Saturday, April 17, 2021
முகப்பு பார்ப்பனிய பாசிசம் பார்ப்பன இந்து மதம் சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

சோடாபுட்டி ஜீயர் புராணம் | டீசர்

-

சோடாபுட்டி ஜீயர் புராணம் – டீசர்

இப்படியாக…
சடகோப சோடாபாட்டில் ஜீயர்
டெட் லைன் பிக்ஸ் பண்ணிருக்கேர்

கெடு வச்சார்னு மொட்டையா சொல்லாதீங்கோ
எதுக்கு கெடு வச்சார்?
அதைச் சொல்லுங்கோ

அன்புச்செல்வன் வட்டிக்கு கெடு வப்பேர்
ஐடி யிலே ரிலீஸ் டேட்டுக்கு கெடு வப்பாள்

ஐயர்வாள் எதுக்கு கெடு வச்சார்
அதச்சொல்லுங்கோ

அவர் ஐயர்வாள் இல்லடா ஜீயர்வாள்
ஐ க்கும் ஜிக்கும் வித்தியாசம் தெரியாத அபிஷ்டு

நேக்கு எல்லாம் ஜிலேபி மாதிரிதான் தெரியரது
நீங்க ஜீயர்னா என்னன்னு சொல்லுங்கோ

ஆடு மேய்க்கிறவன் ஆயர்
டீ ஆத்தறவன் நாயர்
இடுப்புக்கு கீழே போடறது லோயர்
லோயர்ல இருக்கிற கோமணத்தை குச்சியில கட்றவர் ஜீயர்

 

ம.க.இ.க கலைக்குழுவின் சோடாபுட்டி ஜீயர் புராணம்…….. விரைவில்…………
பாருங்கள்! பகிருங்கள்!

தொடர்புக்கு:

அலைபேசி : +91 97100 82506, +91 99411 75876

மின்னஞ்சல் : vinavu@gmail.com

 1. ஹஹா தோழர்களின் பட்டையும் கேள்விக்குறியுமே தனியொரு கதை சொல்கிறது.
  அருமை.

 2. மதுரை கோவில் தீ விபத்தை எந்தசாமியும் தடுக்கல
  நம்ம ஃபயர் சர்வீஸ் ஆசாமிகள் தான் தடுத்திருப்பாங்க போல
  தன் கோவிலில் நெருப்பு பட்டு எரிஞ்ஜா
  தமிழ்நாட்டு அரசியலை மாத்துவன்னு சொன்ன என்ன அர்த்தம் சார்
  இத ஜீயர் கிட்ட நீங்க சொல்லி மீனாச்சி அம்மாவுக்கு எடுத்து செல்லுங்க,
  உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள்
  நன்றி
  கந்தசாமி

  • டி ஆத்தரவன் நாயர் என்றால் உனக்கு ஏன் அப்படி சூர் என்று கோபம் வரனும்?

   • கோபம் எல்லாம் இல்லை. ஒரு தொழிலை ஒரு சாதியினர் மட்டுமே செய்வது போல் வருவதால் தான் கேட்டேன்.

 3. வினவு…

  நீங்க ஜீயரை கண்டித்து இந்த டீஸரை வெளியிடுவது மகிழ்ச்சி தான். ஆனால், நீங்களும் உங்கள் ஆஸ்தான பாடகரான கோவனும் வரம்பு மீறி பேசுவது சரியல்ல. அந்த டீசரில் “இந்த கொலைகார பாவிங்க கோவில்ல வச்சு ஆண்டாளை என்ன பண்ணிருப்பாங்க” என்று பேசுவது, “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” என்பது போல வரும் வார்த்தைகள் அனைத்தும் அநாகரீகத்தின் உச்சம். ஒன்று, இதற்கான வரலாற்று பூர்வ ஆதாரம் இருந்தால் அதனை அளித்து விட்டு பிறகு பேசவும், இப்படி யுகமாகவெல்லாம் அடித்து விட வேண்டாம். பக்திக்காக இல்லை என்றாலும், தமிழுக்காக நாம் கோதை நாச்சியாரின் பாதம் பணிந்து தான் ஆக வேண்டும்.

  ஹச்.ராஜா மீதோ , ஜீயர் மீதோ இருக்கும் கோபத்தை இப்படி ஆண்டாளை அவதூறு பேசி தீர்த்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி…

  • //…இதற்கான வரலாற்று பூர்வ ஆதாரம் இருந்தால்..//

   வரலற்றுக்கெல்லாம் ஏன் மெனக்கெட சகோதரி? அண்மைய ‘வரலாற்று’ ஆதாரங்களே இந்த உருப்படிகள் எப்படிப்பட்டவை என்பதை ஊடகங்களில் பறைசாற்றியதே?
   கொலைகாரபாவிங்க என்றது – ஒரு குரூப்ச ங்கரராமனை சாவடித்தது, ‘என்னடா’ பண்ணினிங்க என்றது இன்னொரு பய ரஞ்சிதாவை கொஞ்சியது. ஆக தோழர் கோவன் உண்மையை பச்சையாக கேட்டதில் என்ன அநாகரிகம்? அநாகரிக வார்த்தை ஏதும் அவர் பயன்படுத்த வில்லையே? பேச கூசும் இவர்களின் செயலை சமூக ‘சங்கடம்’ கருதி உரத்து கேட்க துணிந்த தோழர்களை பாராட்டவே வேண்டும்.

   இந்தளவு ஊடகவெளிச்சம் உள்ள காலத்திலேயே இப்பிடி செய்றாங்களே?? ஒரு ஊர் செய்தி அடுத்த ஊருக்கு தெரியாத காலத்தில் என்ன ஆட்டம் போட்டிருப்பனுங்க??

  • தன் காம கழிவிரக்கத்தை வெளிபடுத்த அன்றைய தேவதாசி குல பெண்ணான தமிழ் கோதை நாச்சியாருக்கு தமிழ் உதவி உள்ளது என்ற உணமையை ஏற்காமல் அப்புறம் எப்படி கோதையாரின் தமிழை மெச்சி புகழ்ந்து அவருக்கு நாம் தலைவணங்க முடியும்?

   //தமிழுக்காக நாம் கோதை நாச்சியாரின் பாதம் பணிந்து தான் ஆக வேண்டும். //

 4. சகோதரி ரெபேக்கா அவர்களே ஆண்டாள் “பக்தியோடு” கரை புரளும் பாடல்களை கேட்டுள்ளிர்களா?மரியாதை என்பது அப்போது புரியும் உங்களுக்கு..ராமன் விநாயகர் ஆண்டாள் இவர்கள் எல்லாம் உங்களுக்குதான் கடவுள்.எச்சி.ராஜா ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பலுக்கு அவை யாவும் கலவரம் புரியும் “மாடல்கள்”.புரிந்துகொள்ள முயலுங்கள் ரத்த வெறி பிடித்த காவீகளைப் போல ஆண்டாள்களும் ஆபத்தானவைகளே..

  • முழு வீடியோவும் வெளியாகி விட்டது. இப்போது ரெபெக்கா அவர்களுக்கு வரலாற்று பூர்வ ஆதாரம் தேவையான அளவு கிடைத்திருக்கும். இப்போது ஆண்டாளை பற்றி தோழர்கள் கேட்டது சரிதானே?

   • இல்லையே … இப்போதும் கோவன் உருப்படியாக எந்த ஆதாரமும் அளிக்கவில்லை, அதே வியூகத்தின் அடிப்படையிலான உளறல்கள் மட்டும் தான் விஞ்சி நிற்கின்றன. ஆண்டாள் தேவதாசியாக இருந்தாள் என்பதற்கு என்ன வரலாற்று சான்றுகள் உள்ளன. ஏதேனும் கல்வெட்டுக்கள், செப்பு பட்டயங்கள் உள்ளனவா குறைந்த பட்சம் இலக்கியங்கள் எதிலாவது பதிவு செய்யப்பட்டுள்ளதா, இருந்தால் கூறவும்.

    • ஆண்டாள் தேவதாசி என்பதற்கு ஆதாரம் தானே இந்தாங்க….! தேவதாசியை தவிர அத்துனை காம கழிவிரக்கத்துடன் எழுத அன்றைய நூற்றாண்டில் வேறு எந்த பெண்ணுக்கு உரிமை இருந்தது சொல்லுங்க பார்கலாம்? பதில் வராது என்று தெரியும்…. இருந்தாலும் கேட்போம்…. கேட்டு வைப்போம்!

     அடுத்து தமிழக வரலாற்றில் சுஜாதா என்ற பெண் எழுத்தாளரை தேடுவீர்கள் என்றால் ஏமாந்து போவிர்கள்… ஆண் சுஜாதா அவரின் எழுத்துகளை படித்து விட்டு இந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண் எழுதாளர் ஆபாசமாக எழுத்னாரா என்ற கேள்வி வரும் எனில் அது முட்டாள் தனமானதாக தானே இருக்கும்? இப்ப ஆண்டாள் விசயத்தில் இதே அளவுகோலை கொண்டு ஆண்டால் யார் என்று தேடுங்க….! ஒரு பெண் தான் எட்டாம் நூற்றாண்டில் தன் பாலியல் உணர்வுகளை வெளிபடுத்தி எழுதினார் என்று அதே போன்ற ஒரு சில எழுத்துகளையாவது நாம் ஆதாரத்துக்கு முன் வைக்க வேண்டும் அல்லவா? ஆனால் ஒன்று கூட இல்லையே! ஏன் ? ஆண்டாள் மட்டும் அப்படி தனி சிறப்புடன் எழுதியிருக்க காரணம் என்ன? ஆண்டாளுக்குள் ஒளிந்து ஒருக்கும் அந்த ரங்கராஜன் யார் என்று தேடினால் விடைகிடைக்கும்…யார் அந்த ஆழ்வார்? ஏன் பெண் பெயரில் எழுதினார்.?

     அது சரி….. தேவதாசி என்ற ஒரு இனத்தையே உருவாக்கிய ஹிந்துத்துவா வெண்ணைகளுக்கு ஆண்டாள் மட்டும் தேவதாசியாக இருபது ஏன் குத்துது? குடையுது?து………….!

    • என்ன கேட்டிங்க மேரி? இலக்கியத்தில் இருந்து ஆண்டாள் தேவதாசி என்பதற்கு ஆதாரமா?இதோ பிடிங்க நீங்க கேட்கும் ஆதாரத்தை….

     எட்டாம் நூற்றாண்டில் பெண்களுக்கு அன்றைய இந்து மதத்தில் பாலியல் உணர்வை வெளிப்படுத்தும் உரிமை இருந்ததா? கண்டிப்பாக இல்லை…

     ஆனால் தேவதாசிகளுக்கு ? ஆம் இருந்தது…..! தேவதாசி ஆண்டாளின் வாயில் இருந்து அவ்வுரிமை வெளிபட காண்போம்:

     அந்த பாடல் வரிகள் இங்கே :

     முத்தன்ன வெண் முறுவல்
     செவ்வாயும் முலையும்
     அழகழிந்தேன் நான்
     புணர்வதோர் ஆசையினால்
     என் கொங்கை கிளர்ந்தது

     அவரைப் பிராயம் தொடங்கி
     ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
     துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
     தொழுதேன்…

     சாயுடைவயிறும் என் தடமுலையும்
     திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
     தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
     பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
     புணர்வதோர் ஆசையினால்
     கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
     ஆவியை ஆகுலம் செய்யும்…
     என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
     பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ

     -ஆண்டாள்

     குறிப்பு: இந்த பாட்டுக்கு தெளிவுரை, விளக்க உரை,பத உரை…. வேண்டுமானால் திருவில்ல்லிபுத்தூர் ஜீயரை தொடார்பு கொள்ளலாம்…..

     • ஆண்டாள் தேவதாசி என்பதற்கு இலக்கிய ஆதாரம் கேட்டாங்க…..கொடுத்து இருக்கேன்…. இத வெளியிடுவதில் என்னங்க அப்படி ஒரு பிரச்சனை வினாவுக்கு?

 5. பாவம் ரெபெக்காவுக்கு “உண்மை சுட்டுருச்சு” போலிருக்கு..அநாகாரிகம் எது என்பதை புரந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்..

 6. செலக்டிவ் நினைவு மறதியா ரெபேக்கா மேரிக்கு ?

  வினவு மட்டுமா இந்த தேவதாசி ஆண்டாள் விசயத்தில் கருத்தை தெரிவித்து உள்ளது ? இல்லையே!

  ஆண்டாளை விமர்சித்த ,தேவதாசி என்று முத்திரை குத்திய எம்.ஜி.எஸ்.நாராயணன், கேசவன், டி.ஏ. கோபிநாத் ராவ், ராஜாஜி, பா. ராகவன், பத்ரி சேஷாத்ரி, கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா.. இவர்கள் எல்லாம் பிராமணர்கள்.. அதிலும் ஆண்டாள் சார்ந்த வைணவ பிரிவு பார்பனர்கள்.. இவர்களை எல்லாம் யாரும் கண்டிக்கவில்லை… ரெபெக்கா மேரிகள் கண்டிக்கவில்லையே !

  ஆதார குறிப்பு :

  1.“நீங்க.. என்ன, ஆம்படையாள இன்னும் ஒத்துக்கல, ஆண்டாளாவாவது ஏத்துக்கோங்கோ….” என்று ஹேராம் படத்தில் வசனம் வைத்தவர்கள் கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாத்தா

  2.ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform.அதற்கு அவர்கள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  3.ஆண்டாள் என்பதே கற்பனையான ஒரு பாத்திரம் என எழுதியவர் மூதறிஞர் ராஜாஜி…

  4.வைரமுத்து குறிப்பிட்ட அந்த கருத்தைவிட மிக அதிகமா தன்னுடைய நாவலில் ஆண்டாளை விமர்சிச்ச எழுத்தாளர் பா. ராகவன், அதை வெளியிட்ட கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி..

 7. மீண்டும் இங்கு அனைவரும் ஆண்டாளை வியூகத்தின் அடிப்படையில் தான் புழுதி வாரி தூற்றுகிறீர்களே தவிர, ஒரு வலுவான ஆதாரம் என்று எதனையும் யாரும் அளிக்கவில்லை.அதனை விட கொடூரமான விடயம் என்னவென்றால் இந்த ஆண்டாள் பிரச்னை தொடங்கிய நாள் முதலே, முற்போக்குகள் கூறும் ஒரே விடயம், கோதையால் இவ்வாறு பாலியல் சொற்களை அமைத்து தைரியமாக பாட முடிகிறதென்றால், நிச்சயம் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அறிவற்ற முடிவிற்கு வருவது தான். ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.

  ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், அவள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. அவள் பாடியவை அனைத்தும் நாயக-நாயகி பாவனையில் அமைந்த செய்யுள்கள். இது பக்தியின் ஒரு நிலை. இறைவனை தன் நாயகனாக நினைக்கும் உச்சகட்ட உணர்வு நிலை. இதனை பல ஆண்பால் புலவர்களும் வெளிப்படுத்தி உள்ளனர். அதற்காக நாம் அவர்களை எல்லாம் ஓரின சேர்க்கையில் ஈடுபாடுள்ளவர்கள் என்று கூறி விட முடியாது. அதே போன்று தான், ஆண்டாளின் பாடல்களும்.

  “சாயுடைவயிறும் என் தடமுலையும்
  திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
  தரணியில் தலை புகழ் தரக்கற்றியே’
  பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப்
  புணர்வதோர் ஆசையினால்
  கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து
  ஆவியை ஆகுலம் செய்யும்…
  என் அகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும்
  பொன்னாகப் புல்குவதற்கு என்புரிவுடமை செய்யுமினோ”

  ஆண்டாளின் மேற்படியான பாடலை வைத்து தான் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்று பல முற்போக்குகள் முடிவிற்கு வருகிறார்கள். சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள். சிருங்காரம் என்பது ஒரு வகையாகப் கவிநயம்.அதற்கென்று ஒரு கவித்துவ அழகு இருக்கிறது. ஆனால், இதனை ஒரு பெண் பாடி இருக்கின்றாள் என்றால், இந்த அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட பாட இவளுக்கு தைரியம் இருக்கிறது என்றால், நிச்சயம் இவள் பிஞ்சிலேயே பழுத்த தே*****வாகத் தான் இருக்க வேண்டும் என்பதை தான் பெரியாரிஸ்டுகள் தொடங்கி கோவன் வரை இங்குள்ளவர்கள் நீட்டி முழக்கி பேச வருவதெல்லாம்.

  கவிநயம் அல்லது கவி அழகு இவைகள் இன்னதென்று தெரியாதவர்கள் தான், இந்த அளவு நாத்தழும்பேற மன வக்கிரத்துடன் பேச முடியும். பக்தியில் ஆண் பெண் என்கிற பாலின பேதமெல்லாம் கிடையவே கிடையாது. யாருக்கு என்ன பாவனை பிடிக்கிறதோ அதன் அடிப்படையில் வழிபடலாம், பாடல்கள் இயற்றலாம். இவள் பெண், ஆகவே இப்படி தான் கவி புனைய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதெலாம் அற்பத்தனத்தின், ஆணாதிக்க பொறுக்கி தனத்தின் உச்சம். அதனை தான் கோவன் தலைமையிலான ம.க.இ.க கலைகுழு செய்து கொண்டிருக்கிறது. அதிலும், கோதை நாச்சியாரின் பாடல்களை, நித்தியானந்தா என்னும் பொறுக்கியுடன் ஒப்பிடுவதிலேயே இவர்களின் நோக்கமும் தரமும் நன்றாக தெரிகிறது. அன்று பெரியாருக்கு கிடைத்தது கண்ணகி என்கிற எங்கள் தமிழன்னை, இன்று ம.க.இ.கவிற்கு ஆண்டாள் என்கிற எங்களின் தமிழ் மகள்.

  ஒன்று மட்டும் நிச்சயம், ஹெச்.ராஜாவாகட்டும், ஆர்..எஸ்.எஸ் இந்துத்துவ பார்ப்பன சக்திகளாட்டும், கம்யுனிஸ்டுகளாகட்டும் அவரவர்கள் தங்களுடைய அரசியலில் காலூன்றுவதற்காக ஆண்டாளை தங்களுக்கு கிடைத்த பகடைக்காயாக நன்கு பயன்டுத்துகிறார்கள். இன்னும் உங்களின் அரசியலை இங்கு கடை விரிக்க இன்னும் எவ்வளவு தான் ஆண்டாளை துச்சாதனம் செய்வீர்களோ…!!!!!!! செய்யுங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்.

  • ஹச்.ராஜா பாணியிலேயே ஆண்டாள் கைய புடிச்சிஇழுத்துட்டாக என்று பெனாத்தல் வாதம் செய்வது போன்ற மடமை வேறு ஏதுமில்லை ரெமேக்கா. ஆண்டாள் சர்ச்சையில் ஆண்டாளை பற்றி விவாதிக்கவே கூடாது, அவர் வாழ்ந்த அன்றைய சமுக நிலையே பற்றி யோசிக்கவே கூடாது என்றால் அங்கேயே உங்க கருத்துக்கள் அழுகிப்போய் முடை நாற்றமடிக்கின்றனவே! என்ன செய்யலாம்?

   ஆண்டாளை பற்றி பேசவே கூடாது என்றால் அதுவும் அவர் எழுதிய பாடலின் அடிப்டையில் பேசவே கூடாது என்றால் அது என்ன மாதிரியான பாசிச தன்னமையுடைய வாதம், கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று உங்களால் சிந்திக்கவே முடியாது… ஏன் என்றால் கருத்தளவில் அசிங்கமாக பேசிய ஹச் ராஜா வேற நீங்க வேற கிடையவே கிடையாது…

   காம கழிவிரக்கம் கமழும் அந்த பாடலை எழுதியது தேவதாசி ஆண்டாள் இல்லை என்றால் வேறு யாராக அவர் இருக்க முடியும் என்று விளக்கவேண்டியது இனி யார் கடமை? ஆண்டாளை தூக்கிபிடித்து ஹிந்துத்துவா பஜனை பாடிகிட்டு இருக்கும் உங்களை போன்றவர்களின் கடமை தானே? எட்டாம் நூற்றாண்டின் தேவரடியார் சமுகத்தை பற்றி வரலாற்றின் ஊடாக காட்ட்சி படுத்தும் போது அதற்கு குறுக்கே விழுந்து மறிக்கும் உங்க செயல் ஹச் ராஜாவின் செயலை போன்றது தானே? என்ன நான் இலக்கியம் ஊடாக ஆண்டாளை தேவதாசி என்று நிருபிக்கும் போது உங்களுக்கு வரும் கோபம் என்னை அறிவற்ற முடிவை நோக்கி செல்வதாக கூற வைகின்றது… அதே நேரத்தில் ஹச் ராஜாவின் வார்த்தைகள் வைரமுத்துவின் அம்மாவை திட்டுவதன் மூலம் எதிரோளிகிறது… ஆனாலும் உங்கள் இருவருக்குமான கோபம் பொதுவானது தானே? ஆண்டாளை பற்றி ஏன் பேசுகிறாய் என்ற கோபம் தானே அது?

   //கோதையால் இவ்வாறு பாலியல் சொற்களை அமைத்து தைரியமாக பாட முடிகிறதென்றால், நிச்சயம் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்கிற அறிவற்ற முடிவிற்கு வருவது தான். ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.//

  • இதனையே தான் என்னுடைய வாதமாக வைக்கின்றேன்… அவர்கள் ஆய்வு செய்யாமலேயே ஆண்டாளை பற்றி கூறிய கருத்துகளான “ஆண்டாள் கற்பனை” (ராஜாஜி) மற்றும் “ஆண்டாள் போன்று என்னையும் கூத்தியாலாக எதுக்க” (சுஜாத்தா)என்ற வாதங்களை எல்லாம் மெய்மறந்து ஏற்ர்க்கும் ஹிந்துதுவாகள் குறிப்பாக ரெபெக்கா மேரிகள் மற்றும் அவற்றை எல்லாம் கண்டும் கணாமலும் சென்ற வைணவர்கள் வைரமுத்து விடயத்தில் மட்டும் ஆன்மிக ஆண்மையுடன் சீறி பாய்வது ஏன் ? எங்கிருந்து இந்த ஆன்மிக ஆண்மை வைணவர்களுக்கு வந்ததது….? வைரமுத்து வைணவர் அல்ல்லாதவர் என்பதால் தானே. ? வைரமுத்து சூத்திரன் என்பதால் தானே?

   இந்த சாதிய,சனாதன, மனு விசயங்களை எல்லாம் ஆண்டாளின் பிரச்னை ஊடாக அம்பல படுத்தும் தேவை முர்போக்குக்லாகிய எங்களுக்குஇருக்கு ! ரேபக்கவுக்கு இல்லை என்றால் அதில் ஏதும் ஆச்சிரியம் இல்லை…. ஏன் என்றால் ரெபெக்காவின் வாழ்வியல் முறை பார்பனியம் சார்ந்து, ஹிந்துத்துவா சார்ந்து இருக்கலாம் !@

   //ராஜாஜியும்,சுஜாதாவும் கூறிவிட்டால் வேத வாக்காகிவிடுமா. அவர்கள் என்ன ஆய்வு செய்து எதன் அடிப்படையில் கூறி விட்டார்கள்.//

  • ரெபெக்கா, பாவனை என்று எதனை சொல்லவருகிண்றீகள் என்றால் அஆண்டாளின் “ரோல் பிளே” விளையாட்டை தானே? கண்டிப்பாக நானும் அதனை ஏற்கின்றேன். மனதில் காட்சிப்படுத்திகொள்ளாதா ஒரு செயலை எழுத்தில் யாருமே வடிக்க முடியாது அல்லவா? அப்படி பட்ட நிலையில் ஆண்டாள் காமத்தை பற்றி சிந்திக்காமல் அந்த காம பாடல்களை எப்படி எழுதியிருக்க முடியும் என்று அறிவியல் ரீதியாக , மனத்தத்துவம் சார்ந்து நீங்க தான் விளக்கம் கொடுக்க வேண்டும்…

   பட்டரின் அபிராமி அந்தாதியை கண்டிப்பாக பக்தியின் பரவசநிலை என்று தீர்மானமாக கூறலாம்… தாய்மையுடன் அவர் ஒருங்கிணையும் நிலை என்று கூட தீர்மானமாக சொல்லல்லாம்… ஆனால் ஆண்டாளின் பாடல்களை…. குறிப்பாக கீழ் உள்ள வரிகளை எப்படி எடுத்தது கொள்வது?

   புணர்வதோர் ஆசையினால்
   என் கொங்கை கிளர்ந்தது

   அவரைப் பிராயம் தொடங்கி
   ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
   துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
   தொழுதேன்…

   //ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், அவள் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தவில்லை. அவள் பாடியவை அனைத்தும் நாயக-நாயகி பாவனையில் அமைந்த செய்யுள்கள். இது பக்தியின் ஒரு நிலை. இறைவனை தன் நாயகனாக நினைக்கும் உச்சகட்ட உணர்வு நிலை. //

  • ரெமேக்கா அவர்களே, சதிர் ஆடும் தேவரடியார்கள் சிருங்கார கவி நடையில் பாடல்களை பாடாலாமல் வேறு என்ன நடையில் பாடல்களை பாடுவார்கள் , மன்னனையும் மற்றவர்களையும் மகிழ்விப்பார்கள் என்று சிந்திக்க உங்களுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் எது? நீங்சொல்லும் அதே கருத்தை தான் நானும் கொண்டு இருக்கேன்… ஆமாங்க தேவரடியார் ஆண்டாள் அவர்கள் சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள் என்கின்றேன்….!

   வேணும் என்றால் இந்த விசயத்தை நம்ம அம்மா அல்லது நம்ம மூதாதை கொள்ளுபாட்டி ருக்மிணி தேவி அருண்டேல் அவர்களின் கலை பின்னணியில் இருந்து தெரிந்து கொண்டு வந்து விவாதிக்லாமே நீங்க!

   //ஆண்டாளின் மேற்படியான பாடலை வைத்து தான் அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டும் என்று பல முற்போக்குகள் முடிவிற்கு வருகிறார்கள். சிருங்கார கவிநடையை தன் செய்யுளில் கையாள்கிறாள். //

  • ரெபெக்கா , ஆண்டாளின் பரவச நிலைகளை எல்லாம் தாண்டி யோசித்தோம் என்றால் மிக முக்கியமான ஒரு கேள்வி எழுகின்றது. ஆண்டாள் எத்தகைய சமுக நிலையில் திருவில்லிபுத்தூரில் இருந்தார்? அங்கிருந்த அவர் என்ன சமுக அங்கிகாரத்துடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்? அவர் அன்றைய வைணவ சமுகத்தால் என்னவாக ஏற்க்க்பட்டார்? ஒன்று அவர் குடும்ப பெண்ணாக இருந்து இருந்தால் அவருக்கு “சிருங்கார ரசனையில்” அதாங்க காம ரசனையில் பாடல் எழுத எல்லாம் அறிவு எப்படி வந்து இருக்கும்?மேலும் கோவிலுக்குள் புழங்கிய பெண் ஆண்டாள் தேவதாசியாக , நாட்டிய மங்கையாக, சிருங்கார கவியாக இல்லாமல் வேறு என்னவாக அவர் அங்கிகரிக்க்பட்டார் என்று நீங்க தான் மீண்டும் முதலில் இருந்து விளக்கனும்…

   இங்கே அறிவை மட்டும் பயன் படுத்துங்க ரெபெக்கா…. அதனுடாகவிவாதம் செய்யுங்க! ஆண்டாளின் அறிவிழந்த பாவனைகள்-ரோல் பிளே முறைகள் எல்லாம் இங்கே விவாதத்துக்கு உதவாது….!

   //இன்னும் உங்களின் அரசியலை இங்கு கடை விரிக்க இன்னும் எவ்வளவு தான் ஆண்டாளை துச்சாதனம் செய்வீர்களோ…!!!!!!! செய்யுங்கள் அனைத்திற்கும் ஒரு முடிவு வரும்.//

  • மிக தெளிவான நேர்த்தியான பதிவு . ஒரு பெண் கவிஞரை ஏளனமாக சித்தரிப்பது ஆணாதிக்க உணர்வை காட்டுகிறது . காமத்துபால் எழுதிய வள்ளுவரை ஏளனமாக எழுதிவிடுவார்களா ?

   அடுத்து ஆண்டாள் காலத்தில் ஒரு பெண் கல்வி கற்று கவிதையும் பாடி இருக்கிறாள் என்பதே மிக பெரிய விஷயம்.

   ஆணாதிக்க வெறியை உணர்ந்த அவ்வை இளமை துறந்து முதுமை ஏற்றாள் என்பது வரலாறு.

   ராமாயணத்தில் ராமன் கதாபாத்திரம் , சீதையை நெருப்பில் குளிப்பாட்டியது இப்படி இவர்கள் பின்னாளில் புரளி பேசுவார்கள் என்று ஊர் வாயை அடைக்க , அந்த கதாபாத்திரத்தின் மேன்மையை விளக்க கதாசிரியர் மெனக்கெட வேண்டி இருந்தது .

   • ராமன் உங்க புராணத்தை அதுவும் வெக்கமற்ற வார்த்தைகள் மூலம் தொடங்கிட்டீரா? ஆண்டாள் காலத்தில் ஒரு பெண் சிருங்கார கவிநடயில் எழுதுறாங்க என்றால் அதுவும் குடும்ப பெண்கள் கல்வி கற்க சாத்தியம் இல்லாத காலகட்டத்தில் ஒரு ஆண்டாள் என்ற பெண் சிருங்கார கவிநடயில் பாடல் எழுதுறாங்க என்றால் அந்த பாடல் அரசனையும் ஆண்டிகளையும் மகிழ்விக்கும் சதிராட்டம் சார்த்தகாக இல்லாமல் வேறு எதுக்கு என்று உங்க மூளையை போட்டு கசக்கி பதில் சொல்லுங்க பார்கலாம்…!

    அடுத்து அவ்வையை எதுக்கு ஐயா இங்க கொண்டுவந்து நிறுத்தி வெக்கமே இல்லாமல் பேசிகிட்டு இருக்கீங்க? அவ்வை என்ன ஆண்டாளை போல சிரிங்கார நடையில் ஆபாச பாடல்களையா எழுதிகிட்டு இருந்தாங்க?

   • திருவள்ளுவரின் இல்லறவாழ்வில் அறிவுரையாக மிளிரும் இன்பத்துப்பால் குரல்களை காம ரசம் ஊற்றேடுக்கும் ஆண்டாளின் சிருங்கார தெரு ஆபாசத்துடன் ராமனை தவிர வேறு யாரும் ஒப்புமை செய்யமாட்டார்கள்… இவரின் இந்த கேவலமான புத்தி பார்பனியத்தின் இயல்பான திமிரில் இருந்து வெளிபடும் ஒன்றே ! ஆச்சிரியம் ஏதுமில்லை….

 8. பெரியாரிஸ்டுகள் தான் சதிரை காமரசம் நிறைந்த ஆடல் பாடலாக
  பார்கின்றார்கள் என்ற உங்க கருத்து மொக்கை தனமானது…உண்மை என்னவென்றால் நீங்க சொன்ன ஆண்டாளின் சிருங்கார கவிநடை உண்மையிலேயே காமரசம் வாய்ந்த காமத்தை பொது வெளியில் தூண்டும் தன்மை கொண்டது… அந்த சதிர் என்ற கலை தேவரடியார்கள் கைய்களில் இருந்து பார்பனர்கள் கைகளுக்கு வரும்போது (கடந்த இரண்டு மூன்று நூற்றாண்டுகளில்)அதில் இருந்த சிருங்கார கவிநடை (பாலியல் ஆபாசத்தை தூண்டும் கவி நடை) நீக்கபட்டு “புனிதப்ட்டுதபட்டது”. அதனுடாக சதிர் என்ற பொதுவெளி காம களியாட்ட கலை சமுக அளவில் தரம் உயர்த்தப்ட்டது. வேணும் என்றால் இது தொடர்பக நடிகை சொர்ணமாலா அவர்களின் அவர் மெட்ராஸ் பலகலை கழகத்தில் சமர்பித்த PHd ஆய்வுகட்டுரையை தேடிப்படித்து விட்டு வந்து மேலும் நீங்க விவாதிக்கலாமே நீங்க!

  பெரியாரிஸ்டுகள் மீது எல்லாம் மொக்கையாக “ஹ்ந்துட்டுவா சமுகத்தின்” குற்றங்களை சுமத்திவிட்டு நீங்க தப்ப முடியாது ரெபெக்கா…!

  //இந்த அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட பாட இவளுக்கு தைரியம் இருக்கிறது என்றால், நிச்சயம் இவள் பிஞ்சிலேயே பழுத்த தே*****வாகத் தான் இருக்க வேண்டும் என்பதை தான் பெரியாரிஸ்டுகள் தொடங்கி கோவன் வரை இங்குள்ளவர்கள் நீட்டி முழக்கி பேச வருவதெல்லாம். //

 9. ஒன்றை கூறி விடுகிறேன், இங்கு மறுமொழியில் நான் என்னுடைய கருத்துக்களை மட்டுமே பதிவு செய்து கொண்டிருக்கிறேனே ஒழிய, குறிப்பாக யாருடைய கேள்விகளுக்கும் நான் பதில் அளித்து கொண்டிருக்கவில்லை என்பதை ஒரு சிலர் நினைவில் கொள்ளவும். அதிலும் நான் கேள்விகளை முன் வைக்க வேண்டுமென்றால், வினவிடம் மட்டும் தான் வைப்பேனே தவிர வேறு எவரிடமும் அல்ல. சிலர் தங்களை நோக்கி நான் கருத்து பதிவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் இங்கு பொதுவாக என் கருத்துக்களை கூறி கொண்டிருக்கிறேன் அவ்வளவே ….

  • இதைவிட மொக்கையாக கூறி பின்வாஙக முடியாது.விட்டு விடுங்கள்,மாணவன் குமார்

  • பதில் அளிக்காமல் இருப்பது உங்கள் உரிமை சகோதரி. ஆனால் இதை நாம் புரிந்து கொள்வது சம்பந்த பட்ட பிரச்சினையில் விமர்சனத்துக்கு அப்பற்பட்ட ‘புனிதம்’ கண்டவனுக்கும் பதில் கூற முடியாது என காட்டி நழுவும் எஸ்கேபிசம் எனவே. மதஅடிப்படை வாதிகளிடம் உள்ள ஒரு பண்பு.

   • சின்னா…….

    நான் சொல்ல வருவது உங்கள் புரியவில்லை என்றால், அதற்க்கு நான் பொறுப்பாளி அல்ல. நான் பதில் கூறாமல் ஓடி விடுவேன் என்று கூறவில்லை. வருவோர், போவோருக்கெல்லாம் என்னால் பதில் கூறி கொண்டிருக்க முடியாது. தராதரம் பார்த்து தான் பதில் அளிக்கபடும். நான் கூற வருவதில், உங்கள் கேள்விக்கான பதிலும் அடங்கிவிடும் அவ்வளவே… புரிகிறதா..

    • தராதரம் என்று என்ன எதிர்பார்க்கிறீர்கள்? குமார் தீட்சை பெற்றிருக்கணுமா??
     குமாருடன் வேறு பதிவுகளில் கடுமையாக முரண்பட்டாலும், இங்கு சரியாகவே கேட்கிறார். அவர் ஆதாரமாக போட்ட பலான பாடலுக்கு ‘சிருங்காரம்’ என விளக்கினாலும் அந்த ‘சிருங்காரம்’ எப்படி ஒரு சிறு பெண்னின் மனதில் தோன்றும்?? அதற்கு விளக்கம் முடிந்தால் கொடுக்கவும், மணிகண்டன் ‘காதல் மார்க்கம்’ என எதோ கீழே பதிலளித்துள்ளார். அதை போல் பதில் அளிக்க முயற்சிக்கவும். அதற்கு குமார் பதில் அளிப்பார் தானே! அதை விடுத்து ‘தராதரம், வருவோர் போவோர் என மேட்டிமைதனம் பேசுவது சரியல்ல.

     உங்கள் பதில் 16 இல் அதற்கு தகுந்த விளக்கம் இல்லை, வெறுமனே கோதை நாச்சியாரை வச்சு செய்கிறோம் எனவே எண்ணுகிறீர், உண்மையில் அந்த அப்பாவி பெண்ணுக்க்கு என்ன நடந்தது என்பது பற்றி தான் எமது கவலை.

     • அந்த பாடலை வெளியிடுவது கூட எனது விருப்பம் அல்ல சின்னா… வினவுக்கும் விருப்பம் இல்லாததால் தான் ஒரு நாள் முழுக்க அந்த பின்னுட்டத்தையே அவங்களும் வெளியிடவில்லை… அதே நேரத்தில் இலக்கியத்தில் இருந்து ஆதாரம் கேட்க்கும் போது நாம “தோமே” என்று ஒன்னும் தெரியாத ஜென்மமாக நிக்ககூட்டாது அல்லவா? அதுக்கு தான் ஆண்டாளின் பாடலை அதனை இலக்கிய கேட்டவருக்கே கொடுத்து இருக்கேன்…கூடவே ஒரு கேள்வியையும் எழுப்பி இருதேன்… ஆண்டாள் தேவதாசி இல்லை என்றால் அறிவியல் அல்லது மனத்தத்துவ ரீதியாக அப்படி பாடல் எழுதுவது ஆண்டாளுக்கு எப்படி சாத்தியம் ஆயிற்று என்று! அதுக்கு நேரடியான பதில் தான் வராமல் தாராதரம் மயிறு மட்டை… என்று பதில் வருது இந்த பெண்மணியிடம் இருந்து…!

      பொது வெளியில் தாரதரம் பார்க்கும் மனிதர்கள் என்னத்துக்கு வினவில் வந்து நோட்டனும்? தன் கருத்துரிமையை மூடிகிட்டு போவலாம் இல்ல? இவிங்க தராதரம் பற்றி பேசுவது எதுக்கு இணை என்றால் ஆடத்தெரியாத தேவரடியார் மேடை கோணல் என்று சொல்வது போலதானே இருக்கு!

  • ரெபெக்கா மேரி, நான் பதில் அளிப்பது கூட வினவு வாசகர்களுக்காக தானே தவிர உங்களுக்காக அல்ல…!நான் வினவு வாசகர்களுக்கு உங்கள் கேள்விகள் ஊடாக பதில் அளிக்கும் தருணத்தில் அம்பலப்ட்டு நிற்பது நீங்கள் அல்ல… ஆனால் உங்களின் மொக்கையான கருத்துகள் மட்டுமே… ! ஆமாம் அப்போது உங்கள் கருத்துகள் வலுவிழந்து நிற்கும்!

 10. மாணவன் குமார் உங்கள் வாதம் தவறு சங்க காலத்தில் பல தமிழ் பெண் புலவர்கள் இருந்து இருக்கிறார்கள், ஔவையார், அஞ்சில் அஞ்சியார், வெள்ளி வீதியார் என்று எத்தனையோ பெண் புலவர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் அவர்களில் பலர் அகநானுறு பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். அகநானுறு பாடல்கள் தலைவன் தலைவியை பற்றியது என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.

  இந்த அகநானுறில் காதலை பற்றி காமத்தை பற்றி எழுதிய அத்தனை பெண் புலவர்களையும் நீங்கள் இப்படி அவதூறாக பேச முடியும்மா ?

  பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொன்ன பெரியாரை பின்பற்றும் வினவு கூட்டங்களுக்கு, கண்ணனை தவிர வேறு யாரையும் நேசிக்க மாட்டேன் என்று சொல்லும் ஆண்டாளின் கற்பு காதல் உங்களுக்கு கலாச்சார அதிர்ச்சியாக தான் இருக்கும்.

  ஆண்டாளின் காலத்திலும் பல பெண்கள் நன்றாக படித்து இருக்கிறார்கள் அவர்கள் எழுதிய கவிதைகளும் ஆதாரமாக நமக்கு இருக்கிறது.

  ஆண்டாள் ஹிந்து மதத்தை சேர்ந்தவள் கண்ணனை நேசித்தாள் கண்ணனையே திருமணம் செய்ய விரும்பினால், அவளின் விருப்பம் நிறைவேறியது என்பது தான் உங்களுக்கான பிரச்சனை.

  • அகநானுறு பாடல்களை சங்க காலத்தில் எழுதிய எந்தப்பால் புலவரும் தொல்காப்பிய நெறிமுறைகளை அடிபடையாக கொண்டு தான் எழுதினார்களே தவிர ஆண்டாளை போன்று ஆபாசமாக அடுத்தவள் புருஷன் மீது (கண்ணன் மீது )காமத்தை உமிழ்ந்தது காமத்தில் உருகி எல்லாம் எழுதவில்லை என்ற எளிய உண்மையை உமக்கு வலியுறுத்த விரும்புகின்றேன். அப்ப்படி எழுத தமிழ் இலக்கண விதிகளை தன்னகத்தே கொண்டு இருந்த தொல்காப்பியமோ அல்லது நன்நூலோ இடம் தரவில்லை என்ற உண்மை கூட ராமனை போன்று உமக்கும் தெரியவில்லையே!

   “அஸ்க்கு புஸ்கு” என்று சினிமா பாட்டு மாதிரி எழுதப்பட்ட ஆண்டாளின் ஆபாச குப்பைகளை கூட தமிழின் சிறந்த படைப்புகளாக கொண்டாடவேண்டும் என்றால் அது உம்மை போன்ற மொரட்டு பக்தர்களால் மட்டுமே சாத்தியம்….. என்னமோ போ மணிகண்டா…!

   • மாணவன் குமார் ஹி ஹி ஹி உங்களுக்கு அகநானுறு பாடல்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது.

    கம்ப ராமாயணம் எல்லாம் படித்து பாருங்கள்.

    • மணிகண்டன்…அட கருமத்த….., அகநானுறு பற்றி பேசிகிட்டே அதில் உள்ள காமத்தை விளக்குகின்றேன் என்று சொல்லிக்கிட்டு நீங்க அப்படியே கம்ப ராமயணத்துக்கு கொரங்கு மாதிரி தாவினால் எப்படி மணிகண்டன்? கம்ப ராமாயணத்தை எப்ப அகநாநுர்று பாடல்களுடன் சேர்த்தார்கள்? முதிரிச்சி உங்களுக்கு! ஆண்டாளின் மொரட்டு பக்தராக இருந்தவர் இப்ப மொள்ளமாரி விமர்சகராக மாறிட்டிங்க…. நல்லா வருவிங்க மணிகண்டன்!

     ஆண்டாளின் சிருங்கார ரசம் கமழும் பாடல்கள் எல்லாம் தேவதாசிகளின் சதிராட்டத்துக்கு உரியவை தானே தவிர தமிழுக்கானவை அல்ல…

     • ஐயோ பாவம் இலக்கிய அறிவு துளி கூட இல்லாமல் இருக்கியே குமார்.

      கம்ப ராமாயணத்தில் காமம் பல இடங்களில் அதிகமாக இருக்கும் ஆனால் கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பனை பற்றி நாம் பேசுவது இல்லை (காரணம் கம்பன் ஒரு ஆண்), அதேபோல் பல அகநானுறு பாடல்களிலும் தலைவன் தலைவியின் காதல் ஊடல் காமம் பற்றி இருக்கும் ஆனால் அது பற்றியும் நாம் பேச மாட்டோம்…

      ஆனால் ஆண்டாளை பற்றி மட்டும் கண்டபடி பேசுவோம் காரணம் அவள் ஒரு பெண், ஹிந்து மதத்தை சேர்ந்தவர், இது உங்களின் ஆணாதிக்கத்தின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.

      • காம ரசம் வழியும் கம்ப ராமாயணத்துக்கு பெரியாரும் அவர் சார்ந்த கட்சியினரும் எழுதியுள்ள விமர்சனங்களை தம்பி மணிகண்டன் படித்தது இல்ல போல…படிக்கவில்லை என்றால் நாம என்ன செய்ய? ஆமாம் பெரியார் ஆண்டாள் பெண் என்பதால் ஆண்டாளின் காசம்ரசம் சிந்தும் சிருங்காரங்க்களை விமர்சிக்காமல் விட்டுவிட்டு சென்றது தவறு தான்… அவர் விட்ட வேலையை நாமே தொடருவோம் மணி….!

       அகநானுறு பாடல்களில் காமம் பற்றி இருக்கு என்றால் அதனை சுட்டிகாட்டவேண்டியது உமதுவேலை தானே மணி! அதுக்கு நானா சாட்சியை அழைத்த்து கொண்டு வந்து பேசமுடியும்…சோம்பேறி ம்நிக்ன்டன்….!

       • குமார்: இலக்கிய அறிவே இல்லாமல் இந்த விவகாரம் பற்றி நீங்கள் பேச வந்ததே தவறு. கம்பன் காளிதாசன் அகநானுறு போன்ற இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு பிறகு ஆண்டாளை பற்றி பேச வாருங்கள்.

        என்னை பொறுத்தவரையில் கண்ணன் மீதான ஆண்டாளின் காதல் மிக புனிதமானது. அவரின் காதலை பற்றி பேச (அல்லது புரிந்துகொள்ள) நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு தகுதியே இல்லை.

        ***********உங்களால் ஆண்டாளின் புனிதமான காதல் ஏற்க முடியமால் அவதூறு பேசுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை

        • ஏதாவது பதில் சொல்லியே ஆகணும் ,உளறியே ஆகணும் என்ற நிலையில் நீங்க பேசிகிட்டு இருபது புரியுது மணி…!

         அகநானுரில் இருந்து ஆபாச பாடலுக்கு ஒரு உதாரணம் காண்பிக்கலாமே நீங்க துப்பு இருந்தால் என்று கேள்விகேட்டதுக்கா இப்படி மணி?

         இப்ப மேட்டரு ஆண்டாலு பற்றியது… ஆனா நீங்க படிக்க சொல்வது கம்ப ராமாயணத்தை பத்தி…! இயற்பியல் தேர்வுக்கு வேதியல் படிச்சிகிட்டு போய் தேர்வில் கோட்டைவிட்ட அந்த வெடிவேலு நீங்க தானா மணி! ஹ ஹா…..! மேலும் கம்ப ராமாயணத்தின் காம-களியாட்ட நிகழ்வு பாடல்கள் தான் மக்கள் முன் பெரியாரால் முன்பே அம்பலபபடுத்தப்பட்டு நிக்குதே…! மீண்டும் காம ராமாயணத்துக்கு போய் அதனை விமர்சிக்க வேண்டிய தேவை எங்கே வந்தது?

         பிசிறு அடிக்க நீங்க என்ன்னத்தை பேசினாலும் உண்மை என்ன்வென்றால் ஆண்டாள் பாடிய அந்த பாடல் தேவதாசிகள் அரசனையும் பிறரையும் மகிழ்விக்கதேவரடியார்கள் நாட்டியம் ஆட்டும் போது பாடப்படும் சிருங்கார சரம் சொட்டும் நடையில் தானே இருக்கு! சதிராட்டத்துக்கு ஏற்ற பாடலாக தானே இருக்கு! நான் என்ன செய்ய?

         • உங்களை போன்றவர்களுக்கு இலக்கிய அறிவும் இல்லை வரலாற்று அறிவும் இல்லை ஆனாலும் நானும் ரவுடி தான் கணக்கில் பேச வந்து விடுகிறீர்கள்.

          நான் காளிதாசரை படிக்க சொன்னதற்கு காரணம் மேகதூதம், அதில் அவர் தேவரடியாரை பற்றி விளக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.

          அதேபோல் தேவரடியாருக்கும் ராஜதாசிக்கும் வித்தியாசம் தெரிந்துகொண்டு பேசுங்கள். சும்மா ஏதாச்சும் உளறி கொட்ட வேண்டாம்.

          மேலும் தேவரடியார் என்பது பெண்களை மட்டும் குறிப்பது அல்ல, தேவரடியாராக ஆண்களும் இருந்து இருக்கிறார்கள். தேவரடியாருடன் மற்றவர்கள் பேசுவதோ அல்லது தொடுவதோ குற்றமாக கருத்தப்பட்டது.

          தேவரடியார் முறை தவறாக போனதற்கும் இந்தியாவின் மீது நடந்த இஸ்லாமிய படையெடுப்பிற்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.

          பெண்களை மிக மோசமாக சித்தரிக்கும் உங்களை போன்ற வினவு கூட்டங்களின் ஆணாதிக்க வக்கிர மனநிலை மாற வேண்டும்.

          • மணிகண்டன் , நீங்க அகநானுற்றில் ஆபாசமிருக்கு என்று தொடங்கினிங்க…., ஆதாரத்துடன் அகநானுற்று பாடலை கேட்டேன்… ஆதாரம் கொடுக்காமல் கம்ப ராமாயணத்துக்கு ஓடிவிட்டீர்… அதுவும் ஆபாசம் தானே என்றீர்.. ஆமாங்க கம்பராமாயணம் காமரசம் தான்… அதனை அதில் உள்ள ஆபாசத்தை முன்பே பெரியார் அம்பலபடுத்திவிட்டார் என்றேன்… இப்ப காளிதாசரை படிக்க சொல்றீங்க….இது தான் விவாத முறையா? சரி விவாத முறை என்றே வைத்துகொண்டு உங்களுடன் விவாதிக்க தயாராக தான் இருக்கேன்…அதே நேரத்தில் கிழ் உள்ள கேள்விகளை படித்து பதில் அளிக்க முயலவும் ….

           1. கம்பராமாயணம் உங்க பார்வையில் காமரசம் கமழும் காவியம் தானே?

           2. அகநானுற்றில் உள்ள ஆண்டாள் பாடல்களை போன்ற ஆபாச பாடல்களை சுட்டிகாட்ட ஏன் ஒரு உதாரணம் கூட உங்களால் கொடுக்க முடியவில்லை…?

           3.காளிதாசர் சுட்டிக்காட்டும் தேவதாசி முறை அத்துனை உயர்ந்த முறை அது பிற்காலத்தில் தான் அசிங்கப்ப்டுத்தப்ப்டு உள்ளது என்றால் அன்றைய சிரிங்கார ரசம் கமழும் பாடல்களை பாடிய தேவதாசி ஆண்டாளை தேவதாசி என்று அழைக்க உம்மை போன்ற இந்துதுவாகளுக்கு என்ன பிரச்னை?
           தொடரும்…..

  • ஒரு பெண் (ஆஸ் பெர் யுவர் வெர்சன்) ஒரு பொம்பளைப் பொறுக்கியை அதாவது கிருஸ்ணனை (ஆஸ் பெர் யுவர் வெர்சன் இன் கிருஸ்ண லீலா) நேசித்தாள் என்றாள், என்ன டிசைன் சார் அது ?..

   அகநானூறு, திருக்குறள் பேசும் காமம் என்பது மெடிக்கல் சயின்ஸில் உடலியல் இன்பங்கள் பற்றியவை. அதாவது இன்று மருத்துவர் காமராஜ் போன்றவர்கள் எழுதும் நூல்களில் வரும் எழுத்துக்கள் போன்றது.

   ஆண்டாளின் நூலில் வழியும் காமம், சாட்சாத் சரோஜாதேவி புத்தகத்தை இலக்கியத் தரத்தில் வடிவமைத்துத் தருவதைப் போன்றது. ஆகவே.. தாங்களே ஒரு நல்ல முடிவாக எடுத்து ஆண்டாளை இன்னாரென்று டிஃபைன் பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறேன் மணி மாம்ஸ்..

   • அனானியன் இதே பதிலை அப்படியே ரெபெக்காவின் கடைசி பின்னுட்டத்துக்கும் கொடுங்க…. அவன் இவன் என்று வக்கணையாக பேசிக்கிட்டு இருக்கும் அந்த அம்மா திருந்தறாங்களா பார்கலாம்….!

 11. இதுவே ஆண்டாள் மற்ற மதத்தில் பிறந்து இருந்தால் (அப்போது இந்த மாதிரி எழுதி இருக்க முடியாது) உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆணாதிக்க சமூகத்தில் இப்படி ஒரு துணிச்சலான பெண்ணா என்று ஆண்டாள் பாராட்டி இருப்பீர்கள் ஆனால் ஆண்டாள் ஒரு பெண் அதுவும் ஹிந்து மத கடவுளை பற்றி பாடிய பெண், அதனால் இந்தளவுக்கு அவதூறாக பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

  • வணக்கம் மணி மாமஸ்,

   சவுக்கியமா .. பாத்து ரொம்ப நாள் ஆச்சே..

   //// இதுவே ஆண்டாள் மற்ற மதத்தில் பிறந்து இருந்தால் (அப்போது இந்த மாதிரி எழுதி இருக்க முடியாது) உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆணாதிக்க சமூகத்தில் இப்படி ஒரு துணிச்சலான பெண்ணா என்று ஆண்டாள் பாராட்டி இருப்பீர்கள்/////

   அதாவது ஆண்டாளின் பாடல்களின் ’துணிச்சலை’ வினவு பாராட்டவில்லை என்பது தான் தங்களது மனக்குறையாக இருக்கிறது ..

   சரி மணிகண்டன், உங்கள் விருப்பப்படியே ஆண்டாளின் ‘துணிச்சலான’ எழுத்துக்களை வைத்து வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்.

   அந்தக்காலத்தில் வரலாறோ, அல்லது கதையோ எழுதுவதென்றால் செய்யுள் வடிவத்தில் தான் எழுதியுள்ளார்கள் என்பதை மணி மாம்ஸ் ஏற்றுக் கொள்வீர்கள் என்றே கருதுகிறேன். அந்த அடிப்படையில், இன்றைய உரைநடை அன்றைய செய்யுள்.

   இப்போ மணிகண்டனுக்கு சின்ன வயசுல ஆபாசப் புத்தகம் படிச்ச அனுபவம் இருக்கா … நீங்க நெம்ம்ம்ப நல்லவருன்றதால படிச்சிருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்.. அந்தப் புத்தகங்கள்ல எழுதப்படக் கூடிய கதைகள்ல பாதிக் கதை சொந்தமான அனுபவங்களை எழுதுவது போல எழுதியிருப்பாங்க கதாசிரியருங்க …

   அந்தக் கதாசிரியரு ஆம்பளையா, பொம்பளையான்னு பலான புக்க படிக்கிறவனுக்கு தெரியாது. ஆனா அங்க நெரேசன் பண்றது கதையோட கேரக்டர் தான். அந்த மாதிரி அந்தக் காலத்துல எழுதப்பட்ட பிட்டுப் படக் கதை தான் ஆண்டாளோட பாசுரமோன்னு எனக்கு லைட்டா ஒரு சந்தேகம் இருக்கு ஓய்.. நம்ம பா.ராகவனே தன்னோட வெப்சைட்டுல முன்னாடி ஒரு நாள் தமிழ்-ல நல்ல சாஃப்ட் போர்னோ கதை வேணும்னா ஆண்டாளைப் படிங்கன்னு சொல்லிருக்காருன்னா பாத்துக்கோங்க மணி.

   இப்ப உங்களுக்கு ரெண்டு ஆப்சன் இருக்கு மணி. ஒண்ணு, அந்த சாஃப்ட் போர்னோ க(வி)தையை ஆண்டாளுன்னு ஒரு பொண்ணு எழுதிருக்கனும். அல்லது ஒரு ஆண் கதாசிரியர் தன்னோட சாஃப்ட் போர்னோ க(வி)தை அதிக சர்குளேசன் ஆகனும்னு ஒரு பொண்ணோட நேரேஷனுல அதாவது ஆண்டாளோட நெரேஷனுல எழுதிருக்கனும்.

   ரெண்டுல எதைத் தேர்ந்தெடுக்கப் போறேள் ?.

   ஆண்டாளு ஒரு ஆம்பளை தான்னு சொல்லப் போறேளா ?. இல்லை இது ஆண்டாளோட சொந்த நேரேஷன்னு சொல்லப் போறேளா ?. அதாவது ஆண்டாளே இல்லையா ?. அல்லது ஆண்டாள் ஒரு காமம் சொட்ட சாஃப்ட் போர்னோ கதை எழுதிய ’துணிச்சலான’ பெண்ணா ?.

   பதில் சொல்லுங்கோ ஓய் …

   அக்கா ரெபெக்கா மேரி, அப்புறம் அல்லக்கை R, எல்லாரும் பதில் சொன்னா நல்லா இருக்கும்

   • உங்களின் வாதமே தவறு.

    ஹிந்து மதத்தில் கடவுளை நண்பனாக, தெய்வமாக, எதிரியாக, காதலனாக, கணவனாக வழிபடும் முறை இருக்கிறது. இதில் ஆண்டாள் கடவுளை அடைய தேர்ந்தெடுத்த முறை காதல்.

    காதல் மூலமும் கடவுளை அடையலாம் என்று சான்றளித்தவள் கோதை.

    என்னை பொறுத்தவரையில் கடவுள் பக்தி என்பது கேள்விகளுக்கும் தர்க்கங்களுக்கும் அப்பாற்பட்டது (கமல் வார்த்தைகளில் சொல்வது என்றால்) ஆண்டாளின் காதலை உணர்ந்துகொள்ள அது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது

    ஏ ஆர் ரஹ்மான் இசையில் வந்த வைரமுத்துவின் “மார்கழி திங்கள் அல்லவா” பாடல் கேட்டு இருக்கிறீர்களா ? அந்த பாடலின் மூலம் ஆண்டாளுடையது, ஒரு பெண் தனது காதலனை அடைய தவிக்கும் தவிப்பை பற்றி அந்த பாடலில் எழுதி இருக்கிறார். ஆண்டாளின் பாடல்கள் எல்லாமே கடவுளை அடைய வேண்டும் என்ற தவிப்பு தான் இருக்கிறது.

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
    சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
    கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
    நாராயணனே நமக்கே பறை தருவான்
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

    இந்த பாடலை பாருங்கள் காதல் காமம் என்று அனைத்தையும் தாண்டி ஒரு சிறு பெண்ணின் மிக சிறந்த தமிழ் அறிவு தெரியும். ஆண்டாளின் பாடலை படித்த பிறகு கடவுள் மீதும் காதல் மீதும் தனி மரியாதையே வரும்.

    வினவு கூட்டங்களை போன்ற வக்கிர மனங்களுக்கு இது ப்ரோனோவாக தெரியலாம்

    • உங்களுக்கும் அதே கேள்வி தான் ….மணிகண்டன்….! நீங்க குடும்பத்துடன் வெளியில் செல்லும் போது எவனோ ஒரு ஆண்டாளை மொரட்டு தனமாக ஆராதனை செய்யும் பொருக்கி, ஆண்டாளின் ஆபாச பாடலை உங்க குடும்ப பெண்களை கிண்டல் செய்ய படறான் என்றால் அதில் உள்ள, அந்த பாடலில் உள்ள தமிழை ரசிப்பீரா? இல்ல அந்த பாடலில் உள்ள ஆபாச கருத்தை அடையாளம் கண்டு அவனை உதைபீரா? செருப்பால் அடிபீரா?

     நான் அவனை செருப்பால் அடிப்பேன்… நீங்க எப்படி..? வெக்கம் மானம் சூடு சொரனை எல்லாம் இருக்கா உங்களுக்கு?

 12. ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக என்னுடைய கருத்தினை சுருக்கமாக தொகுத்து அளித்து விடுகிறேன்.

  ௧) கோதையை தேவதாசி என்று பட்டம் கட்டி விட நினைப்பவர்கள், தாங்கள் கூற வரும் கருத்திற்கு ஆதாரமாக முன்வைப்பது, அவள் எழுதிய சிருங்கார நடையிலமைந்த பாடல் வரிகளை மட்டும் தானே தவிர, வேறு உருப்படியான எந்த தரவுகளையும் ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இது அப்பட்டமான ஆணாதிக்க வெறியின் உச்சம். இன்றைய காலத்தில் கூட ஒரு பெண், ஆண் துணையில்லாமல் தனியாக நின்று வாழ்வில் பொருளாதார வளர்ச்சியை எட்டினால், “இவள் என்னவெல்லாம் செய்து சம்பாதித்திருப்பாளோ” என்று ஆணாதிக்க பொறுக்கிகள் எப்படி எல்லாம் மட்டம் தட்டி வார்த்தைகளால் வேசையாக்கி கேவலப்படுத்த பார்ப்பார்களா, அதற்க்கு கொஞ்சமும் சளைக்காமல் தான் இப்பொழுதும் ஆண்டாளின் மீது தங்களின் வக்கிரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களுக்கு கல்வி மறுக்க பட்டிருந்த காலத்தில், டாகடர் முத்துலட்சுமி ரெட்டி எவ்வாறெல்லாம், கடுமையான வசைகளுக்கெல்லாம் ஆளானரோ அதே தான் இப்பொழுது பெரியாரிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் கோதை நாச்சியாருக்கு செய்து கொண்டிருப்பது.

  ௨) இதனை வைத்து என்னவெல்லாம் ஆதாயம் அடைய முடியுமோ, அதை முடிந்த அளவு கச்சிதமாக இரண்டு பக்கங்களிலும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஹெச்.ராஜா போன்ற கேடுகெட்ட இழி பிறவிகளும், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இதனை வைத்து எப்படியாவது இங்கே காலூன்றிவிடலாம் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில், இவர்கள் யாருக்கும் ஆண்டாளின் மீது கொஞ்சமும் அன்போ, அக்கறையோவெல்லாம் கிடையாது. இவர்கள் நினைத்திருந்தால் இதனை ஒரு பெரிய விஷயமாக ஆக்கி இருக்காமல் செய்திருக்கலாம். மேலே, நெப்போலியன் என்கிற பதிவர் குறிப்பிட்டது போன்று இவை அனைத்தும் கலவரத்தை ஏற்படுத்தி தங்களின் அரசியலை போனியாக்க உதவும் மாடல்கள் அவ்வளவே.

  அதற்க்கு சற்றும் குறைவில்லாமல், தங்கள் அரசியலை, கருத்தியலை முன்னெடுக்க இவர்களுக்கு கிடைத்த வாய்ப்பாக ம.க.இ.க, தி.க போன்ற முற்போக்குகள் இதனை பயன்படுத்தினார்கள். அந்த வகையில் பார்த்தால் ஆண்டாள் இவர்களும் ஒரு நல்ல துருப்புசீட்டாகி விட்டாள். கோவன் பேசியது மிகவும் அநாகரீகமான ஒன்று தான். இந்துத்துவா இயக்கங்களையும், பார்ப்பன சக்திகளையும் அம்பல படுத்த போகிறோம் என்கிற பெயரில் ஆண்டாளையும் சேர்த்து நன்கு வஞ்சம் தீர்த்துக் கொண்டார்கள். இவர்கள் நினைத்திருந்தால், ஆண்டாளை தவிர்த்து பார்ப்பன, இந்துத்துவா இயக்கங்களை மட்டும் தனியா வைத்து உரித்தெடுத்திருக்கலாம். ஆனால், இவர்களின் இலக்கில் ஆண்டாள் தான் முக்கியமாக இருக்கிறாள் என்பது இவர்களின் காணொலியை பார்த்த பொழுதே புரிந்து கொண்டேன். சரி, இப்போது கேட்கிறேன் கோவன் அவர்களே, “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” என்று கேட்டீர்களே, நீங்களும் உங்களின் கும்பலும் சேர்ந்து, எங்கள் தமிழ் மகளை தெருவில் இழுத்து விட்டு நன்றாக செய்து விட்டீர்களே. இதற்க்கு என்ன சொல்ல போகிறீர்கள். இது தொடர்பாக நீங்கள் என்ன ஆய்வு செய்து, என்ன உண்மையை கண்டறிந்து கிழித்து விட்டீர்கள். கொஞ்சம் சொல்லுங்கள் பார்ப்போம். ஆண்டாளின் கவிதையை இதற்க்கு முன்பு தாங்கள் படித்ததாவது உண்டா..

  ௩) அன்று பெரியாருக்கு தமிழர்களின் தொன்மமான கண்ணகி கிடைத்தாள், இன்று ம.க.இ.க விற்கு ஆண்டாள். நல்ல கூட்டணி, நல்ல ஒற்றுமை. நீங்கள் இந்துமதத்தை, சாதியை, பார்ப்பனியத்தை அவர்களின் இலக்கியமான மனுதர்மம், பகவத் கீதை, வேதம் போன்றவைகளை என்ன வேண்டுமானாலும் விமர்சனம் செய்து விட்டு போங்கள். ஆனால், எங்களின் தமிழ் அடையாளத்தை சிதைக்க நினைத்தால் நிச்சயம் இதில் தோல்வி அடைய போவது தாங்கள் தான். அது மட்டும் உறுதி.

  இறுதியாக, இதற்க்கு மேல் கோதை நாச்சியாரை பற்றி பேசுவதாக இருந்தால், தக்க ஆதாரம் இருந்தால் அதன் அடிப்படையில் பேசவும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று வந்தவன் போனவன், கண்ட இத்துப் போனவனின் புத்தகத்தில் உளறி கொட்டியதை எல்லாம் இனியும் நீங்கள் கூறினால்…. கூறினால்…….. கூறினால் ……………. ஒன்றுமில்லை, உங்களை அஃறிணையாக நினைத்து கடந்து போவது ஒன்று மட்டும் தான் ஒரே வழி. நன்றி.

  • வினவு கூட்டங்களை பொறுத்தவரையில் பெண் என்பவள் ஒரு போக பொருள், அவர்களின் பார்வை அதன் அடிப்படையிலேயே இருக்கும், இவர்களிடம் காதல் அன்பு பற்றி பேசுவதே வீண் வேலை.

   பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொல்லும் பெரியார் வழி வந்தவர்களுக்கு காதலை பற்றி ஒன்றுமே தெரியாது அவர்களுக்கு காமம் ப்ரோனோ என்பது தான் தெரியும்.

  • ஹச் ராஜாவாவது ஆண்டாளை பற்றி பேசியவரை தேவரடியார் மகனாக தான் சொன்னார்… இந்த ரெபெக்கா அம்மா என்ன சொல்றாங்க பாருங்க…..அஃறிணையாக நினைத்து கடந்து போவாங்களாம்…அப்படியே போறப்ப… ஆண்டாள் மேட்டரில் எதுக்கு ஹிஸ்டீரியா வந்த மனநோயாளி போன்று இந்த பெண் மணி கத்தனும் என்ற விசயத்தின் உளவியலையும் கொஞ்சம் அவதானித்து விட்டு நாம நம்ம விசயத்தை பார்க்கலாம் என்று இருக்கேன்….தேவரடியார் என்ற சமுக முறைமையை உருவாகியது யார் என்றால் இதே பார்பன பண்பாட்டு விசிலடித்தான் குஞ்சுகள் தான். இப்ப ஆண்டாள் அந்த வரையறைக்குள் வரும் போது இது காரும் அனுப்வித்துகொண்டு இருந்த சமுக சிறப்பு வாய்ந்த படிநிலை புறகணிக்கபட்டு பார்பனர்களுக்கும் அதே தேவரடியார் என்ற பட்டம் சுமத்தப்டுகிறதே என்ற வலியை தவிர வேறு ஏதும் இருபதாக தெரியவில்லை.தேவரடியார் என்று ஒரு சாதியையே வேலை அடிப்டையில் உருவாகிய பார்பன கூட்டம் இப்ப தனக்கு அந்த பட்டம் ஆண்டாள் மூலமாக வரும் நிலையில் ஊளையிட்டுகொண்டு இருக்கு… அந்த ஊளையின் மவுத் பீஸ் தான் இந்த ரெபெக்கா மேரி போல….

   “””””””””இறுதியாக, இதற்க்கு மேல் கோதை நாச்சியாரை பற்றி பேசுவதாக இருந்தால், தக்க ஆதாரம் இருந்தால் அதன் அடிப்படையில் பேசவும், அவன் சொன்னான், இவன் சொன்னான் என்று வந்தவன் போனவன், கண்ட இத்துப் போனவனின் புத்தகத்தில் உளறி கொட்டியதை எல்லாம் இனியும் நீங்கள் கூறினால்…. கூறினால்…….. கூறினால் ……………. ஒன்றுமில்லை, உங்களை அஃறிணையாக நினைத்து கடந்து போவது ஒன்று மட்டும் தான் ஒரே வழி. நன்றி.
   “””””””””””””””””””

   ரெபெக்காவின் இந்த மனபானமைக்கு ஹச் ராஜாவே எவ்வளவோ தேவலாம்…

  • ரெபெக்கா மேரி,

   பொதுஇடத்தில் ஒரு ஆட்டோ டிரைவர் தப்பாக பேசிட்டார் என்பதனை மனதில் வைத்துக்கிட்டு மொத்த ஆட்டோ டிரைவரும் அப்படி தான் என்று வினவுக்கு வந்து இழிவு செய்த புனித ஜென்மம் அல்லவா நீங்க…! இப்ப ஒரே ஒரு கேள்வி தான் என்கிட்டே இருக்கு உங்களை நோக்கி கேட்க….!

   எவனோ ஒரு ஆண்டாளை மொரட்டு தனமாக ஆராதனை செய்யும் பொருக்கி, ஆண்டாளின் ஆபாச பாடலை(விவாதத்துக்காக இங்கே அந்த பாடல் உங்களாலும் என்னாலும் பதவு செய்யபட்டு உள்ளது) உங்களை கிண்டல் செய்ய படறான் என்றால் அதில் உள்ள, அந்த பாடலில் உள்ள தமிழை ரசிப்பீரா? இல்ல அந்த பாடலில் உள்ள ஆபாச கருத்தை அடையாளம் கண்டு அவனை உதைபீரா? செருப்பால் அடிபீரா?

   மேற்கண்ட நிகழ்வின் காரணமாக அடுத்தாக அவனை போன்ற அனைத்து ஆண்டாள் மொரட்டு பக்தர்களும் தவறானவர்கள் என்ற முடிவுக்கு வருவீர்களா?

  • திரும்ப . . திரும்ப . . . கூறியதையே கூறாமல், நாட்டாமை மாதிரி ‘இந்த சாட்சியை ஒத்துக்க முடியாது’ என்று கூறாமல், இங்கு கருத்துக்களை பதிவு செய்திருக்கிற நண்பர்களுக்கு சரியான பதிலடி கொடுங்களேன் பார்ப்போம்!
   முத்துலட்சுமி அம்மாவின் தேவதாசி முறை ஒழிப்பு சட்ட மசோதாவிற்கு துணை நின்றதே பெரியாரும் அவரது இயக்கமும் தான். உங்களுக்கு வரலாறு தெரியாதா, இல்லை எங்களுக்கு தெரியாது என நினைத்து விட்டீர்களா?
   // “ரங்கநாதன் கூப்புட்றான், ரங்கநாதன் கூப்புட்றானு சொல்லி அவள ஏமாத்தி கோவிலுக்குள்ள கொண்டு போனீங்களே அங்க வச்சு அவள என்னடா பண்ணீங்க” //
   என்று தோழர்கள் கேட்பது அவர்கள் ஆண்டாளுக்காக வாதிடுகிறார்கள் என்று புரியவில்லையா?
   ஆண்டாளுக்கான உங்களது வாதத்தில் மணிகண்டன்களின் சாயல் தெரிகிறது.

 13. வினவு கூட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஒரே ஒரு கோரிக்கை தான், முதலில் காதலித்து பாருங்கள் பிறகு நீங்கள் ஆண்டாளின் காதலை தானாகவே உணர்ந்துகொள்வீர்கள். நாம் காதலித்த பெண்ணையே திருமணம் செய்யும் போது காதல் காமம் பற்றிய உண்மையான அர்த்தமும் மகிமையும் புரியும்.

  • அது தான் சொலிகிட்டு திரியிரானே ஒரு பேமானி…இந்து மக்கள் கட்சிகாரன்….. பிப்ரவரி 14 அன்று காதலர்கள் தெருவில் நடந்தால் உடனே கல்யாணம் செய்துவைப்பாமே ! அவனிடம் போய் சொல்லுங்க மணி…..!

 14. பெரியாரிஸ்டுகள் தொடங்கி அல்லடை.. சில்லாட்டைகள் வரை அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டாக கூறும் ஒரே விடயம் ” 15 வயதிற்குள் ஆண்டாளால் எப்படி இதை போன்றதொரு சிருங்கார நடை கொண்ட கவிதை எழுத முடியும் என்பது தான். முதலில், இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களோடு, ஆண்டாளை ஒப்பிட்டு பேசுவதே தவறு. ஆண்டாளின் காலம் ஏழாம் நூற்றாண்டு, 12 13 வயதிலேயே திருமணம் செய்து கொடுத்துவிடுவார்கள். கண்ணகிக்கு திருமணம் ஆகும் பொழுது அவளின் வயது வெறும் 15 தான். மதுரையை எரித்த பொழுது 20 இருக்கும் அவ்வளவே. 35 அகவைக்குள்ளாகவே அவர்கள் பேரக் குழந்தைகளை பார்த்து விடுவார்கள். அறுபதை கடக்கும் முன்பே கொள்ளு பாட்டிகள் ஆகி விடுவார்கள். இந்த நவீன முதலாளித்துவ கால கட்டத்தில் நின்று கொண்டு இதனை நினைத்து பார்க்க முடியுமா. அப்படி மீறி நினைத்து பார்த்தல் என்பது முட்டாள் தனமாகும். ஆகவே, அன்றைய காலகட்டத்தில்(இன்றைய கால கட்டத்திலும் கூட) காதல் உணர்வு என்பது பதினைந்து வயதிற்குள்ளாகவே ஒரு பெண்ணுக்கு வருவது இயல்பான ஒன்று தான்.

  கோதை தன்னுடைய கல்வியை, கவி பாடும் திறனை வெகு சீக்கிரம் பெற்றிருக்கிறாள், இன்று கூட 15 வயதை தொடாத எவ்வளவோ சிறார்கள் இலக்கியத்தில்,அறிவியலில் வயதிற்கு மீறி பெரிய சாதனைகளை செய்வதில்லையா? அதனை போன்று தான் கோதையின் கல்வியும் தமிழ் அறிவும். அவர் தன் தந்தை சிறு வயது முதலே தமிழையும், கண்ணன் மீதான பக்தியையும் ஒரு சேர தன் தந்தை பெரியாழ்வாரிடமிருந்து கற்றுக் கொண்டார்.

  பக்தியில் உச்ச நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உன்னதம் இன்னதென்று தெரியும். உண்மையான பக்திக்கு பாலின ஆண், பெண் என்கிற பாகுபாடென்பது கிடையாது. இறை அடியவர்களுக்கென்று எந்த இலக்கண நிபந்தனைகளும் கிடையாது. இருந்தாலும், கோதை தன்னுடைய இலக்கண ஆசான் தொல்காப்பியர் வகுத்த இலக்கண நெறியின் படி வழுவாமல் நின்று தன் கவிதைகளை யாத்தாள். மற்றைய ஆழ்வார்கள், நாயன்மார்களின் பாடல்களோடு ஒப்பிடும் பொழுது, வடமொழி சொற்களை அதிகம் சேர்க்காமல், மேலும் வடமொழி ஓசைகளை உள்ளே புகுத்தாமல் மிகவும் அழகான செவ்வியலான தமிழில் தன்னுடைய பாடல்களை உருவாக்கி இருக்கிறாள். மொழியின் இலக்கணத்தை பழுதற கற்றவர்களால் தான் அவ்வாறான வெண்பாக்கள் இயற்ற கூடும்.

  கோதை, தான் இயற்றிய பாடல்கள் அனைத்திலும் நாயக-நாயகி பாவத்தையே கையாள்கிறாள். தொல்காப்பியரின் பாணியில் கூற வேண்டுமாயின் தலைவன் தலைவி என்கிற பாவனையில் நின்று அரங்கனை பாட்டுடை தலைவனாகவும், தன்னை தலைவியாகவும் தான் எண்ணி பாடல் இயற்றுகிறாள்( நன்றாக கவனிக்கவும், தலைவியாகத் தானே தவிர, தாசியாக அல்ல ) அப்படி கோதை உருவாக்கிய பல நூறு பாடல்களில் ஒரு ஏழு அல்லது பத்து பாடல் வேண்டுமானால் சிருங்கார கவி ரசம் பொங்க இருக்கலாம். பக்தியின் பரவச நிலை மேலிடும் பொழுது வரும் உணர்வு நிலையில் இருந்து பிறக்கும் சொற்கள் தான் அவை. இதை உணர உண்மையான பக்தி என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டும். சூனியத்தில் உழலும் நாத்திக பதர்களால் அவைகளை எப்படி உணர முடியும். அவர்களுக்கு, மேற்படி பாடல்கள் கிளுகிளுப்பூட்டும் காம காளியாட்டங்களாகவும், ஆபாச வருணனைகளாகவும் தெரிவதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை.

  நான் ஒன்று கேட்க்கிறேன், சிருங்கார நடையில் பாடல் புனைந்தாள் என்பதற்காக, அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டுமென்றால், இதனை போன்றே பல ஆண் கவிஞர்களும் இன்ப நடையில் அதே நாயக நாயகி பாவனையில் பாடி இருக்கிறார்களே அப்போது அவர்களை என்ன சொல்வது. அதை விட, இந்து மத கோவில்களில் உள்ள சிற்பங்களில் எவ்வளவோ நிர்வாண சிற்பங்கள் இருக்கின்றனவே, அவைகளை எல்லாம் என்ன தேவதாசிகள் தான் செதுக்கினார்களா ? அல்லது அதை செதுக்கிய சிற்பிகள் எல்லாம் தேவதாசர்களாக இருப்பார்களோ.

  ஐரோப்பிய மறுமலர்ச்சி காலமான மத்திய காலத்தை சார்ந்த லியானார்டோ, வான் காஹ், ரெம்பரான்ட்,மைக்கேலேஞ்சலோ போன்ற எவ்வளவோ ஓவியர்கள் வரைந்து தள்ளிய நிர்வாண படங்கள் எல்லாம் ஆபாச குப்பைகள் ஆகுமா, அவற்றில் எவ்வளவோ ஓவியங்கள் பிரான்ஸ் இத்தாலி நாட்டு தேவாலயங்களில் கொலுவீற்றிருக்கின்றன. அவர்களுக்கு தெரிகிறது எது ஆபாசம், எது கலை என்பது. கோவன் போன்ற ஆட்கள் எல்லாம் அங்கு செல்லுபடியாக மாட்டார்கள். ஆக, ஓவியத்தை என்ன கண் கொண்டு பார்க்கிறோமோ, அதே அளவு கோலுடன் தான் ஒரு கவியின் உள்ளத்தையும் நாம் ரசிக்க வேண்டும். சுருக்கமாக சொல்வதென்றால் ஆபாசமும் அருவருப்பும் பார்ப்பவரின் மனதினை பொறுத்தே இருக்கின்றது. ஆண்டாளின் வரிகள் ஆபாசமாக தெரிந்தால் அது அதனை படிப்பவரின் மன வக்கிரம் தானே ஒழிய, ஆபாசம் என்பது அவளின் படைப்பினில் அல்ல.

  ரோட்டில் விற்கும் ஆபாச புத்தகமும், கோதையின் கவியும் உங்களுக்கு ஒன்றென தெரிந்தால் ஒன்று உங்களுக்கு நல்லதற்கும், தீயதற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் உங்களின் கண்களை மறைக்கின்றது என்று தான் அர்த்தம்.

  ரோட்டில் விற்கும் தப்பான புத்தகத்திலும் ஆபாசம் தான் இருக்கிறது, ஆண்டாளின் பாடல்களிலும் இருப்பதும் அதே ஆபாசம் தான். ஆகவே, இரண்டும் ஒன்று தான் என்று பேசுவது எப்படி இருக்கிறது என்றால், என் தாய்க்கும் மார்புகள் இருக்கிறது, விபச்சாரிக்கும் மார்புகள் இருக்கிறது ஆகவே இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது ஒன்றுதான் என்று பேசுவதை போல் உள்ளது. புரிந்தவர்கள் திருந்தினால் சரி.. இதற்க்கு மேல் கூற ஒன்றுமில்லை…. ஆண்டாளை இனியும் அவதூறு பேசுவோர் பேசி விட்டு போகட்டும், எத்தனை ஆயிரம் கோவன்கள் வந்தாலும் சரி, எத்துனை லட்சம் பெரியாரிஸ்டுகள் பொங்கினாலும் சரி.தமிழுள்ள வரை கோதையின் பெயர் என்றும் பெருமை பட நிலைத்து நிற்கும்.அதனை எந்த கொம்பனாலும் ஒன்றும் அசைக்க முடியாது..

  கைப்பொருள்கள் முன்னமே
  கைக்கொண்டார், காவிரிநீர்
  செய்ப்புரள வோடும்
  திருவரங்கச் செல்வனார்,
  எப்பொருட்கும் நின்றார்க்கு
  மெய்தாது, நான்மறையின்
  சொற்பொருளாய் நின்றாரென்
  மெய்ப்பொருளும் கொண்டாரே.

  வாழ்க கோதை நாச்சியார் … வாழ்க அவளின் தமிழ்…

  • ரெபெக்கா மேரி அவர்கள் , திருநெல்வேலி வட்டார வழக்கில் அல்லடை.. சில்லாட்டை என்று வினவில் விவாதிப்போர திட்டுவதனை அனுமதிப்பதில் வினவுக்கு அப்படி என்ன இன்பமோ தெரியவில்லை… சரி நாமும் அவரை அப்ப்படியே பாராட்டி விவாதிகலாம் என்றால் மேடை நாகரிகமும், விவாத நெறிமுறைகளும் நம்மை தடுக்குது… அதனால புத்தன் வழியில் நாம் அந்த “அல்லடை.. சில்லாட்டை” ஆகிய வார்த்தைகளை ஏற்காமல் ரெபெக்கா மேரிக்கே அவற்றை பூமாலையாக திருப்பி அனுப்பிவைத்துவிட்டு விவாதத்தை தொடரலாம்…

   தமிழை தந்தையிடம் கற்றார் என்பதில் எல்லாம் இங்கே யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்றே நினைகின்றேன்… அவர் எழுதிய அந்த காமரசம் சொட்டும் சிருங்கார கவி நடையை எப்படி அந்த சிறுமி அறிந்தார் என்பதே இங்கே கேள்வி…

   ரெபெக்காவின் நீண்ட நெடிய விளக்கம் எல்லாம் மேற்பார்வைக்கு சரியா தான் தோணுது… ஆனாலும் அதில் என்ன பிரச்னை என்றால் ஆண்டாள் என்ன அந்த சிருங்கார பாடல்களை பாடும் தருணத்தில் திருமணம் ஆனவரா? திருமணம் ஆகி தான் அவர் திருவில்ல்லிபுத்தூரில் இருந்து திருவரங்கம் சென்றாரா? இந்த கேள்விகள் எல்லாம் எப்படி எழாமல் இருக்கும்? திருமணம் ஆனவர் என்று வைத்துகொண்டால் கூட கணவன் இருக்கும் போதே கடவுள் உடன் சல்லாபம் செய்ய முனைந்தார் என்ற பதில் தான் அவர் சிருங்கார பாடலின் ஊடாக நாம் உணர முடியுது…

   திருமணம் ஆகாதவர் என்றால் அப்படி திருமணம் ஆகாதவர் எப்ப்படி பாலியல் பற்றி வெளக்கமாக சிருங்கார நடையில் எழுதமுடியும் என்ற கேள்வியும் எழாமல் இல்லை… இதற்கு அல்லடை.. சில்லாட்டைகளின் பேட்டன்ட் ரைட் வைத்து உள்ள அவற்றுக்கு சொந்தகாரர் ரெபெக்கா மேரி பதில் அளிபாரா?

   //பெரியாரிஸ்டுகள் தொடங்கி அல்லடை.. சில்லாட்டைகள் வரை அனைவரும் கீறல் விழுந்த ரெக்கார்டாக கூறும் ஒரே விடயம் ” 15 வயதிற்குள் ஆண்டாளால் எப்படி இதை போன்றதொரு சிருங்கார நடை கொண்ட கவிதை எழுத முடியும் என்பது தான். முதலில், இன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்களோடு, ஆண்டாளை ஒப்பிட்டு பேசுவதே தவறு. …………தமிழ் அறிவும். அவர் தன் தந்தை சிறு வயது முதலே தமிழையும், கண்ணன் மீதான பக்தியையும் ஒரு சேர தன் தந்தை பெரியாழ்வாரிடமிருந்து கற்றுக் கொண்டார். //

  • ரெபெக்கா மேரி, ஆண்டாளின் பாடல்களில் உள்ள வடிவத்திலே ஏதும் யாரும் குறை சொல்லவில்லை…ஆண்டாளின் பாடல்களின் வடிவம் தமிழ் இலக்கண நெறிக்கு உட்பட்டே உள்ளது மேலும் வட மொழி சொற்கள் தொல்காப்பிய விதிகளுக்கு ஏற்ப தமிழ் படுத்தப்பட்டு உள்ளது என்பதனை எல்லாம் ஏற்றாலும்…மேலும் பார்பனர்கள் பூஜிக்கும் வைணவ கோவில்களில் பாடப்படும் அந்த சிருங்கார காமரசம் சொட்டு பாடல்களில் பச்சையாக ஆபாசம் குடியிருக்க அவைகள் வடமொழியுடன் இயைந்து பாடப்பட்டு உள்ளது என்பது உண்மையாகவே இருப்பினும்…, இங்கே விவாதத்துக்கு உரிய விசயம் என்னவென்றால் அந்த ஆண்டாள் பாடல்களில் உள்ள உள்ளடக்கம் மட்டுமே!

   மொத்தம் உள்ள முப்பது திருப்பாவை பாடல்களில் கிட்டத்தட்ட பதினைந்து பாடல்கள் சிருங்கார நடை கமிழபாடபட்டு உள்ளது என்ற நிலையில் அத்தகைய உள்ளடக்க போக்கு தமிழ் இலக்கண விதிகளுக்கு உட்பட்டது இல்லையே! ஆண்டாளின் பாடல்களில் உள்ள அப்பட்டமான ஆபாசத்தை பக்தி பரவசத்துடன் ஒப்புமை காணும் போக்கு என்பது காமத்தின் உச்சத்தை பக்தி பரவசத்துடன் ஒப்பிடும் நிலை தானே தவிர வேறு ஏதுமில்லை….

   இறைவனை தலைவனாகவும் தன்னை தலைவியாகவும் ஒப்புமை செய்து பாடல்களை இயற்றும் போக்கு அதிலும் சதிராட்ட பாடல்கள் ஊடாக ஆபாசத்தின் உச்சத்துக்கே செல்லலும் என்பது தேவதாசிகளுக்கே உரியது தானே தவிர குடும்ப பெண்களுக்கான சமுக போக்கு அதுவன்று….ஆண்டாள் தேவதாசியும் அன்று , குடும்ப பெண்ணும் அன்று என்று ஒத்தைக்காலில் நின்று தவம் செய்யும் உங்களை போன்றவர்கள் தான் அவர் யார் என்று தக்க ஆவணங்கள் ஊடாக விளக்கவேண்டும்….

   //பக்தியில் உச்ச நிலையை அடைந்தவர்களுக்கு மட்டுமே அதன் உன்னதம் இன்னதென்று தெரியும். உண்மையான பக்திக்கு பாலின ஆண், பெண் என்கிற பாகுபாடென்பது கிடையாது. இறை அடியவர்களுக்கென்று எந்த இலக்கண ………. நாத்திக பதர்களால் அவைகளை எப்படி உணர முடியும். அவர்களுக்கு, மேற்படி பாடல்கள் கிளுகிளுப்பூட்டும் காம காளியாட்டங்களாகவும், ஆபாச வருணனைகளாகவும் தெரிவதில் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை. //

  • அதே கேள்வி தான் எதர் திசையில் மீண்டும் எழுகிறது…. ஆபாச பாடல்களை பாட ஆண் புலவர்கள் தான் வேண்டுமா? ஏன் அப்படி எழுதுபவர்கள் அன்றைய சமுகத்தில் ஆபாச சதிராட்டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்த தேவதாசிகளாக இருக்க கூடாது என்று ஏதேனும் சட்டம் இருந்ததா? கோவிலின் பெயரால் ஆபாச வெளியில் சுகம் கண்டஅரசர்கள் ,பார்பனர்கள் மற்றும் ஆண்டைகள்
   மகிழ அன்றைய சிற்ப கலைகள் உதவின என்றால் அதுவும் ஆபாசம் தான்… அதனை வடிவமைக்க தேவதாசிகள் தான் வரவேண்டும் என்ற தேவை இல்லையே!
   //நான் ஒன்று கேட்க்கிறேன், சிருங்கார நடையில் பாடல் புனைந்தாள் என்பதற்காக, அவள் தேவதாசியாகத் தான் இருக்க வேண்டுமென்றால், இதனை போன்றே பல ஆண் கவிஞர்களும் இன்ப நடையில் அதே நாயக நாயகி பாவனையில் பாடி இருக்கிறார்களே அப்போது அவர்களை என்ன சொல்வது. அதை விட, இந்து மத கோவில்களில் உள்ள சிற்பங்களில் எவ்வளவோ நிர்வாண சிற்பங்கள் இருக்கின்றனவே, அவைகளை எல்லாம் என்ன தேவதாசிகள் தான் செதுக்கினார்களா ? அல்லது அதை செதுக்கிய சிற்பிகள் எல்லாம் தேவதாசர்களாக இருப்பார்களோ. //

  • தாய்மை என்ற நிலைவரும் போது பெண்ணின் மார்பகங்கள் குழந்தைக்கு பால்வழங்கும் கிண்ணங்கள் தான்…. அந்த பெண் ஆனடாளாக இருந்தாலும் அல்லது பாலியல் தொழிலாளியாக இருந்தாலும்….

   ஆபாசம் என்று வரும் நிலையில் அது யார் எழுதியதாக இருந்தாலும் ஆபாசம் தான்…

   //ரோட்டில் விற்கும் ஆபாச புத்தகமும், கோதையின் கவியும் உங்களுக்கு ஒன்றென தெரிந்தால் ஒன்று உங்களுக்கு நல்லதற்கும், தீயதற்கும் வேறுபாடு தெரியாத அளவிற்கு வெறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் உங்களின் கண்களை மறைக்கின்றது என்று தான் அர்த்தம்.

   ரோட்டில் விற்கும் தப்பான புத்தகத்திலும் ஆபாசம் தான் இருக்கிறது, ஆண்டாளின் பாடல்களிலும் இருப்பதும் அதே ஆபாசம் தான். ஆகவே, இரண்டும் ஒன்று தான் என்று பேசுவது எப்படி இருக்கிறது என்றால், என் தாய்க்கும் மார்புகள் இருக்கிறது, விபச்சாரிக்கும் மார்புகள் இருக்கிறது ஆகவே இருவருக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது ஒன்றுதான் என்று பேசுவதை போல் உள்ளது. //

 15. ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஒன்றுமில்லை.

  ஆண்டாளை பற்றிய தேவதாசி சர்ச்சைகள் உருவானதும், அனைத்து முற்போக்கு மேதாவிகளும் கைகாட்டியது எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவனின் “bhakti movements in south india ” என்கிற நூலினை தான். ஆனால், மேற்படி நூலின் ஆசிரியரான எம்.ஜி.எஸ். நாராயணனே ஆண்டாள் தேவதாசியாக தான் இருந்தாள் என்பதற்கு எவ்விதமான வலுவான ஆதாரங்களும் கிடையாது, வெறும் அனுமானத்தின் அடிப்படையில் தான் அவ்வாறு கூறினோம் என்பதை தெளிவாக கூறிவ விட்டார்.. தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு:-

  எப்படி ஆண்டாளை தேவதாசி என்று நாராயணன் குறிப்பிட்டார் என்று அவரிடம் தந்தி டிவி நிருபர் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் அளித்த பேட்டி:

  கே: அந்த கட்டுரையில் ஆண்டாள் ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்த ஒருதேவதாசி என குறிப்பிடப்பட்டுள்ளதே? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது?

  நாராயணன்: ஆண்டாள் தேவதாசி என்பதற்கான பிரத்யேக குறிப்புகள் இல்லை.

  கே: உங்களுடைய ஆய்வில் ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆவணங்கள் ஏதாவது கிடைத்ததா?

  நாராயணன்: இல்லை. அது போன்று குறிப்பிட்ட ஆதாரங்கள் ஏதும் இல்லை.

  கே: ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள கல்வெட்டுகளிலோ, வேறு ஏதேனும் ஆவணங்களிலோ ஆண்டாள் தேவதாசி என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா?

  நாராயணன்: இல்லை. வாய்மொழியாக சொல்வதை வைத்துதான் பார்க்க வேண்டி உள்ளது. எழுத்துப்பூர்வமாக எதுவும் இல்லை.

  கே: நேரடி ஆதாரங்கள் ஏதும் இல்லாத நிலையில், ஒருபுரிதலில் அந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள் என சொல்லலாமா?

  நாராயணன்: இது ஒரு அனுமானம்தான். இவ்வாறு அவர் பேட்டி அளித்தார்.

  இதற்க்கான வீடியோ ஆதாரம்:- https://www.youtube.com/watch?v=ASUAnINM_jw

  ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஏதுமில்லை.. நூலினை எழுதிய நாராயணன் அவர்களே, இது வெறும் அனுமானம் தான் என்று கூறு விட்டார். இனி இதில் விவாதிப்பதற்கு ஒன்றுமில்லை..

  இதற்க்கு பிறகாவது முற்போக்கு மூடர்கள் தங்களின் தவறை திருத்தி கொண்டால் சரி. இல்லை என்றால் அசிங்கம் அவர்களுக்கு தான். கோவன் அவர்களே, இனி உங்களுக்கு தெரியாத விஷயங்களை பேசி உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள்..

  • இவர்களின் முற்போக்கு எல்லாம் ஹிந்து மதத்திற்கு எதிராக மட்டும் தான், மற்ற மதங்களில் உள்ள தவறுகளை பற்றி வாய் கூட திறக்க மாட்டார்கள், கேட்டால் மதசார்பின்மை என்று பம்புவார்கள்.

  • ரெபெக்கா மேரி,

   இந்த வெண்ணைகள் அதாங்க எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் ஆகியோர் கட்டுரையை எழுத குறிப்புதவி நூலாக பயன் படுத்தியது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ். இருங்க விசயத்தை இன்னும் விரிவாக பார்கலாம்…

   ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து மேற்கோள் காட்டிய Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple (ஆண்டாள் ஸ்ரீரங்க கோவிலில் வாழ்ந்து மறைந்த தேவ தாசி) என்ற வரிகள் உள்ள கட்டுரையை Bhakti movements in south india (தென்னிந்தியாவில் பக்தி இயக்கம்) எழுதியவர்கள், எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன். நூலின் பெயர், Indian movements: Some Aspects of dissent protest and reform. அதற்கு அவர்கள் அந்த வெண்ணைகள் ஆதாரமாக காண்பிப்பது History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு), அந்த நூலை எழுதியவர் டி.ஏ. கோபிநாத் ராவ்.. இந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில் தான் அதற்கான ஆதாரம் இருப்பதாக எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் எழுதிய கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   ஹச் ராஜாவின் காவி கூட்டம் அடிக்க வந்த உடனே ,கழுத்தை அறுக்க வந்த உடனே இந்த எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் இருவரும் பின்வாங்குகின்றார்கள் என்றால் அதில் உள்ள வெளிப்படையான பாசிச அரசியல் மிரட்டலை கண்டு உணர முடியாத அளவுக்கா நீங்க முட்டாளாக, உங்க ஊர் பாசையில் , உங்க வார்த்தையிலேயே, எங்க ஊர் வட்டார வழக்கில் கூறுவது என்றால் பயனற்ற பன்னடையாக இருக்கீங்க?

   சரி சரி….., இப்ப விசயம் என்ன வென்றால் எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் ஆகியோர் எழுதிய கட்டுரை எந்த நூலின் ஊடாக எழுதப்பட்டதோ அந்த நூலை(History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)) ஒருத்தரும் மறுதலிக்கவில்லையே… அந்த நூலை ஒருத்தரும் தப்பு என்று கூற முடியவில்லையே! மூல நூலை தவறு என்று நிருபணம் செய்யாதவரைக்கும் அந்த நூலை தங்கள் கட்டுரை எழுத குறிபுதவியாக பயன்ப்டுத்ய்யவ்ர்கள் இப்ப மறுகின்றார்கள் என்றால் அவர்கள் பேச்சு பாசிச காவிகளின் மிரட்டலின் பயத்தின் அடிப்படையானது தான்.

   ஆம் மூல நூலின் [History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)]அடிபடையில் ஆண்டாள் தேவதாசி தான்…

  • ஆண்டாள் ,திருவரங்கத்து கோவிலில் தேவரடியார் ஆனதற்கான ஆதாரம் :

   When she reached marriageable age, she refused to marry any one except
   the God_Ranganatha of the rirangam temple. The God appeared
   to the Alvar in a dream to declare before him his acceptance of
   the girl in marriage and ordered her to be brought to his residence
   at Srlrangam. Periyalvar took her there with great eclat and left
   her in her Lord’s house and returned to his quiet residence at
   SrTvilliputtur.

   From the page number 5 , History of Sri Vaisnavas by SIR SUBRAHMANYA AYYAR LECTURES

   ON THE HISTORY OF SRI VAISNAVAS , DELIVERED BY THE LATE MR. T. A. GOPINATHA RAO, M.A.,

   web link to download this book :

   https://ia802702.us.archive.org/7/items/MN40128ucmf_0/MN40128ucmf_0.pdf

  • ஹ ஹா…….. வடிவேலு மாதிரி வெட்டி உதாரு எதுக்கு ரெபெக்கா மேரி??இப்ப தான் ஆட்டமே ஆரம்பிக்கிறது…. மூல நூலை விட்டுவிட்டு அந்த நூலை குறிப்புதவியா பயன்படுத்தி அன்று கட்டுரை எழுதியவர்கள் (எம்.ஜி.எஸ்.நாராயணன் மற்றும் கேசவன் )இன்று ஹச் ராஜாக்களின் அடிதடிக்கும் ஆபாச பேச்சுக்கும் பயந்து ஆமாம் ஆமாம் தப்பு தப்பு எங்க கட்டுரை தப்பு என்று மாறுக்கின்றார்கள் என்றால் அதனை நீங்களும் பிடித்துகொண்டு ஆதாரம் அஆதாரம் என்று உஞ்சல் ஆடுவீர்கள் என்றால் உங்களை போன்ற அல்லடையை வேறு எங்குமே பார்க்க முடியாதுங்க! அன்று கட்டுரை எழுத மூல நூலின் (History of Sri Vaisnavas -வைணவர்களின் வரலாறு) கருத்துகளை ஏற்றவர்கள் இன்று அதே கருத்தை மறுக்க என்ன ஆதாரத்தை முன் வைக்கின்றார்கள் இந்த கட்டுரையாளர்கள் இருவரும் என்று அவர்களிடம் நேர்காணல் எடுத்து கேட்டு சொல்லுங்க! ஹ ஹா… //ஆட்டம் முடிந்தது, இனி விவாதிக்க ஒன்றுமில்லை.//

   • ஏண்டா இப்படி என்ன பண்றேள். நோக்கு இது நன்னாருக்கா…
    விதேசி ரெபக்கா மேரியுடனும், இந்த கௌபாய் மணியுடனும் சேர்ந்து என்ன இப்படி பாடாய் படுதறேலே..நீங்க எல்லாம் நரகத்துக்கு போக….

    நான் என்ன பண்ணுனேன். கண்ணனின் லீலைக்கு ஏமாந்து அவனை காதலித்தது குற்றமா?நான் அவனை காதலிக்கும் போது நேக்கு தெரியாதேடா அவனுக்கு ரெண்டு போண்டாடிகளும் ஏகத்துக்கும் வைப்பாட்டிகளும் இருப்பாங்கன்னு…

    கையெடுத்து கும்புடுறேன் இதோட என்ன விட்டுடுங்கடா……..

 16. குமார் சொல்லி தெரிவதில்லை காமம்.

  காதலின் முக்கிய நோக்கமே உடல் உறவு தான், அதனால் தான் பெண்களை கண்டால் ஆண்களுக்கும் ஆண்களை கண்டால் பெண்களுக்கும் ஈர்ப்பு வருகிறது. இது மனிதர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உயிர் இனங்களுக்கும் பொதுவான ஒரு இயல்பு.

  ஆண்டாள் கண்ணனால் ஈர்க்கப்பட்டு காதலிக்கிறார், அவனையே அடைய வேண்டும் என்று விரும்புகிறாள் அதன் வெளிப்பாடு தான் அவரின் பாடல்கள். கண்ணன் மீது காதல்வயப்படவில்லை என்றால் இம்மாதிரியான பாடல்களே எழுதி இருக்க மாட்டார்… பக்தி காவியங்களை தான் படைத்து இருப்பார்.

  மேலும் காம வயப்படுவது தவறில்லை, காமசூத்ரா உலகிற்கு சொல்லி கொடுத்த தேசம் இது, காஜுஹரோ கோவில் அமைத்த தேசம்… உடல் உறவை பற்றி தெரிந்துகொள்ள திருமணம் ஆகி இருக்க வேண்டும், முன் அனுபவம் வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்களின் நோக்கம் ஆண்டாளை பற்றி அவதூறு பரப்ப வேண்டும் என்பதாகவே இருக்கிறதே ஒழிய அவரின் காதலை பற்றி புரிந்துகொள்ளும் எண்ணம் உங்களை போன்ற மனவக்கிரம் கொண்டவர்களிடம் இல்லை.

  • மணிகண்டன் என்னய்யா உளறிகிட்டு இருக்க? அப்புறம் எதுக்கு சென்சார் மயிறு மட்டை எல்லாம்? அப்புறம் எதுக்கு U , A ,U/A சாட்ரிபிகேட் எல்லாம்? பதின்ம வயது குழநதையை அழைத்துகொண்டு போய் காமஸூதிரா படத்தை பார்பீரோ நீர்? வெக்கம் சிறிதும் இல்லாமல் இப்படி உளறிகிட்டு இருந்தால் வினவில் உளறிகிட்டு இருந்தால் நல்லாவா இருக்கு மணி?

   • குமார், பள்ளிகளில் sex education கொண்டு வருவது பற்றி விவாதங்கள் நம் நாட்டில் நடந்து கொண்டு இருப்பது எல்லாம் உங்களுக்கு தெரியாது போல. உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில் HIV பாதிக்கப்பட்டவர்கள் 34 சதவீதம் பேர் 12 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் என்று தெரிவித்து உள்ளது.

    உங்களை போல் ************* கெட்டு போவதை விட, டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு முறையான sex education கொடுப்பதில் தவறில்லை பல தவறுகள் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு இது உதவும்.

    மேலும் பெண்களுக்கு கற்பு அவசியம் இல்லை என்று சொன்ன ************************ கண்ணனை தவிர வேறு ஆண்மகனை நினையேன் என்று சொன்ன ஆண்டாளின் தூய காதலை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லாதவர்கள்.

    • ஆபாசத்துக்கும் , பாலியல் கல்விக்கும் வேறுபாடு தெரியா சிறுவனா நீர் மணிகண்டன்…(உமக்கு எல்லாம் இவ்வளவுதான் பதில் அளிக்கணும்… அவ்வளவு தான் நீர் ஓர்த்தி !)

  • மணிகண்டன்,
   ஆண்-பெண் உறவையும் காதலையும் வெறுமனே உடல் உறவிற்காக மட்டுமே நீவிர் பார்கின்ரீர்….அப்படித்தான் கிரிஷ்ணனும் பார்த்தான். இராமனும் பார்த்தான். பார்ப்பனர்களும் பார்த்தார்கள். ஆண்டாலும் அவர்களிடம் அகப்பட்டு கொண்டார்.

   ஆண்-பெண் என்றாலே உடல் உறவு தான் உமக்கு ஞாபகம் வருகிறது என்றால் உம்முடைய மாட்டு மூளையை தீவைத்து தான் கொளுத்த வேண்டும்.

   • செல்வம் நான் சொன்ன வார்த்தையை திரிக்க வேண்டாம். காதலின் அடிப்படை நோக்கமே உடல் உறவு என்றே சொல்லியிருக்கிறேன் ஆனால் நீங்கள் ஆண் பெண் உறவு என்று திரிக்கிறீர்.

    • அப்போ கிரிஷன்னிடம் செக்ஸ் வைத்துக் கொள்ள தான் ஆண்டாள் விரும்பியிருக்கிறார் என்பது உங்களது வாதம்….பாமா உருக்குமணிக்கு தெரியுமா? சரி விதின்னு அவுங்க விட்டுருக்கலாம்.

     ஏற்கனவே திருமணமான ஒருவனிடம் ஒரு சிறுமி செக்ஸ் வைத்து கொள்ள விரும்புகிறாள் என்றால் அதுக்கு பேரு காதலா? கர்மம் கர்மம்….

     ஏண்டா கிருஷ்ணா!! இப்படி மாட்டுமூளை கூடை இல்லாமல் கண்ட பேரு கண்டபடி பேசாறாலே…நோக்கு நன்னாருக்கா இது. இத நீ கேக்கப்படாதா?

 17. குமார் அகநானுறு பாடலில் ஒரு decent பாடலை உங்களுக்கு உதாரணம் சொல்கிறேன்

  யாரும் இல்லைத் தானே களவன்
  தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
  ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்,
  குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே

  தலைவி திருமணத்திற்கு முன்பே தலைவனோடு உடல் உறவு கொள்கிறாள் ஆனால் அதற்கு சாட்சி யாரும் இல்லை என்று தோழியிடம் வருந்துகிறாள்.

  அகநானுறு பாடல்கள் பலவற்றில் திருமணத்திற்கு முன்பே காதல் வயப்பட்டு தலைவன் தலைவி உடல் உறவு பற்றி பல பாடல்கள் உள்ளது. மான் விடு தூது, மயில் வீடு தூது என்று காதலால் இப்படி எல்லாம் வருந்துகிறேன் உடனே தலைவனை வர சொல் என்று சொல்லும் பாடல்கள் பல உண்டு.

  • நீர் எழுதியுள்ள அகநானுற்று , குறுந்தொகை பாடலுக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கின்றேன்….படிச்சிட்டு அதில் என்ன ஆபாசம் இருக்கு என்று கூறு பார்கலாம்…

   “தோழி, தலைவன் என்னைக் களவில் மணந்த காலத்தில் சான்றாவார் வேறு ஒருவரும் இலர். தலைவன் ஒருவனே இருந்தான். அவனே தான் கூறிய சூளுறவினின்றும் தப்பி ஒழுகுவானாயின் நான் யாது செய்ய வல்லேன்? அவ்விடத்து அச்சமயம் ஒரு நாரை மாத்திரம் இருந்தது. அதுவும் ஓடும் நீரில் தான் உண்ணும் பொருட்டு ஆரல் மீனின் வரவை எதிர்பார்த்து நின்றதாகலின், எம் நிகழ்ச்சியைக் கண்ணுற்றிராது,” என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.”

   இந்த பாடலில் என்னய்யா ஆபாசம் இருக்கு….! ? ஆண்டாளின் பாடல்கள் உடன் வேண்டுமானால் ஒப்புமை செய்து பார்த்துக்கோ ராசா… !

   இந்தா பிடி உன் ஆண்டாளின் அங்க அசைவுகளுடன் கூடிய ஆபாச பச்சை ஆபாச பாடல்…!

   புணர்வதோர் ஆசையினால்
   என் கொங்கை கிளர்ந்தது

   அவரைப் பிராயம் தொடங்கி
   ஆதரித் தெழுந்த என் தடமுலைகள்
   துவரை பிரானுக்கே சங்கற்பித்துத்
   தொழுதேன்…

   கபிலன் எழுதிய குறுந்தொகை பாடல் 25 உன் ஆண்டாள் பாடலுடன் ஒப்புமை செய்துகொள் மணிகண்டன்….!

   • பாராட்டுக்கள் குமார்! உங்கள் வாதங்கள் செழுமையாக இருக்கின்றன.
    ரெபெக்கா மேரியின், தாயுடன் பாலியல் தொழிலாளியின் ஒப்பிடு விதம் சரியானதன்று. உயிரியல் ரீதியான ஒற்றுமையை வைத்து அவர் ஒப்பிடுகிறார். ஆனால் செயல்பாட்டில் முறை தவறி நடக்கும்போது ஒரு தாய் பாலியல் தொழிலாளிக்கும் கீழானவளாகி விடுகிறாள். பாலியல் தொழிலாளிகளும் தாயாக இருக்கிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

    மேலும் அவர் கூறும் நிர்வாண ஓவியங்களையும் ஏன் ஆபாசமென்று கூறக்கூடாது? வரைந்தவர்கள் ஏன் பெண்களை மட்டுமே வரைகிறார்கள்? ஆண்களை ஏன் தனியாக வரைவதில்லை?

    அவர் பெண்களை விபச்சாரிகள் என்று இழிவு செய்கிறார். நீங்கள் பாலியல் தொழிலாளிகள் என்று மதிப்பளிக்கிறீர்கள். இதிலேயே தெரிகிறது வித்தியாசமும் மேட்டிமைத்தனமும். இவர் தோழர் கோவனுக்கு பெண்களை மதிப்பது பற்றி பாடம் எடுப்பது, “சாத்தான் திருக்குறள் பாடம் எடுப்பதுதான்” ஞாபகத்திற்கு வருகிறது.

    • //ரெபெக்கா மேரியின், தாயுடன் பாலியல் தொழிலாளியின் ஒப்பிடு விதம் சரியானதன்று. உயிரியல் ரீதியான ஒற்றுமையை வைத்து அவர் ஒப்பிடுகிறார்…//

     நான் ஒப்பீடு செய்தது உடல் உயிரியல் ரீதியாக மட்டுமல்ல , குணத்தின் அடிப்படையிலும் தான்.

     //அவர் பெண்களை விபச்சாரிகள் என்று இழிவு செய்கிறார். நீங்கள் பாலியல் தொழிலாளிகள் என்று மதிப்பளிக்கிறீர்கள்….//

     விபச்சாரம் என்பது இழிவான ஒன்று தான், அதிலென்ன உயர்வு வேண்டி கிடக்கிறது. கொள்ளை அடிப்பது, கஞ்சா விற்பது , திருடுவது போன்ற சமூக குற்ற செயல்கள் எப்படி தொழில் ஆகும்?? சமூகத்திற்கு எந்த தீங்கும் நேரா வண்ணம், சுய முயற்சியினால் நம் குடும்பத்தின் வளர்ச்சிக்காக நியாயமான முறையில் பணம் ஈட்டுவதுதான் தொழில் என்பது. விபச்சாரம் என்பது “தொழில்” தானா என்பதை மூச்சுக்கு முன்னூறு முறை எங்கள் கம்யூனிச சமூகத்தில் விபச்சாரமே இருந்ததில்லை இருக்கவும் இருக்காது என கூறும் உங்களின் கம்யூனிச தோழர்களிடம் கேட்டு சொல்லவும். அவர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டால் நானும் ஏற்றுக் கொள்கிறேன்.

     • பெண்கள் பாலியல் தொழிலை விரும்பி தேர்ந்தெடுக்கிறார்களா? இல்லை தள்ளப்படுகிறார்களா? விரும்பி தேர்ந்தெடுத்தால் நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் உண்மை அப்படியில்லையே! இந்த சமூக சூழலில் வேறு வழி இல்லாமல் அம்மாதிரி முடிவெடுக்கத் தள்ளப்படுகிறார்கள். பின்னர் எப்படி அது இழிவாகும்? உங்கள் கூற்றுப்படி மலம் அள்ளும் தொழிலாளர்கள் கூட இழிவானவர்கள்தானோ!

      // மூச்சுக்கு முன்னூறு முறை எங்கள் கம்யூனிச சமூகத்தில் விபச்சாரமே இருந்ததில்லை இருக்கவும் இருக்காது என கூறும் //

      கம்யூனிசத்தில் விபச்சாரம் இருக்காது என்பதில் உங்களுக்கு என்ன வயித்தெரிச்சல் . . .?

     • நிலபிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சமுகத்தில் ஆண்களின் பாலியல் தேவைகளை தீர்க்கும் பெண் பாலியல் தொழிலாளர்களின் செயல் சமுக குற்றம் என்றால் அதே ஆண்களின் பாலியல் உணர்வுகளை தன் ஆபாச பாடல்கள் ஊடாக ,திரைகதை வசனம் ஊடாக தூண்டிவிட்டு நிற்கும் ஆபாசபாவை ஆண்டாள் , வைரமுத்து ,வாலி…சுஜாதா ….., போன்றவர்களின் செயல் சமுக குற்றம் ஆகாதா ரெபெக்கா மேரி? சமுக குற்றம் தான்… இவர்களுக்கு மட்டும் எதுக்கு சமுக அங்கிகாரம் கொடுக்கபடுகிறது ? அப்புறம் ஏன் ஆபாச ஆண்டாளின் ஆபாசபாவை பாடல்களை பிடித்துகொண்டு தொங்க வேண்டும் நீங்க? செலக்டிவாக பாலியல் தொழிலை மட்டும் குறை சொலவது ஏன் ? அதே நேரத்தில் அதே பாலியல் தொழில் சார்ந்த பிற உப தொழில்களான ஆபாச பாடல்கள் மற்றும் ஊடகங்கள் குறை சொல்லாமல் ஆண்டாளை ஆராதனை செய்வதன் மூலமாக அவற்றை ஆதரிப்பது ஏன் ரெபெக்கா?

    • எப்பா அறிவு கொழுந்துகளா “decent” வார்த்தையை எழுதி இருக்கிறேனே அதை படிக்க மாட்டிங்களாப்பா?

     என் வாதம் சங்க தமிழ் இலக்கியங்களில் காமத்தை பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறார்கள் என்று சொன்னேன் அதற்கு ஒரு decent பாடலை உதாரணமும் காட்டினேன்.

     என் கேள்வி எல்லாம் சங்க தமிழ் பாடலில்களில் காமத்தை பற்றி எழுதியவர்களை எல்லாம் ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது போல் அவர்களையும் பேச போகிறீர்களா என்பதே ? ஆனால் அதை பற்றி ஒரு வார்த்தையை காணும்.

     கம்ப ராமாயணத்தை எழுதிய கம்பனை பற்றி ஒரு வார்த்தை பேச மாட்டார்கள் ஆனால் ராமனை பற்றியும் சீதையை பற்றியும் அவதூறு பேச வந்து விடுவார்கள்.

     • அட லூ சு மணிகண்டன்…, கம்ப ராமாயணத்தை பெரியார் காம சரம் சொட்டும் ராமாயணம் என்று எப்போதோ அம்பலப்டுத்திய செய்தியை உமக்கு நான் அளித்து பல நாட்கள் ஆகின்றனவே… உமது மாட்டு மூளையில் அந்த செய்தி ஏறவே இல்லையா?

     • குடிபோதையில் உளறிகிட்டு உள்ளீரா மணிகண்டன்? உமக்கான பதிலை பின்னுட்டம் 21.1 ல் நான் அளித்து 24மணி நேரங்கள் ஆகிவிட்டனவே மணி? உமக்கு என்ன புரிந்தலில் குறைபாடா? என் பதிலை படித்துவிட்டு வந்து பேசுமையா! (நீர் எழுதியுள்ள அகநானுற்று , குறுந்தொகை பாடலுக்கு வேண்டுமானால் விளக்கம் கொடுக்கின்றேன்….படிச்சிட்டு அதில் என்ன ஆபாசம் இருக்கு என்று கூறு பார்கலாம்…)

      //என் கேள்வி எல்லாம் சங்க தமிழ் பாடலில்களில் காமத்தை பற்றி எழுதியவர்களை எல்லாம் ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறு பேசுவது போல் அவர்களையும் பேச போகிறீர்களா என்பதே ? ஆனால் அதை பற்றி ஒரு வார்த்தையை காணும்…//

     • என்னுடைய வாதமும் அதே தான் மணிகண்டன்… தமிழ் அக நூறு பாடல்களில் காதல் ,களவொழுக்கம் மற்றும் காமத்தை பற்றி பேசி இருக்காங்க! ஆனால் அந்த பேச்சு மற்றும் பாடல்கள் அறிவுரை சார்ந்தது தானே தவிர ஆண்டாளின் ஆபாசபாவை போன்று பெண்களின் அங்க அசைவுகளை உடலுறவின் போது வெளிகாட்டும் ஆபாச எழுத்து அல்லவே அவைகள்…! சரி அகநாற்றில் இன்டிசன்டான ஒரு பாடலை உதாரணமாக காட்டு பார்கலாம் ?

      //என் வாதம் சங்க தமிழ் இலக்கியங்களில் காமத்தை பற்றி மிக விரிவாக எழுதி இருக்கிறார்கள் என்று சொன்னேன் அதற்கு ஒரு decent பாடலை உதாரணமும் காட்டினேன்.//

 18. History of Sri Vaisnavas என்னும் இந்த நூலினை தான் நான் மிகவும் தேடி கொண்டிருந்தேன், ஏனென்றால், ஆண்டாள் தேவதாசியல்ல அவள் ஒரு தேவதைதான் என்பதை அழுத்தம் திருத்தமாக மெய்ப்பிக்க இந்த நூல் எனக்கு தேவைப்பட்டது. ஆகவே இந்நூலினை கண்டு பிடித்து கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு என் நன்றிகள் உரித்தாகுக.

  மேற்ப்படி நூலான வைணவர்களின் வரலாற்றை, முழுவதுமாக புரட்டி பார்த்தேன், அதிலும் குறிப்பாக எம்.ஜி.எஸ்.நாராயணன் அவர்கள் கூறும் 5 ஆம் பக்கத்தினை முழுவதுமாக படித்தேன், அதில் ஒரு வார்த்தை கூட ஆண்டாளை தேவதாசி என எங்குமே குறிப்பிடவில்லை. அந்த நூலில் புதிதாக ஒன்றுமே கூறவில்லை, காலங்காலமாக கூற பட்டு வந்த அதே குருபரம்பரை செய்திகள் தான் உள்ளது. அந்த புத்தகத்தின் ஐந்தாம் பக்கத்தில், ஆண்டாளின் முழுகதையும் இடம் பெற்றுள்ளது. பெரியாழ்வாரின் கனவில் கடவுள்தோன்றி ஆண்டாளை மணக்க சம்மதித்தாகவும், அவரை ஸ்ரீரங்கம் அழைத்து வரும்படி ஆணையிட்ட தாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் திருவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலென்ன புதிதாக கூறிவிட்டார்கள், நானும் அதனை தானே கூறுகிறேன் .

  புத்தகம் முழுவதும் தேடியாயிற்று எதிலுமே கோதை ஒரு தேவதாசி ஆனாள் அல்லது ஆக்கப்பட்டாள் என்று ஒரு வார்த்தை இல்லை, எப்படி இருக்கும், இல்லாத பொல்லாததை ஆதாரம் அற்றதை கூற அவர்கள் ஒன்றும் சில்லாட்டைகள் கிடையாதே. இத்தனைக்கும் அந்த நூல் 1917 ஆம் ஆண்டு கோபிநாத் அவர்களால் மதராஸ் பல்கலைகழகத்தில் உரையாற்றப்பட்டு 1923 ஆம் ஆண்டு அச்சில் ஏறிய நூல்.இப்பொழுது இருப்பதை போன்று அப்போது எந்த தொந்தரவுகளும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ் போன்ற எந்த இந்துத்துவ அமைப்புகளும் உருவாகாத காலம் அது, ஆகவே நாராயணன் பயந்தது போல யாரும் தலையை வாங்கி விடுவார்களோ என்ற பயமெல்லாம் இல்லாத காலம் அது.

  மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். ஆழ்வார்களின் பாடல்களில், வைணவ ஆச்சாயார்களின் இலக்கியங்களில் இல்லாத ஒன்றை, மேலும் எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லாத ஒன்றை எவ்வாறு, எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு வெறும் அனுமானத்தின் அடைப்படையில் தான் என்று பதிலளித்துள்ளார். இல்லையென்றால்,இந்த கோவிலில் இந்த நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டில் தகவல் இருக்கிறது போய் பாருங்கள் என்று கூறி இருப்பாரே.

  நானும் விவாதம் தொடங்கி பார்த்துக் கொண்டிருக்கிறேன், யாரவது உருப்படியான சான்றுகளோடு வந்து ஆண்டாளை தேவதாசி என்று நிரூபிப்பார்களா என்று. இது வரை இல்லை. இதில் காமெடி என்னவென்றால், வேத இலக்கியத்தில் இருக்கும் சரஸ்வதி நதியை இல்லையென மறுக்கும் இவர்கள் தான், இலக்கியத்தில் இல்லாத ஒன்றை(ஆண்டாள் தேவதாசி என்பதை) அனுமானத்தில் எந்த ஒரு காத்திரமான சான்றுகளும் இல்லாமல் அடித்து விடுகிறார்கள்.(சரஸ்வதி நதியை விவாத பொருளாக்கிட வேண்டாம், பதில் வராது) ஆகவே, தயவு செய்து, அடுத்தமுறை கறாரான சரித்திர பூர்வமான, அறிவியல் பூர்வமான யாரும் மறுக்க முடியாத படிக்கு, வலுவான தொல்லியல் ஆதாரங்களுடன்(அதாவது கோவில் கல்வெட்டுகள், பாடல்கள், செப்பு பட்டயங்களோடு) வந்தால், மேற்கொண்டு விவாதிக்கலாம்,மறுமொழி பெட்டியில் தான் போட வேண்டுமென்றில்லை, மேற்கூறிய ஆதாரம் இருப்பின் வினவில் தனி கட்டுரையாகவே வெளியிடலாம்.. இல்லையென்றால் என் நேரத்தை வெட்டியாக வீணடிக்க இனியும் நான் விரும்பவில்லை. அப்புறம் உங்கள் இஷ்டம். நன்றி.

  History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)நூலினை கொடுத்தமைக்கு நன்றி, பல தேவையான தகவல்கள் கிடைத்தன. அப்படியே, எங்கள் ஊர்காரரான நம்மாழ்வாரை பற்றியும் படித்து மகிழ்ந்தேன். நன்றி நன்றி…

  • திருவரங்கம் கோவிலுக்குள் விடப்பட்ட ஆண்டாள் அன்றைய சமுக சூழலில் (கோவில்களில் பெண்கள் தேவரடியாராக மட்டுமே நிருத்திவைக்கப்ப்ட்டர்கள் என்ற சமுக சூழலில்) ஆண்டாள் மட்டும் தேவரடியார் பணி இன்றி அங்கே வேறு என்ன பணி அங்கே ஆற்றினார் என்று ஒவ்வொரு தேவரடியாருக்கும் அவர்கள் தேவரடியார்கள் என்று நிருபணம் செய்ய கல்வெட்டுகள் மூலமாகவும் ,தொல்லியல் துறை மூலமாகவும் ஆய்வு நடத்தும் ரெபெக்கா மேரி தான் பதில் அளிக்கவேண்டும்…

   “”””Periyalvar took her there with great eclat and left
   her in her Lord’s house and returned to his quiet residence at
   SrTvilliputtur.””””

   மேல் உள்ள நூல் ஆசிரியரின் கருத்துக்கு ஆண்டாள் தேவரடியார் அன்றி வேறு என்ன என்று ரெபெக்கா மேரி தான் அறிவுக்கண் திறந்து பதில் சொல்லவேண்டும்…

   தொடரும்…..

   • ஆண்டாள் மிக தெளிவாக தனது பாடல்களில் கண்ணை மட்டும் தான் காதலிப்பேன் அவனையே மணப்பெண், கண்ணை தவிர வேறு ஆண் மகனை நினையேன் என்று மிக தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார். இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று (அதுவும் ஆதாரம் எதுவும் இல்லாத யூகத்தின் அடிப்படையில்) நீங்கள் சொல்வது உங்களின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.

    தனது காதல் உணர்வை பற்றி ஒரு பெண் பேசினால் உடனே அவளை கேவலமாக சித்தரிக்கும் ஆணாதிக்க சிந்தனை தான் உங்களின் வார்த்தைகளில் தெரிகிறது.

    ஆண்டாளின் பாடல்களே அவரின் கற்ப்பிற்கு சாட்சி, அதை தெரிந்துகொள்ள எந்த விதமான ஆராய்ச்சியும் எங்களுக்கு தேவையில்லை.

    • எனக்கு தெரிந்தவரைக்கும் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக தான் தேவதாசி முறை அமைப்பு ரீதியாக சிதைவடைந்து பாலியல் தொழிலாக மாறிஉள்ளது. ஆனால் மணிகண்டன் அடிச்சாரு பாருங்க செம் சைடு கோல்….. வெக்கமாக இல்லையா மணி…இப்படி ஆண்டாளை பற்றி இழிவாக பேச? இப்ப உங்க கருத்தின் அடிப்படையில் பார்ப்போம் என்றால் ஆண்டாள் காலத்திலேயே தேவரடியார் முறை பாலியல் தொழிலுக்கான முறையாக மாறிவிட்டது என்று செம் சைடு கோல் அடிகிறிங்க மணி! இன்னும் எதிர்பார்கின்றோம் மணி…! எடுத்துவிடுங்க உங்க வாயாலேயே உண்மைகளை…. அட கருமத்த!

     தமிழக பேரரசன் ராஜராஜன் காலத்திலேயே அவரின் அக்கா குந்தவை நாச்சியார் தஞ்சை சிவன் கோவிலில் தேவரடியாராக மாறிய செய்திகள் வரலாற்றில் இருக்க(பத்தாம் நூற்றாண்டு)அந்த தொழில் ஆண்டாள் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டில் பாலியல் தொழிலாக இருந்தது என்று கூற உங்களுக்கு வெக்கமாக இல்லையா மணிகண்டன்?

     ஒன்று மட்டும் தெளிவாக தெரியுது இந்த எச்ச ராஜா, ரெபேக்கா, மற்றும் மணிகண்டன் வகையராகளுக்கு தேவதாசி என்றாலே அவர் பாலியல் தொழிலாளி என்று மனதில் நிரந்தரமாக பதிந்து விட்டது…. அது எப்ப,எந்த காலகட்டத்தில் தேவதாசி தொழிலாகவே இருந்தது, அது எப்ப பாலியல் தொழிலாக உருமாற்றம் அடைந்தது என்ற காலம் சார்ந்த வரலாற்று தேடல் எல்லாம் இவர்களுக்கு இல்லையே! அதுக்கு நாம என்ன செய்ய?

     மாட்டு மூளைகளுக்கு மனிதனை போன்று சிந்திக்க முடியாது என்பது மணிகண்டன் விசயத்தில் உண்மையாகிறது…

     //இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று (அதுவும் ஆதாரம் எதுவும் இல்லாத யூகத்தின் அடிப்படையில்) நீங்கள் சொல்வது உங்களின் வக்கிர சிந்தனையை தான் காட்டுகிறது.//

     • உங்களை போன்ற வினவு கூட்டங்கள் ஆண்டாளை பற்றி கண்டபடி அவதூறு பேசி விட்டு இப்போது என்னமோ நான் தான் ஆண்டாளை பற்றி தவறாக பேசினேன் என்பது போல் என் மீது பழி போடுகிறீர். ஹிந்து மதத்தில் இயல்பிலேயே இருக்கும் சகிப்புத்தன்மையால் தான் உங்களை போன்ற ஆட்கள் இப்படி எல்லாம் பேச முடிகிறது.

      நிச்சயம் உங்களை போன்ற வினவு கூட்டங்களின் பொய்களை விவாதம் மூலமே வெல்ல முடியும்.

      • ஆண்டாள் பலரோடு உறவு வைத்து கொண்டார் என்று சொல்வது உங்களின் சொந்த கருத்துதானே மணிகண்டன்….எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் தேவதாசியாக திருவரங்கம் கோவிலில் வாழ்ந்தார் என்பது தான் ஆண்டாளின் வரலாறு…அதனை தான் என் வாதங்கள் மூலம் உங்களிடமும் உங்களை போன்ற அராஜக ரெபெக்கா மேரிகளிடமும் என் கேள்விகள் மூலம் கேட்டுகிட்டு இருக்கேன்… பதில் தான் வரவில்லை இன்னும்… நீங்களும் மேரியும் அக்கபோரு செய்துகிட்டு இருக்கீங்க… சரி மீண்டும் கேட்கின்றேன் பதில் வருதா பார்கலாம்…:

       ஆண்டாள் எத்தகைய சமுக நிலையில் திருவில்லிபுத்தூரில் இருந்தார்? அங்கிருந்த அவர் என்ன சமுக அங்கிகாரத்துடன் திருவரங்கம் வந்து சேர்ந்தார்? அவர் அன்றைய வைணவ சமுகத்தால் என்னவாக ஏற்க்க்பட்டார்? ஒன்று அவர் குடும்ப பெண்ணாக இருந்து இருந்தால் அவருக்கு “சிருங்கார ரசனையில்” அதாங்க காம ரசனையில் பாடல் எழுத எல்லாம் அறிவு எப்படி வந்து இருக்கும்?மேலும் கோவிலுக்குள் புழங்கிய பெண் ஆண்டாள் தேவதாசியாக , நாட்டிய மங்கையாக, சிருங்கார கவியாக இல்லாமல் வேறு என்னவாக அவர் அங்கிகரிக்க்பட்டார் என்று நீங்க தான் மீண்டும் முதலில் இருந்து விளக்கனும்…

       • ஏம்பா நீங்கள் சொன்னதை எல்லாம் என் தலையில் காட்டுகிறீர்கள், ஆண்டாளை பற்றி நீங்கள் அவதூறாக பேசியதால் தானே இந்த விவாதமே… நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஏற்க்கனவே பதில் சொல்லியாகி விட்டது மீண்டும் மீண்டும் ஒரே கேள்வி கேட்டு போர் அடிக்க வேண்டாமே.

        • ஹ ஹா ஹா…அட லூசு மணி…, “ஆண்டாள் பலரோடு உறவு வைத்து கொண்டார்” என்று உங்க சொந்த கற்பனையில் சொல்ல்லிட்டு இப்ப இல்ல இல்ல என்றால் எப்படி மணி? இல்ல இந்த விசத்துக்கு ஏதாவது ஆதாரம் மெம்மரி கார்டு ஆதாரம் அல்லது ஏதாவது நித்தியானதா-ரஞ்சிதா மேட்டர் மாதிரி தடயம் எல்லாம் வைத்து இருக்கீங்களா? இல்ல வினவு உங்க கருத்தை திரித்து மாற்றி எழுதி பழிவாங்கிவிட்டதா? ஹ ஹா ஹா…

         மேல் உள்ள கருத்தை நான் சொன்னேன் என்பதற்கு ஆதாரத்தை காட்டுங்க அரைமண்டை அறிவாளி , மாட்டு மூளை மனிதா மணி!

         //இந்தளவுக்கு தீவிரமாக ஒருவரை காதலித்த பெண் பலரோடு உறவு வைத்து கொண்டார்//

      • “”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?””””

       என்னுடைய எளிய கேள்விகளுக்கு எல்லாம் நீங்களோ அல்லது ரெபெக்காவோ பதில் சொல்லாவிட்டாம் கோவன் அவர்கள் எழுப்பும் சந்தேகமான “ஆண்டாள என்னடா பண்ணிட்டிங்க?” என்ற கேள்வி தான் அனைவர் முன்பும் வந்து நிக்கும் மணி!

       திருவரங்கம் கோவிலில் ஆண்டாள் தேவதாசியாக வாழ்ந்தார் , ஆபாச கவிதை எழுதினார்…, காமதேவன் மூலமாக ரங்கனுக்கு காமதூது விட்டுவிட்டு காத்திருந்தார் (கடைசியாக உள்ள ரேபாக்காவின் பின்னுட்டத்தில் உள்ள பிட்டு பாடலை பாருங்க) என்பதனை எல்லாம் ஏற்கா விட்டால் அவர் திருவரங்கத்தில் உள்ள ரங்கன் கோவிலில் வட சுட்டுகிட்டு , புளியோதரை செய்துகிட்டு இருந்தார் என்பதனையாவது நாம ஏற்க்க தானே வேணும்? இல்லை என்றால் கோவன் அவர்கள் எழுப்பும் சந்தேகத்தையாவது அம்பி மணி நீங்க தீர்க்கவேணும் இல்லையா? “”””ஆண்டாளை திருவரங்கத்தில் என்னடா பன்னிங்க ?””””

       விவாதத்தை விட்டு ஓடுபவர்களை எல்லாம் உங்க கட்சியில் வைத்துக்கிட்டு எப்படிங்க விவாதத்தில் வெல்லுவீங்க மணி? விவாதம் முடியும் முன்னே விவாதம் முடிந்துவிட்டது என்று பறைசாற்றுபவர்களை எல்லாம் உங்க அணியின் தளபதியாக வைத்து கிட்டு எப்படி வெல்லுவீங்க மணி? இப்ப பாருங்க களத்தில் தனித்து நிற்கின்றீர்கள்…தலபதி அனுமார் வாலை பிடித்துகொண்டு விவாதத்தில் அடிபட்டதுக்கு மருந்து தவிக்க சிரஞ்சீவி மலைக்கு பறந்து போய்கிட்டு இருக்கார்..

      • //ஹிந்து மதத்தில் இயல்பிலேயே இருக்கும் சகிப்புத்தன்மையால் //
       //பரப்பி ஹிந்து மக்களின் சகிப்பு தன்மையை சோத்தித்து கொண்டு இருக்கிறீர்கள்..//

       என்ன சொல்லவரிங்க மணிகண்டன்?? அதான் பங்களாதேசில பாயிங்க சமூக ஆர்வலர்களை மத மறுப்பாளர்களை வெட்டுவது போல நீங்க சுட்டு தள்ளுரிங்களே?? இதுக்கு மேல என்ன சகிப்புதன்மையே சோதிக்க வேண்டி இருக்காம்? அல்லது ஏதாச்சும் கலவரத்தை தூண்டிவிட செய்ய வேண்டாம் என்கிறீரா??

       • இங்கே ஹிந்துதுவாக்குள் என்று குறிபிடுவது போன்று அங்கே இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்று அவர்களை குறிபிடலாம் என்று உணருகின்றேன்…..

  • எம்.ஜி.எஸ். நாராயணன் அவர்கள் அன்று காவிகள் யாருக்கும் பயப்படவில்லை என்பதால் தானே அன்று அக்கட்டுரை எழுத அந்த மூல நூலில் உள்ள செய்தியான

   “”””Periyalvar took her there with great eclat and left
   her in her Lord’s house and returned to his quiet residence at
   SrTvilliputtur.””””

   இதன் அடிப்டையில் தானே அவர் கீழ் உள்ள கருத்தை தன் கட்டுரையில் பதிவு செய்த்தார்..

   Andal was herself a devadasi who lived and died in the Srirangam temple

   அப்படி தன கட்டுரையில் பதவு செய்த எம்.ஜி.எஸ். நாராயணன்அவர்கள் இன்று அதே கருத்தை மறுதலிக்க என்ன ஆதாரத்தை நம் முன்வைகின்றார்..? ஆதாரம் ஏதும் கிடையாது…. காவிகளிடம் இருந்து அடி உதய் விழுமே என்ற பயத்தை தவிர வேறு ஏதும் இல்லை….

   மேலும் கேடி ராகவன் கூட தன் இணைய தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் “சாப்ட் பரோன் என்று ஆண்டாளின் பாடல்களை ” விமர்சித்தவர் இன்று அதே கருத்தை-பதிவை வைரமுத்து சர்ச்சைக்கு பின் நீக்க காரணம் என்ன? அடி உதை பயம் இன்றி வேறு என்ன என்று ரெபெக்க மேரி தான் விளக்கவேண்டும்….

   //மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். ஆழ்வார்களின் பாடல்களில், வைணவ ஆச்சாயார்களின் இலக்கியங்களில் இல்லாத ஒன்றை, மேலும் எவ்வித தொல்லியல் சான்றுகளும் இல்லாத ஒன்றை எவ்வாறு, எதன் அடிப்படையில் நீங்கள் கூறுகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு வெறும் அனுமானத்தின் அடைப்படையில் தான் என்று பதிலளித்துள்ளார். இல்லையென்றால்,இந்த கோவிலில் இந்த நூற்றாண்டை சார்ந்த கல்வெட்டில் தகவல் இருக்கிறது போய் பாருங்கள் என்று கூறி இருப்பாரே. //

  • முரண்பாடுகளின் மொத்த உருவமாக காட்சியளிகின்றார் ரெபெக்கா மேரி அவர்கள்…! அம்பலப்படும் நிற்கின்றார்… மகிழச்சி! ஒருபக்கம் ஆண்டாள் தேவதாசி என்பதற்கு கல்வெட்டுகள், பாடல்கள், செப்பு பட்டயங்களின் ஊடாக ஆதாரத்தை தேடும் ரெபெக்கா மேரி அவர்கள் , மறுபக்கம் அந்த வைணவர்களின் வரலாறு நூலினை படித்து மகிழ்ந்தேன் என்னும் போதே அந்த நூலில் இருந்து பல தேவையான தகவல்கள் கிடைத்தன என்று கூறுமிடத்தே அவற்றை நம்புகின்றார் என்று தானே பொருள் ஆகின்றது..?

   அப்படி அந்த நூலை நம்பும் ரெபெக்கா மேரி, அதே நூலில் ஆண்டாள் அவர்கள் திருவரங்கம் கோவிலில் விடப்பட்டார் என்ற செய்தியை (அந்த செய்தியின் ஊடாக நாம் அறியும் பொருள் என்ன? கோவில்களில் பெண்கள் விடப்படுகிரார்கள் என்றால் என்ன அர்த்தத்தில் என்று சிந்திக்க ரேபெக்காவுக்கு தடையாக இருக்கும் கருத்தாக்கம் என்ன?) நம்பாமல் இருக்க என்ன காரணமோ? செலக்டிவாக இந்த செய்திக்கு மட்டும் ஆதாரத்தை தடயவியல் துறை ,தொல்லியல் துறை ஊடாக தேடும் நிலையில் தானே ரெபெக்கா அவர்கள் அம்பலப்ட்டு நிற்கின்றார்! இந்த ரெபெக்காவின் இந்த அவலத்துக்கு காரணம் அவரின் அறிவின் குறைபாடு அல்ல… அறிவு நானையத்தின் குறைபாடே காரணமாக அவர் முன் நிற்கின்றது..

   //History of Sri Vaisnavas (வைணவர்களின் வரலாறு)நூலினை கொடுத்தமைக்கு நன்றி, பல தேவையான தகவல்கள் கிடைத்தன. அப்படியே, எங்கள் ஊர்காரரான நம்மாழ்வாரை பற்றியும் படித்து மகிழ்ந்தேன். நன்றி நன்றி…//

  • அதனையே தான் நானும் கூறுகின்றேன்…திருவரங்கம் கோவிலில் ஆண்டவனின் கட்டளைபடி சென்று அங்கே தங்கி இருந்து உள்ளார் ஆண்டாள்! இதில் இருந்து ஆண்டாள் தேவதாசி தான் என்று எளிமையாக நாம் அறிந்து கொள்ள முடியுமே ரேபெக்காமேரி! ATM சென்டருக்கு வெளியே உட்கார்ந்து இருக்கும் வாட்சிமேன் அங்கே என்ன வேலையை செய்வார்? பாலியல் தொழில் நடக்கும் வீட்டில் தங்கியிருக்கும் பெண் என்ன வேலையை அங்கே செய்வார்? கோவிலுக்குள் தங்கி இருந்த ஆண்டாள் அங்கே என்ன வேலையை செய்து இருப்பார்…தேவரடியார் வேலையை தவிர?

   //அதன்படி பெரியாழ்வார் ஆண்டாளை திருவரங்கம் கோவிலுக்கு அழைத்து சென்று பின்னர் திருவில்லிபுத்துார் திரும்பினார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலென்ன புதிதாக கூறிவிட்டார்கள், நானும் அதனை தானே கூறுகிறேன் .//

  • M M Kalburgi, மற்றும் Gauri Lankesh ஆகியோர் ஹிந்துத்துவாகளால் கொல்லபட்ட விசயத்தை மறந்துவிட்டீரா? இல்ல அறிவு நாணயம் இன்றி அந்த விசயங்களை உங்கள் விவாத தேவைக்கு ஏற்ப மறைத்துவிட்டீரா ரெபெக்கா மேரி? எம்.ஜி.எஸ். நாராயணன் காவிகளுக்கு பயப்டவில்லை என்றால் ஹச் ராஜாவின் ஆபாச பேச்சுக்கு பயப்படவில்லை என்றால் பிஜேபி துணை தலைவர் அல்லது செயலாளர் (உங்க ஊர் பக்கம் தான் அவரு!)பேசிய கழுத்தை வெட்டுவேன் என்ற பேச்சுக்கு பயப்டவில்லை என்றால் எதுக்கு இப்ப தான் எழுதிய கட்டுரை வார்த்தைகளை அதுவும் மூல நூலை மேற்கோள் காட்டி எழுதிய சொற்தொடரை இப்ப மாற்றிக்கொள்ள வேண்டும்? சொல்லுங்க பார்கலாம்… கேடி ராகவன் எதுக்கு இப்ப அவர் எழுதிய “சாப்ட் புரோன் ஆண்டாள் பாடல்கள்” என்ற கட்டுரையை இணையத்தில் இருந்து தூக்கணும் சொல்லுங்க:?

   //மேலும், எம்.ஜி.எஸ். நாராயணன் யாருக்கும் பயந்தோ, பணிந்தோவெல்லாம் அவர் பதில் அளிக்கவில்லை, மிக தெளிவாக கேட்ட கேள்விக்கு சரியாகவே பதில் கூறி இருக்கிறார். //

   • கௌரி லங்கேஷ் போன்றவர்களை ஹிந்துக்கள் கொன்றார்கள் என்ற ஆதாரம் இல்லாத “பச்சை” பொய்களை பரப்பும் உங்களை போன்ற ஆட்கள் தான் ஆண்டாளை பற்றியும் ஆதாரம் இல்லாத பொய்களை பரப்பி கொண்டு இருக்கிறீர்கள்

    • மணிகண்டன்,,,, காந்திய கொன்றது ஹந்துத்டுவா மத வெறியர்கள் இல்ல பாகிஸ்தான்காரன் தான் என்ற கணக்கா பொய் பேசிகிட்டு இருந்தால் எப்படி மணிகண்டன்? வைரமுத்துவின் கழுத்தை அறுப்போம்… அறுப்பவனுக்கு ஒரு கோடி கொடுப்போம்….அவன் அம்மா…. என்று எல்லாம் வெறிபுடிச்சி பேசிகிட்டு இருப்பதும் பாகிஸ்தான்காரன் தானா மணிகண்டன்? அட கருமத்த…. உன் நாயத்த போயி மாட்டுக்கிட சொல்லு மணி…. அது வேண்டுமானால் உனக்கு தலையாட்டும்….

     • கௌரி அவர்களை பற்றி நீங்கள் சொன்னது தவறு ஆதாரம் இல்லாத குற்றசாட்டு என்று சொன்னேன் ஒன்னு அதற்கு ஆதாரம் கொடுத்து இருக்க வேண்டும் இல்லை என்றால் சொன்னது பொய் என்று மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டும் ஆனால் அதை செய்யாமல் மீண்டும் யூகத்தின் அடிப்படையில் பேசி கொண்டு இருக்கிறீர்கள்.

      இந்த நாட்டில் ஹிந்து மதத்தையும் ஹிந்து கடவுள்களையும் அவமதிப்பு ஒரு வழக்கமாக இருக்கிறது, ஹிந்து கடவுளை அவமதித்தார் என்று என்று யாரும் யாரையும் கொன்றது இல்லை, ஹிந்து மக்களின் சகிப்பு தன்மை உயர்வாக இருக்கிறது.

      ஆனால் உங்களை போன்ற ஆட்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு ஹிந்து கடவுளை பற்றி அவதூறு பரப்பி ஹிந்து மக்களின் சகிப்பு தன்மையை சோத்தித்து கொண்டு இருக்கிறீர்கள். இது சரியல்ல நியாயமும் இல்லை.

      இந்த நாட்டில் மத அடிப்படைவாதம் வளர்ந்தால் அதற்கு உங்களை போன்ற வினவு கூட்டங்கள் தான் காரணமாக இருக்கும்.

      • இன்னும் எதுக்கு எல்லாம் ஆதாரம் கேட்பீர்கள் மணிகண்டன்…? கௌரி லங்கேஷ் ஹிந்துத்டுவாக்க்ளால் மிரட்டப்ட்டது உண்மை என்ற நிலையில் வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு? இன்று வைரமுத்து நீ வெட்டப்படுவாய் என்று அதே ஹிந்துதுவாக்ளால் மிரட்டப்ட்டு இருக்கிறார்… சரி சரி நடப்பதனை நாங்களும் பார்க்க தானே போறோம்…

 19. இப்பொழுதும் சொல்கிறேன் ஆட்டம் முடிந்து விட்டது தான், இனி பேச ஏதுமில்லை. வலுவான ஆதாரம் இருந்தால் பேசவும், அதை விட்டு பக்கத்தை நிரப்பும் வேலைக்கெல்லாம் என்னால் பதில் அளித்து கொண்டிருக்க முடியாது.சொல்வதற்கு ஒன்றுமில்லை, நான் இத்தோடு விடை பெறுகிறேன். என் கருத்துக்களை வெளியிட்ட வினவு தளத்தின் ஆசிரியருக்கு என் நன்றிகள்.

  • இதுகாறும் விவாதித்தமைக்கு நன்றி சகோதரி ரெபெக்கா மேரி…. ஒரு வழியாக தன்னுடைய அறிவு நாணயம் இன்மை, ஹிந்துத்துவா சார்பு, போன்ற “தேசிய வாதம்” சார்ந்த கருத்தாகங்களின் அடிபடையில் ஆண்டாள் விசயத்தில் பேசிகிட்டு இருந்த ரெபெக்கா மேரி அவர்கள் அந்த ஆண்டாள் திருவரங்கம் கோவிலில் என்னவாக வேலை செய்தார் என்ற எனது கேள்விக்கு பதில் அளிக்க பயந்துகிட்டு (அப்புறம் எச்ச ராஜா விடம் பேச்சு வாங்க நேருமே! பிஜேபி தலைவர் நாகேந்திரனின் கழுத்து வெட்டு மிரட்டலுக்கு ப