Sunday, November 29, 2020
முகப்பு அரசியல் ஊடகம் பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

-

பத்திரிக்கையாளர் ஞாநி அவர்களுக்கு எமது அஞ்சலி !

டக உலகில் மூத்த பத்திரிக்கையாளரான, ஞாநி (சங்கரன்) மறைந்துவிட்டார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு, அவருடைய மரணம் வாயிலில் நின்ற நிலையிலும் வாழ்க்கையை அர்த்தமுள்ள வகையில் வாழ்ந்தவர். இறுதிநாட்கள் வரை தனது அரசியல் விமர்சனங்களைப் பேசியும் எழுதியும் வந்தவர்.

பத்திரிக்கையாளர் ஞாநி

தமிழ் ஊடகச் சூழலில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், ஜனநாயகப் பண்புடன் உரையாடக் கூடியவர்களும், ஊடக முதலாளித்துவத்தை எதிர்த்து நிற்கக் கூடியவர்களும் மிகக் குறைவு. அந்த வகையில் ஞாநியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு, சங்கராச்சாரியை அம்பலப்படுத்தியது, அரசின் அதிகார முறைகேடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தது ஆகியவற்றில் ஒரு தொடர்ச்சியும், நேர்மையும் அவரிடம் இருந்தது. பெரியாரின் பாத்திரத்தை உயர்த்திப்பிடித்த அதே நேரத்தில் பாரதியையும் தனது ஆதர்சமாகக் கொண்டிருந்தார். அரசியல், திரையுலகம் தொடர்பான கருத்துக்களில் அவருடன், பல சந்தர்ப்பங்களில் வேறுபட்டு விவாதித்திருக்கிறோம் என்ற போதிலும், நட்புக்கோ, உரையாடலுக்கோ அது ஒரு தடையாக இருந்ததில்லை. அநேகமாக ஞாநியுடன் பழகி இருக்கக் கூடிய அனைவரது அனுபவமும் இத்தகையதாகவே இருக்கும் என்று கருதுகிறோம்.

தற்போது நடைபெற்றுவரும் புத்தகக் காட்சியில் “வழக்கம் போல எனது கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு உண்டு” என ஞாநி குறிப்பிட்டிருந்தார், இந்தப் புத்தகக் காட்சியில் ஞாநி இல்லை. அவரது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.

இவண்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

  1. எந்த பிரச்சனையிலும் தெள்ளத்தெளிவாக பிறருக்கு புரியும்படியாகவும் பிறர் ஏற்கும்படியாகவும் கருத்து சொல்ல மிஞ்சி இருத்த கடைசி ஊடகதுறை நல்லவரும் மறைந்து விட்டார்.. அஞ்சலிகள்..

  2. ” All politics today is bad. It would be worse if you keep away from it ” அவர்
    கூறிய இந்த ஒரு காெட்டேஷன் பாேதும் ஞானியைப்பற்றி அறிந்துக் காெள்ள …! அவர் சாெந்தமாக நடத்திய ” தீம்தரிகிட ” இதழில் எந்த பண்ணாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களையும் பாேட மறுத்தவர் அவர் … இன்று விளம்பரங்களை தேடி அலைந்து வால் பிடித்து ஜால்ரா அடிக்கிற கூட்டத்தில் இருந்து மாறுபட்ட. ஒரு பத்திரிக்கையாளர் … அஞ்சலி ..!!!

  3. ஞாநி மறைவுக்கு ம.க.இ.க.வின் அஞ்சலி குறிப்பு மன நெகிழ்வை தருகிறது. ஞாநி மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது.

  4. //ஞாநி மறைவுக்கு ம.க.இ.க.வின் அஞ்சலி குறிப்பு மன நெகிழ்வை தருகிறது. ஞாநி மீதான மரியாதையை அதிகப்படுத்துகிறது//

    நான் இதை ஆமோதிக்கிறேன்.

  5. இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் அவர் ரிப்போர்ட்டராக சேர்ந்த புதிதில் (1977)அவர் எனக்கு அறிமுகம்.பின்னர் பலமுறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.அரசியல் கருத்துக்களில் மாறுபட்ட பார்வை கொண்டிருந்ததால் சந்திக்கும் வேளைகளில் அரசியல் விவாதங்கள் காரசாரமாக நடைபெறும்.ஆனாலும் முற்றுப்பெறாது.அவரது நிலைப்பாடுகளில் அவர் விட்டுக்கொடுப்பதில்லை.ஆனாலும் அவரிடம் ஒரு நேர்மை இருந்தது உண்மைதான். சிலவேளைகளில் பொதுப்பிரச்சினைகளில் அவர் எனக்கு உதவிசெய்திருக்கிறார்.அவரது மறைவு வருத்தமளிக்கிறது.

  6. ஞானியின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். தோழமையுடன் இரங்கல் வெளியிட்ட வினவுக்கு நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க