Tuesday, June 2, 2020
முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

-

திரைப்படக் கவிஞர் வைரமுத்து, தினமணி கூட்டம் ஒன்றில் ஆண்டாள் பற்றி பாராட்டிப் பேசிய உரை ஒன்றை இந்துமதவெறி வானரங்கள் எடுத்துக் கொண்டு வெறிப் பேச்சுக்களை எறிந்து வருகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலும் பல நூற்றாண்டுகள் நீடித்த தேவதாசி முறை என்பது பெண்களை இழிவுபடுத்தும் ஒரு பார்ப்பனிய ஒடுக்கு முறையாகும். இதை திராவிட இயககம்தான் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒழித்தது. அப்போது இந்துமதவெறியர்கள் தேவதாசி முறைக்கு ஆதரவாக கூக்குரலிட்டனர். அப்போது மட்டுமல்ல, 90-களின் இறுதி வரையிலும் கூட பல்வேறு நடனக்கலைஞர்கள், இந்துமத அறிஞர்கள் தேவாசி முறையை ஆதரித்து பேசியிருக்கின்றனர். இப்போதும் கூட இந்த பேச்சுக்களை பார்க்கலாம்.
அது குறித்து90-களின் மத்தியில் வெளிவந்த புதிய கலாச்சாரம் கட்டுரையை விரைவில் வெளியிடுகிறோம். ஆண்டாளை தேவதாசி என்று ஒரு அமெரிக்க ஆய்வாளர் குறிப்பிட்டதை வைரமுத்து மேற்கோள் காட்டியதை வைத்து எச்ச ராஜா துள்ளுகிறார். வைரமுத்துவிற்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுக்கிறார். எனில் பார்ப்பனியத்தால் பாதுகாக்கப்பட்ட தேவதாசி இழிவு முறையை திராவிட இயக்கம் ஒழித்ததை எச்ச ஏற்கிறார் என்று பொருள். இப்படி வரலாற்றையே மாற்றி பேசும் இந்த கயவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள், செய்வார்கள் என்பதை இந்த அவதூறுப் பிரச்சாரம் நிலைநாட்டியிருக்கிறது.
எச்ச ராஜா-விற்கு வரலாற்று ரீதியாக பதிலளித்த சில பேஸ்புக் நண்பர்களின் பதிவையும், இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோவையும் இங்கு நன்றியுடன் வெளியிடுகிறோம். இந்த தொகுப்பில் எச்சயை ஆவேசமாக திட்டும் அண்ணன் சீமான் வீடியோ இடம்பெறவில்லை. காரணம் அவர் அப்படி பேசவில்லை. பேசியது எல்லாம் ஐயா ராஜா அப்படித்தான் பேசுவார், அதே மாதிரி நாம் பேச முடியுமா என்று பம்மிப் பேசுவதுதான். பொதுவில் எச் ராஜா குறித்து அண்ணன் சீமானிடம் நிறைய பயம் இருக்கிறது. கூடவே ஆழ்வார்களும், நாயன்மார்களும் தமிழர்கள்தான் இந்துக்களல்ல என்று விவாதிக்க தயாரா? எனும் தமிழ் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தமும் இருக்கிறது.
– வினவு

எச்ச ராஜாவை எச்சரிக்கும் இயக்குநர் பாரதிராஜாவின் வீடியோ

‘தீரர்’ சத்தியமூர்த்தி அய்யரின் வாரிசுதாரர்களான தினமணி வைத்தியநாதய்யர்களின் அனுக்ரகத்தில் பெருமை தேட நினைக்கும் வைரமுத்துகளுக்கு ஹெச்.ராஜா சர்மாக்களிடமிருந்து வசவுகள்தான் மிஞ்சும். என்னதான் வெள்ளை வெளேரென ‘ஆம்பளை’ சுடிதாரும், பக்தி இலக்கிய ஃபேர் அண்ட் லவ்லியும் போட்டு மேடையேறினாலும், பிறப்பிலேயே அமைந்த இயல்பான கறுப்பு நிறம்தான் அவாள்களின் கண்களுக்குத் தெரியும். எத்தனை யுகங்களானாலும் பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களைப் பார்க்கும் மைக்ராஸ்கோப் கண்கள் கொண்டவர்களாயிற்றே!

ஆண்டாளையா தேவதாசி குலத்தில் பிறந்ததாகச் சொன்னாய் என கவிப்பேரரசு மீது பாய்ந்து பிறாண்டுகின்றன ஒரிஜினல் ஆன்மிக அரசியல் ஓநாய்கள். பேரரசின் பரம்பரைக்கே டி.என்.ஏ. டெஸ்ட் நடத்துகிறார்கள். எதிரில் நிற்கும் படைக்கு முன்னால், இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி போல ‘வெள்ளைக் கொடி’ உயர்த்துவது தவிர வேறு வழியில்லை கவிப்பேரரசுக்கு.

வின்னர் வடிவேலு பாணியில், ‘உன் தாய் பத்தினின்னு ஒத்துக்குறேன்’ என வருத்தம் தெரிவித்து, எவர் மனமும் புண்பட்டிருந்தால் அதற்கு புணுகு தடவத் தயார் எனச் சொல்லி, அடுத்தடுத்த விருதுகளுக்கு ஆபத்தில்லாதபடி காத்துக் கொண்டது கவிப்பேரரசின் சாமர்த்தியம். நம்மாளு ஒருத்தர் இத்தனை சாமர்த்தியத்துடன் இருக்கிறார். அத்துடன் எப்போதும் கலைஞரின் நண்பர் என்பதை உரக்க உரைக்கிறார் என்பதில் நமக்கும் பெருமகிழ்ச்சிதான்.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் யாருக்குப் பிறந்தார் என்பது நமக்குப் பிரச்சினையல்ல. ஆண்டாளை தேவதாசி என்று யாரோ எழுதியதை மேற்கோள்காட்டிப் பேசிய கவிஞர் குற்றவாளி என்றால், தேவதாசி என்ற முறையை கோவில்களில் புகுத்தி, பெண்களை இழிவும் அடிமையும்படுத்தி, ஆயிரம் ஆண்டு காலத்திற்கு அதனைக் குலத்தொழிலாக மாற்றி வைத்த பெருங்குற்றவாளிகளை யார் அடையாளப்படுத்துவது? பேசியவரைத் தண்டிப்போம் என்பவர்கள், ஆயிரங்காலத்து அவமானத்திலிருந்து மீளமுடியாத சமூகங்களையும் பிறப்பின் அடிப்படையிலான பேதங்களையும் உருவாக்கியவர்களுக்கும் அதனைக் கட்டிக்காத்து அரசியல் செய்பவர்களுக்கும் என்ன தண்டனைத் தரப்போகிறார்கள்? ஆண்டாளை விட்டுவிடுவோம். அதிகாரத்தை வைத்துக் கொண்டு ஆண்டு கொண்டிருப்போரை என்ன செய்யப் போகிறோம்?

வைரமுத்துவை நோக்கி ஹெச்.ராஜா வகையறாக்காளல் வீசப்பட்ட வார்த்தைகள் என்பவை சூத்திரனாக்கப்பட்ட-அதற்கும் கீழான நிலைக்குத் தள்ளப்பட்ட அனைவரின் மீதும் காலங்காலமாக வீசப்படும் வார்த்தைகள். சூத்திரன் என்றால் வேசி மகன் என எழுதி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துச் சொன்ன பெரியாரும், இந்து என்றால் திருடன் என அகராதியில் சொல்லப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டிய கலைஞரும் மதஉணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக அவாள்களைவிட இவாள்கள் போடும் பெருங்கூச்சல்களும் காலந்தோறும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

புண்படுத்தலாமா எனக் கேட்டபடி அவர்களுக்கு, நமது பின்புறத்தை வசதியாக காட்டிக் கொண்டே இருக்கும்வரை வைரமுத்துகளின் நிலைமைதான் எல்லோருக்கும்.

– Govi Lenin

__________

எச்ச ராஜாவை எச்சரிக்கும் தமிழன் பிரசன்னா

ண்டாள் பாடல்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற விதத்தில் இருக்கும் என்பது திருப்பாவை படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அந்த அளவிற்கு, அதிலும் ஒரு பெண் எழுதியிருக்கும்போது ஆணாதிக்கம் நிரம்பி வழிந்த அக்காலத்தில் அப்பெண்ணை எப்படி பார்த்திருப்பார்கள்… அவர் தாசியாக்கப்பட்டிருப்பார் என்ற ஒரு ஆய்வு கண்ணோட்டத்தில் சொன்னால், அதற்கு திரு. கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை இவ்வளவு இழிவாக பேசுகிறார் என்றால் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி… இதை தானே பார்ப்பனத் திமிர் என்று சொல்கிறோம். !

உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை சொன்னதற்கே இப்படி ஆத்திரம் வருகிறதே… ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே, எங்கள் இன பெண்களை சொல்லவில்லையா…தாசிகள் என்று, சூத்திரன் என்பவன் ‘ தாசியின் மகன்’ என்று எழுதி வைக்கவில்லையா… உங்கள் வேதங்கள்.!

உங்கள் பூணூல் சாஸ்திரப்படி, இந்து மதத்தை கடைப்பிடிக்கும் சூத்திரர்கள் அனைவரும் தாசியின் மகன்கள் தானே… திரு. வைரமுத்து அவர்களை தாசி மகன் என்று ஒவ்வொரு தடவையும் சொல்லும் ராஜா, அனைவரையும் சேர்த்து, இது தான் சமயம் என்று தாசிமகன்கள் என்று வேறு கொக்கரிக்கிறார்.!

மற்ற மாநிலங்கள் போன்றா தமிழ்நாடு? உங்கள் வண்டவாளங்களை, தண்டவாளங்களில் ஏற்றிய எங்கள் தந்தை பெரியார் அறிவுறுத்திய, உணர்த்திய திராவிட உணர்வும், பார்ப்பனீய தந்திரமும் நாங்கள் முழுதும் அறிந்ததே…இந்த அளவிற்கு பார்ப்பனீயம் என்ற பாம்பு , தன்னுடைய நஞ்சை கக்கிக்கொண்டிருக்கிறது …!

இதையும் கூட, இவர்களின் பக்தி என்ற பெயரில் நடத்திய, நடத்திக் கொண்டிருக்கும் அசிங்கங்களையும், ஆபாசங்களையும், வேதங்களின் உண்மை முகத்திரையையும் கிழித்தெறிய மற்றுமொரு வாய்ப்பாக தான் பெரியாரியவாதிகள் பயன்படுத்திக்கொள்வார்கள் என்பதை ராஜாவிற்கு சொல்லிக்கொள்கிறோம்.!

– சுசிலா

____________

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் – செய்த மாபெரும் புரட்சி.. தேவதாசி முறை ஒழிப்பு..

ண்டாளை தேவதாசி என வைரமுத்து சொன்னது மகா தவறு, ஆண்டாளுக்கு மிகபெரிய இழுக்கு என்றால், அந்த “தேவதாசி” என்னும் சொல் ஹெச். ராஜாவை எந்தளவுக்கு கொந்தளிக்க வைத்துள்ளது என்பது புரிகிறதா? அப்படியென்றால், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை, பெரிய ஹிந்து கோயில்களில், இந்த தேவதாசி முறை நடைமுறையில் இருந்து வந்ததே.. அதை நிறுத்தக்கூடாது என அப்போதைய ஹிந்து வகுப்புவாதிகளும், ஹெச்.ராஜா போன்றோரின் முன்னோர்களும் கடுமையாக எதிர்த்து ஏன்?

குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களை கோவில்களுக்கு பொட்டுக்கட்டி “தேவதாசிகளாக”, பார்ப்பன் புரோகிதர்கள், கோயில் முக்கியஸ்தர்கள், ஊர் பணக்காரர்களுக்கு தாசிகளாக மாற்றும் முறையை ஒழிக்க “தேவதாசி ஒழிப்பு” மசோதாவை, 1930 -ஆம் ஆண்டில் கொண்டு வந்து அம்முறையை முற்றிலும் ஒழித்தது திராவிட இயக்கத்தின் முன்னோடியான அப்போதைய நீதிக்கட்சி அரசு. தேவதாசி ஒழிப்பு மசோதாவை கொண்டுவந்து, அதை சத்தியமூர்த்தி அய்யர் போன்ற பெரிய பார்ப்பனத் தலைவர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சட்டமாக மாற்ற பெரும்பாடுபட்டவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இன்றைய காலகட்டத்திலும் தேவதாசி முறை ஒரிசா, வட கர்நாடகா, தெலுங்கானா போன்ற சில இடங்களில் நடைமுறையில் உள்ளது..

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் – இவர் சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர். 1936 -ல் வெளியான இவரது சுயசரிதப் புதினமான தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர், தாசிகளின் அவலநிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது. முதலில் இந்திய தேசிய காங்கிரசின் ஆதரவாளராக இருந்த இவர் 1925 -ல் பெரியார் காங்கிரசிலிருந்து விலகியபோது பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். 1930 -ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி முயன்றபோது அவருக்குத் துணை நின்றார்.

ஆனால் அச்சமயம் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டார். நவம்பர் 1938 -ல் அதற்காக ஆறு வாரங்கள் சிறையிலடைக்கப்பட்டார். அவரது புதினம் மக்களிடையே ஏற்படுத்திய விழிப்புணர்வும் தேவதாசி முறையை ஒழிக்க அவர் மேற்கொண்ட தொடர் பிரச்சாரங்களும் சென்னை தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் நிறைவேற வழிவகுத்தன. அச்சட்டம் 1947 -லிருந்து தேவதாசி முறையை ஒழித்தது.

தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மேலவையில் கொண்டு வந்தபோது, திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

“கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு – இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் – தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது”, என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி – மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார். அப்போது நடந்த விவாதம்…

சத்திய மூர்த்தி அய்யர் : தாசிகள் கலைஞர்கள், அவர்களை ஒழிப்பது, கலையை ஒழிப்பதற்குச் சமம். அதோடு இது இறைவனுக்கு உகந்த விசயமா??

முத்துலட்சுமி : நான் கலையை ஒழிக்க சொல்லவில்லை, கலையின் பெயரால் விபச்சாரம், ஒழுங்கீனம் நடப்பதையே எதிர்க்கிறோம்..

சத்திய மூர்த்தி அய்யர் : இறைவனுக்கு பொட்டு கட்டிக்கொள்வது புண்ணியம், இந்த புண்ணியம் முத்துலட்சுமிக்கு வேண்டாமா ?

முத்துலட்சுமி : மதிப்பிற்குறிய சத்திய மூர்த்தி சொல்வது சம்மதிக்க தகுந்த கருத்து மாதிரி தெரியலாம் ஆனால் தேவதாசி முறையில் எங்கள் சமூகத்தினர், அலுத்து போய்விட்டார்கள்.. அந்த புண்ணியத்தை நிறையைவே திகட்டும் அளவுக்கு நாங்கள் அனுபவித்துவிட்டோம்.. எனவே தாங்கள் தங்கள் சமூகத்தினரை தேவதாசி முறைக்கு கட்டுப்பட சொல்லி கொஞ்ச காலம் அந்த புண்ணியத்தை அனுபவிக்கச் சொல்ல தயாரா ?

சத்திய மூர்த்தி அய்யர் : (கப் சிப்)

இப்போது சொல்லுங்கள், ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை பார்ப்பன கும்பல் காப்பாற்ற போராடிய “தேவாதாசி” என்னும் சொல், இப்போது எச்ச.ராஜா அய்யர்வாள்களுக்கு எட்டிகாயாய் கசக்க தந்தை பெரியாரும், திராவிட முன்னோடியான நீதி கட்சியும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் & டாக்டர் முத்துலட்சுமி அமையாரும் தானே காரணம்.

வாழ்க தந்தை பெரியார்.. வளர்க அவர் தொண்டு.. திராவிடம் மறவேல்..

– Prakash JP

__________

__________

தேவதாசி குலம் குறித்து 1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கொடுக்கும் விளக்கம் என்னவென்றால், “வேறு வேறு சாதிகளை சேர்ந்த ஆண் – பெண் இருவரின் தவறான நடத்தையால் பிறக்கும் பெண்களே கோயில்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்கள். கோயில்களில் பாட்டு, நடனம் என்பது இவர்களது தொழில்” என்கிறது.

தேவதாசிமுறை ஒழிப்பு தொடர்பான மசோதா, 1920 -களின் இறுதியில் சென்னை மாகாண சட்டமன்றத்தில் முத்துலட்சுமி ரெட்டி அம்மையாரால் கொண்டு வரப்படுகிறது. அதை எதிர்த்துப் பேசிய அன்றைய காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், “தேவதாசிகள், ஆண்டவனின் திருப்பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்கள். புனிதத்தன்மை பெற்றவர்கள். இந்த மசோதா மூலமாக சமூக ஒழுங்கு கெடக்கூடும். சமூகத்துக்கு தாசிகள் தேவை. இவர்கள் இல்லாவிட்டால் சங்கீதம் மற்றும் பரதக்கலை அழிந்துவிடும்” என்றெல்லாம் எதிர்த்துப் பேசினார். முத்து லட்சுமி ரெட்டி கொடுத்த பதிலடி மிகவும் பிரபலம்.

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் ஒரு மகளிர் கல்லூரியில் பரதநாட்டியம் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடந்தது. அப்போது பரதநாட்டிய மங்கையான சொர்ணமால்யா விழாவில் கலந்துக்கொண்டு தேவதாசி முறையை ஆதரித்துப் பேசினார். என் நினைவு சரியாக இருக்குமேயானால் “தாசிகள் என்போர் கடவுளர்களின் துணைவியர்” என்று சொல்லியிருந்தார். திராவிட இயக்கம் தேவையில்லாமல் அரசியல் செய்து அந்த புனித முறையை ஒழித்தது என்று பேசி, கடுமையான எதிர்ப்புகளை சம்பாதித்தார்.

தினமணி விழாவில் கவிஞர் வைரமுத்து, அமெரிக்க இண்டியானா பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த ‘Indian movement : some aspects of dissent, protest and reform’ என்கிற நூலில், “Aandal was herself a devadasi” என்று குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். இப்போது வைரமுத்துவை யார் எதிர்க்கிறார்கள், எதற்கு எதிர்க்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள மேற்கண்ட பத்திகள் உதவலாம்.

 – Yuva Krishna

__________

__________

மனுஷ்யபுத்திரனின் புதிய தலைமுறை விவாதம்:

கடவுளை விமர்சித்ததால்தான் கலைஞரின் பேச்சை கடவுள் புடுங்கிட்டார்.
– எச்ச. ராஜா

அட வெண்ண, நீ முதல்ல 90 வயசுவரைக்கும் தாங்குறையான்னு பாரு… அப்புறம் பேசலாம்..

“வாழ்நாள் முழுவதும் கடவுளை வணங்கிய வாஜ்பாயிக்கு அதை புடுங்கியது யார்? வெளியே கூட காட்டமுடியாம “மம்மி” கணக்கா வெச்சிட்டு இருக்கீங்க..

விதவிதமான பூஜை புனஸ்காரங்கள், ஏராளமான யாகங்கள், மந்திரங்கள், கோயில் வழிபாடுகள் என வாழ்ந்த ஜெயலிதாவின் பீசை சீக்கிரமாகவே பிடுங்கியது யார்??

அதைவிடக் கொடுமை. ராமனுக்காக கோயில் கட்டப்போகிறேன் என்று நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்திய அத்வானி இன்று ஆளும் பா.ஜ.கவின் உதிர்ந்த ரோமமாக, அரசியல் அனாதையாக ஆகிவிட்டது எதனால்?”

என்று நாங்களும் கேட்கலாம். ஆனால் கேட்கமாட்டோம் 🙂

– Prakash JP With Ganesh Babu

__________

டுமையாக மனநிலை பாதிக்கப்பட்டுள்ள எச்.ராஜாவை தங்கள் கட்சியின் தேசியச் செயலர்களில் ஒருவராக வைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் பெருந்தன்மை உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

– Yuva Krishna

__________

காவிங்க கூட சகவாசம் வச்சி எவ்வளவுதான் (தருண் விஜயின் திருக்குறள் காமடி & மோடியின் புத்தக மொழிப்பெயர்ப்பு) ஒட்டி உறவாடினாலும், “பூநூல்” இல்லைன்னா ரொம்ப கீழிறிங்கி அவமானப்படுத்தி செருப்பால் அடிப்பாங்கன்னு இப்போ வைரமுத்துவுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்!

– Srinivasan J

___________

___________

விப்பேரரசு வைரமுத்துவை நாங்கள் விமர்சிக்க பல காரணங்கள் இருக்கலாம். எவரும் கூட விமர்சிக்கலாம் – பொருளோடு!

ஆனால், வேசி மகன் என்றெல்லாம் பேசுகிற நாக்கொழுப்பை, பூணூல் கொழுப்பை ஒருபோதும் ஏற்க முடியாது. காலம் காலமாக தேவடியாள் மகன்- சூத்திரன் என்று இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து வெளிவந்து, போராடி வென்ற ஒருவரைப் பொது மேடையில் ‘வேசி மகன், தாசி மகன்’ என்றெல்லாம் பேசுகிற திமிர்த்தனத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

அது எந்த பூணூல் பொறுக்கியாக இருந்தாலும் சரி, பூணூலுக்கு வால் பிடிக்கும் எந்தப் பொறுக்கி ராமனாக இருந்தால் சரி, உரிய பதிலைத் தந்தே ஆக வேண்டும்.

தேவதாசி என்று காலம்காலமாக எங்கள் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டதாக நாம் கொதித்தபோது, அப்படியெல்லாம் இல்லையென்று குதித்த இந்த ஆர்.எஸ்.எஸ். பொறுக்கிகள், இப்போ எந்த வாயை வைத்துக் கொண்டு வைரமுத்துவை திட்டுகிறார்கள்.

ஆட்டம் அதிகமாகிறதென்றால் அஸ்திவாரம் கோளாறு என்று பொருள். உங்கள் அஸ்திவாரத்தோடு சாயும் காலமடா இது! சாய்ப்போம் சனாதனத்தை… வேரோடு!

– Prince Ennares Periyar

__________

எச்.ராஜா என்னும் பார்ப்பனன், “ஆண்டாளை தேவதாசி என்று வைரமுத்து சொல்லியதற்காக, இந்துவின் இதயத்தை ஈட்டியால் வைரமுத்து குத்திவிட்டதாக கூறி, வைரமுத்துவின் அநாகரிக பேச்சுக்கு இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” அதர்ம யுத்தம் நடத்துகிறார்.

பாவம்….எச்.ராஜா வடக்கே இருந்து தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததால் அவருக்கு திராவிடர்கள் எதிர்த்த புராணம், இதிகாச யுத்தங்களின் வரலாறுகள் தெரியாமல் போய்விட்டன.

திராவிடர் இயக்கத்தினர் ஆண்டாளின் காமக் கவிதைகள் குறித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது அதற்கு எதிர் விளக்கம் அளிக்க முடியாமல்… ‘ஆண்டாள் என்ற ஒரு பெண் இல்லவே இல்லை’ என்று சொன்னதும் ஒரு பார்ப்பனன் தான். அந்த பார்ப்பானை எச்.ராஜா எப்படி தண்டிக்கப் போகிறார்?

வைரமுத்துவின் பேச்சு ஆபாசம் என்றால் ஆண்டாள் எழுதிய காமத்தின் உச்ச உளறல்களை நாச்சியார் திருமொழி பாடல்கள், திருப்பாவை, பாசுரங்கள் என்று பார்ப்பனர்கள் ஏன் போற்றிப் புகழவேண்டும் என்று மக்களை வற்புறுத்துகிறார்கள்?

“கடவுளோடு புணர்வதோர் ஆசையால் கொங்கை கிளர்ந்து குமைந்துக் குதூகலிக்கிறது” என்று எழுதுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.

நாச்சியார் திரு மொழியில் இந்த பாடல் உள்ளது. திராவிடர் இயக்க பிரச்சாரத்தின் போது ஆண்டாள் கவிதைகள் குறித்த விமர்சனங்களுக்கு அஞ்சிய பார்ப்பனக் கூட்டம் விமர்சனத்தை எதிர் கொள்ளத் தயங்கி திணறிய போது, ராஜகோபாலாச்சாரியார் என்னும் பார்ப்பனன் எழுதினார்:

“ஆண்டாள் என்னும் ஸ்திரீ இருந்ததேயில்லை. நாலாயிரப் பிரபந்தத்தில் ஆண்டாள் பாடியதாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவையல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங்களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார். ” (திரிவேணி செப்டம்பர் 1946)

ஆச்சாரியார் என்ன புராண மறுப்பாளரா? இந்து மத எதிர்ப்பாளரா? அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.

பிறகு ஏன் இப்படி எழுதுகிறார்? இவ்வளவு ஆபாசமாக ஒரு பெண் எழுதி இருப்பதாக இருக்கிறதே, மானம் போகிறதே! விரக தாபம் எடுத்து கடவுளோடு புணர வேண்டும் என்று துடிப்பதாகப் பாடல் எழுதினால் படிப்பவர்கள் காரித் துப்பமாட்டார்களா என்ற எண்ணத்தில் இப்படி கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

ஆச்சாரியார் சொன்னதை ஏற்றுக் கொண்டால் வெங்கடாசலபதிக்குச் சாத்துவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிய மாலையை எடுத்துச் செல்வதாகக் கூறும் இந்தக் கதைகளைக் குப்பைக் கூடையில் தூக்கி எறிய வேண்டும்.

இல்லை, இல்லை. ஆச்சாரியார் சொல்லுவது அபவாதம்! புராண விஷயத்தில் ஒன்றைத் தப்பு என்று ஒப்புக் கொண்டால் அடுத்தடுத்து ஒவ்வொன்றையும் பொய்யென்று சொல்லக் கூடிய சூழல் ஏற்பட்டுவிடும் என்று சொல்லுவார்களேயானால்,

தகப்பனைக் கல்யாணம் செய்து கொண்டதையும் தந்தையோடு புணர மகள் ஆசைப்பட்ட அசிங்கத்தையும், ஆபாசத்தையும், அருவருப்பையும், அநாகரித்தையும் ஒப்புக் கொண்டு, எங்களின் அர்த்தமுள்ள இந்து மதத்தின் பெருமையே இது தான் என்று ஒப்புக் கொள்ள வேண்டும்.

* ஆண்டாள் சர்ச்சை. மற்றொரு பதிவு: http://bit.ly/2CMciEd

– ©Yuma JAHARO [தமிழச்சி]

 

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  • மூன்றாந்தரம், நாலாந்தரம், ஐந்தாம் படை போன்றவை வர்ண படிநிலையை பிரதிபலிக்கும் சொற்களா? அவற்றை கையாளுவதில் நாம் கவனமாக இருக்க வேண்டுமா?
   தோழர்கள் விளக்கவேண்டும்.

 1. “Rssஎச்ச” ராஜைவை கடுமையாக கண்டிக்கும் அதே வேளையில் நாம் வைரமுத்துவையும் மிக கடுமையாக கண்டிக்கவேண்டும்.ஏனேனில் எச்சகும்பல் செய்யும் அனைத்தும் பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது, ஆனால் வைரமுத்து அவர்களின் வேலை துரோகத்தனமானது.நவீன ஆழ்வானாக தருண விஜயின் திருக்குறள் பரப்பும் வேஷத்தை, இனப்படுகொலையாளன் மோடியின் கவிதை (என்ன கருமமோ) தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு புகழ் பாடியது….
  எச்சல்கள் அழிக்கப்படும் என்பதுதான் வரலாறு.இனியாவது கவிஞர் வைரமுத்து திருந்திக்கொள்வாரா?

  • பாரதிராஜாவிற்கு இருக்கும் கோபம் கூட வைரமுத்துவிற்கு இல்லை.
   அவருக்காக நாம் கோபப்படுகிறோம். ஆனால் அவர் எச்ச ராஜாவிடம் வருத்தம் தெரிவிக்கிறார்.

   • ‘Vaira’muthu is a boot kicker of hindu fundamentalist group for getting yaana peedai award. He can go to any level to achieve this. But this is a politics done by writer suyamogam along with mylapore mafia.

 2. http://www.livelaw.in/chief-justice-india-law/

  Few days back senior lawer dushyant dave written an article about chief justice and allocating cases to judges.

  functioning of today’s Supreme Court will reveal that the Chief Justice has been exercising powers in a completely opaque and unfathomable manner. Several instances in recent months reflect that the Constitution Benches are constituted by including only certain Judges and excluding therefrom certain other Judges. Now there can be no doubt that every Judge of the Supreme Court is a Judge within the meaning of Article 124 and stands on the same footing with others. There cannot even be any doubt on individual’s selection. It is not my endeavour to criticise or attack any individual Judge. But the fact remains that senior Judges and even Judges who are known for their proficiency in certain branches of law are excluded from such Benches. The Five Judge Bench which passed the order of November 10 2017 was constituted by the Chief Justice ignoring senior most Judges being J2, J3, J4, J5, J7, J9, J11, J13, J14 and J15. Even assuming that the Chief Justice felt that the Bench of Justice Chelameswar and Justice Nazeer could not have passed a judicial order referring the Writ Petition in question to a Bench comprising of first five Judges in the order of seniority, Chief Justice should himself constituted Bench of the same Judges. The order passed by the Bench presided by the Chief Justice eloquently speaks about, “judicial discipline and decorum” and “convention” followed by the Court. Those very principles would oblige the Chief Justice not to pick and choose in constituting Benches. If in the case relating to Justice Karnan, seven senior most Judges presided the Bench, it should have been done so in the very Writ Petition in which the order of November 10, 2017 was passed.

  Recent trend shows that the Chief Justice who has powers to allocate cases appears to be doing so on selective basis. Again, it is not my endeavour to criticize the outcomes or judgments given in such cases. But the manner of allocation raises serious issues about the Independence of Judiciary. For example, recent matter challenging the appointment of Additional Director of CBI was placed before the Bench of Mr. Justice Ranjan Gogoi and Mr. Justice Navin Sinha, but the same was released by an order to the following effect,“List the matter on Friday i.e. 17th November, 2017 before a Bench without Honble Mr. Justice Navin Sinha.” The matter was later listed on 17thNovember, 2017 before a bench presided by Mr. Justice R.K. Agrawal although on that very day Mr. Justice Ranjan Gogoi was sitting not with Mr. Justice Navin Sinha but with Mr. Justice R.F. Nariman and Mr. Justice Sanjay Kishan Kaul. The matter ought to have been placed before that Bench. The outcome could have been the same. But again this raises a very serious issue. There appears to be a pattern in distribution of such cases. There are many such examples which can be traced with careful examination. Matters involving Constitutional Authorities and certain issues relevant to political spectrum are being marked to certain Benches, the record shows.Unfortunately, this has been going on in the Supreme Court unchecked and uncommented for some time. Chief Justice Khehar allocated the Birla Sahara matter to a Bench presided by Justice Arun Mishra and Justice Amitava Roy overlooking 10 Senior Benches. Similarly Chief Justice Khehar, after converting an administrative letter by the widow of Kalikho Pul into a petition, allocated the same to the Bench of Justice Goel and Justice Lalit, who were sitting in Court No. 13, overlooking Court Numbers 2 to 12 for no reason.What then is the purpose of subject wise allocation of work to Benches and computerized allocation of matters? What can be, if at all, the justification for this? Does the Chief Justice not trust all his esteemed colleagues? Does he feel some are more competent than other? Or does he feel some are so independent that matters of political sensitivity should not be send to them? One is left only to guess.

 3. வினவு மேடையில் வினவு பற்றி அமெரிக்க “பல்கலை” இழிமேற்கோள் காட்டப்பட்டால் வினவு கும்பல் விசிலடிக்குமா?.. செருப்பாலடிக்குமா?..

  • அந்த கருத்துக்கு பதில் அளிக்கு மே தவிர எச்ச.ராஜா மாதிரி பேச மாட்டார்கள்

  • ‘வினவு கும்பலா ‘? இந்த வார்த்தையை அடிக்கடி வேற ஒருத்தர் இங்க பயன்படுத்துவார்.
   ஆனா மெய்யாலுமே உங்கள மணிகண்டன்னு சொல்லமாட்டோம், பிளிஸ் கண்டினியூ மிஸ்டர் அட்வோகேட் ….

 4. தேவதாசி முறை என்பது கிறித்தவ கன்யாஸ்திரி முறைக்கு ஒப்பானது. இங்கிலாந்து வேறு நாடு களால் மதங்களால் 1000 ஆண்டுகள் ஆளப்பட்டிருந்தால் அங்கு இந்த விவாதம் நடைபெற்றிருக்கும்.. அவ்வள

  • அப்பறம் ஏன் ஆண்டாளை தேவதாசி என்றால் உங்களுக்கு கோபம் வருகிறது?
   இவ்வளவு சிறப்பான முறையை 1930களில் டாக்டர் முத்துலட்சுமி அம்மா எங்களுக்கு வேண்டாம், வேண்டுமானால் உங்கள் குலப் பெண்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியபோது ஏன் வாயை மூடிக்கொண்டு சும்மா இருந்தீர்கள்? எடுத்து செய்திருக்க வேண்டியதுதானே!
   ஆனால் ஒன்று! அப்படி செய்திருந்தாலும் அந்தப் பெண்களை மீட்கவும், பெரியார்ளையும், அம்பேத்கர்களையும் விட்டால் வேறு நாதியில்லை.

   • காலப்போக்கில் இஸ்லாமிய, கிறிஸ்தவ படையெடுப்பு மற்றும் ஆட்சி முறை காரணமா கிறிஸ்தவ கன்யாஸ்திரி போன்ற புனித இறை சேவையாக இருந்த தேவதாசி முறை சுரண்டலுக்கு உட்படுத்தப்படடது இதற்கு முதற்காரணம் அந்நிய படையெடுப்பே காரணம் , முத்துலட்சுமி (ரொட்டி) அம்மையாருக்கு தேவதாசி முறை ஒழிப்பு முறை சட்ட வரைவு ஆலோசனை தந்து உறுதுனையாக இருந்ததே சர் சி பி ராமசாமி பையர் என்ற இந்து தான் எனவே இந்துக்களுக்கு காலத்துக்கு ஏற்ற மாறுதல்களை ஏற்றுக்கொண்டு முன் செல்ல தெரியும் உ-ம் , மக்களாட்சி, வரதட்சணை ஒழிப்பு, சாதி பாகுபாடு ஒழிப்பு , மதச்சார்பின்மை இன்ன பிற , இவையெல்லாம் இந்து இருக்கும் வரை தான் இந்த நாட்டில் இருக்கும் , இந்து இல்லாமல் பண்முகதண்மை இல்லை, பாகிஸ்தான், ஆப்புகானிஸ்தான் , பங்க லா தேஷ் இங்கெல்லாம் கம்யூனிசம் ஏன் இல்லை ?..

    • வினவுக்கு சாதிகண்ணோட்டம் இருக்கிறதா என முதலில் சொல்ல வேண்டும் , சாதி அடிப்படையில் பெண்களை இவ்வாறு இழிவு இழிவு படுத்துவது தான் உமது கம்யூனிசமா?.. இது அப்பட்டமான ஆணாதிக்கம் இல்லையா?..

     • இது சாதிக்கண்ணோட்டம் இல்லை ரங்கராஜன் அவர்களே! ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் எங்கள் தாய்மார்களை தேவதாசிகளாக வைத்திருந்த கோபம்.
      இன்று உங்கள் ஒரு ஆண்டாளை தேவதாசி என்று கூறியவுடன் உங்களுக்கு எவ்வளவு கோபம் வருகிறது?
      எங்கள் வேதனையையும் கோபத்தையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.

      • ஆவ்வாறு சுரண்டியதும் , சீரழித்ததும் படையெடுத்து வந்தவர்கள்.. கோபத்தை அவர்களிடம் காட்டும்..

        • அப்புறம் ஏன் நாங்கள் தேவதாசி முறை ஒழிப்பு சட்ட மசோதா கொண்டு வந்த போது அதை எதிர்த்தீர்கள்?

         • கேள்வியே தப்பு , தேவதாசி சட்ட முன்வரைவை தயாரித்து முத்து லட்சுமி அம்மாளுக்கு தந்ததே சர் சி பி ராமசாமி என்ற சட்ட அறிஞர் அவர் தீவிர இறைநம்பிக்கை கொண்டவர், உமக்கு சத்தியமூர்த்தி என்பவர் சட்டத்தில் திருத்தம் ( தேவதாசி முறை அதன் தூய வடிவில் அதாவது இறைசேவையாக மட்டுமே நீடிக்க வேண்டும் என ) கோரியதை ஒட்டு மொத்த இந்து மதமும் தேவதாசி முறையை உயர்திபிடித்ததாக செல்லப்பட்டு வருவதை மட்டுமே நம்ப ஆசை போலும் ! என்னே உமது பேதமை..

          • சரி, நீங்களே கூறியதுபடி, எல்லா பாப்பானுங்களும்தான் சொல்லுறாங்கல, தேவதாசிங்கிறது இறைசேவைன்னு.
           அதயேத்தன எங்க வைரமுத்துவும் சொன்னாரு!
           உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

         • ரெங்கராஜன் 5.1.2.1.1.1.1.1.1 -ல் சொன்னது இரத்தம் …. 6.1.1.1.1 -ல் சொன்னது தக்காளி ஜுஸ்

       • படையெடுத்து வந்தவர்கள் என்றால் ஆரியர்களைச் சொல்கிறீர்களா?
        அதனால், சரியாகத்தானே கோபப்படுகிறோம்

        • ஆரியப்படையெடுப்பு/ஆரிய குடியேற்றம் என்ற கருத்துக்கு உரிய இடம் குப்பை தொட்டி சொன்னது – பாரத ரத்னா சட்ட மேதை அரசியல் சாசன சிற்பி டாக்டர். அம்பேத்கர்..

         • அம்பேத்கர் கூறியது பற்றி எனக்குத் தெரியாது. அப்படியே கூறியிருந்தாலும் அது அவருடைய கருத்தாக இருக்கலாம்.
          ஆனால், சமீபத்தில் கூட உங்களுடைய ஊடுருவல் விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

  • அட்வகேட் அவர்கள் தன்வாதத்தை முழுமையாக வைக்கவில்லை, ஏனெனில் அவரது விமர்சனம் முழுவதும் வந்தால் அவர் RSS நபர் என்பது அம்பலப்பட்டுவிடும்.மேலும் வைரமுத்துவின் கட்டுரையில்தான் அமெரிக்கா பல்கலைகழக ஆய்வை மேற்க்கோள் காட்டியுள்ளார்.மேற்க்கண்ட பதிவென்பது முகநூலில் வந்துள்ள பல்வேறு நபர்களின் கருத்து.”நவீன ஆழ்வார்” வைரமுத்துவின் கட்டுரைக்கு எச்சராசாவின் கேவலவினைக்கு எதிர்வினைகள்தான் என்பது அட்வகேட்டுக்கு புரியாமல் இல்லை, அவர் முட்டாளாகயிருக்க முடியாது என்று நம்பலாம். எனவே அட்வகேட் அமெரிக்கா பல்கலைகழக ஆய்வுக்கும் வைரமுத்துவின் கட்டுரைக்கும் பின் எச்சராசாவின் கேவலவினைக்கும் விமர்சனம்வைத்து விட்டு பிறகு வினவை சாடலாம்…
   பொதுவாக தமிழக வழக்கறிஞர்கள் சமூகநீதியில் அக்கறையுள்ளவர்கள் என்பது வரலாறு தாங்கள் எப்படியோ?

   • வினவு கும்பல் மைண்ட் வாய்ஸ் முன்னயெல்லாம் எதிர்கருத்த C.I.A ஏஜண்ட்னு சொல்லி தப்பிச்சோம் இப்ப , ஆங் R.S.S னு சொல்லி சமாளிப்போம்..
    பிரகஸ்பதிகளே நிங்க எச்ராஜாவ திட்டினாலும் எஸ்ரா சற்குணத்த கொஞ்சினாலும் எனக்கு கவலயில்ல ஆனா ஏன் (டா) ஆண்டாளை தமிழிலக்கியத்தை தமிழ் கலாச்சாரத்தை சிறுமைப்படுத்துகிறீர்கள்..

  • சரிதான் ஆனால் கிருத்துவ கன்யாஸ்த்ரீகள் ஊர்ப்பணக்காரர்களுக்கு வைப்பாட்டிகளாக வாழ்வதில்லை. பணம்படைத்தோரும் இவர்களை வைப்பாட்டியாக்கிக்கொள்வதில்லை.

 5. தூங்குறியா நடிக்கிறியா ரெங்கராஜா….

  காது காதுன்னா லேது லேதுன்னு சொல்லப்படாது….

  புற்றரவல்குல் புனமயிலே போதராய்-னு ஆண்டாள் பாடுனாங்களா இல்ல கன்னியாஸ்திரிங்க பாடுனாங்களா..

  • தோத்திரம் ராஜா , என் கருத்து எளிமையானது, சேவையாக ஆரம்பித்த தேவதாசி முறை தொடர் அன்னிய படை எடுப்புகளால் கீழ்மைபடுத்தப்பட்டது, அவ்வளவே , இங்கிலாந்து மீது அன்னிய படையெடுப்பு நடத்து 1000 ஆண்டுகள் நீடித்து இருந்தால் அங்கும் அச்சேவகிகளுக்கு இச்சிறுமை சுமத்தப்பட்டிருக்கும்.. எமக்கு பக்தி இலக்கியம் உமக்கு “வேறு இலக்கியமாக பட்டால் அது “கருவின் குற்றமோ என்னவோ” ( சுஜாதா எழுதிய ஆழ்வார்கள் ஒரு எளிய அறிமுகம் – படித்தால் உமது சந்தேகம் நிவர்த்தியாகும்..

   • சேவையாக ஆரம்பித்த தேவதாசி முறை என்னான்னு கொஞ்சம் விளக்கினா நன்றாக இருக்கும் ரெங்கராஜன்…

    அதே மாதிரி அன்னிய படையெடுப்புகளால் தேவதாசி முறை எப்படி கீழ்மைப்படுத்தப்பட்டது என்று விளக்கினாலும் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

    பக்தி இலக்கியம் எழுதுறதுக்குன்னு எதாவது தமிழ் இருக்கா என்ன?

    • Raja!You should understand “Advocate”Rangarajan’s explanation thus;-The foreign agressors told the Dharmakarthaas,Jamindaars and Perumbannayaalargal that nothing is wrong in exploiting the “Devadasis”.Because of that license given to these people only,”Some”people objected the bill brought by Dr Muthulakshmi Reddy to abolish devadasi system in TN assembly in the 30’s justifying that system as a relief to the society.The retort given by Dr Muthulakshmi Reddy to these learned people is still well known.

     • தமிழில் பொய்யை பரப்பினால் தக்க மறுப்புரை ஆதாரத்துடன் தர்க்கபூர்வமாக கொடுக்கப்பட்டு வருவதால் ஆங்கிலத்திற்கு தாவிவிட்டீரே என்னவோ! எமது தாயை ஒழுக்க கேடராக பொய்யாக சித்தரிக்கும் உமது கும்பலின் உள் நோக்கம் மதமாற்றம் அன்றி வேறென்ன! எனினும் பதிலளிக்கிறேன்! பண்டைய தமிழகத்தில் இல்லற நாட்டமற்ற ஆணுக்கு துறவறமும் பெண்ணுக்கு கோவிலை சார்ந்து வாழ்ந்து கலை இலக்கியம் தத்துவ விவாதம் ஆன்மிக நெறி வகுத்தல் போன்ற சேவைகளில் ஈடுபட ஏதுவாக தேவதாசி முறைஏற்படுத்தபட்டது, ஆணைப்போல் பெண்ணுக்கு துறவறம் எனும் உரிமமை வழங்கப்படா காரணம் பெண்களின் பாதுகாப்பு கருதியே , ஏனெனில் பெண்ணை உடலாக மட்டுமே பார்க்கும் உம்மை போன்ற உமது ( கருத்தியல் ) முன்னோர்கள் அக்காலத்திலும் இருந்தனரே, ஓர் ஆயிரம் ஆண்டுகள் இந்நாடு, வாளாலும்/ துப்பாக்கியாலும் மதம் பரப்ப/ கொள்ளையடிக்க வந்த அன்னிய மிருகங்களால் ஆளப்பட்டதால் விதி முறைகள் / அற நியதிகள் மீறப்பட்டு தேவதாசி முறை சுரண்டலுக்கு உள்ளானது , உயிர்வாழும் உரிமையே மறுக்கப் பட்ட இந்துக்கள் எவ்வாறு ஒன்றினைந்து உரிமை மீட்பும் சமூக சீர்திருத்தமும் செய்ய இயலும்???..

      • //தக்க மறுப்புரை ஆதாரத்துடன் தர்க்கபூர்வமாக கொடுக்கப்பட்டு வருவதால்//
       நீங்க இந்த மாதிரி சொல்றதுக்கு அந்த “ஆதாரமும்”, “தர்க்கமுமே” வெக்கப்பட்டுரும் ரங்கராசன்!

 6. சில நாட்களுக்கு முன்தான் பிரதமர் மோடி அவர்களின் கவிதையை தமிழில் மொழிபெயர்த்த புத்தக வெளியீட்டில் கலந்துக் காெண்டு பாராட்டி மகிழ்ந்த வைரமுத்து … தற்பாேது அதே கூட்டத்திடம் மாட்டிக் காெண்டு தத்தளிக்கிறார் …? பாவம் …! நமக்கு இருக்கின்ற உணர்வு கூட அவருக்கு.ஏதாே காரணத்தினால் குறைவாக இருப்பதால் .. மன்னிப்பும் கேட்டு விட்டார் … காலம்செய்யும் காேலம் …!

 7. தூங்குறியா நடிக்கிறியா ரெங்கராஜா!!!

  மொட்டதலைக்கும் மொழங்காலுக்கும் முடிச்சுப் போடாதே ஓய்…

  புற்றரவல்குல் புனமயிலே போதராய்-னு பாடுனது ஆண்டாளா இல்ல கன்னியாஸ்திரிகளா??

 8. A nun is a member of a religious (Christian) community of women, typically one living under vows of poverty, chastity, and obedience. In contrast Devadaasi is a prostitute for Upper caste people imposed by so called hindhus….to stay in the temple and do service to upper castes. If devadasi is a noble service to god then Dr.Muthulakshimi reddy would have not resisted it in the assembly. Do not compare a CHRISTIAN NUN and hindu devadasi. Goebbels are Goebbels wherever they are and something that cant be hide by them because it is in their blood.

  • Big nonsense and offensive statement and totally false, maliciously made to eliminate hinduism in the world, these are not isolated incidents or lone wolf attacks these are clearly tailored mega conspiracy started its implementation via hired and implanted propaganda lobby
   whom expecting its peace of beef..

   • Right, mega conspiracy, put aluminum caps on every hinduhead. oh and yes if I get a piece of beef i would gladly conspire against your kind, what’s your problem? forgot about swallowing whole ghee fried calves?? maybe that reminded you of beef, what to do? old habits.

    • That was misrepresentation, that’s a symbolic ritual and not like today’s brutal behaviour of killing and eating land, sea and air animals in day light, and not satisfied with that you people went to jallikattu protest after eating beef and pork , atrocity..

     • A little home work to “Advocate”Rangarajan!”Write an essay on Aswamethayaagam and describe the feast after that yagam”
      It was told that as a good host Sita also asked Ravanan to wait till the arrival of Raman who will bring the dead deer so that she can feed Ravanan with tasty deer flesh.
      Only after the Buddhists and Jains became very popular with general public in the Mauriya period extolling the vegetarianism,the brahmins who used to consume meat stopped according to research scholars.

 9. கடவுள் பக்தி பல வகைப்பட்டது கடவுள், நண்பன், காதலன், எதிரி என்று பலவகை உள்ளது. ஆண்டாள் கடவுளை கணவனாக காதலனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்து ஸ்ரீரங்கத்தில் கடவுளை அடைகிறார்… அவரின் பாடல்கள் தமிழகம் மட்டும் அல்ல இந்தியாவில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் திருப்பவையாக பாடப்படுகிறது.

  சோப்பு வைத்து கொண்டு மற்ற சிறுமிகளோடு விளையாட வேண்டிய வயதில் கடவுளை நினைத்து அவர் எழுதிய பாடல்கள் சாதாரண விஷயம் கிடையாது. அந்த அறிவுக்கே தலைவணங்க வேண்டும் ஆனால் கடவுள் மறுப்பு பெரியார் என்ற பெயரில் ஆண்டாளை அவமதிப்பாக பேச கூடிய மனம் உலகிலேயே தமிழகத்தில் மட்டும் இருக்கும் ஒரு வக்கிர மனம்.

  • அதுதான் தப்பு. சொப்பு வைத்து விளையாடும் வயதில் சிறுமி கடவுளை வணங்கலாம். ஆனால் காதலித்து கலியாணம் கட்டிக்கொள்வேன் என்று சொல்லக்கூடாது. ஆன்மீகம் குழந்தைகளுக்குத் தேவையில்லை.

  • ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கறீங்களே மை லார்ட்…
   அதான் சிறுமின்னு சொல்றீங்களே….ஒரு சிறுமிக்கு கல்யாணம் கட்டிக்கலாம்னு ஆசை இருக்குதுனா அதுக்கு பேரு அறிவு இல்லை மூளை கோளாறு….ஏன்னா நாகரீகம் வந்த பிறகு இப்போ கல்யாணம் கட்ட பொண்ணுக்கு 18 வயசுன்னு சட்டம் சொல்லுது.

   ஒருவேளை உங்களுக்கு சொப்பு வெச்சு விளையாடுற பெண் குழந்தை இருந்து இப்படி கண்ணாலம் கட்டிக்க ஆசைப்பட்டா நீங்க கெட்டி வைப்பீங்களா?

   கடவுள்ங்கற பேருல பாப்பானுங்க ஆடுன ஆட்டத்துக்கு திராவிட இயக்கம் வேட்டு வேசத்துல உண்மையிலேயே நீங்க கடுப்பாகுறதுக்கு நெறைய இருக்குதுங்க மை லார்ட்.

    • ஆயிஷா உங்க பொண்ணா….அப்படி உங்க பொண்ணும் சிறுமியா இருந்தா நீங்க ஒத்துக்குவீங்களா…

     ஆண்டாள், ஆயிஷா மட்டுமல்ல எந்த பொன்னுக்கும் நேரக் கூடாதது இது.

     இப்படி சின்ன கொழந்தைகளை பக்திங்குற பேருல போக பொருளா ஆக்க கூடாது…. அதனால குழந்தை திருமணத்தை தடை செய்த போது பாப்பானுங்க என்னமா குதிச்சாங்க….

    • நிச்சயமாக, ஒன்பது வயது சிறுமியை என்ன காரணம் சொல்லி மணந்தாலும் அது குற்றமே, உடலுறவு கொண்டால் பாலியல் துஸ்பிரயோக குற்ற்றவாளி. இதில் யாருக்கும் எந்த மாற்றும் இல்லை.

  • ஆண்டாளுடைய தமிழ் அறிவை,மதித்துதான் தமிழை ஆண்டாள் என்று வைரமுத்து பேசினார்.அவருடைய தமிழ் புலமையை மற்ற அனைவரும் பார்க்கும் போது உங்களுக்கு மட்டும் வேறு விதமாக தோன்றுவது உங்கள் சிந்தனையில் கோளாறு எனக்காட்டுகிறது.
   தாசன் என்று ஆண்பாலை குறிக்கும் சொல் தாசி என்று சொல்லப்படும் போது வேறு அர்த்தம் கொடுக்கப்படுவது ஏன்?
   இரண்டிற்கும் இறைவனுக்கு அடியவர் என்று பொதுப்பொருள்தானே உள்ளது.
   ஆணையும் பெண்ணையும் சமநிலையில் பார்க்க மறுக்கும் நீங்கள் தான் வேறு அர்த்தம் கற்பிக்கின்றீர்கள்.
   தன் வாயில் கொண்டு வந்த தண்ணீரை இறைவனுக்கு குளிப்பாட்டி கறியை படைத்த கண்ணப்பன் தான் நாயனார் என்று அழைக்கப்பட்டார்.இறைவன் இங்கு விரும்பியது அகத்தூய்மையைத்தான்.தினமும் இறைவனுக்கு தினமும் நீரால் அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து வரும் தனக்கு கடவுள் எதையும் செய்யவில்லையே என்று புலம்பிய அந்தணருக்கு
   இறைவன் திருவிளையாடல் நடத்தி தன் இரு கண்களை இறைவனுக்கு அளித்த,கண்ணப்ப நாயனார் பெருமையை உலகறிய செய்தார்.
   படிப்பறிவில்லாத மோசஸ் மக்கள் அனைவரையும் வழி நடத்தி செல்ல வேண்டும் என்று இறைவன் கட்டளை இட்டதாக பைபிள் கூறுகின்றது.
   எல்லா மதங்களும் எளிய மனிதர்களின் தூய்மையான அன்பை தான் கடவுள் விரும்பியதாக குறிப்பிடுகின்றன.

   மேரி மேக்தலீ்னை,விபச்சாரம் செய்வதாக, அவரை

   கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்று அனைவரும் இயேசுவை கேட்ட போது,உங்களில் யார்இதுவரை குற்றமே செய்யாதிருக்கிறீர்களோ அவர்கள் முதலில் கல் எறியட்டும் என்றார் ,சிறிது நேரம் கழித்து பார்த்த போது கொல்ல வேண்டும் என்ற வெறி யோடு வந்த ஒருவரும் அங்கு இல்லை.
   இனிமேல் நீ பாவம் செய்யாதே,சமாதானமாகப் போ என்று இயேசு கூறினார்.பின்னாளில் இந்த மேரி மேக்தலீன்,இயேசு வின் சீடராகமாறினார்.
   உலகம் முழுவதும் பல இடங்களில் கிறிஸ்தவ மதம் பரவியிருக்க முன் வைக்கப்படும் காரணங்கள் பல உண்டு.
   அவற்றுள் மிக முக்கியமான காரணங்கள்,
   இறைவன் மனித உருவில் இருப்பது,
   மற்றொன்று தவறுகளை மன்னிக்கும் பண்பு.
   தவறுதல்,மனித இயற்கை தவற்றை எண்ணி மனம் வருந்துதல் அறம்.
   மனிதர்கள் அனைவரும் சமம் என்ற நிலை ஏற்படும் போது தான் உண்மையான அன்பும் ,சமாதானமும் சாத்தியமாகும்.

   • //ஆண்டாளுடைய தமிழ் அறிவை,மதித்துதான் தமிழை ஆண்டாள் என்று வைரமுத்து பேசினார்.அவருடைய தமிழ் புலமையை மற்ற அனைவரும் பார்க்கும் போது உங்களுக்கு மட்டும் வேறு விதமாக தோன்றுவது உங்கள் சிந்தனையில் கோளாறு எனக்காட்டுகிறது// ஏம்மா இதே வைரமுத்து மேரிமாதாவ பத்தி பக்கம் பக்கமா பாராட்டி பேசிட்டு கடைசியில கன்னி எப்படி இறைவனை ஈன்றாள்னு கேட்டா நீங்க ஏத்துப்பீங்களா?..

    • பாராட்டுகிற வாய் தூற்றவும் செய்யும்: இதை நீங்கள் உணர்ந்திருந்தால்,முதலில் அந்த வேலையை செய்து இருக்க மாட்டீர்கள்.
     வைரமுத்து திராவிட கொள்கைகளில் அபிமானம் உடையவர் என்று தெரிந்தும்
     அழைத்துவிட்டு இப்போது வெறி கொண்டு கூச்சல் இடுவது ஏன்?
     கண்டிப்பாக கிறிஸ்தவ மதம் சகிப்புத்தன்மை,மன்னிப்போம், மறப்போம் என்ற மனப்பான்மை கொண்டு இருப்பதால் தான் உலகறிய பரவியுள்ளது.
     இவர்கள் செய்வது என்னதென்று அறியாமல் செய்து விட்டார்கள்,மன்னியும்.
     இது இயேசு தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களுக்காக சொன்ன வார்த்தைகள்.
     ஆனால் உங்களைச் சொல்லி குற்றமில்லை.இந்து மதம்காலத்தில் முந்தியது.அப்போது இந்த வருந்துதல்,மன்னித்தல் போன்ற மிகவும் உயர்ந்த குணங்கள் வளர்ந்திருக்க சாத்தியமில்லை.
     சாத்தானிடம் கூட நல்ல பண்புகள் இருந்தால் கற்றுக்கொள்ள வேண்டும்.

     • தின”மணி” அழைத்தால் பக்தர்கள் எப்படி பொறுப்பாவார்கள், வைய்யிர முத்து உம்மை போல் “பரிசுசுத்தவான்” என்று சாமன்ய பக்தர்களுக்கு எப்படி தெரியும், என் அம்மாவை ஏன் அசிங்கமா பேசுறீங்க? என்று பிள்ளைகளும் பெண்களும் வாயால் கேட்பதும் விரதம் இருப்பதும் தவறா?.. குற்றமா?.. நீர் உமது போப்பய்யர் விஞ்ஞாநிகளை தண்டித்த வரலாற்றை மறந்து பேசுவது நாயமா?..

 10. உண்மையை பேசுவது எப்படி அவமதிப்பாகும்? நீங்க பக்தியை வச்சு கல்லாக்கட்டும் கும்பல், இந்த கடவுளை அடைவது குடைவது கதை எல்லாம் இங்க செல்லாது செல்லாது, இது சித்தர் பரம்பரைடி மக்கா. எங்களுக்கு யதார்த்தம் தான் கண்ணுக்கு தெரியும். இப்போ தெரேசாவே இறுதியில் இந்த பொய்ம்மை விளையாட்டை நினைத்து மனம் புளுங்கவில்லையா? நீங்கெல்லாம் குஷியாதாண்டி இருபீங்க, பாவம் பாதிக்கபட்டவங்களுக்கு அனுதாபபடுறது நாங்க. புரியுதா? இப்போ ஆண்டாள் வந்தா உங்களுக்கு செருப்படி உறுதி.

  • பேசும் விஷயம் அர்த்தமின்மை, பேசும் விதம் அநாகரீகம், தமிழ் பாடல் மூலம் ஆன்மிகம் பரப்பிய மகாலஷ்மியின் அவதாரமாகிய ஆண்டாளை தவறாக பேசும் உமது வினவு கும்பலின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டை கிறுஸ்தவ நாடாக மாற்றவது தான்..
   ஏனெனில் நேபாளத்தில் இதைத்தானே நீவிர் செய்தீர்..

   • ஹலோ வக்கீலு சார்,

    ரெம்ப பதட்டபபடுரீங்களே மாம்ஸ்….உங்க பேச்சுல ஒன்னும் விஷயம் இல்ல….

    மொதல்ல ஆண்டாள் ஒரு சிறுமியா இருக்கும் பட்சத்தில் விரசமாக பாடலை பாடுவதற்கு வாய்ப்பே கிடையாது..சும்மா பார்ப்பனர்கள் கூட்டம் காமரசம் சொட்ட எழுதி வைத்துவிட்து. அதை ஒரு சிறுமி மேல பழிய போடுறீங்களே…உங்களுக்கு கொஞ்சம் கூட வெக்கம் மானம் ரோசம் இல்லையா..
    கந்த புராணம்ம கருட புராணம், சிவா புராணம், விஸ்ணு புராணம்….என பாப்பானுங்க எழுதுன அத்தனையும் கிட்டதட்ட செக்ஸ் கதை தான்…

    உண்மையில் விடலை பசங்களுக்கு இந்த ஆபாச குப்பைகளை எல்லாம் கட்டவே கூடாது.

  • அப்படி என்றால் கிறிஸ்துவ மதத்தில் கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்களே அவர்களை பற்றியும் அவதூறாக உங்களால் பேச முடியும்மா ? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு நியாயமா ?

 11. சிறுமிகளோடு விளையாட வேண்டிய வயதில் கடவுளை நினைத்து ஆண்டாள் எழுதிய பாடல்கள் சாதாரண விஷயம் இல்லை, அந்த தமிழ் அறிவுக்கே வைரைமுத்து போன்றவர்கள் தலைவணங்க வேண்டும்.

  திருவள்ளுவரை மதமாற்றம் செய்தது போல் யாரோ ஒருவர் யூகத்தின் அடிப்படையில் ஆண்டாளை பற்றி தவறாக சொன்னால்(முக்கியமாக அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால்) உடனே அதை மேற்கோள் காட்டுவது பலருக்கும் வாடிக்கையாக இருக்கிறது. அதுவும் ஆண்டாள் ஒரு பெண் என்பதால், எப்படி இந்த மாதிரி எல்லாம் படலாம் என்று அவர் பக்தியை கொச்சைப்படுத்தி ஆண்டாளை தவறாக பேசுவது ஆண் ஆதிக்கத்தின் மனநிலையை தான் காட்டுகிறது.

  அவ்வுளவு ஏன் வைரமுத்து உட்பட அனைத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர்கள் ஆண்டாளின் பாடல்களில் இருந்து சில வரிகளை திருடி திரைப்படங்களில் பயன்படுத்தி இருக்கிறார்கள், அதை பலரும் வைரமுத்துவின் தமிழ் அறிவு வியக்க வைக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

 12. பக்தியை வச்சு கல்லா கட்டினால் ஆண்டவன் தண்டிப்பான்.. உமது பழிப்பு பேச்சுக்கு அசல் காரணம் கம்யூனிஸ இயல்பான ஆணாதிக்க நெறி, ஏன் பிராந்திய , தேசிய , சர்வதேச அளவில் ஒரு கம்யூனிச பெண் தலைவர் கூட இல்லை..

  • “Advocate”Rangarajan!Are you aware that how the women were treated and described in “Manuneedhi Sastram”?According to Manu,women should not be trusted.”One should not sit near a woman,even if she is his mother or sister”
   “A woman should never be independent.When she is little girl,she should be under the protection of her father;when she is married she should be under the care of her husband;when she become old,she should be under the care of her son”
   First read those and other most damaging slogans in Manuneedhi Sastram and then come here for the debate.
   Do you know the reason for the Sanskrit language is least spoken language?(only about 16000 people)in India.Veda virpannargal never talked to their wives in Sanskrit.They consider their own wives not fit to speak that language.
   And you are talking about the male chauvnism among communists?Have you heard of Pappa Umanath,Gowri Ammal,and the present day Brinda Karat and U.Vasugi.Do not expose your ignorance.

   • பாப்பா உமாநாத்! முன்னாள் மிஸ்.கல்கத்தா பிருந்தா காரத் ! பெண் தெய்வம் ஆண்டாளை நீங்கலெல்லாம் கருத்தியல் பாலின கேலிவதை செய்வதை மௌனமாக பார்த்து ரசிக்கும் “ஜனநாயக மாதர் சங்க வாசுகி ஆகியோர் தற்போது

   • உமது பார்வையில் தீடீரென்று “நல்ல” கம்யூனிஸ்டாக ரெடிமேட் ஞாஸ்நானம் பெற்றுவிட்டனர், இதற்கு முன்பு அவர்களை போலிகம்யூனிஸ்ட் என நீவிர் புறக்கணித்தாக நினைவு,
    இந்துமதத்தைபொறுத்த வகையில் ஸ்ருதி (இறைவழிகாட்டல்) மற்றும் ஸ்மிருதி (மானுட வழிகாட்டல் ) என இரு ஆதாரங்கள் உண்டு ஸ்மிருதி படைக்கும் உரிமையை புஷ்யமித்ர சங்கன் சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டான் என்பதால் இந்துக்கள் அதனை புறக்கனித்தனர்..

    • அப்படியானால்,வைரமுத்து அவர்களும்,ஏதோ சுய நலத்திற்காக பேசுகிறார் என்று புறக்கணித்து விட வேண்டியது தானே? ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?

    • The Manu Smiriti brought by Pushya Mitra Sungan is being followed by the believers even now.When not one but four names of women communist leaders are mentioned,you are only side tracking the issue.I never called any one as fake communists.

  • இது அச்சு அசலாக உங்கள் ‘முதலாளித்துவ’ நாயக விம்பங்களை சாக்காக சொல்லும் பழக்கத்தில் வந்தது (உதாரணம் – அம்பானியை பார், எப்படி ‘திறமையால்’ ‘உழைத்து’ முன்னுக்கு வந்தார் பாரீர்!!)
   பிரச்சினை என்னவென்றால் பாருங்கள், கம்யூனிஸ்டு, சோசியலிஸ்ட் களபணிகளில் பெண்கள் பெற்ற பங்கு மற்றும் மிளிர்வு பற்றி சொல்ல தனி பதிவு வேண்டும், களப்பணிகள் என்று சொல்வது ஆயுதபோராட்டங்களையும் தான். அவற்ற்றை விட்டால்கூட கம்யூனிசத்தில் பெண்கள் பெறும் சுயசார்பு மு.துவதில் பெண்கள் நினைத்து கூட பார்க்க முடியாது, இப்போ அவசரபட்டு இந்திரா நூயியை இங்கு சொருவகூடாது, சரிங்களா, நாம பேசுவது ஒட்டுமொத்த சமூகத்தை பத்தி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க