Wednesday, March 26, 2025
முகப்புசெய்திஎதுக்குடா ரத யாத்திரை - பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க !

எதுக்குடா ரத யாத்திரை – பாடலுக்காக போலீசிடம் ஒளியும் பா.ஜ.க !

-

ர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ரத யாத்திரையின் உண்மை முகம் ‘ரத்த யாத்திரை’ என்று தமிழகம் எதிர்த்து நின்றது. இந்த போராட்டத்தை ஒட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பாடல் வீடியோ தயாரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்பட்டது. வினவு யூ டியூப்பிலும், ஃபேஸ்புக் பக்கத்திலும் இன்றளவும் பாராட்டி மறுமொழிகள் வந்த வண்ணம் உள்ளன. வைரலான வீடியோவை இலட்சக்கணக்கில் மக்கள் பார்த்துள்ளனர். இது போதாதா? உடனே பா.ஜ.க கும்பலுக்கு வெறியேறி விட்டது.

“இராமாயணத்தையும் இராமனையும் இராம ராஜ்யத்தையும் இழிவு படுத்துகிறது. இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துகிறது. பிரதமர் மோடியை தரக்குறைவாக விமரிசிக்கிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாக இருக்கிறது. நாட்டில் மதக்கலவரத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது. எனவே உரிய குற்றப்பிரிவுகளின் கீழ் கோவனைக் கைது செய்ய வேண்டும். தொடர்ந்து இத்தகைய பாடல்களை வெளியிட்டு தேச விரோதமாக செயல்பட்டு வரும் ம.க.இ.க -வை தடை செய்ய வேண்டும்” என்று, திருச்சி மாவட்ட பா.ஜ.க இளைஞர் அணி மாவட்டத் தலைவர் கவுதம் நாகராஜன் திருச்சி காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

திருச்சி நகரத்திலேயே பல காவல் நிலையங்களிலும், குமரி, கோவை மாவட்டங்களில் உள்ள காவல்நிலையங்கள் மற்றும் அவுட் போஸ்ட்கள் என அங்கிங்கெனாதபடி எங்கும் “சங்கிகள்” புகார் கொடுத்துள்ளனர்.

இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் பாஜக-வினர்

இந்த தகவல் இன்றைய பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்திகளிலிருந்து நமக்கு தெரிய வந்துள்ளது.

கலப்படமற்ற தூய உண்மை விவரங்களின் அடிப்படையிலேயே இந்தப் பாடல் அமைந்திருப்பதாக நாங்கள் கருதுகிறோம். பாடல் பல இலட்சம் ஹிந்துக்களையும், இந்தியர்களையும் சென்று சேர்ந்திருக்கிறது. ஆனால் பாஜக ‘ஹிந்துக்களை’ மட்டும் இது பெரிதும் பாதித்திருப்பது தெரிகிறது. இது ஏன் என்று புரியவில்லை.

பாடலின் எந்த வரி அவர்களைப் பாதித்திருக்கும், ஏன் பாதித்திருக்கும், எப்படி பாதித்திருக்கும் என்று வாசகர்களுக்குத் தெரிந்தால், எங்களுடனும் தமிழ் கூறும் நல்லுலகுடனும் அதனைப் பகிர்ந்து கொள்ளுமாறு கோருகிறோம்.

மற்றப்படி பாஜக -வினருக்கு ஒரு வேண்டுகோள்

கம்பன் எழுதிய ராமாயணத்தின் மீது தீ பரவட்டும் என்று பொது அரங்கில் விவாதம் நடத்தியவர் அண்ணா. இந்தப் பாடலும் மக்கள் அரங்கில்தான் பகிரங்கமாகத்தான் பாடப்பட்டிருக்கிறது.

அதன் கருத்துகளை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவில்லாமல், போலீசுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறீர்களே, வெட்கமாக இல்லை?

  1. //பொண்டாட்டிய ஒதுக்கி வச்சான் ராமாயணத்துல – ஒப்புரானே
    அப்படியே பொருந்துது – நா மோடியை சொல்லலை !//

    If Sankis feel shy about this ,they can change the Prime Minister post to SUSHMA(Panchaali)

  2. பாடல் முழுவதும் வஞ்சப்புகழ்ச்சியாக உள்ளது.மோடியை ராமருக்கு சமமாக மேலே தூக்கி,கடைசியில் ராவணன் போல் ஒப்பிட்டால் கோபம் வராதா?

  3. உண்மையை சொன்ன… எப்படி எதிர் கொள்வது??? வாங்க பொய் பேசி ஜெயிச்சு பாப்போம்ன்னு சொல்லி வருவனுங்க..மோடி அலை,,மோடிஅலை-ன்னு சொல்லி நாட்டை வித்து புட்டு,காவிமயமாய் ஆக்க துடிக்கிறானுக..ஊடகங்கள் வாயிலாக ஒரு பிரச்சார யுக்தியை நமக்கு வாய்ப்பளித்த சங்கிகளுக்கு வாழ்த்துக்கள்…கடைசியில கேட்டுபுட்டிங்க பாரு “வெக்கமே இல்லாதவனை பார்த்து வெக்கமா இல்லைன்னு”-செம்ம காமெடிங்க !!!!-கலைக்குழு பாடல் யுக்தி வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது..அதனை கொஞ்சம் அதிகமாக செயல் படுத்தலாம்….(உதாரணத்துக்கு எனது பகுதி கம்பம்..நான் பணி புரியும் நிறுவனங்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்கள் அதிக பேர் திருச்சி-யில் இருந்து தான் அடிக்கடி வருவார்கள்.அமைப்பின் பெயரை
    ம.க.இ.க, மக்கள்அதிகாரம்-அமைபின் போராட்டம்,அரசியல்-பேசுனா தெரியல… அந்த டாஸ்மாக் பாட்டு பட்டுச்சாருல-ன்னு சொன்ன போதும்…. ஓ கோவனா-அந்த பாட்டு தெரியும்ன்னு சொல்லி ஊத்தி குடுத்த உத்தமி, போயசுல உல்லாசம்ன்னு-சொல்லி உண்மையா தான சொன்னாருன்னு பாட்டு படிப்பாங்க!அந்தம்மா ஜெயலலிதா நல்லா இருக்கணும் அப்படி ஒரு ஹிட் ஆக்கி விட்டுருச்சு…)அப்படி இவனுக முயட்சியில் ஹிட் ஆக வாய்ப்பளிக்கிறானுக…வீடியோ பதிவுகளை அதிகப்படுத்தலாம் -என எனது கருத்து..அதிகம் பகிருகிரேன் ,நிதி வழங்கி ஆதரவும் அளிக்கிரேன்.. தொடரட்டும் வாழ்த்துக்கள்..

  4. அருமையான பாடல் வரிகள். எளிமையான அமைப்பு. தேவை இதுபோல் ஏராளம் ஏராளம்.

  5. படு சுப்பரான பாட்டு. தமிழகத்‌த‌ை ஆழுது ம‌‌ோடியின் ச‌ெருப்பு ‌ர‌ெண்டு பாடலின் உச்சக் கருத்து ? நன்றியும் பாராட்டுகளும்.

  6. பா ரத பி ரத மரு மோடியக் கூப்பிட்டு ஒரு கண்டனக் கூட்டம் நடத்துங்க திருச்சியில.இன்னொரு பாட்டுப் பாடுவாரு கோவன்.மக்கள் சந்தோஷமா ரசிப்பாங்க.மக்களின் இந்த ஆசை நிறைவேறுமா?இனி உங்களுக்கும் எங்களுக்கும்தாண்டா மாப்புள கணக்கு வழக்கு. நாடு முழுக்க போய் புகார் கொடு.அப்பத்தான் உன் ராமன் யாருன்னு மக்களுக்குப் புரியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க