privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைநான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

துப்பாக்கி சூட்டை, நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும், ஒரு கேள்வியின் சூட்டை, கூட என்னால் தாங்க முடியாது, செத்தால் கூட வராத கோபம், போராடினால் வருகிறது - நான்தாம்பா ரஜினிகாந்த்!

-

நான்தாம்பா ரஜினிகாந்த்!

 

குடும்ப வறுமையில்
போராடி
கொஞ்ச வயிறு சாப்பிட்டு
நிறைய மதிப்பெண் எடுத்தும்
நீட்டால்
அனிதா கொலையான போது
மவுனம்.. மவுனம்..
இமயம் தொடும் மவுனம்.

அரியலூர் நந்தினியும்
காஷ்மீர் ஆசிபாவும்
குதறப்பட்ட போது
சமூக விரோதிகளை நோக்கி
புடைக்கவில்லை நரம்பு!

தெருவுக்கு தெரு
டாஸ்மாக்கால்
தமிழினமே
ஆசீட் வீசி
அழிக்கப்படும் போது,

கடையை
மூடச்சொன்ன மக்களை
தடிகள் குதறிய போது
காது அறுபட
பெண்களின் கன்னம்
அறையப்பட்ட போது
பதறாமல்.. துடிக்காமல்
தடித்திருந்தது தோல்.

மாடு புனிதம் என்று
மனிதன் வெட்டப்பட்ட போது,
நீதிமன்றம் அணுகியும்
காவிரியை தடுத்தபோது
விவசாயம், சிறுதொழில்
சில்லறை வணிகம்
அனைத்தையும் அழித்து
நாட்டையே சுடுகாடாக்கும் போது,
வாய் எனும்
ஒரு உறுப்பே
வந்ததில்லை என் நினைவுக்கு.

துப்பாக்கி சூட்டை
நீங்கள் தாங்கிக்கொள்ள வேண்டும்
ஒரு கேள்வியின் சூட்டை கூட
என்னால் தாங்க முடியாது
செத்தால் கூட
வராத கோபம்
போராடினால் வருகிறது
இதை விட
நான் யார் என்பதை
எப்படிச் சொல்வது?
நான்தாம்பா ரஜினிகாந்த்!

  •  துரை. சண்முகம்

 

  1. ரஜினிகாந்த் ஒரு கடைந்தெடுத்த சுயநலவாதி. ஆசிரம பள்ளியில் வண்டி ஓட்டுனர்கள் சம்பள பாக்கிக்காக போராடிய போதும் அதை கொடுக்காத கயவன்.

  2. இன்றைக்கு – நேற்றா பார்க்கிறோம் இந்த வேஷதாரியை — காவிரி பிரச்சனைக்காக நெய்வேலியில் அனைத்து திரைத்துறையினர் போராட்டம் 2002 ல் நடந்த போதே கலந்துக்க கொள்ளாமல் இருந்த கயவாளி … ! பின்னர் தனியாக போராட்டம் என்கிற பெயரில் குந்தி நாடகம் போட்டவர் … அதற்கு பின்னர் தன் படத்திற்கு எதிர்ப்பு என்றவுடன் கர்நாடகாவினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட சூரப்புலி … ! பட வசூலுக்கு ஏற்ப அப்பப்ப தலைகாட்டும் — காரியவாதி ….! போராட்டம் என்பதின் அடிப்படை புரியாத அரைகுறை …! ஆலையின் கொடூரத்தைப்பற்றி பேசாத வெத்து வேட்டு … சமூக விரோதிகளை பற்றி வாய் கிழிய பேசும் நடிகன் — மக்களின் உரிமைகளை பறிக்கும் ” சமூதாய விரோதிகளைப்பற்றி ” பேச பயப்படும் கோழை — இந்த ஆளுக்கெல்லாம் ஒரு அல்லக்கை கூட்டம் நியாயப்படுத்த துடிப்பது தான் வேதனையின் உச்சம் ….!!!

  3. தொழிலுக்குத் திரைப்படம்;
    பட விளம்பரத்திற்கு
    அரசியல் வசனங்கள்;
    சண்டைக் காட்சிகட்கு
    டூப்புகள்;
    இரசிகர்மன்ற மொக்கைகளுக்குப்
    புகைப்படங்கள்;
    வருமானவரிக்கு நமஹ;
    ஒய்விற்கு இமயமலை;
    வெள்ளைப் பரங்கியன்
    காலில் விழுந்த பேஷ்வாக்களுக்கு
    அன்று சேவகம் புரிந்தவன் சிவாஜி,
    இன்று காவிகளுக்குக்
    கைகொடுக்கும் சிவாஜிராவ்;
    தனது சொந்தக் குரலில் பேசி
    தமிழனின் சினிமா மோகத்தைக்
    குறைக்க உதவியுள்ளார்.

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க