privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

போர்னோகிராஃபி : ஆபாசப் படங்களின் இருண்ட பக்கம்

-

ஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நகரில் மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் ரான் காவ்ரியேலி. அவர் போர்னோகிராஃபி (pornography) எனப்படும் ஆபாசப் படங்களை பார்க்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளை அனுபவமாகக் கூறுகிறார்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பது எனக்கு இரண்டு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

  1. என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றுகிறது.
  2. நான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்துகிறது.

காதல், திருமணம், உடலுறவு குறித்த என் சொந்த உணர்ச்சியில் இது போன்ற எண்ணங்கள் வந்ததே இல்லை. ஆனால் “போர்னோ”-வைப் பார்த்த பிறகு என்னுடைய கண்ணோட்டத்தையே அது மாற்றிவிட்டது. விபச்சாரத்தைப் பொருத்தவரை அது யாருடைய கனவுலக வாழ்க்கையும் கிடையாது. துன்ப துயரங்களினாலோ அல்லது வறுமையினாலோ அல்லது பெற்றோரிடமிருந்து கடத்தப்படுவதாலோ விபச்சாரம் ஒரு பெண்ணின் மேல் திணிக்கப்படுகிறது.

வறுமையினாலோ அல்லது பெற்றோரிடமிருந்து கடத்தப்படுவதாலோ விபச்சாரம் ஒரு பெண்ணின் மேல் திணிக்கப்படுகிறது.

ஆபாசப்படத்தில் பெண்ணுக்கெதிரான உச்சகட்ட ஆணாதிக்கம் வெளிப்படுவதைக் காணலாம். ஆபாசப் படத்தில் நீங்கள் பார்ப்பது பெண்ணுக்கெதிரான பாலியல் வன்முறையே. ஆபாசப் படம் எடுக்கப்படுவதைக் கவனித்தால் பெண் எப்படி ஒரு அருவறுக்கத்தக்க அடிமையாகப் பயன்படுத்தப்படுகிறாள் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.

தோன்றிய சில நிமிடங்களிலேயே ஆணுறுப்பு பெண்ணின் மலத் துவாரத்திலோ, பிறப்புறுப்பிலோ அல்லது வாயிலோ திணிக்கப்படுகிறது. அப்படித் திணிக்கப்படும்போது பெண் தன்னுடைய சிகை அலங்காரத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் பெண்ணிற்கு போடப்படும் அனைத்து சிகையலங்காரங்களும் ஒரு முதலீடு; அது பார்ப்பவரைக் கவரும் வகையில் காட்சிப்படுத்தவேண்டும். ஆபாசப் படத்தைப் பொருத்தவரையில் பெண் உட்பட எல்லாமே முதலீடு தான்.

நீங்கள் ஒன்றைக் கவனித்தீர்களா? 90 சதவீத ஆபாசப் படங்களில் ஆணும், பெண்ணும் தங்கள் கைகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதேயில்லை. அதாவது எல்லாமே செயற்கையான, இயற்கைக்கு முரணான வகையிலேயே காட்சிப்படுத்தப்படுகிறது. அதிக பட்சமாக ஆணுறுப்பும், பெண்ணுறுப்புமே காட்டப்படுகிறது.

இதில் அதிகம் கேலிக்குள்ளாக்கப்படுவது பெண் தான். சகித்துக் கொள்ள முடியாத கெட்ட வார்த்தைகளில் பெண்ணுறுப்பை வர்ணிப்பது, பெண்களை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு முரணான வழிகளில் அமரவோ, படுக்கவோ வைத்து உறவில் ஈடுபடுவது, புட்டத்தில் அடிப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் சேர்ந்து ஒரு பெண்ணைப் புணருவது, இப்படி எல்லா விதத்திலும் பெண் கேவலப்படுத்தப்படுகிறாள்.

ஆபாசப் படங்களைப் பார்ப்பதற்கு முன்னர் பெண்ணைப் பற்றிய அதாவது ஒரு பெண்ணைக் காதலிப்பது குறித்து என்னுடைய சிந்தனை எப்படியிருந்தது? “நான் காதலிக்கும் பெண்ணிடம் என் காதலை எப்படி சொல்லப்போகிறேன்; அதற்கு அவள் என்ன பதிலளிப்பாள்; அவளை எங்கே சந்திக்க வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும்; இப்படித்தான் என்னுடைய எண்ண ஓட்டம் இருந்தது. ஒரு வேளை என் காதல் அவளால் அங்கீகரிக்கப்பட்டால் அது எப்படி படிப்படியாக முன்னேறி திருமண பந்தத்தில் போய் நிற்க வேண்டும்” என்பது குறித்துத் தான் அதிகம் சிந்தித்திருக்கிறேன்.

ஆனால் ஆபாசப்படங்களைப் பார்த்த பின்னர் அது என்னை வெகுவாக ஆட்கொண்டு விட்டது. அது என்னுடைய சிந்திக்கும் திறனையே அழித்து விட்டது. பெண்ணியம், காதல், காமம் குறித்த என்னுடைய கற்பனையே அழிந்து விட்டது. நான் ஒரு மனிதன் என்பதை ஏற்றுக்கொள்வதே அத்துணை சிரமமாக இருந்தது. இளைய தலைமுறையினர் மட்டுமல்ல ஒவ்வொரு ஆணும் ஆபாசப் படங்களைப் பார்ப்தன் மூலம் ஒரு பெண் துன்பப்படுத்தப்படுவதற்குக் காரணமாக அமைகின்றோம்.

ஆபாசம் நம்மை அடிமையாக்குகிறது; இல்லை அடிமைப்படுத்துகிறது;  அடிமைப்படுத்துவதென்பதை எப்படிப் பார்க்க வேண்டும்? ஆபாசப்படம் ஒரு இளைஞனுக்கோ இல்லை அல்லது பொதுவாக ஆண்களுக்கோ என்ன கற்றுத்தருகிறதென்று பார்த்தால் “நீ ஒரு ஆண்மகன்; காமத்தில் உன்னுடைய ஆண்குறியின் மதிப்பு அளவில்லாதது; ஏனென்றால் அது நீளமானது; நீ யாரிடம் உறவு கொள்கிறாய் என்பது பெரிதல்ல; மேலும் நீ புணரக்கூடிய பெண் அழகானவள், நிறைய படித்தவள், சூழ்நிலையை அழகாகக் கையாளத் தெரிந்தவள் என்பதெல்லாம் மதிப்பிற்குரியவையே அல்ல. மாறாக நீளமான உன்னுடைய ஆண்குறிக்குத் தான் அத்தனை புகழும் உரித்தாகும்”. இதைத் தான் ஆபாசம் நமக்குக் கற்றுத் தருகிறது.

இன்று சமூகத்தில் பாலியல் வன்கொடுமைகள் எண்ணி மாளாத வகையில் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்குக் காரணம் என்ன? இளைஞர்களைப் பொருத்தவரை காமம் என்பது பேசு பொருள் என்ற நிலையிலிருந்து மாறி காட்சிப் பொருளாகி விட்டது. இணையம், அலைபேசி, மடிக்கணினி இப்படி எதைத் தொட்டாலும் ஆபாசப்படங்கள் கிடைப்பது எளிதாகிவிட்டது. ஆனால் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கும் ஆபாச வீடியோக்கள் பகிரப்படுகின்றன.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ, விளம்பரங்களிலோ அல்லது திரைப்படங்களிலோ கதாநாயகிக்குத் தரப்படும் சிகையலங்காரம், காதலனிடம் காதல் வயப்படும் தருணங்கள், உடை, நடை இதையெல்லாம் பார்க்கும்போது ஒரு இளம் பெண் தனக்குள் என்ன நினைப்பாள்; “நான் ஒரு ஆணால் காதலிக்கப்பட வேண்டுமென்றால், முதன் முதலில் அவனுடைய காம இச்சைகளை நிறைவேற்றத் தகுதியாக உள்ளேனா” என்பதுதான். அன்பு, பாசம், நேசம், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகத் தான் தெரிவிக்கப்படுகிறது.

இது ஒரு அநீதி என்று நாம் புரிந்துகொள்ளும் வரையில் இதைக் கைவிட முடியாது. மேற்குலக நாடுகளைப் பொருத்தவரை பெண்கள் பல்வேறு வகையில் நிராகரிக்கப்படுகின்றனர். பள்ளிப்பருவத்திலிருந்தே எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர். பல்வேறு பிரச்சினைகளின் காரணமாகப் பள்ளிப்படிப்பை விட்டே விலகுகின்றனர் அல்லது வேறு பள்ளிகளுக்கு மாறிச் செல்கின்றனர். ஆபாச உலகிற்குள் திணிக்கப்படும்போது சமூக உறவுகளிலிருந்து தனிமைப்படுத்தப் படுகின்றனர். ஒரு கட்டத்தில் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.

ஆபாசம் தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் ஊற்றுக்கண் என்றே சொல்வேன்; குழந்தைக் கடத்தல்களின் பிரதான நோக்கமே இதுதான். அது மேற்குலகமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி இல்லை ஆசியாவாக இருந்தாலும் சரி. பெண்களைக் கடத்தி பாலியல் தொழிலில் தள்ளுவதற்கென்று ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வருகிறது.

ஒரு நாட்டில் சராசரியாக குடிமக்களின் வயது 75 என்றால் ஆபாசப் பட உலகில் சிக்கித் தவிக்கும் பெண்களுக்கு 50 வயது வரை வாழ்வதே மிக மிக அரிது. இதற்கு நான்கு பிரதான காரணங்கள் முன்னிலை வகிக்கின்றன.

  1. மது/போதைப் பொருள் உபயோகம்
  2. பால்ய வினை நோய்கள் ( STD – Sexually Transmitted Disease )
  3. விபச்சாரத் தரகர்கள் மற்றும் ஆண் நண்பர்களால் கொல்லப்படுதல்
  4. தற்கொலை

மேற்சொன்ன நான்கு காரணிகள் ஆபாசப் படத்தொழிலில் ஈடுபடும் பெண்களின் உயிரைப் பறிக்கக் காரணமாகின்றன.

நீங்கள் ஒரு உணவகத்தில் உணவருந்தச் செல்லும் போது ஒரு இரண்டு நபர்களுக்கு எதிரில் அமர வேண்டிய கட்டாயம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம்; அதில் ஒருவர் ஆண், அவர் ஆபாசப் படத்தில் நடிப்பவர், இன்னொருவர் பெண், அவரும் ஆபாசப் படத் தொழிலில் நடிப்பவர் என்றால் நீங்கள் அந்த ஆணுக்குப் பக்கத்தில் தான் அமர விரும்புவீர்கள்; ஏனென்றால் சமூகக் கண்ணோட்டத்தில் அந்தப் பெண் ஒரு விபச்சாரி; ஆனால் அதே தொழிலில் ஈடுபடும் அந்த ஆணுக்கு சமூகத்தில் எந்த கெட்ட பெயரும் இல்லை. இன்னொரு புறம் அவர்கள் நடிக்கும் அந்த ஆபாசப் படத்தை நாம் விரும்பிப் பார்த்தாலும், அந்தப் பெண்ணோடு அமர்ந்துண்ண நேரிட்டால் வெளி உலகத்தில் நம்முடைய சமூக மதிப்பு குறைந்து விடுமே என்பதே நம்முடைய பிரதான கவலையாக இருக்கும்.

உங்கள் நண்பர்கள் யாரும் ஆபாசப் படம் பார்ப்பவராக இருந்தால் அவர்களிடம் பேசுங்கள்; அமைதியாக இருக்க இது ஒன்றும் மனதை ஒரு நிலைப்படுத்தும் முயற்சியல்ல; மாறாக ஆபாசப் பட உலகம் சீரழிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையுடன் நேரடித் தொடர்புடையது.

***

லகிலேயே அதிக வருமானம் ஈட்டக்கூடிய தொழில் ஆபாசப்படங்கள் எடுக்கும் தொழில் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

தகவல் தொழில் நுட்பம், மருத்துவம், விளையாட்டு ஹாலிவுட் என வருமானம் கொட்டும் எந்த ஒரு துறையையும் தன் சுண்டு விரலால் நெட்டித் தள்ளும் வலிமை படைத்த ஒரு தொழில் என்றால் அது ஆபாசப் படங்கள் தயாரிக்கும் தொழில் தான்.

இந்தத் தொழில் மூலம் வருடத்திற்கு ஏறக்குறைய 14 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்குப் பணம் கொழிக்கிறது. ஆனால் ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் ஒரு வருடத்திற்குக் கிடைக்கும் வருமானம் 8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே.  ஆபாசப் படங்களைப் பொருத்தவரையில் ஒரு வருடத்திற்குக் குறைந்தபட்சம் 13,000 படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன.

உலகத்திலேயே ஆபாசப் படங்கள் தயாரிப்பதில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது; இரண்டாமிடத்தில் ஜெர்மனி உள்ளது. கனடா நாட்டில் தான் உலகிலேயே மிகப் பெரிய ஆபாசப் படங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 3 கோடி புதிய பார்வையாளர்கள் ஆபாசத்தளங்களுக்குச் செல்கின்றனர்.

200 நிறுவனங்கள் அமெரிக்க அரசின் உரிமம் பெற்று இந்தத் தொழிலில் பிரதானமாக ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு 39 நிமிடத்திற்கும் ஒரு ஆபாசப் படம் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகிறது. இணையதளம் வாயிலாக ஒவ்வொரு விநாடிக்கும் ஏறக்குறைய 53,000 பேர் ஆபாசப் படங்களைப் பார்க்கின்றனர். உலகளவிலும் இந்திய அளவிலும் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகிக் கொண்டே போகிறது.

ஆரம்பத்தில் துவக்க நிலையில் இருக்கும் ஆபாசப்பட ஆவல் நாட்பட நாட்பட புதிது என்ன என்று இறுதியில் குழந்தைகளை நோக்கி போகிறது. பல நாடுகளில் சட்டரீதியாக தடை இருந்தாலும் குழந்தைகளை வைத்து எடுக்கப்படும் ஆபாசப்படங்களும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இணையதளம் வாயிலாகப் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் மட்டும் வருடத்திற்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் வருமானத்தை ஈட்டுகின்றன.

ஃபோர்னாகிராஃபி என்பது பாலுறவு குறித்த ஒரு கலையோ இல்லை இலக்கியமோ அல்ல. அது இயல்பான காமத்தை மனித நிலையில் இருக்கும் செக்ஸ் உணர்ச்சியை வெறியாக மாற்றி பல்வேறு வக்கிரங்களோடு மனதை ரணப்படுத்தும் ஒரு போதை! மற்ற போதைகளை விட வலிமையான போதை!

ஷெல்லி லூபென்

18 வயதில் விபச்சாரத்திற்குள் மாட்டிக்கொண்டு, 24-ம் வயதில் ஆபாசப் பட உலகில் திணிக்கப்பட்டு இப்போது ஆபாசப் படங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வரும் ஷெல்லி லூபென் கூறும் கதையை கேட்கும் போது உங்களுக்கு அதன் இருண்ட பக்கம் தெரியவரும்.

  • தொடரும்

_____________

இத்தகைய கட்டுரைகள் மூலம் மக்களின் விழிப்புணர்ச்சிக்கு போராடும்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ஆம், அந்த இழிவுகளை பெண்கள் விரும்புவதாக காட்டுவதே பாலியல் வன்முறைகளுக்கு காரணமாகிறது, ஆனால் அவர்கள் நிஜ வாழ்வில் முயற்சிசெய்யும் போதே அப்பெண் காட்டும் எதிர்ப்பு அவர்களுக்கு தெரிய வரும் , அனால் அதற்குள் காலம் கடந்துவிட்டது தண்டனைக்கு முன் செய்துவிடுவோமே என்னும் மனப்பான்மையும் உருவாகிவிடுகிறது, வானத்தில் சிம்பு பணப்பையை பறிக்கும் பொது படும் ‘அறப்போராட்டம்’ போல. மன்னிக்கவும் ஜெயமோகன் எவ்வளவு பெரிய வார்த்தைகளை இதெற்கெல்லாம் பயன்படுத்துகிறேன்.

    அதோடு போர்னோ படங்களில் பெரும்பாலானவை குடும்ப உறவுகளையே கேலிக்குள்ளாக்கும் இன்செஸ்ட் வகையினது என்பதும் குறிப்பிட தக்கது. கணவன் முன்னே வாடகை கட்டாததால் மனைவியை புணர்வது, பரிட்சையில் மார்க் போட மணைவியிடம் ஓரல் செக்ஸ் கேட்பது போன்ற ‘பாண்டசிகளை’ தான் இப்போது ரியாலிடிகளாக பர்துகொண்டிருக்கிறோம்.

    • ஐயா சின்னா, உங்களிடம் ஆபாச பட வகைகளை பற்றி சிறு குறிப்பு வரைக என்று யாராவது 5 mark கேள்வியை கேட்டாங்களா என்ன? இந்த விசயத்தில் மக்களுக்கு தெரியாதவற்றையும் கூட வெளக்கமா கூறி அவர்களை ஆபாச பட உலகத்துக்குள் தள்ளிட்டுவிங்க போல இருக்கே! யோசிங்க சகோ..! உங்களுக்கு தெரிந்த விஷயம் எல்லாம் வினவில் நீங்க கொட்டனும் என்று அவசியமே இல்லை.. வினவு வாசகர்களுக்கு எது தேவை என்று சிந்தித்து அறிந்து இந்த விசயத்தை பற்றி பேசுங்க சாமி…!

      • ஏன் இப்போ நான் சொல்லியா பொய் தேடி பார்க்க போகிறார்கள்? இப்படி எல்லாவற்றையும் பேசினால் சங்கடம் என்று பொத்தி பொத்தி வைத்துதான் தாம் மட்டுமே இந்த அந்தரங்க ரசனைகளோடு இருக்கிறோம் பார்த்தால் போயிற்று என்று அந்த ஒரு போலி தனிமை இளம் பையன்களுக்கு கிடைக்கிறது. இவற்றறை சொல்லி விளக்க வேண்டியதே கடமை.

        வெளிநாடுகளில் பாருங்கள் செக்ஸ் கல்வியின் போது பதின்ம வயதுக்காரருக்கே சொல்லிகொடுப்பார்கள், போர்னோவி ல்பெண்ணின் தொண்டைக்குள் உறுப்பை திணித்து மூச்சடக்க வைப்பது , பாண்டசியே நிஜத்தில் அப்படி செய்ய வேண்டாம் என்று, ஆனால் இங்கே, சின்ன பசங்கள விடுங்க..எத்தனை விவாகரத்துகள் தெரியுமா? இப்படியான வக்கிரங்களை மனைவியிடம் நிறைவேற்ற முயன்று???
        அவர்கள் போர்நோவையும் எடுத்து தங்கள் வாரிசுகளையும் தெளிவுடன் வைத்திருகிறார்கள், நாம் தான் பேசாதே பேசாதே என்று நல்லா ஆர்வத்தை தூண்டி விடுகிறோம்.

        ஆபாசத்தை தெளிவுபடுத்தாமல் இருப்பதே பெரிய ஆபாசம் குமார்.

  2. கபாலி படத்தை இணைய தளங்களில் காட்டவே கூடாது என்று “தனி கவனத்துடன்/கவனிப்புடன்” படத்தின் முதலாளி பதிப்டைய கூடாது என்று தீர்பளித்து BSNL மற்றும் பிற அரசு அமைப்புகளை வேலை செய்யவைத்த சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆபாச பட இணைய தளங்களை முடக்க கோரி ஒரு சுமொட்டோ* மனுவாவது தனக்கே போட்டுக்கொண்டு தடை செய்யாதது ஏன் ? அரசும் ஆபாச இணைய தளங்களை கண்டும் காணமலும் இருப்பது ஏன் என்ற கேள்வியை நாம் நமக்கே எழுப்பினால் வரும் பதில் என்னவாக இருக்கும் என்று யோசிக்க முடிகின்றதா மக்களே? பதில் எளியது தான்! யோசிங்க பார்கலாம்.!

    மனநல மருத்துவர் தோழர் ஷாலினி சொல்லுவாங்க… “ஆபாச படம் பார்த்தால் அத பார்த்துகிட்டே தான் இருக்கனும்… வேறு எதுவும் செய்ய முடியாது என்று..” பார்கின்றவ்ர்களுக்கு இந்த விசயம் புரிந்தால் சரி…..! :-

    சுமொட்டோ* -> நீதிமன்றமே சுயமாக எடுத்து கொள்ளும் வழக்கு

  3. என் 13 வயது முதல் இந்த படங்களை பார்த்து வருகின்றேன்.ஆனால் எப்படி வெளிவருவது என்ற எண்ணம் அடிக்கடி மனத்தில் ஆனால் மனத்தில் திருமணம் செய்தால் இது எண்ணம் மறையும் தவறு என்பது எனக்கு பட்டது. ஆனால் பல திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு இந்த பழக்கத்தில் இருந்து விடுப்படுவது என்பது பல தடைகள் அவர்கள் மனத்தில் மட்டுமல்ல சமூகத்திலும் இருக்கின்றது. அதில் விடும்படி வழி வேண்டும்.

    • மானுடன்,
      நான் மட்டும் என்ன விதிவிலக்கா? முதலில் சாதாரண சாப்ட்கோர் எனப்படும் ‘மென்மையான’ போர்னோ பார்த்து பின்பு அவை கிளர்ச்சி தராததால் ஹர்ட்கோர் எனப்படும் ‘கடும்’ போர்னோ பிறகு அதைவிட மோசமானவை என்று போனவன்தான், இன்று இதில் சிக்காத பையன்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், கடந்த தலை முறையினருக்கு இந்த மொபைல் மற்றும் இணையவேகத்தின் பிரமாண்டங்கள் புரிவதில்லை, உண்மையில் புரிந்தால் பறித்து எறிந்துவிடுவார்கள். வெளிநாடுகளில் கூட கடந்த தலைமுறையினர் பெரிய டெக் குருக்கள் இல்ல, நமது பெட்ட்றோரை போல்தான, அனால் அவர்களுக்கு பிள்ளைகளின் போன் கணணியை எவ்வாறு கண்காணிப்பது , பாரேன்டல் கண்ட்ரோல் போடுவது என எல்லாம் சொல்லிக்கொடுகிரார்கள்.

      வெளிவருவதற்கு நாம் வெளிநாட்டை போல் கவுன்சிலிங் , சப்போர்ட் என்று இந்த திங்கவே வழியில்லாத நாட்டில் எதிர்பார்க்க முடியாது. நாம் தான் முடிவெடுக்க வேண்டும், அடிமைபட்டுவிட்டேன் வரமுடுயவில்லை என்பதெல்லாம் ஒரு கள்ள சாக்ககவே பார்கிறேன், இதுவே சிவ்ராஜ்களுக்கும் வசதியாய் போய்விடுகிறது, நான் வினவு கட்டுரைகளை படிக்க தொடங்கியவுடன் போர்னோ பார்க்கும்போது ஒரு குத்தற உணர்ச்சி தானாகவே வந்து அப்பழக்கத்தை நிறுத்திவிட்டது. மற்றொரு காரணம் சினிமா, சினிமா பாடல்களே இப்போது போர்னோதானே, இவை ஈயும் பீயும் போல், இதை பார்த்தால் அதை பார்க்க தோன்றும். ஆக இரண்டையும் நஞ்சாக உறுதியுடன்ஒ துக்கி தள்ளுவதே வழி, இதற்கு என்ன சிகரெட் பழக்கத்தின் நிகோட்டின் சுவிங்கம் போல் ஒரு வழி எதிர்பார்கிரீரோ? அதோடு இப்பழக்கத்தை விட திருமணம் செய்வதென்பது ஒரு கிரிமினல் குற்றமாக பார்க்கப்பட வேண்டும்.

  4. இந்த போர்னோகீராபி முதலிடத்து ஆபாச அமெரிக்காவைத்தான் எங்கள் பாரதமாதா அழகானவள் அவளை கோலா என்றும் கின்லே என்றும் பங்கு போட்டு துய்த்து மகிழுங்கள் என்று நாட்டுக்குள் கூட்டீவரும் தாமரைமணாளன்கள்தான் ஆபாசத்தின் மூலவர்கள்.

  5. அமெரிக்காவில் மார்க்ஸியம் லெனினியம் பேசும் நபர் ஒருவர் இருக்கிறார். பெயர் மறந்துவிட்டது. அவர் இதை பற்றி விரிவாக மார்க்ஸிய பார்வையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முடிந்தால். அதையும் படித்துவிட்டு சேர்க்கலாம்.

  6. Arumayana thelivana katturai sariyaana paarvai .
    Iruppinum pennirkku yen Innum itthanai kodumaikal. Apo Aan Innum pakkuvapada villaya illai pen Innum suya sinthanai pera villaya… Illai ithu birabancha arasiyalaa..

  7. நான் எழுப்பிய கேள்வியாகிய அரசு ஆபாச இணைய தளங்களை கண்டும் காணமலும் இருப்பது ஏன் ? இதற்கு நானே பதிலை அளிக்கின்றேன்.

    அதிக வரி, ஊழல் என்று மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறை படுத்தி மக்களை சுரண்டும் அரசுக்கு, அரசு அதிகாரிகளுக்கு அதனை எதிர்த்து மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போராடக்கூடாது என்பதே அவர்களின் திட்டம். போராடும் உணர்வு பூர்வமானவ்ர்களை போலிஸ் கஸ்டடியில் வைத்து மிதிப்பார்கள்..கொடுமை படுத்துவார்கள், என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லுவார்கள். மேலும் மக்கள் /இளைஞர்கள் போராடாமல் இருக்க அவர்களை பல்வேறு சீரழிவு போதைகளில் ஒன்றான பாலியல் ஆபாச படங்களை நோக்கி திட்டமிட்டு திசைதிருப்புவார்கள்.. அப்படி பட்ட நிலையில் ஆபாச பட இணைய தளங்கள் தங்கு தடை இன்றி தானே இந்தியாவில் சுதந்திரமாக நடைபோட்டுகொண்டு இருக்கும்? இந்த விசயம் ஒரு கட்டுரை எழுதவேண்டிய அளவுக்கு விரிவானது என்பதனை வினவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

    ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் சிங்கள அரசின்கீழ் இருந்த யாழ்ப்பாணத்தில் இனைய தொடர்புகளும் அதில் பாலியல் ஆசாச விடியோக்களும் கிடைத்துகொண்டு இருந்ததை யாரும் இங்கே மறக்க இயலாது.

    இந்த விசயம் ஒரு கட்டுரையை பல பகுதிகளாக எழுதவேண்டிய அளவுக்கு விரிவானது என்பதனை வினவுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். நன்றி…

    • பாலியில் தொழிலை ஏன் அரசாங்கம் தடை செய்யவில்லையோ அதே காரணம் இதற்கும் பொருந்தும். இதற்க்கு மேல் இதில் விளக்க, விவாதிக்க ஒன்றுமில்லை

      • Truthsayar, பட்டும் படாமலும் பொய்யாக பேசுவதால் யாதொரு பயனும் கிடயாது. நேர்மையாக பேசவேண்டும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பொறுத்தவரையில் பாலியல் தொழில் குற்றம் தான். எந்த சட்ட பிரிவின் கீழ் என்று கேட்டாலும் விளக்க கடமை பட்டு உள்ளேன். அடுத்தது ஆபாச படங்களை பார்ப்பது வினியோகம் செய்வது(இணைய தளம் மூலமாகவோ அல்லது வேறு எந்த உடகம் மூலமாகவோ ) என்பதும் குற்றம் தான்.

        ஆனாலும் இந்த பாலியல் தொழில் மற்றும் ஆபாச படம் தொடர்பாக போலிசும் சரி , அரசும் சரி கண் துடைப்புக்கு தான் ஒரு இரு கேஸ்களை போதுமே தவிர நேர்மையாக எந்த நடவடிக்கையையும் எடுக்காது. அப்படி நடவைக்கை எடுக்கும் நிலையில் மக்கள் விழிப்புணர்வு அடைந்து நாட்டின் பிரச்சனைக்காக போராட முனைவார்கள் அல்லவா?

        மேலும் இந்த விசயத்தில் உண்மையில் உங்களுடன் விவாதிக்க ஒன்றும் இல்லை தான். ஒத்துகொள்கின்றேன். நான் வினவிடம் கோரியது என்வென்றால் மக்களை திசை திருப்ப, இளைஞர்களின் அரசியல் உணர்வுகளை காயடிக்க அரசு இத்தகைய ஆபாசங்களை சமுகத்தில் அனுமதிக்கும் போது அதனை வினவு அம்பலபடுத்தி விரிவான கட்டுரையை எழுதவேண்டும் என்பதே. இந்த கோரிக்கையில் உங்களுக்கு என்ன மாற்று கருத்து இருக்க முடியும்?

        • இது இயற்க்கை நியதி. இதை சட்டம் போட்டு எல்லாம் தடுக்க முடியாது இதை எல்லாம் நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்து தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற முறையை கட்டமைத்தார்கள்

          ஆனால் நாம் என்ன செய்தோம், செய்து கொண்டு இருக்கிறோம் என்பது மொத்தமாக வேறு விவாதம்

          எனக்கு தெரிந்து மும்பையில் பாலியில் தொழிலுக்கு அனுபதி உண்டு. நம்மூரில் இல்லை. இதென்ன சட்டம் ? வெளிநாடுகளில் நிலைமை இன்னும் மோசம்

          நம் நாட்டில் குற்றமாக தெரிவது மேலை நாடுகளில் குற்றமாக தெரிவதில்லை. ஆகவே எதை, எங்கு செய்தால் குற்றம் என்பதே விவாதிக்கப்பட வேண்டியது

          எனக்கு தெரிந்த வரை இதில் அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியமே இல்லை. இந்த குற்றத்தை தடுக்க ‘தனி மனித ஒழுக்கத்தை’ தவிர்த்து வேறு எதுவும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை

          • TruthSayer,

            விபச்சாரமும், பாலியல் ஆபாசமும் இயற்க்கை நியதி என்று நீங்கள் வரையரை செய்யும் போது அங்கே ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமுக நியதிக்கு அடிபட்டு போய் பல் இளிகின்றது. ஆனாலும் நாம் என்ன செய்து கொண்டு இருக்கின்றோம் என்று கேள்வி கேட்கிண்றீகள் பார்த்தீர்களா அது தான் இங்கே விவாதத்துக்கு உரிய பொருள். ஆமாம் இந்த பாலியல் ஆபாசத்தை இணைய தளம் மற்றும் மற்ற ஊடகங்கள் மூலம் பரப்புவோரை இந்த சமுகமும் அரசும், தண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், கண்டிப்பது கூட இல்லையே! அங்கே தானே அவர்களுக்கு உற்சாகமும் , incentive ஆகியவை கிடைகின்றன.

            வினவில் வந்து உள்ள இந்த கட்டுரைக்கே நேரடியாக எதிர்ப்பு தெரிவிக்க இயலாதவர்கள் எப்படி எல்லாம் பாலியல் ஆபாசம் தொடர்பாக அதனை அக்குவேறு ஆணிவேராக விளக்கி பிராசாரம் செய்து கொண்டு உள்ளர்கள் என்று பார்த்துக்கொண்டு தானே உள்ளீர்கள்.(சின்னாவின் கருத்துகளுக்கு நீங்கள் பதில் அளித்தால் அது எப்படி இருக்கும் என்று என்னால் ஊகிக்கமுடியவில்லை) இத்தனைக்கும் முற்போக்குகள் என்ற பட்ட பெயருடன்.

            மேலும் இந்த விசயங்களில் சட்டமே இல்லை என்பது போலி தனம் மட்டும் அல்ல …, இவற்றை ஊக்குவிக்கும் செயலும் கூட…

            விபச்சாரங்கள் , பாலியல் ஆபாச படங்கள் சட்டத்தின் மூலம் கடுமையாக தன்னடிகவேண்டிய குற்றங்கள் தான் என்பதற்கு எதிராக உங்களால் என்ன விவரங்கள் கொடுக்க முடியும் நண்பரே?

            அப்படி செய்வதன் மூல சமுகத்தில் ஏற்படும் நல்ல /கெட்ட விளைவுகள் எவை நண்பரே?

          • //நம் முன்னோர்கள் தெளிவாக உணர்ந்து தான் ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்கிற முறையை கட்டமைத்தார்கள்//

            proof?

            • அட என்னங்க நீங்க நம்ம ராமர் சீதை கதைய தானுங்க முன்னோர் பின்னோர் என விளம்புகிறார் விளம்பி.

            • சரி நீங்கள் தான் சொல்லுங்களேன். மனிதன் தோன்றிய காலத்தில் பாலியல் முறை மனிதர்களுக்கு இடையே எப்படி இருந்தது என்று ?

              நீங்கள் எல்லோரும் முதலில் ஒரு Atheist groupயிடம் விவாதித்து விட்டு இங்கு வந்தால் நல்லது

  8. //3 கோடி புதிய பார்வையாளர்கள் ஆபாசத்தளங்களுக்குச் செல்கின்றனர்//

    If this statistics is true, then within an year, porn watchers will overtake world population.

  9. /அமெரிக்காவில் மார்க்ஸியம் லெனினியம் பேசும் நபர் ஒருவர் இருக்கிறார். பெயர் மறந்துவிட்டது. அவர் இதை பற்றி விரிவாக மார்க்ஸிய பார்வையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். முடிந்தால். அதையும் படித்துவிட்டு சேர்க்கலாம்./ அவரைப்பற்றிய விவரங்கள் தாருங்கள்

  10. நண்பர் குமார், இந்த விடயத்தில் உமது கருத்தே என கருத்து, ஒற்றை பதிலே மக்களை திசைதிருப்பவே அரசு இதை கள்ளத்தனமாக அனுமதிக்கிறது, என்ன நான் இவற்றில் உள்ள மற்ற உள்நோக்கங்களை தெளிவுபடுத்தவும், மற்றும் முன்னரே கூறிய அந்த பசங்களுக்கு கிடைக்கும் போலிதனிமை மற்றும் அந்தரங்கம் உடைக்கவே கொஞ்சம் விளக்க வேண்டியதாயிற்று. இன்செஸ்ட் என்ன என்றால் தானே அதில் குடும்ப உறவுகளை கேவலபடுத்தும் நோக்கம் உள்ளதையும் அதன் மூலம் நம் சமுதாயத்தை மிக கேவலமாக சீரழிக்க நினைப்பதையும் உணர முடியும், தொண்டைக்குள் திணிப்பதை சொன்னால் தானே பெண்ணை ‘என்ன’ செய்தாலும் அவள் விரும்புவாள் எனும் எண்ணம் உருவாவதை தடுக்க முடியும். நண்பரே இதில் நாம் ஒளிக்க என்ன இருக்கிறது, பெரும்பாலும் எல்லா பசங்களும் நனைந்தாகி விட்டது, இனி முக்காடு தேவையில்லை, ஈரத்தை துவட்டி, இனிமே அந்த பக்கம் போகாதே என வேண்டியதே கடமை.

    • நண்பர் சின்னா, நீங்க இந்த பாலியல் ஆபாச படங்களின் வகைமாதிரிகளை தொடர்ந்து வெலக்கிகிட்டே இருங்க… அதுவும் இந்த பாலியல் படத்தின் வகைமை பற்றிய விசங்களை பற்றிய அறிமுகமே இல்லாத இளம் வயதினருக்கு… வினவில் உங்கள் பாலியல் பிரசங்கம் வளர எனது வாழ்ந்துக்கள் சின்னா! நன்றி…

  11. ஒரு ஆணுக்கு பாலியல் உணர்வு உச்சத்தில் இருப்பது முப்பத்தி ஐந்து வயது வரை. அதற்கு பிறகு அவனுடைய உடல் கொஞ்சம் கொஞ்சமாக சாக ஆரம்பிக்கிறது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல ஆண்கள் முப்பத்தி ஐந்து வயதில் தான் வாழ்கையில் செட்டில் ஆகி திருமணம் செய்கிறார்கள். இந்த சிக்கலுக்கு என்ன தீர்வு சொல்லப்போகிறீர்கள்?

    • தப்பான கருத்து சார்… பாலியல் உணர்வு என்பது நாம் எடுத்துகொள்ளும் உணவு, செய்யும் உடற்பயிற்சி மற்றும் சரியான பழக்கங்கள் (மது மற்றும் புகைப்பதனை தவிர்த்தல்) சம்மதபட்டதே தவிர வயது என்பது கடைசியான காரணி தான். அப்படியும் நடுத்தர வயதில் பாலியல் சார்ந்த பிரச்சனைகள் என்றால் அவற்றை களைய இன்றைய நவீன மருத்துவமும்(வயாகரா சார்ந்த மருந்துகளும்) ,தமிழர்களின் பாரம்பரிய உணவு முறைகளும்(நண்டு,மாதுளை பழம்,அத்திப்பழம்,பேரிசை , வேர்கடலை அல்லது பாதாம் ) கைகொடுக்கின்றன.பாலியல் நடவடிக்கைகளுக்கு உணவில் கால்சியம்,சிங், மற்றும் இருப்பு சத்து போன்ற மினரல்கள் மற்றும் புரதம் அதிகம் உள்ள இறைசிகள் மிக்க அவசியம்.

      மேலும் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கும் போதும் பாலியல் உணர்வு மட்டுபடும். எனவே உடலையும் மனதையும் ஆரோக்கியமக் வைத்து கொள்வது மிக்க அவசியம்.

  12. சமூக ஊடகங்களில் தமிழில் இயங்கும் ஆபாசப் பக்கங்கள், வக்கிரத்தின் உச்சத்திற்கு தமிழ் இளைஞர்களை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.
    அறக்கட்டுப்பாடற்ற இந்த ஆபாச இணையவெளி உருவாக்கும் சிந்தனைகளின் தாக்கம் வலதுசாரிகளின் அரசியல் சிந்தாந்தங்கள் வேர்பிடிக்க உதவுகின்றன.
    இது குறித்தான கட்டுரைகளை வினவில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருக்கிறேன்.
    உடல் மற்றும் உளவியல் ரிதீயான தாக்கங்கள் செலுத்தும் பண்பாட்டு வெறுமையை,தீர்ப்பதற்கான பண்பாட்டு மையங்கள் இன்றைய அவசிய தேவை.

  13. ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால், தாராளமாக இருந்தது. அப்போது ஒருபுறம் கீழ்தர பாலியல் வக்கிரங்களை தூண்டிவிட்டு மறுபுறம் ஆரோக்கியமான திருமணம்/பாலுறவு என்பதை கிட்டத்தட்ட எட்டாக்கனி ஆக்கவில்லை. பெண் சிசு அழிப்பு மூலம் இன்று சீனா இந்தியாவில்பெ ண்களுக்கு எவ்வளவு தட்டுபாடு? ஆதிகாலத்தில் பெண்களே காத்திருக்க வேண்டி இருந்தது, அதுவும் ஒரு ஆணை பகிர, அப்போது ஒரு ஆணும் பெண்ணை தலைமுடியை பிடித்து இழுத்து வன்முறை உறவு கொள்ளவில்லை, infact அக்காலத்தில் செக்ஸ் என்பது மிக நாகரிகமாக இருந்தது.

    அக்காலத்தில் மிருக உறவு, குடும்ப உறவுகள் கூட மிக தாராளமாக இருந்ததாம், குகை சித்திரங்களில் கூட போர்னோ கிறுக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதை மறுக்கவோ ஒழிக்கவோ தேவை இல்லை, இவ்வாறான மிருகதனங்களில் இருந்து மேம்பட்டுகொண்டே இருக்கவேண்டும் மனிதம், அதற்கு தடை போட்டு , இல்லை நீ மிருகம் தான் உன் பிழைப்பை மட்டும் என்ன செய்தாவது பார்த்துகொள், என சொல்வது முதலாளித்துவம். இந்த பிரச்சினை உட்பத எல்லா பிரசிநிக்கும் அடி மூலம் அதுவே.

Leave a Reply to Magesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க