Thursday, May 13, 2021
முகப்பு செய்தி நேரலை நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு - Live Updates

நேரலை : தஞ்சை மக்கள் அதிகாரம் மாநாடு – Live Updates

-

ன்று ஆகஸ்டு 5, 2017 மற்றுமொரு நாள்தானா? காலையில் தினத்தந்தி சுவரொட்டியில் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? “பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலை முயற்சியா?” இந்த தலைப்பில் அதிர்ச்சி இல்லை என்பதை இந்தியாவின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஆட்சியாளர்கள், அரசுகளின் நடவடிக்கையில் அறியலாம்.

இந்தியாவின் பிக்பாஸ் திருவாளர் மோடி அவர்கள் நொடிக்கொரு கோட்டும் நாளுக்கொரு நாடுமாக திருத்தல சுற்றுலா செல்கிறார். செல்லுமிடமெல்லாம் உலக முதலாளி வர்க்கத்தின் திருப்பாதங்களில் அடிபணிந்து பாரத தேசத்திற்கு தொழில் துவங்க வருமாறு பக்தியுடன் மன்றாடுகிறார். அவர்களும் பெரிய மனதுடன் வருகிறார்கள். ஆனானப்பட்ட “ஆப்பிள்” நிறுவனமே பெங்களூருவில் ஆலையை துவக்க இருக்கிறது.

இந்தியாவில் பன்னாட்டு முதலீடுகள் வந்ததன் விளைவு என்ன? நாட்டின் வளம் சூறையாடப்பட்டதும், குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவர்கள் (நோக்கியா போல) இடத்தைக் காலி செய்வதும் தவிர வேறு என்ன? இதே காலத்தில்தான் இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்திருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்த வரை காவிரியில் ஏமாற்றப்பட்டதோடு மத்திய மாநில அரசுகளும் அலட்சியப்படுத்தி வருகின்றன. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தற்கொலை என்பது தமிழகத்தின் நெற்களஞ்சியத்திற்கே வந்து விட்டது.

எந்தப் போராட்டத்தையும் தமிழக, இந்திய அரசாங்கங்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. விவசாயமும், விவசாயிகளும் அழிவதென்பது நாட்டின் பெரும்பான்மை மக்களை, கிராமங்களை அழிப்பதன் குறியீடு. என்ன செய்யப் போகிறோம்? பிரச்சினைகளை பேசுவது மட்டுமல்லாமல், தீர்வை நோக்கி விவசாயிகளையும், மக்களையும் அணிதிரட்டுகிறது மக்கள் அதிகாரம்.

இப்போது சொல்லுங்கள், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நாட்டில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு நடிகை தற்கொலை முயற்சி செய்வதாக நாளிதழ்கள் பேசுவதும், தொலைக்காட்சிகள் – சமூகவலைத்தளங்கள் அதை மையப்படுத்தி அரட்டைக் கச்சேரி நடத்துவதும் எதைக் காட்டுகிறது?

தஞ்சை மாநாட்டின் நேரலையைத் துவக்குகிறோம். படங்கள், செய்திகள், உரைகளை முடிந்த மட்டும் உடனுக்குடன் தர முயல்கிறோம்.

இணைந்திருங்கள் ! (பதிவுகள் முடியும் இடத்தில் அடுத்தடுத்து வரும் load more entries…ஐ அழுத்தவும்.)

 • வினவு
 1. மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தோழன்மை அமைப்பான மக்கள் அதிகாரம் நடத்தும் “விவசாயிகளை வாழவிடு” மாநாட்டு கருத்தாக்கங்கள் பெருவாரியான மக்களை சென்று அடைய எமது வாழ்த்துக்கள். ஒருபக்கம் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலங்களை அமைத்து விவசாயிகளை சிறுக சிறுக கொன்று குவிக்கும் இந்த மத்திய அரசு மறுபக்கம் அதே மாவட்டங்களுக்கு காவேரி நீர் கிடைக்காமல் செய்வதற்கு என்றே காவேரி நீர் மேலாண்மை ஆணையத்தை அமைக்காமல் சதிவேலையில் இறங்கியுள்ளது. இந்த விடயத்தில் உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பியும் எருமை மாட்டின் மீது மழை பெய்வது போன்ற மன நிலையில் இருக்கும் இந்த மக்கள் விரோத மத்திய அரசை கடுமையாக கண்டிக்கின்றேன்.

 2. பொதுவுடமை சிந்தனை உள்ளவனை …ஏற்றுக் கொண்டவனை கொல்ல பிறந்து இருக்கலாம்…ஆனால் ….வெல்ல எவனும் பிறக்கவில்லை…இன்குலாப் ஜிந்தாபாத்…பகத்சிங் வழியில்…..பயணிப்போம் . . . . .குணா…

 3. வேசியரை(பிக்பாஸ்) தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் சமூகத்தில் தங்களை போன்று சமூக அவலங்களை சாமான்ய மக்களளுக்கு தெரியப்படுத்தும் வினவு போன்ற ஊடகங்கள் இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

 4. போலிஸ் கெடுபிடிகள், ஊடக மவுனம் போன்றவற்றைத் தாண்டி விவசாய பெருமக்கள்
  நம்முடைய மாநாட்டை வெற்றி பெற செய்து விட்டார்கள். இது உண்மையில் பிரமிக்கத்தக்கது.

  மாநாடு சிறப்பாக நடக்க ஓடியாடி வேலைகள் செய்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்புத் தோழர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

 5. விவாசியிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மக்கள் அதிகாரம் வழிகாட்டி விட்டது ….

  இனி மக்கள் தங்கள் கடமையை செய்வர்கள்

 6. உலகையே மாற்றும் தெளிவுமிக்க அமைப்போடு ஒன்றினைந்து போராடுவோம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க