Friday, May 2, 2025
முகப்புசெய்திநேரலைநேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு - Live Updates

நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates

-

ன்று ஆகஸ்டு 5, 2017 மற்றுமொரு நாள்தானா? காலையில் தினத்தந்தி சுவரொட்டியில் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? “பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியா?” இந்த தலைப்பில் அதிர்ச்சி இல்லை என்பதை இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள், அரசுகளின் நடவடிக்கையில் அறியலாம்.

இந்தியாவின் பிக்பாஸ் திருவாளர் மோடி அவர்கள் நொடிக்கொரு கோட்டும் நாளுக்கொரு நாடுமாக திருத்தல சுற்றுலா செல்கிறார். செல்லுமிடமெல்லாம் உலக முதலாளி வர்க்கத்தின் திருப்பாதங்களில் அடிபணிந்து பாரத தேசத்திற்கு தொழில் துவங்க வருமாறு பக்தியுடன் மன்றாடுகிறார். அவர்களும் பெரிய மனதுடன் வருகிறார்கள். ஆனானப்பட்ட “ஆப்பிள்” நிறுவனமே பெங்களூருவில் ஆலையை துவக்க இருக்கிறது.

இந்தியாவில் பன்னாட்டு முதலீடுகள் வந்ததன் விளைவு என்ன? நாட்டின் வளம் சூறையாடப்பட்டதும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் (நோக்கியா போல) இடத்தைக் காலி செய்வதும் தவிர வேறு என்ன? இதே காலத்தில்தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை காவிரியில் ஏமாற்றப்பட்டதோடு மத்திய மாநில அரசுகளும் அலட்சியப்படுத்தி வருகின்றன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்கொலை என்பது தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கே வந்து விட்டது.

எந்தப் போராட்டத்தையும் தமிழக, இந்திய அரசாங்கங்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விவசாயமும், விவசாயிகளும் அழிவதென்பது நாட்டின் பெரும்பான்மை மக்களை, கிராமங்களை அழிப்பதன் குறியீடு. என்ன செய்யப் போகிறோம்? பிரச்சினைகளை பேசுவது மட்டுமல்லாமல், தீர்வை நோக்கி விவசாயிகளையும், மக்களையும் அணிதிரட்டுகிறது மக்கள் அதிகாரம்.

இப்போது சொல்லுங்கள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நடிகை தற்கொலை முயற்சி செய்வதாக நாளிதழ்கள் பேசுவதும், தொலைக்காட்சிகள் – சமூகவலைத்தளங்கள் அதை மையப்படுத்தி அரட்டைக் கச்சேரி நடத்துவதும் எதைக் காட்டுகிறது?

தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம்.

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

  • வினவு