privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்உச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக !

உச்சநீதிமன்ற நெருக்கடி | மக்கள் அதிகாரம் கூட்டம் | அனைவரும் வருக !

-

“ஜனநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

அரங்கக்கூட்டம்

நாள் : 21.01.2018, ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : மாலை 5:00 மணி.
இடம் : மெட்ராஸ் கேரள சமாஜம், ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை
(நேருபூங்கா சிக்னல் அருகில்) சென்னை.

தொழில்நுட்ப பிரச்சினையின் காரணமாக இன்று நேரலை இரத்து செய்யப்பட்டது.

 

தலைமை :

வழக்கறிஞர் சி.ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்

கருத்துரை :

  • திரு.து.அரிபரந்தாமன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
  • திரு என்.ஜி.ஆர்.பிரசாத், மூத்த வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
  • திரு. எஸ்.பாலன், வழக்கறிஞர், பெங்களூரு,
  • பேராசிரியர் அ.கருணானந்தம், வரலாற்றுத் துறைத் தலைவர் (ஓய்வு), விவேகானந்தா கல்லூரி, சென்னை.

நன்றியுரை :

திரு. சி. வெற்றிவேல் செழியன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

அன்புடையீர், வணக்கம்.

இந்திய வரலாற்றிலும், நீதித்துறை வரலாற்றிலும், ஜனவரி 12 அன்று தலைமை நீதிபதிக்கு எதிராக, பணியிலிருக்கும் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகோய், குரியன் ஜோசப், மதன் பிலோகுர் ஆகியோர் டெல்லியில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பு ஓர் அசாதாரண நிகழ்வு நீதித்துறையில் ஏற்பட்ட நிலநடுக்கம் என ஊடகங்கள் சித்தரிக்கின்றன.

பத்தரிக்கையாளர் சந்திப்பில், “உச்சநீதிமன்ற மரபுகள் மீறப்படுகின்றன, நிர்வாகம் சரிவர நடப்பதில்லை. முக்கிய வழக்குள் ஒதுக்கப்படுவதில் மூத்த நீதிபதிகள் புறக் கணிக்கப்படுகிறார்கள். விரும்பத்தகாத பல நிகழ்வுகள் சமீப காலங்களில் நடந்து விட்டன. சமரச முயற்சியில் நாங்கள் தோல்வி அடைந்து விட்டோம்.

பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்யவில்லை. நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும். இந்த நாட்டுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை இது. அதனை செய்து விட்டோம்” என்கிறார்கள்.

நீதித்துறையின் சுதந்திரத்தை, ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாட்டு மக்களை கோருகிறார்கள்.

இதன் மூலம் நாட்டு மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?
நீதித்துறை சுதந்திரம் நெருக்கடியான நிலையில் வழக்கறிஞர்கள் சமூகம் அமைதி காக்கலாமா?
ஜனநாயகத்திற்கு பேராபத்து என்றால் மீண்டும் நெருக்கடிநிலை திரும்புகிறதா? அல்லது அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை அமுலில் இருக்கிறதா?
மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும், கடைசி நம்பிக்கை,
நீதித்துறை என கருதப்படுகிறது. மத்திய அரசின் கைப்பாவையாக நீதிபதிகள் மாறும் சூழலில் வழங்கப்படும் தீர்ப்புகளின் விளைவுகள் என்ன?
கொலை குற்றம்சாட்டப்பட்ட பாஜக தலைவர் அமித்ஷா வழக்கை விசாரித்த சி.பி.ஐ நீதிபதி லோயா மரணம் மட்டும்தான் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு உடனடி காரணமா?
உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அவர்கள் கடமையை செய்து விட்டார்கள், மக்கள் செய்ய வேண்டியது என்ன?

தெரிந்து கொள்ள, விவாதிக்க, அனைவரும் வாரீர் !

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்
உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகளைத் தெரியப்படுத்துங்கள் !
கைபேசி : 91768 01656,
E-mail: ppchennaimu@gmail.com

 

    • தொழில் நுட்ப பிரச்சினை காரணமாக இந்த நிகழ்வை ஒளிபரப்பு செய்ய முடியவில்லை. வரும் நாட்களில் உரைகளின் வீடியோக்கள் வெளியிடப்படும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க