும் கறுப்பின மக்களும், ஸ்பானிஷ் காரர்களால் அடிமைகளாக கொண்டு வரப்பட்ட ஆப்பிரிக்க வம்சாவளியினர் தான். ஆகவே, அவர்களில் பெரும்பான்மையானோர் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுவது புதினம் அல்ல. உள்ளூர் மொழியான பப்பியமேந்தோ ஒரு கலப்பு மொழி. அதில் நிறைய ஸ்பானிஷ் சொற்கள் உள்ளன.

  // It is under control of Kingdom of Netherlands, a Protestant nation//
  நெதர்லாந்தில் புரட்டஸ்தாந்து மதம் ஆதிக்கம் செலுத்துவதற்கும், புரட்டஸ்தாந்து நாடு என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. தென் நெதர்லாந்தில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். குறிப்பாக, லிம்பூர்க், பிரபான்ட் மாகாணங்கள். நாட்டின் பிற பாகங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். ஏற்கனவே ஸ்பானிஷ் காலனிய காலத்தில் கத்தோலிக்கர்களாக மாறியிருந்த குரசாவோ தீவு மக்கள் மத்தியில், டச்சு கத்தோலிக்க திருச்சபைகள் எளிதாக வேலை செய்ய முடிந்திருக்கும்.

  //Due to Army activities and foreign visits, there were frequent sexual assaults and rapes happening to the native women (who are, again, Catholics) So the Catholic Church asked for a solution for this problem. The negotiation between local police force, Catholic Church and Netherlands government resulted in opening of this brothel.//
  மேற்படி கூற்றில், தீவில் வாழும் உள்ளூர் “கத்தோலிக்கர்களை காப்பாற்றுவதற்காக” என்று திரிக்கப் படுகின்றது. இதற்குப் பதில் கட்டுரையில் உள்ளது. அந்த விபச்சார விடுதியில் பாலியல் தொழிலாளர்களாக வேலை செய்யும் பெண்கள் கொலம்பியா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள். அதாவது, கத்தோலிக்கர்கள்!(கட்டுரையில் வரும் இந்தப் பகுதியை பின்னர் மொழிபெயர்க்கிறேன்.) ஒரு கத்தோலிக்க திருச்சபை கத்தோலிக்க பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை ஆதரிக்கலாமா?

  //The title given by you makes it look like Catholic Church is running the brothel, which is 100% incorrect.//
  கத்தோலிக்க திருச்சபை, அரசுடன் இணைந்து விபச்சார விடுதி நடத்துவது பற்றி அந்தக் கட்டுரையில் ஆதாரத்துடன் உள்ளது. இவர் தனது கூகிள் மொழிபெயர்ப்பில் அந்தப் பகுதியை வேண்டுமென்றே மறைத்திருக்கிறார். (எனது மொழிபெயர்ப்பை பின்னர் தருகிறேன்.)

  //Comparing this with Devadasi system is again wrong. It is a false analogy. Devadasi system is religion sanctioned while Catholic religion//
  மத்திய கால ஐரோப்பாவில், ஒவ்வொரு ஊரிலும் உள்ள மதுக்கடைகள், விபச்சார விடுதிகள் கத்தோலிக்க தேவாலயத்தால் நடத்தப் பட்டன. இது ஐரோப்பிய நாடுகளின் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட உண்மை. இது சம்பந்தமான ஆதாரங்களை பின்னர் தருகிறேன்.

 5. மேற்கொண்டு வரிக்கு வரி பதில் சொல்வதை விட, Trouw பத்திரிகையில் வந்த கட்டுரையை மொழிபெயர்ப்பது நல்லது என நினைக்கிறேன். வாசிப்பவர்கள் தாமாகவே முடிவு செய்யட்டும். நான் முன்னர் கொடுத்த லிங்க் இடம் மாறி விட்டது. ஆகவே, அதை மீண்டும் இணையத்தில் தேடிக் கண்டுபிடித்து தந்த நண்பருக்கு நன்றிகள்.

  • I have not intentionally hidden any part. I might have missed it. I am not a Catholic. So I have nothing against this article as far as the truth is coming out. Thanks for your reply. Post your translation and citations reinforcing the same. I will just accept it on the face of evidence.

 6. //De rooms-katholieke kerk heeft rond de Tweede Wereldoorlog een staatsbordeel helpen opzetten. Campo Alegre op Curaçao is nog altijd een belangrijke doorvoerhaven voor vrouwenhandelaars richting Nederland. „Zoiets zou de rk kerk nooit meer doen”, denken nonnen die zich tegen gedwongen prostitutie verzetten.//
  இரண்டாம் உலகப் போர் அளவில், ரோம கத்தோலிக்க தேவாலயம் ஒரு அரச விபச்சார விடுதி அமைப்பதற்கு உதவியுள்ளது. குரசாவோ தீவில் உள்ள Campo Alegre இன்றைக்கும் நெதர்லாந்து நோக்கி பெண்களை கடத்துவோர் தங்கிச் செல்வதற்கான துறைமுகமாக உள்ளது. பலவந்தப் படுத்தப் பட்ட பாலியல் தொழிலுக்கு எதிரான கன்னியாஸ்திரிகள், “ஒரு கத்தோலிக்க தேவாலயம் இப்படியான வேலைகளை செய்யாது” என்று நினைக்கிறார்கள்.

  //Ze had ’Dubbelspel’ van Arion gelezen – zie hieronder – dus ze wist van het bestaan van Campo Alegre. Maar Ivonne van de Kar, coördinator van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel wist niet dat de rooms-katholieke kerk zelf aan de wieg heeft gestaan van dit megabordeel op Curaçao.//
  அவர் Arion எழுதிய Dubbelspel வாசித்திருக்கிறார். அதனால் Campo Alegre பற்றி தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால், பெண்களை விற்பதற்கு எதிரான அமைப்பின் இணைப்பாளரான Ivonne van de Kar, குரசாவோவின் மிகப் பெரிய விபச்சார விடுதிக்கு கத்தோலிக்க தேவாலயம் அடிக்கல் நாட்டியது என்பது குறித்து அறியாமல் இருந்தார்.

  //Sinds kort weet ze het wel, dankzij een column in het kwartaalblad van de nonnen, Verhandelingen. Daarin memoreert publiciste Coks van Eysden de opzienbarende geschiedenis van Campo Alegre. Zij gaat in haar stuk ’vijgenblad-toerisme’ in op de opmerkelijke ontstaansgeschiedenis van Campo Alegre (’vrolijk kamp’), een bordeel dichtbij het vliegveld van Curaçao.//
  அண்மையில் தான், Verhandelingen என்ற கன்னியாஸ்திரிகளின் காலாண்டு சஞ்சிகையை வாசித்ததன் மூலம் தெரிந்து கொண்டார். Coks van Eysden என்ற ஊடகவியலாளர், குரசாவோ விமான நிலையத்திற்கு அருகில் உள்ள Campo Alegre யின் வரலாறு குறித்து எழுதி இருந்தார்.

  //Op borden langs de weg wordt het aangewezen door een mooi logo, schrijft Van Eysden: een vijgenblaadje. Het is zo’n zestig jaar geleden opgezet „door de Nederlandse overheid in samenwerking met de katholieke kerk als staatsbordeel ten behoeve van immigranten voor de olieraffinaderij, zeelieden en militairen”.//
  பாதையின் அருகில் உள்ள விளம்பர தட்டியில் அழகான இலையின் (fig leaf) படம் உள்ளது. அந்த விபச்சார விடுதி, அறுபது வருடங்களுக்கு முன்னர், எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் வேலை செய்த குடியேறிகள், கப்பல் பணியாளர்கள், இராணுவ வீரர்களுக்காக அமைக்கப் பட்டது. அதனை கத்தோலிக்க தேவாலாயத்துடன் சேர்ந்து நெதர்லாந்து அரசு உருவாக்கி இருந்தது.

  //Daar mochten de plaatselijke schonen niet werken – die zouden maar rondvertellen welke eilandgenoten er tot de klandizie behoorden. Voor de arbeid werden prostituees uit de Dominicaanse Republiek en Colombia geronseld, voor maximaal drie maanden, zodat ze geen relaties konden aanknopen met hoerenlopers.//
  அங்கே உள்ளூர் அழகான நங்கைகள் வேலை செய்ய முடியாது. அங்கு வேலை செய்வதற்காக டொமினிக்கன் குடியரசு, கொலம்பியாவில் இருந்து பாலியல் தொழிலாளிகள் தருவிக்கப் பட்டனர். அதுவும் மூன்று மாதங்கள் மாத்திரம் வேலை செய்ய முடியும். ஆகவே, வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாது.

  //Helemaal onbekend was de betrokkenheid van de rk kerk niet, maar in het Nederlands taalgebeid is er nauwelijks iets over te vinden. De verantwoordelijke rk geestelijke, apostolisch vicaris van Willemstad, een dominicaan, figureert wel in een recent overzichtswerk over dominicanen, maar zijn betrokkenheid bij Campo Alegre memoreert historica Marit Monteiro niet (zie ’Dubbele moraal’).//
  கத்தோலிக்க தேவாலயத்தின் பங்களிப்பு பற்றி யாருக்கும் தெரியாது என்று சொல்ல முடியாது. ஆனால், டச்சு மொழி பேசுவோர் மத்தியில் (குரசாவோ மக்களையும் சேர்த்து) அதைப் பற்றி அரிதாகவே அறிய முடிகின்றது. அந்தப் பிரதேச கத்தோலிக்க பிஷப் டொமினிக்கன் பிரஜைகளுடன் தொடர்பில் இருக்கிறார். ஆனால், அவர் இதைப் பற்றி எதுவும் பேசுவதில்லை.

  //In haar dissertatie ’Reizende sekswerkers’ wijdde de antropologe Marie-Louise Janssen er vorig jaar welgeteld één regel aan. Ze schrijft dat Nederland sinds 1911 een bordeelverbod kende, maar feitelijk koos voor gedogen van prostitutie. Deze pragmatische houding leidde op Curaçao „tot de oprichting van Campo Alegre, een gezamenlijk initiatief van de Nederlandse regering, de katholieke kerk, het Amerikaanse leger en Amerikaanse zakenmensen”. Doel was het beschermen van lokale vrouwen tegen de buitenlandse mannen die het eiland aandeden en hun seksuele behoeften wilden bevredigen, aldus Janssen.//
  “1911 ம் ஆண்டு முதல் நெதர்லாந்தில் விபச்சார விடுதி தடையுத்தரவு இருந்து வருகின்றது. இருப்பினும் அது கண்டுகொள்ளாத கொள்கையை பின்பற்றியது” என்று மானிடவியல் நிபுணர் Marie-Louise Janssen, “பயணம் செய்யும் பாலியல் தொழிலாளர்கள்” என்ற பெயரில் என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ளார். இந்த விட்டுக்கொடா தன்மை, குரசாவோ தீவில் Campo Alegre உருவாக்கும் நடவடிக்கை வரை சென்றுள்ளது. நெதர்லாந்து அரசு, கத்தோலிக்க தேவாலயம், அமெரிக்க இராணுவம், அமெரிக்க வணிகர்கள் ஒன்று சேர்ந்து அதை அமைத்தனர். வெளிநாட்டு ஆண்கள் தமது பாலியல் தேவைகளுக்காக, உள்நாட்டு பெண்களை தொந்தரவு செய்வதை தடுக்கும் நோக்கமும் அதில் அடங்கி இருந்தது.

  (தொடரும்)

 7. //Waarom nam de rk kerk dit initiatief?
  Niet alleen in ’ons Oost-Indië’ greep de besmetting met geslachtsziekten om zich heen (en hielp de roep om kuisheid van de regering niets), ook in ’De West’ vormden soa’s een groot gevaar. De olie-industrie van Shell had reden tot vrees voor haar productiviteit en het Amerikaanse leger wist dat mannen niet harder gingen vechten met een doorwoekerende geslachtsziekte.//

  எதற்காக கத்தோலிக்க தேவாலயம் இந்த நடவடிக்கையை எடுத்தது?
  கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: இந்தோனேசியா) பாலியல் தொற்று நோய்கள் பரவி இருந்தன. (ஒழுக்கம் பேணுமாறு அரசு விடுத்த எச்சரிக்கை பயன்தரவில்லை.) அதே மாதிரி கிழக்கு இந்திய நாடுகளில் (அதாவது: கரீபியன் தீவுகள்) கூட பாலியல் நோய்த் தொற்று அபாயம் இருந்தது. அதனால், (எண்ணை சுத்திகரிப்பு ஆளை நடத்திய) ஷெல் நிறுவனம் (நோய் தோற்றிய ஊழியர்களால்) தனது உற்பத்தி பாதிக்கப் படும் என்று அஞ்சியது. அதே மாதிரி, தனது வீரர்கள் ஆக்ரோஷமாக சண்டையிட மாட்டார்கள் என்று அமெரிக்க இராணுவமும் அஞ்சியது.

  //Coks van Eysden, schrijfster van de column, deed onlangs op Curaçao archiefonderzoek naar de sporen die religieuzen op het eiland hebben nagelaten. „Wat je daarin tegenkomt is dat men in de jaren twintig al nauwelijks greep kreeg op de om zich heen grijpende geslachtsziekten. En tijdens de Tweede Wereldoorlog werd dat probleem nog veel groter.”
  De komst van Campo Alegre was daar het antwoord op, stelt Van Eysden. Op het overwegend katholieke Curaçao koos de kerk voor het minste van de kwaden: een bordeel met toezicht en medische begeleiding.//
  இந்தப் பத்தியை எழுதிய Coks van Eysden, குரசாவோ ஆவணங்களில் மறைக்கப் பட்ட மதகுருக்களின் பங்களிப்பு பற்றி தேடியுள்ளார். அவற்றில் அவர் கண்டறிந்த விடயங்கள் இவை. அந்தக் காலத்தில் பால்வினை நோய்கள் விடயத்தில் யாராலும் கட்டுபபடுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போர் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. Campo Alegre இன் வருகை அதற்கான தீர்வாக இருந்தது. “மருத்துவ வசதிகள் கொண்ட விபச்சார விடுதி”: குரசாவோ கத்தோலிக்க தேவாலயம் மிகக் குறைந்த தீமையை தெரிவு செய்தது.

  //Iets omfloerster omschrijft Kamala Kempadoo dat in haar studie ’Sexing the Carribean’ (2004). Prostitutie gold als een kwaad, maar de kerk koos voor het kanaliseren van de ’perversie’, liever dan het eiland erdoor te laten overspoelen. De apostolisch vicaris, mgr. Van der Veen Zeppeveldt, sprak zich uit voor het ’treffen van maatregelen’ door de Nederlandse regering, om ’het kwaad dat de regering toch niet kan uitroeien, in banen te leiden’. Zo werd, schrijft Kempadoo, de rk kerk ’volledig medeplichtig’ aan het Nederlandse koloniale beleid dat prostitutie reguleerde. Lees: een staatsbordeel verordonneerde.//
  ’Sexing the Carribean’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு செய்த Kamala Kempadoo எழுதியதாவது. விபச்சாரம் ஒரு தீமையாக இருந்தாலும், தீவு முழுக்க அதை பரவ விடுவதை விட ஒழுங்கு படுத்துவது சிறந்தது என்பதே கத்தோலிக்க தேவாலயத்தின் தெரிவாக இருந்துள்ளது. “அந்த தீமையை ஒழிக்க முடியாது. ஆனால், ஒழுங்கு படுத்தலாம்” என்பது பிஷப் Van der Veen Zeppeveldt நெதர்லாந்து அரசுக்கு கூறிய அறிவுரையாக இருந்தது. இதன் மூலம், விபச்சாரத்தை ஒழுங்கு படுத்திய நெதர்லாந்து காலனிய கொள்கையில் கத்தோலிக்க தேவாலயம் சம்பந்தப் பட்டுள்ளமை தெளிவாகும். (volledig medeplichtig: இதன் அர்த்தம் ஒரு குற்றத்தில் முழுப் பங்களிப்பு செய்வது. அதாவது, கத்தோலிக்க தேவாலயத்திற்கு நூறு வீதப் பங்கு இருக்கிறது.)

  //Het ’hoerenkamp’ stuitte al snel op bezwaren, ook van katholieke zijde. Niet alleen was de lokale pastoor fel tegen hoerenbezoek – maar wat hij ook sprak en dreigde, zijn mannelijke parochianen bezochten er geen lichtekooi minder om. Ministers wezen er toen al vergeefs op dat Campo Alegre alle regels over vrouwenhandel aan zijn laars lapte. En een petitie van meer dan tweeduizend Curaçaose vrouwen in 1951 voor het sluiten van het kamp had hetzelfde effect als de klachten van de pastoor en de ministers: geen enkel.//
  “விபச்சாரிகளின் முகாம்” வெகு விரைவில் எதிர்ப்பை சம்பாதித்திருந்தது. கத்தோலிக்க பக்கத்தில் இருந்தும் கூட. உள்ளூர் பாதிரியார் பாலியல் தொழிலாளிகளிடம் செல்வதை கடுமையாக கண்டித்தார். Campo Alegre பெண்களை வியாபாரப் பொருளாக்குவது தொடர்பான சட்டங்களை காலில் போட்டு மிதிக்கிறது என்று அமைச்சர்கள் குற்றம் சாட்டினார்கள். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குரசாவோ பெண்கள், முகாமை மூடி விடுமாறு கோரி பெட்டிசன் எழுதிப் போட்டனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை.

  //Campo Alegre bestaat nog steeds – het is uitgegroeid tot het grootste openluchtbordeel van het hele Caribisch gebied. Toen het bordeel een paar jaar geleden een breed aangekondigde Open Dag wilde houden, protesteerden jongeren fel, vertelt Van Eysden – katholieke jongeren, die hoogstwaarschijnlijk niet wisten dat ze dat vermaledijde bordeel dankten aan onder meer hun eigen kerk.//
  Campo Alegre இப்போதும் அங்கு இருக்கிறது. அது இன்று கரீபியப் பிராந்தியத்தில் மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதியாக மாறிவிட்டது. ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அந்த விடுதி (விளம்பரத்திற்காக) திறப்புவிழா கொண்டாடியது. அப்போது கத்தோலிக்க இளைஞர்கள் கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால், அவர்களது தேவாலயம் தான் அந்த விபச்சார விடுதி அமைக்க உதவியது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை.

  //Al decennia is Campo Alegre een belangrijk doorvoerkanaal voor Colombiaanse en Dominicaanse prostituees die in Nederland achter de ramen en in clubs zitten – tot in de jaren negentig was eenderde van hen volgens onderzoekster Marie-Louise Janssen afkomstig uit Campo Alegre. Nu ligt dat aandeel wellicht iets lager, vermoedt Janssen, door de strengere immigratieregels.//
  கடந்த பல வருடங்களாக, நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வேலை செய்யும் கொலம்பிய, டொமினிக்கன் பாலியல் தொழிலாளிகள், Campo Alegre ஊடாகவே வந்துள்ளனர். தொண்ணூறுகள் வரையில், மூன்றில் ஒரு பங்கு பெண்கள் அவ்வாறு வந்துள்ளனர் என்று Marie-Louise Janssen செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது கடுமையான குடியேற்ற சட்ட விதிகள் காரணமாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

  //Het zijn uitgerekend deze vrouwen waar de nonnen van de Stichting Religieuzen Tegen Vrouwenhandel voor opkomen. „Het project-Campo Alegre heeft echt verkeerd uitgepakt. Dat mag je wel de ironie van de geschiedenis noemen”, zegt Ivonne van de Kar. „Ik kan me niet voorstellen dat de rk kerk nu zoiets zou opzetten. Laten we het voortschrijdend inzicht noemen.”//
  இந்தப் பெண்களின் உரிமைகளுக்காக தான், பெண் கடத்தலுக்கு எதிரான அமைப்பின் கன்னியாஸ்திரிகள் போராடுகின்றனர். இதை நீங்கள் வரலாற்று முரண்நகை என்று கூறலாம். இந்தக் காலத்தில் கத்தோலிக்க தேவாலயம் இது போன்ற ஒன்றை அமைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

  //Zou het zin hebben om de kerkleiding aan te spreken op het oprichten van Campo Alegre?
  Van de Kar ziet er niet veel in. „Het is ooit met goede intenties gestart. Nu zou ik zeggen: laten we ons niet druk maken over het bestaan van bordelen. Prostitutie ban je echt niet uit. Maar laten we het het misbruik, de verkrachting en de vrouwenhandel in de prostitutie aan de kaak stellen.”//
  Campo Alegre அமைத்த குற்றத்திற்கு கத்தோலிக்க திருச் சபை தலைமையை பொறுப்பேற்க வைப்பதில் அர்த்தம் உள்ளதா? அது அன்று ஒரு நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப் பட்டது என்று சொல்வார்கள். விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆகவே, விபச்சார விடுதி இருப்பது பற்றி அலட்டிக் கொள்ளாதீர்கள் என்பார்கள். அதற்குப் பதிலாக, பாலியல் தொழிலுக்காக பெண்களை கடத்துவது, வன்புணர்ச்சி செய்வது, துன்புறுத்துவது போன்றவற்றை ஒழிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க