Sunday, February 16, 2025
முகப்புகலைகவிதைநீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?

நீ ஏன் உன்னை டீ விற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய் ?

-

ப்ரஜ் ரஞ்சன் மணி-யின் “கிஸ்கீ சாய் பேச்தா ஹை தூ”
என்ற இந்திக் கவிதையின் தமிழாக்கம்.

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

விரல் நுனியிலும் காயம் படாமல்
உன்னைத் தியாகி என்று சொல்லிக் கொள்கிறாய்
கூட்டுக் குழுமங்களில் கிறிஸ்துக்களைத் தேடுகிறாய்
அம்பானி அதானி பேரரசை விகாசம் என்கிறாய்
அட பத்மாஷ், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

இந்துக் கயமையில் மூழ்கிக்கொண்டு
வர்ணாசிரமத்திலும் ஜாதியிலும் திமிர்பேசிக்கொண்டு
பூலே – பெரியார் – அம்பேத்கரிலிருந்து தூரத்தில் ஓடுகிறாய்
அடே ஓபிசி சிகண்டி, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மசூதியையும், தேவாலயங்களையும் நொறுக்கி தேசபக்தன் ஆகிறாய்
கலகங்களை உற்பவித்து தாடிமீசையை வளர்க்கிறாய்
தர்மத்தின் பெயரால் ஏழை மக்களைக் கொல்கிறாய்
பயங்கரப் பேயே, சொல், யாருடைய டீயை நீ விற்கிறாய்?

மனைவியைக் கைவிட்டு பிரம்மச்சாரி ஆகிறாய்
நண்பனின் மகளுக்குத் தொல்லை கொடுக்கிறாய்
கருப்புக் குல்லாயும் காக்கிக் கால்சட்டையும் உன் மானத்தை மறைக்க,
அட வெட்கம் கெட்டவனே, யாருடைய டீயை நீ விற்கிறாய்?

கருப்புச் செயல்களில் வெட்கம் கொள்வதில்லை
மனிதன் ஆவதிலும் முயற்சி என்பதில்லை
டீ விற்பவர்களுக்கு இலவசமாகக் கெட்டபெயர் வாங்கித் தருகிறாய்
ஏமாற்றுக்காரனே, இப்போதாவது சொல்லிவிடு,
யாருடைய டீயை நீ விற்கிறாய்?

நீ ஏன் உன்னை டீவிற்றவன் என்று சொல்லிக் கொள்கிறாய்?
ஒவ்வொரு விஷயத்திலும் ஏன் நாடகமாடுகிறாய்?
டீவிற்பவர்களின் பெயரை ஏன் கெடுக்கிறாய் நீ?
தெளிவாகச் சொல்லிவிடு, யாருடைய டீயை நீ விற்கிறாய்

இந்தியிலிருந்து தமிழுக்கு: க. பூரணச்சந்திரன்

–ப்ரஜ் ரஞ்சன் மணி Debrahmanising History  : Dominance and Resistance in Indian Society, Knowledge and Power: A Discourse for Transformation நூல்களின் ஆசிரியர்.

 

  1. “மனைவியைக் கைவிட்டு பிரம்மச்சாரி ஆகிறாய்”
    Modi you are not told even ONE THALAK-Atleast they say with reasons TRIPLE THALAK.

  2. அவ்வளவு ஏழ்மையை அனுபவித்தவராம் அவர் … பாவம் … அதனாலதான் ஓட்டு பாேட்ட மக்களுக்கு பல காேடி மதிப்பான காேட் பாேட்டு காட்டினாராே … ?

  3. மரணவியாபாரியின் இந்த மாய்மாலம்தானே
    டீ விற்பனையாளர் வேஷம்…
    ஏழை விவசாயிகளின் தற்’கொலையை’
    இரட்டிப்பு ஆக்கியதுதானோ இந்த
    சாவு வியாபாரியின் சேவை
    இஸ்லாமிய ஆணை காதல்திருமணம்
    செய்த இந்துப்பெண்ணின் சூல்கிழித்ததுதானே இந்த இந்து தேசபக்தரின் “பக்தி”
    இன்னும் என்ன சொல்ல? டீ வியாபாரிகள் கழிவி ஊற்றட்டும் எச்சில் கிளாஸ்களை

  4. அன்புள்ள ஆசிரியருக்கு, எனக்கு டிசம்பர் 27க்குப் பின்னுள்ள பதிவுகள் எனது மின்னஞ்சலுக்கு வரவில்லை. காரணம் தெரியவில்லை. அன்புடன் தெரிவியுங்கள். நிறைமதி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க