Saturday, June 15, 2024
முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைசங்கிகளுக்கு ஃபேஸ்புக் மண்டகப்படி தொடர்கிறது !

சங்கிகளுக்கு ஃபேஸ்புக் மண்டகப்படி தொடர்கிறது !

-

முகநூலில் ஆண்டாள் விவகாரம் குறித்து சங்கிகளுக்கு பதிலடி கொடுக்கும் தமிழ் ஃபேஸ்புக் – பாகம் 2

**********

Rk Rudhran

வைரமுத்து மீது பெரிய மரியாதை இல்லாதபோதும் ஆண்டாளுக்காகப் பேசுவதாய் அநாகரிகமும் ஆணவமும் ஆபாசமும் கொப்பளிக்கப் பேசிய அந்தப்பெண்ணை சிறுமி என்று கடந்து போய்விடமுடியவில்லை.

இது ஓர் அபாய வருங்காலத்துக்கான அறிகுறி.
இந்து முஸ்லிம் சண்டை மூட்டி குளிர் காய முடியாமல் இந்துக்களுக்குள்ளேயே ஒரு சண்டை உருவாக்கும் குயுக்தி.
ஆண்டாள் மீது பக்தியோ மரியாதையோ அவள் கவிதையின் மீது ரசனையோ இல்லாத கூட்டம் ஒரு தீவிர கலக விளைவிற்காக பாசாங்கு பக்தியோடும் பொய்யான தன்மான ஒப்பனையுடனும் கிளம்பியிருக்கிறது.

து பல இளைஞர்களின் ரகசிய குரலாக இருப்பதே இதன் பேராபத்து.
அவள் நித்தி சிஷ்யை என்பதை மீறி அடுத்த தலைமுறையின் அரைவேக்காட்டு புரிதல் இதில் எச்சரிக்கை மணி அடிக்கிறது.

Athisha Vino

சாமியார்களின் பூசாரிகளின் கெட்டவார்த்தைகளைக் கேட்டு ரொம்பவெல்லாம் அதிர்ச்சி அடையத் தேவையில்லை.

காலங்காலமாக வேத மந்திரங்கள் என்ற பெயரில் நம்மிடமே துட்டு பெற்று நம்மையே நமக்குத்தெரியாமல் திட்டிக்கொண்டிருந்ததை
உலகவரலாற்றிலேயே முதல்முறையாக நேரடியாக தமிழிலேயே ஓதுகிறார்கள். இது முன்னேற்றம்தான்.

இந்து மதம் எப்படிப்பட்ட கழிசடைகளால் முட்டாள்களால் ஏமாற்றுக்காரர்களால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது, அது எப்படியெல்லாம் மோசமான காரியங்களுக்கு துணைபோகிறது, எப்படிப்பட்ட மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது என்பதையெல்லாம் அம்பலப்படுத்துவதில் நாத்திகர்களை விடவும் நித்தி, ஜக்கி, எச்ராஜா, ஜெயேந்திரா மாதிரி ஆட்கள்தான் திறம்பட உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Raj Dev

கவிஞர் வைரமுத்துவிடம் பேசியிருக்கும் கல்யாணராமன் தன்னை பிஜெபி – விவாதங்களில் வருபவன் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். ஒரு பொறுக்கிக்கு பரிவட்டம் கட்டி பெரிய மனிதனாக்கி விட்டிருப்பதற்கு இந்த தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள் வெட்கப்பட வேண்டும்.

ஆண்டாள் பற்றிய கவிஞர் வைரமுத்துவின் கட்டுரைக்கு வரும் இந்துத்துவ கும்பலின் நெருக்கடிக்கு பணிதல் கூடாது. இந்தியாவில் நிலவி வந்த பழம் விவாத மரபின் கழுத்தை இந்துத்துவ கும்பல் நெரிக்கிறது. Argumentative Indian என்ற நூலில் அமெர்த்தியா சென் இந்தியாவின் விவாத மரபை கவனப்படுத்துகிறார். அசோகரும், அக்பரும் செழுமைப்படுத்திய மரபு அது. இராமாயணத்தில் ஜபாலி சார்வாகக் கொள்கையில் ஊன்றி நின்று ராமன் காட்டுக்கு போவதை விமர்சித்ததை குறிப்பிடுகிறார். தமிழ் சூழலில் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் நவீன சமூக வளர்ச்சியின் ஒளியில் பழந்தமிழ் இலக்கியங்களை அணுகும் முறைமையை வளர்த்தனர்.

கவிஞர் வைரமுத்து வருத்தம் தெரிவித்தது தேவையற்றது. மிகவும் அற்புதமாக எழுதப்பட்டுள்ளது அவரது கட்டுரை. அவர் வைணவத்துக்குள் நின்றும், வெளியில் நின்றும் ஆண்டாளை, அவளது பாசுரத்தை மற்றும் அந்த காலகட்டத்தை அணுகி இருக்கிறார். அவற்றை உயர்ந்த மொழியில் முன்வைத்து இருக்கிறார். எந்த ஓர் எழுத்தாளனுக்கும் அகநிலை சார்பொன்றிருக்கும். அது தான் அவனை இயக்கும். வைரமுத்துவின் அகநிலையை வடித்தெடுத்தது திராவிட இயக்கம். விருதுகளுக்காவும், அங்கீகாரங்களுக்காகவும் எவ்வளவு சமரசமாக போக நினைத்தாலும் அதனை மீறி திமிறிக்கொண்டு திராவிட இயக்க அகநிலை சார்பு வெளிப்படுவதே இக்கட்டுரை. கடந்த ஆண்டு வள்ளலார் எப்படி வைதீக மரபிலிருந்து வேறுபட்டு சிந்தித்து இயங்கினார் என்பதை குறித்து நீள் கட்டுரை ஒன்றை இதே தினமணியில் எழுதினார். அதனை இந்துத்துவ கும்பல் கண்டுகொள்ளாமல் விட்டது ஒரு சதிக்கண்ணோட்டத்துக்கு இடம் தருகிறது.

வைரமுத்து தொட்ட உயரங்களை எளிதில் எவரும் தொட்டு விட முடியாது. எவ்வளவு தான் தீவிர இலக்கிய வேசம் போட்டாலும் சரி ஜெயமோகனால் நெருங்க கூட முடியாது. ஜெயமோகன் சினிமாவில் கதை வசனம் எழுத எத்தனித்த ஆரம்ப காலகட்டத்தில் சிவாஜியையும், எம்.ஜி.ஆரையும் ஜாலியாக தனது வலைதளத்தில் விமர்சித்தார். ஆனந்த விகடன் அதை பிரசுரித்தது. அதனால் அவரது சினிமா வாய்ப்புகள் தாமதமானது. பின்னர் தங்கர் பச்சான் பாணியில் கமுக்கமாக மன்னிப்பு கேட்டார் என்றறிய முடிகிறது. சில காலம் விகடனை எதிர்ப்பதை பேரறமாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அரற்றி கொண்டு திரிந்தார் ஜெயமோகன்.

மோடியின் ஆட்சியில் ஒரு விருதாவது பெற நினைத்த வேளையில் வைரமுத்து காட்டி கொடுக்கப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. மோடியின் ஆட்சியில் ஜெயமோகன் விருது பெறுவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை கணக்கு. எனவே விருது பெற விரும்பவில்லை என்று ஏற்கனவே அறிவித்து விட்டார். வைரமுத்து சில சரிகட்டல்களுக்கு தயாராக இருப்பதை ஜெயமோ உணர்ந்திருக்கக்கூடும். அதனால் எச்ச ராஜா மூலம் காரியம் கெடுக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியோ விருதுகளுக்கு ஏங்காத வைரமுத்து கிடைத்தால் நல்லது.

கி. நடராசன்

“பாஜக வெறும் அரசியல் லட்சியங்களைக் கொண்ட கட்சியல்ல. அது இந்து சங் பரிவாரத்தின் பகுதி. சங் பரிவாரம் இந்த தேசத்தை தாம் நம்பும் இந்து தர்மம், சித்தாந்தம் அடிப்படையில் கட்டியமைக்க எண்ணுகிறது. இந்த நாட்டில் ஒவ்வொரு நபரும் ‘நான்’ என்பதை இந்து அடுக்கின் பகுதியாக வரையறுத்துக் கொள்ளவேண்டும். இந்துத்துவம் எனப்படும் சமூக பண்பாடு அனைவரின் சிந்தனைகளையும் ஆளுமைகளையும் திருத்தி அமைக்கவேண்டும். இது எதற்கோ சாதனம் அல்ல. இதுவே அவர்களின் லட்சியம். இதற்கு அவர்கள் கல்வித் துறையை, பண்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு துறைகளை முக்கிய சாதனங்களாக தேர்வு செய்கின்றனர்……

மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காக என்றுமே வாய்திறக்காத கும்பல், இன்று வீதியில் இறங்கியிருக்கிறது !

சங்பரிவார் நிலை நிறுத்த நினைக்கும் உலகக் கண்ணோட்டம் இந்த நாட்டில் பல நூற்றாண்டுகளாக ஆதிக்கம் செலுத்திய கண்ணோட்டம் .அதனை நம்புவோர் இந்து ஆதிக்க சாதிகளிலும் ஒரளவிற்கு பிற்படுத்தப்பட்ட சாதிகளிலும் இருக்கிறார்கள் .அது அன்றாடம் வாழ்க்கையின் ஒரு பகுதி – அவர்கள் ஆளுமையின் ஒரு பகுதி .அரசியலில் அவர்கள் அனைவரும் பிஜேபி வாக்காளார்களாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை .காங்கிரஸ் வாக்காளர்களாக இருக்கலாம் .தெலுங்கு தேசம் வாக்காளர்களாக இருக்கலாம் ,சில பேர் கம்யூனிஸ்ட் வாக்காளராகவும் இருக்கலாம் . இவர்களில் பலபேர் சமூகரீதியாக அறிவுஜீவி வர்க்கத்தைச் சார்ந்தவர்களாக இருப்பதால் இந்த உலகக் கண்ணோட்டத்தை பிரச்சாரம் செய்யும் கருவிகளாக அன்றாடம் பணியாற்றுகிறார்கள் .எழுத்தாளர்களானாலும் கலைஞர்களானாலும் இவர்கள் இந்தக் கருத்துப் பிரச்சாரத் தளங்களில் உதவிக்கொண்டே இருப்பர்.”

மனித உரிமைப் போராளி – பாலகோபால்

ஆனால் நாம பார்க்க வேண்டிய பிழைப்பு இதுவல்ல..
இந்த மோடி இந்துத்துவா கும்பலில் மக்கள் விரோத- கார்ப்பரேட் தேச துரோக திட்டங்கள்… என்று அதிகாலை ஆண்டாள் அனுப்பிய காகங்கள் காலை 6 மணிக்கு கரைந்து சொன்னது

…………………………

உண்மையில் விவாதிக்க வேண்டிய இந்த விசயங்கள்தான்.. ஆனால் நம்மை, மக்களைதிரளை திசை மாற்றும் இந்துத்துவ வெறுப்பு-பிளவு சதிகளில் ஒன்று தான் ஆண்டாள் பிரச்சனை

Thanks to Mr. Lakshmikanthankutty

பா.ஜ.க மூன்றாண்டு ஆட்சி.

1-பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு
2-மருந்து பொருள் விலை உயர்வு
3-ரயில் கட்டண விலை உயர்வு
4-கேஸ் விலை உயர்வு
5-புதிய வரிகள்
6-பெரு முதலாளிகளின் வாராக்கடன்
7-வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்
8-ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்
9-ரூபாயின் மதிப்பு
10- மோடி வெளிநாட்டு பயணங்கள்
11- வெளியுறவு கொள்கை
12- ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்
13- உதய் மின்திட்டம்
14- தமிழ்நாடு வறட்சி நிவாரணம்
15- தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்
16- காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு
17- அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு
18- ராணுவத்திற்காண உணவில் முறைகேடு
19- சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு
20- பலுசிஸ்தான் தலையீடு
21- இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்
22- பென்சன் வட்டி விகிதம் குறைப்பு மற்றும் விதிமுறை மாற்றங்கள்
23- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்
24-ஜி.டி.பி குளறுபடி
25-புதிய வங்கி கட்டணங்கள்-ஆதார்
26-அந்நிய நேரடி முதலீடு
27-தூய்மை இந்தியா திட்டம்
28-மேக் இன் இந்தியா
29-டிஜிட்டல் இந்திய திட்டம்
30-அணு உலை
31-புல்லட் ரயில்
31-நில கையகப்படுத்தும் மசோதா
33-ஸ்மார்ட் சிட்டி
34-ஹிந்தி திணிப்பு
35-காவேரி நீர்மேலாண்மை ஆணையம்
36-நீதிபதிகள் நியமனம் தாமதம்
37-ஜி.எஸ்.டி
38-சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்
39-IT ஊழியர்கள் பணி நீக்கம்
40-காஷ்மீர் தொடர் கிளர்ச்சி – பெல்லட் குண்டு
41-கல்புர்கி கொலை
42-ரோஹித் வெமுலா
43-ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்
44-வருண் காந்தி – ராணுவ ராணுவ ரகசியங்கள்
45-ரகுராம் ராஜன் மாற்றம்
46-ஜல்லிக்கட்டு
47-உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
48-எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி
49-ஜியோ சிம் விளம்பரம்
50-லலித் மோடி
51-வியாபம்
52-கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்
53-சுரங்க ஊழல் – மகாராஷ்டிரா & கர்நாடகா
54-தனி விமானம் 2000 கோடி
55-பிரான்ஸ் – பழைய போர் விமானம் அதிக விலை
56-15 லட்சம் ஆடை
57-பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்
58-பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு
59-முக்கிய பிரச்சனைகளில் மௌனம்
60-பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்
61-ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.
62-சஹாரா நிறுவன லஞ்சம் – மோடி முதலமைச்சராக இருந்த போது
62-தனியார் நிறுவன விளம்பரம் – JIO & PAYTM
64-குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்
65-பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் – மோடி கல்வி தகுதி
66-மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை
67-தேச பக்தி நாடகங்கள்
68-மேகாலயா கவர்னர் காம லீலை
69-ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி
70-பாபா ராம்தேவ் – நில ஒதுக்கீடு
71-சமஸ்கிருதம் திணிப்பு
72-புதிய கல்வி கொள்கை
73-பொது சிவில் சட்டம்
74-கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் – 20,000 கோடி வீண்
75-மாட்டு கறி தடை
76-மாட்டு கறி கொலைகள் – அக்லாக், உனா(குஜராத்)
77-ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு – பசுமை தீர்ப்பாயம் அபராதம்
78-அயோத்தி ராமர் கோவில்
79-அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு
80-கட்டாய சூரிய வணக்கம் / யோகா
81-காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை
82-டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்
83-அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்
84-SBI மினிமம் பேலன்ஸ் 5000
85- சிறுபான்மையினர் விரோத போக்கு
86-மாட்டு அரசியல்
87- சிறுபான்மையினரும் தலித்துகளும் சங் பரிவாரங்களால் உயிருடன் அடித்து கொல்லப்பட்ட சம்பவங்கள்
88-நீட் தேர்வு
89-ரேஷன் மானியம் நிறுத்தம் .
_90 ஆதார் அட்டை குழா்படிகள்-

Rajagopal Subramaniam

நீங்க ஏன் இலக்கிய கூமுட்டைகள்ன்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்துறீங்க..? அது தீவிர இலக்கிய வாசகனாக என் மனதை புண்படுத்துகிறது, நீங்களும் ஒரு இலக்கிய வாசகர் தானே. பொறுப்பான இடத்தில் இருக்கும் நீங்களே இப்படி பேசலாமா என இன்பாக்சில் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார்.

நண்பரே. எனக்கும் ‘அன்பின் இலக்கிய வாசகரே’ என்று ஆரம்பித்து உங்கள் மனம் புண்படாவண்ணம் பதிலளிக்க ஆசை தான். ஆனால், எனக்கு சில எழுத்தாளர்களை போல மனதில் தீரா வன்மத்தை வைத்துக் கொண்டு நயத்தகு நாகரிக வார்த்தைகளால் வன்மத்தை மறைத்து எழுத கூடிய திறமை இன்னமும் வாய்க்கப் பெறவில்லை. மேலும் நம் நாட்டில் குரங்கை குரங்கு என்று சொன்னால் கூட சில பக்தர்கள் புண்பட வாய்ப்பிருக்கிறது. பக்தர்கள் மனம் புண்பட்டாலும் பரவாயில்லை, அது குரங்கு தான் என்றாலும் குரங்கை குரங்கு என்று சொல்வது பக்தர்கள் மனம் புண்பட வாய்ப்பிருப்பதால் சொல்ல கூடாது என்று சொல்லும் தீவிர ஜனநாயகவாதிகள் இருக்கிறார்கள். எனவே, யார் மனமும் புண்படா வண்ணம் எழுத வேண்டும் என்றால் நான் என் வீட்டு டைரியில் தான் எழுத வேண்டும். மேலும் நீங்கள் நினைப்பது போல நான் பொறுப்பான பதவியில் எல்லாம் இல்லை. பளிங்கு மாளிகையில் கல்லுடைத்துக் கொண்டிருக்கும் சராசரி ஈ எம் ஐ அடிமை தான். சரி, இலக்கிய கூமுட்டைகள் என்று ஏன் சொல்கிறேன் என்பதற்கு பதிலளிக்க வேண்டுமானால் பதிவு நீளமாகிவிடும். உங்களுக்காக தற்போதைய நாட்டு நடப்பிலிருந்து ஒரே ஒரு உதாரணம் மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். நித்தியானந்த பரமஹம்சர் (நித்தி என்று எழுதினால் அவர் மனம் புண்பட வாய்ப்பிருக்கிறது) எனும் இந்து மத வீர துறவியின் சிஷ்யைகளுள் பால் மணம் மாறா பச்சிளம் சிறுமிகள் சிலர் வைரமுத்துவை பழித்து பேசிய வீடியோவை பார்த்திருப்பீர்கள். அதையொட்டி சமூக வலைத்தளம் எங்கும் கேலிகள், கிண்டல்கள் என உற்சாகம் கரை புரண்டு ஓடியது. நவீன பெண்ணியம் பேசும் எழுத்தாளர்களும் ஜனநாயகவாதிகள்அச்சிறுமிகளை மீட்டு மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டதையும் அறிவீர்கள். இதில் நமக்கு மாற்று கருத்து இல்லை என்றாலும் அவர்கள் நித்தியானந்த பரமஹம்சரின் ப்ளோ ஜாப் லீலைகள் குறித்தும் பேசி அந்த பச்சிளம் சிறுமிகளை இழித்து பேசி தங்களது சமூக அக்கறையை வெளிப்படுத்தி கொண்டார்கள். பிரச்சினை என்னவென்றால் நித்தியானந்த பரமஹம்சர் யாரையும் வன்புணர்வு செய்யவில்லை. அவர் யாரையும் கட்டாயப்படுத்தி அடைத்து வைத்திருப்பதாக புகார் செய்யவில்லை.

ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதே நித்தியானந்த பரமஹம்சரை தனது குருவாக வரித்துக் கொண்ட எழுத்தாளர், ப்ளோ ஜாப் வீடியோ மட்டும் வெளியாகவில்லை என்றால் இன்று யோகி ராம்சுரத்குமாருக்கு எப்படி ஒரு பாலகுமாரனோ அதே போல நித்தியானந்த சுவாமிகளுக்கு இந்த எழுத்தாளர் வரலாற்றில் நிலை பெற்றிருப்பார். ப்ளோ ஜாப் வீடியோ தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதால் உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட வாசகி புகார் செய்ய விரும்பாததால் மட்டுமே ‘அலியா நீ’ என்று கேவலமாக வசை பாடிய வெட் சாட் விவகாரத்தில் தன்னை புனிதப்படுத்திக் கொண்ட எழுத்தாளனை ஒரு புறம் கொண்டாடிக் கொண்டே மறுபுறம் நித்தியானந்தாவின் பால்மணம் மாறாத சிஷ்யைகளை பழிப்பதற்கு ஒரு இரும்பு மனம் வேண்டுமல்லவா..? அவர்களை போன்றவர்களை விளிப்பதற்கு எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்காததால் தான் இலக்கிய கூமுட்டைகள் என்று சொல்கிறேன். ஆனாலும், நீங்கள் இன்பாக்ஸ் வரை வந்து கோரிக்கை விடுத்ததால் இன்று இரவு நன்றாக யோசித்து இலக்கிய வாசகர்கள் மனம் புண்படாதவண்ணம் ஒரு வார்த்தையை காயின் செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.

ஜெய் இலக்கியம்!

Yuva Krishna

எது எப்படியோ வைரமுத்துவால் மீண்டும் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு, 1960களை போல தீவிரமடைந்திருக்கிறது. ரொம்ப பாதிக்கப்படப் போகிறவர் ரஜினி. சாதாரண மக்கள், ரஜினியை சோ மாதிரி பார்ப்பனப் பிரதிநிதியாகதான் கருதுகிறார்கள்.

குறிஞ்சி நாதன்

பாரதி ராஜா ஒருத்தர் பேசலாம்…
கள்ளர் முரசு இப்போதுதான் ஆர்ப்பாட்டமே செய்யலாம்
ஆனால் தோழர் சொல்வதுதான் தமிழகத்தின் உளவியல்
இது மாறாத வரை எச்சைகள் குலைத்துக்கொண்டேதான் இருக்கும்…

நல்லா திட்டு சாமி. நீங்க எங்கள விட உயர்ந்தவ‘ர்’

‘வேசி மகன், உங்க அம்மா வேசி, தலையை வெட்டணும்’ இப்படி எல்லாம் கவிஞர் வைரமுத்துவிற்கு எதிராகப் பண்பாடோடு பேசுபவர்கள் மற்ற எல்லா ஜாதிக்கார்களையும் ரவுடிகளாகப் பொறுக்கிகளாகச் சித்திரிக்கிற பார்ப்பனர்கள். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பேசுகிறார்கள்.
இப்படிக் கெட்ட வார்த்தைகளோடு ‘இந்து’ என்கிற பெயரில் அதிகமாக அய்யங்கார்களே வெகுண்டெழுகிறார்கள், பதிலுக்கு வைரமுத்து ஜாதிக்காரர்கள் யாரும் அவருக்கு ஆதரவாக வரவில்லை. வரவும் மாட்டார்கள்.
இதையே தாழ்த்தப்பட்டவர்கள் ஒன்றுகூடி ‘இந்து’ என்ற அடையாளத்தோடே இப்படிப் பேசியிருந்தால், இந்நேரம் ஊரையே கொளுத்தி இருப்பார்கள்.
ஏனென்றால் ஜாதி சிஸ்டம் இயங்கும் நிலை அப்படி.
தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் அதிலும் பார்ப்பனர்கள் தன் ஜாதியையோ தன் ஜாதிக்காரரையோ எவ்வளவு இழிவாகப் பேசினாலும் கோபம் வராது.
மாறாக, தனக்குக் கீழ் உள்ள ஜாதிக்காரர்கள் தன் ஜாதிக்காரரிடம் மரியாதையாகவே உரிமை கோரினாலே கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாது.
இதுபோல் 90 வயதான அய்யா ஆறுமுகசாமியை ‘சூத்திரன்’ என்று 500 பேர் கூட இல்லாத தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் கோயிலில் அடித்து வீதியில் வீசியபோது, ‘வீரமிக்க வன்னியக்குல சத்திரியர்’கள் யாரும் ‘என் ஜாதிக்காரர் மீது கை வைத்த உங்கள சும்மா விடாமாட்டோம்’ என்ற பொங்கவில்லை. மாறாகச் சும்மாதான் இருந்தார்கள்.

இவ்வளவுதான் ஜாதி இயங்கும் தன்மை.

தன் ஜாதி பெண்ணைத் தனக்கு மேல் உள்ள ஜாதிக்காரர்கள் திருமணம் முடித்தால் பணிவோடு சம்பந்தம் செய்து கொள்வதும்; தலித் இளைஞன் மணம் முடித்தால் தலையை வெட்டுகிற ஜாதி உளவியல்தான் இதிலும் வினையாற்றுகிறது.

அன்று ஆறுமுகசாமிக்கு ஆதரவாக வந்தது மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய தொண்டர்கள். இன்றும் வைரமுத்துவிற்கு ஆதரவாக இவர்கள்தான் தீவிரமாக இயங்குகிறார்கள்.

பார்ப்பனியத்தை எதிர்க்கிற துணிச்சல் பெரியார் தொண்டர்களுக்குதான் உண்டு. ஜாதிய வீரர்களோ நினைத்துக்கூட பார்ப்பதற்கு நடுங்குவார்கள். வீரத்தின் அடையாளமாக மீசை எல்லாம் பெருசா வைச்சுப்பாங்க. ஆனால், மீசை இல்லாத ஜாதிக்காரர்களைப் பார்த்தால் பம்முவார்கள்.

தட்டிஸ் ஜாதி சைக்காலஜி.

தோழர் மதிமாறன்

Prakash JP

அய்யர் நல்லவர், மென்மையானவர், சாந்தமானவர், இனிய ஆன்மீக வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்துவார் என்கிற பொதுப்பிம்பத்தை, டேய் வைரமுத்து .ண்டா மவனே.. என்ற வார்த்தையுடன் துவங்கும் வீடியோ மூலம் சுக்கு நூறாக உடைத்து தகர்த்த அந்த அய்யருக்கு வாழ்த்துக்கள்.

சமஸ்கிருதம் உச்சரிக்கும் வாய்களில் இப்படி சரளமாக​ கெட்டவார்த்தை தாண்டவமாடுகிறதே? கேட்டாலே கூசும் கருமங்களை இப்படி கூச்சமே இல்லாமல் பேசுகிறார்களே?

அவர்கள் தமிழில் கெட்டவார்த்தைகள் போடுவதை கேட்கும் போது உங்களுக்கு அதிர்ச்சியாக​ இருக்கிறது. ஆனால் அவர்களோ சம்ஸ்கிருத சுலோகம் என்கிற​ பெயரில் காலம் காலமாக​ சரளமாக​ கெட்டவார்த்தைளை தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் தான் அவர்களால் கெட்டவார்த்தைகளை கூச்சமே இல்லாமல் சரளமாக​ பேச முடிகிறது.

Sivasankaran Saravanan

பார்ப்பதற்கு நவநாகரிக பெண் போலவும் ,சதா பகவானின் பெருமைகளை பேசக்கூடிய ஒரு பார்ப்பன பெண்மணி, இட ஒதுக்கீடு பற்றி பேசும்போது தலித்கள் பெயரை குறிப்பிட்டு வன்மத்தோடு திட்டுகிறார்.

என்னடா இது பார்க்க Ultra modern யுவதிகளாக இருக்கிற இந்த பெண்கள் கூடவா இப்படி வெளிப்படையாக சாதிய வன்மத்தை கக்குவார்கள் என பலர் ஆச்சரியப்படுகிறார்கள். பார்ப்பனிய கூறுகள் தெரிந்தவர்கள் ஆச்சரியப்படமாட்டார்கள்.

நாம் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இட ஒதுக்கீடு என்று வந்தாலே அதை தலித்களுக்கு எதிராக மட்டும் திருப்பிவிடுவது பார்ப்பனிய உத்திகளுள் ஒன்று. SC/ST மட்டுமா இட ஒதுக்கீடு பெறுகிறார்? அவராவது 18% தான். ஆனால் BC/MBC பிரிவினர் 50% இடஒதுக்கீடு பெறுகிறார்கள். எனில் இட ஒதுக்கீடு என வந்தாலே தலித் மட்டும் பயனடைவது போல காட்டுவது எதனால்? MBC/BC மக்களை அவர்களுக்கு எதிராக திருப்பிவிடுவது தான் அதன் நோக்கம்!

இதே பார்ப்பனியம் தான், தலித்களிடம் BC, MBC தான் உங்களின் எதிரிகள், நாங்க எப்பவாச்சும் உங்ககிட்ட வன்முறை காட்டியிருக்கோமா சொல்லுங்க என அரவணைப்பது போல நடிக்கும். ஒரு தலித் நாளைக்கே பெரியாரை திட்டி ஒரு புத்தகம் எழுதுகிறார் என வைத்துக்கொள்வோம். உடனே பார்ப்பனிய லாபி அவரை, “வாடா கண்ணா, நீ எழுதுடா, நான் Publish பண்றேன் ” என முழு ஆதரவு தருவார்கள்..!

தங்களுக்குள் பேசிக்கொள்ளும்போது, BC MBC SC ST எல்லாருமே நமக்கு கீழேயுள்ள பயலுவ தானே என நமுட்டு சிரிப்பு சிரிப்பார்கள்..!

Saravana Kanth

பொய்பிம்பங்கள் :

முத்துலெட்சுமி ரெட்டி. மருத்துவம் படித்த முதல் இந்திய பெண். அதுவும் சும்மா கிடைத்துவிடவில்லை. இப்போதே நீட் என சொல்லி ஏழைகள் மருத்துவபடிப்பை கானல் நீராக்கும் மூளைகள் 1900- களில் விட்டுவிடுமா ? வழக்கு போட்டார்கள். தடை செய்தார்கள். எல்லாவற்றையும் வென்றே அவர் மருத்துவம் படித்தார். தொடர் போராட்டங்களில் விளைவாக அப்போதைய சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் முதல் பெண் உறுப்பினராகவும் இடம்பெற்றார்.

இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சிலவற்றை முதலில் அரசின் குறிப்புகளில் இடம்பெற செய்து பலவற்றை சட்டங்களாக்கவும் செய்தார். இதில் முக்கியமான ஒன்று தேவதாசி ஒழிப்பு சட்டமும் ஒன்று. அவர் அன்று பேசியது தமிழகத்தில் உடனே நிறைவேறியது. மிக சமீபத்தில தான் பல மாநிலங்கள் அதில் இணைந்துகொண்டன. அவ்வளவு சிந்தனை கோளாறு.

இன்று தேவதாசி என்பதற்காக குதிக்கும் அதே கூட்டம் அன்று தேவதாசி இறைவனுக்கு பணி செய்யும் புனிதபணி… என்று கூக்குரலிட்டது. இறைவனின் பாதத்தை அடையும் வழி என்றும் அது ஓலமிட்டது. மென்மையாக சொன்னார் முத்துலெட்சுமி.. இத்தனை புனிதமெனில் உங்கள் வீட்டு பிள்ளைகளை அதில் ஈடுபடுத்துகொள்ளுங்கள் என சொன்னார். வாய்மூடியது அந்த புளூகு மூட்டை கூட்டம்.

1927 ஆம் ஆண்டு வந்த தீர்மானத்தில் புனிதமாக இருந்த தேவதாசி.. இப்போது 2017 அவச்சொல்லாக மாறிவிட்டது. வரலாற்றில் இது ஒன்றும் பெருந்தூரமில்லை. 90 ஆண்டுகள் தான். அதற்குள் எப்படி மாறிவிட்டு தங்களை புனிதர்களாக்குகிறார்கள் பாருங்கள். மிக சமீபத்தில் கூட சொர்ணம்லாய என்ற நடிகை தேவதாசி என்பது இறைத்தொண்டு என சொல்லியிருந்தார். தேவதாசி என்பது அப்போது நிலவிய காலகட்டம் என்பதாலும் அந்த ஆங்கில கட்டுரையாளர் இதை குறிப்பிட்டு அந்தளவு இந்த பெண்மணி ஆண்டாள் பக்தியில் மூழ்கியிருக்கிறார் என சொல்கிறார். வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்னரும் இவர்கள் இப்படி பேசுவது என்பது திட்டமிட்ட செயல்.

இன்றைய முகநூல் வைரமுத்து சொன்ன அடுத்த நொடியே ஆண்டாள் பற்றிய வரலாறு வெளிவந்துவிட்டது. ஆண்டாள் யார் ? அது பக்தி வரலாறா ? இல்லை பக்தி இலக்கியமா ? ஆண்டாள் மார்கழி திங்கள் பற்றி மட்டும் பாடியிருக்கிறாரா ? இல்லை தன்னை ஆணாக மாற்றி கிருஷ்ணனை பெண்ணாக மாற்றி காமம் பாடியிருக்கிராரா ? என்பதையெல்லாம் அது பேச வைத்துவிட்டது. இது அவர்களின் பிழைப்பிற்கு விடப்பட்ட சவால். அதான் இன்று வீதியில் நிற்கிறார்கள்.

முருகன் விநாயகரின் தம்பி, சிவனின் மகன் எனில் ஏன் விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது? தைப்பூசம் ஏன் தமிழர்கள் இருக்கும் பகுதியில் மட்டும் கொண்டாடப்படுகிறது என நீங்கள் கேட்கபோவதில்லை. இந்த அடிப்படையிலேயே அவர்கள் தங்கள் பொய் கட்டுமானங்களை உருவாகி இருக்கிறார்கள். இந்து என இவர்கள் சொல்லும் நல்லவை எல்லாமே பெளத்தம், சமணத்தில் இருந்து திருடப்பட்டவை. மற்றவை எல்லாமே பிராமணியம் என உளறும் மனுக்களுக்கு சொந்தமனாது. 1850களில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட இரண்டு மதங்கள். ஒன்று பெளத்தம் இன்னொன்று பிராமணியம்… ? இதில் எங்கே இந்து ? 1850க்குள் 2017 எத்தனை தூரங்கள்.. அந்த தூரங்களில் அவர்கள் ஒட்டுமொத்த மக்களை வீழ்த்தியிருக்கிறார்கள்..? அவர்கள் பொய்யர்கள்.. அவர்கள் கையில் இருக்கும் மனுதர்மம் முதல் ஆண்டாள் வரை எல்லாமே பொய்களே. தன்னை உயர்த்தி மற்றவர்களை தாழ்த்தும் வர்ணாசிரம முயற்சிகளே.

பா. சரவண காந்த்.

Barathi Thambi

ஆண்டாள் சர்ச்சையில் ஒரு காந்தியரின் பார்வை

 Raattai

வைத்தியநாதய்யர் திருவல்லிபுத்தூர் கோவிலுக்கு பட்டியல் இனத்தவரை அழைத்துக் கொண்டு சென்றபோது சனாதனப் பெண்மணிகள், விதவைகள் வாசலில் குறுக்க படுத்து நுழையவிடாமல் செய்தார்களாம். ஐயர் ஏறிமிதித்துச் செல்வோம் என்றாராம். கல்லெறிந்து ஐயரின் மண்டையை உடைத்தார்கள். பின் காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தபின் கோவில் நுழைவு நிகழ்ந்தது.

திருவரங்கம் கோவிலுக்கு TSS ராஜன் பட்டியல் இனத்தவரை அழைத்துக் கொண்டு சென்றாராம். சனாதனப் பெண்மணிகள் தலைவிரி கோலத்தில் வாசலில் படுத்துருண்டார்களாம். தடியடி நடத்தி கோவிலுக்குள் நுழைந்தனர்.

காலங்காலமாக பெண்களையும் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் சாஸ்திரத்தின் பெயரால் அரங்கனை தரிசிக்க விடாமல் செய்த கூட்டம் தான் இப்போது ஆண்டாள் பிரச்சனையில் வீதிக்கு வருகிறது. உண்ணாவிரதம் இருக்கிறது.

தமிழ்தேசிய , திராவிட அரசியல் விழித்தெழுமா ?
இந்துத்துவம் காலூன்றுமா ?

 

 1. பார்ப்பன சாதிக்கும்பல் குறிப்பாக வைணவ சம்பிரதாயத்தை ராமனுஜரின் வழியை பின்பற்றுபவர்கள் இந்த ‘பாசிசபார்ப்பனீய’ சங்கிகளிடம் எச்சரிகையாகயிருக்கவேண்டும்.
  வைரமுத்துவின் கட்டுரையை எதிர்ப்பதாக நினைத்து இந்த “இனப்படுகொலைக்கும்பலிடம்” மாட்டிக்கொள்ளக்கூடாது.
  இன்றய உலகமயமாக்கல் நாட்டின் 97சத மக்களை காவுகொள்கிறது, பன்னாட்டு நிறுவனங்களை மட்டுமே வாழவைப்பதாகவேயுள்ளது.அனைவருக்குமான வாழ்வில்தான் ஒவ்வொருவரின் வாழ்வும்,பாதுகாப்பும்,நலனும் அடங்கியுள்ளதை புரிந்துகொண்டு இந்த RSS குரங்குகளிடமும் எச்சராசா போன்ற பதர்களிடமும் மாட்டாமல் இருக்க வேண்டும்.
  உண்மையில் நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டியது இந்த எத்தர்களுக்கு எதிராகவே….

 2. திராவிட இயக்கத்தினர் தெரிந்தோ தெரியாமலோ கண்டுகொள்ளாமல் கோட்டை விட்ட ஒன்று நவீன இலக்கியம். இன்னொன்று நவீன சினிமா. அதனால்தான் வலதுசாரி சிந்தனை கொண்ட ஜெயமோகன் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றோர் தேசிய அளவிலும் உலக அளவிலும் தமிழகத்தின் அடையாளங்களாக, சட்டாம்பிள்ளைகள் ஆக வலம் வர முடிகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்தை எடுத்துக்கொண்டாலும் அங்கிருக்கும் கலைஞர்கள் தேசிய அளவில் அல்லது உலக அளவில் புகழ் அடைகிறார்கள் என்றால் அவர்கள் குறைந்தபட்சம் இடதுசாரிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களாகவாவது இருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் விருதுகளும் புகழும் பெறக் கூடியவர்கள் பெரும்பாலும் வலதுசாரி சிந்தனைக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். எழுத்தாளர் ஜெயகாந்தன் இதற்கு ஒரு உதாரணம் அவர் வலதுசாரி சிந்தனையாளராக மாறிய பிறகுதான் ஞானபீட விருது அவரை தேடி வந்தது. சர்வதேச அளவில் கவனிக்கப்பட கூடிய ஆங்கில இணைய தளங்களை நடத்துவதோடு அச்சக வெளியீடுகளையும் திராவிட சிந்தனையாளர்கள் இனியாவது மேற்கொள்ள வேண்டும். பன்மொழிப் புலமையும் உலக நிலவரமும் அறிந்த துறை சார் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு அறிவுஜீவி புலத்தை கட்டி எழுப்புவதில் திராவிட இயக்கம் தவறிவிட்டது. அது தான் தமிழகத்தின் இப்போதைய மோசமான அரசியல் சூழ்நிலைக்கும் வலதுசாரி ஆதிக்கம் வளர்வதற்கும் காரணம்.

  • உண்மை தான். பெரியார் மறைவுக்குப் பின் திராவிட இயக்கம் தொய்வை சந்தித்தது. பிறகு பிளவுபட்டது. 90-களின் உலகமயமாக்கலுக்கு பிறகு பெரும் பணபலம் உடையவர்களே கலை, இலக்கியங்களை கட்டுப்படுத்தினர். இனி இது மாறும் என்று நம்புவோம். மாற்றம் ஒன்றே மாறாதது.

 3. ஆம் உண்மை தான் திராவிட இயக்கம் இந்த தவறை செய்துள்ளது. துறை சார்ந்த அறிவுசீவிகளை வளர்த்தெடுக்க தவறியது தான் இந்த வலது சாரி ஆதிக்கம் இனியாவது திராவிட இயக்கங்கள் ஒரு படிப்பினை பெற்று முன்னேருமா என்பது தான் நம் முன் உள்ள கேள்வி குறி?

 4. Today dinamalar published news about education minister told Darwin theory is not true. Remove that information from school book. He found our vedic rishis didn’t say anything abt monkey is our ancestors that is the major reason to remove Darwin theory.

  I can’t do my work normally. Definitely we should fight against them. We are critical condition.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க