Friday, June 13, 2025
முகப்புபுதிய ஜனநாயகம்தமிழகம்கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !

கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !

-

மிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
கேரளத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர். 2011-இல் அங்கே கோயிலுக்கடியில் இருந்த சுரங்கங்களில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க நகைகளும் தங்கப்பாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மக்கள் சொத்து என்றும் அவற்றை அரசுடைமையாக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்த போது அதனை பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. அவை மன்னரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, மன்னர் குடும்பம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை களவாடியிருப்பதைக் கண்டுபிடித்தது. மறைக்கவோ மறுக்கவோ முடியாமல் மன்னர் குடும்பம் சிக்கிக் கொண்ட காரணத்தினால், மன்னர் குடும்பத்தை நிர்வாகப்பொறுப்பிலிருந்து வெளியேற்றி விட்டு மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். இது சமீபத்திய எடுத்துக்காட்டு.
சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?

தமிழக கோயில்களின் பல லட்சம் ஏக்கர் நிலமோ, திருவனந்தபுரம் கோயிலின் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கமோ எப்படி வந்தன? மன்னராட்சிக் காலத்தில் விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரியாக வசூலித்தும், வரி கட்டாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தும் பெறப்பட்டவை அல்லது மக்களைச் சுரண்டிச் சேர்த்த பணத்திலிருந்து நிலவுடைமையாளர்களும், வணிகர்களும் காணிக்கையாக கொடுத்தவை அல்லது போர்களின் போது ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்டவை.

கோயில்களின் சொத்துகள் மட்டுமல்ல, மசூதிகளின் சொத்துகளும் இத்தகையவைதான். தேவாலயங்களின் சொத்துகள் எனப்படுபவை காலனியாதிக்கவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்பட்டவை. அரசியல் சட்டத்தின் பிரிவு-26 தான் மத நிறுவனங்களின் இந்த சொத்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

கடவுளுக்கும் முற்றும் துறந்த சாமியார்களின் மடங்களுக்கும் எதற்கு சொத்து என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். இது புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கும் பொருந்தும். அவ்வாறிருக்க பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை அரசு பராமரிக்கட்டும். மற்றப்படி கோயில்கள் மதநிறுவனங்களின் நிலங்களாகட்டும், மனைகளாகட்டும் அவை நிலமற்ற விவசாயிகளுக்கும் வீடற்ற மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். கோயில் சொத்துகளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த வருவாய் சிறிதளவேனும் மக்களுக்குப் பயன்படுகிறது. அதுவும் கூடாது. எல்லா சொத்துக்களையும் எங்களிடம் ஒப்படை என்று கோருகிறது சங்க பரிவாரம்.

இது சொத்துக்களைக் கைப்பற்றும் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் மனங்களைக் கைப்பற்றும் பிரச்சினை. கோயில்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் மக்களின் பக்தி உணர்வை எளிதில் மதவெறியாக மாற்றிவிட முடியும் என்பதுதான் இவர்களது திட்டம். விநாயகர் ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி மாற்றியிருக்கிறது என்பதை நாம் கண்ணெதிரே காண்கிறோம். எல்லாக் கோயில்களும் அப்படி மாற்றப்படும் சூழலை எண்ணிப்பாருங்கள். எனவேதான் இந்தப் பேரபாயத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
 மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

  1. இந்து மதம் தர்மத்தை, சேவையை வலியுறுத்தும் மதம், எக்காலத்திலும் எல்லா மத/கலாச்சார/சமுக அமைப்புகளிலும் அர்பணிப்பு உணர்வாளர்கள் பலரும், புல்லுருவிகள் சிலரும் இருப்பது இயல்பே,

  2. ரங்கராஜன்,
    என்ன தர்மம்? வருணாசிரம தர்மம் என்று வெளிப்படையாக சொல்லுங்கள். மேலும் யார் யாருக்கு என்ன சேவை ஏன் செய்யவேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துங்கள்.

  3. தெளிவா சொல்லுங்க ரங்கராஜன், பார்பனர்களாகிய நீங்களும் உங்கவாலும், பார்பன அடிமைகளாக இருக்கும் சத் சூத்திராலும் உண்டுகொழிக்க, கோவில் சொத்துகளை நீங்க பராமரிக்கணும் என்று ஆசை படுறீங்க இல்லையா? நேரடியா சொன்னா என்ன குடியா முழுகிடும்? அப்படி தானே உண்டு கொழித்துகொண்டு இருந்தீங்க இந்து சமைய அறநிலை துறை வரும் வரைக்கு…? ஆழ்வார் மேட்டருக்கு வருங்க விவாதிக்க வருவிங்க என்று நினைத்துகொண்டு இருந்தேன்.. வந்தீங்க அப்புறம் சட்டுன்னு ஓடிவிட்டீர்கள்! ஏன் வைணவா வடகலை தென்கலை முரண்பாட்டில் முட்டி மோத முடியாமல் எஸ்கேப் ஆயிட்டிங்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க