இராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் காவி கும்பலால் தாக்குதலுக்குள்ளாகி கொல்லப்பட்ட பெஹ்லு கான் வழக்கின் குற்றவாளிகள் 9 பேரில் 6 பேரை ஆல்வார் நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி விடுதலை செய்துள்ளது. வழக்கில் தொடர்புள்ள 3 சிறுவர்கள் மீதான வழக்கு சிறார் நீதி வாரியத்தில் நிலுவையில் உள்ளது.
2017, ஏப்ரல் 1-ம் தேதி கால்நடைகளை வாகனங்களில் வேறு இடத்திற்கு கொண்டு சென்றபோது பெஹ்லு கானும் அவருடைய மகன்களும் காவி கும்பலால் தாக்கப்பட்டார்கள். அப்போது பெஹ்லு கான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, இரண்டு நாட்கள் கழித்து பலியானார்.
காவி கும்பலின் தாக்குதல் வீடியோவாக வெளியாகி நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஆனால், அதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என ஆல்வார் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை(14.08.2019) அளித்த தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
வீடியோ ஆதாரங்களை வைத்து போலீசு ஆறு பேரை கைது செய்தது. ஆனாலும் இந்த வழக்கை வலுவிழக்க வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்தது போலீசு. கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெஹ்லு கானின் மரணம், இதய செயலிழப்பால் நிகழ்ந்தது என மருத்துவமனை போலீசுக்கு சாதகமாக அறிக்கை அளித்தது. மேலும், பெஹ்லு கான் அளித்த வாக்குமூலத்தை வேண்டுமென்றே போலீசு பதிவு செய்யாமல் நிராகரித்தது.
பெஹுலுகான் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட பாடல்
“இந்த வழக்கின் விசாரணை ஏற்கெனவே நீர்த்துப்போக வைக்கப்பட்டது. இந்த இறப்பு எப்படி நடந்தது என்பது குறித்த குழப்பம், ‘சந்தேகத்தின் பலனை’ குற்றச்சாட்டப்பட்டவர்களுக்கு அளித்துள்ளது. கானின் மரணத்தின் போது ஆறு பேருக்கு எதிராக அளிக்கப்பட்ட வாக்குமூலம் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்படவில்லை. இது வழக்கை பலவீனமாக்கியுள்ளது” என்கிறார் பெஹ்லுகான் குடும்பத்துக்கு வழக்கு உதவிகளைச் செய்த குவாசிம் கான்.
படிக்க:
♦ பெஹ்லு கான் கொலையாளிகளை பாதுகாக்கும் ராஜஸ்தான் அரசு !
♦ இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
கும்பல் தாக்குதலுக்குள்ளாகி பெஹ்லு கான் இறப்பதற்குக் காரணமானவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்குப் பதிலாக, பெஹ்லு கானையும் அவருடைய மகன்களையும் மாடுகளை கொல்ல ஏற்றிச் சென்றதாக பாதிக்கப்பட்டவர்கள் மீதே வழக்கு போட்டது புதிதாக பதவியேற்ற காங்கிரசு அரசு. இது சர்ச்சைகளை ஏற்படுத்தவே மேலும் இந்த வழக்கில் விசாரணை செய்ய அனுமதி கேட்டது இராஜஸ்தான் போலீசு.
பத்திரிகையாளர் அஜித் ஷா மேற்கொண்ட தனிப்பட்ட விசாரணையில் போலீசு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையே மேம்போக்காக போடப்பட்டது என்பது தெரியவந்தது. அதில் அவர் எழுப்பியுள்ள பதிலளிக்கப்படாத சில கேள்விகள்.
1. போலீசுக்கு தாக்குதல் குறித்து ஏப்ரல் 2-ம் தேதி 3.54 க்குத்தான் தெரியும் எனில், ஏப்ரல் 1-ம் தேதி இரவு பெஹ்லு கான் எப்படி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்?
2. அடுத்த நாள்தான் விசயம் தெரியும் எனில், ஏப்ரல் 1-ம் தேதி இரவு 11.50-க்கு எப்படி வாக்குமூலம் பெற முடிந்தது? போன்ற கேள்விகளை அவர் முன்வைத்திருந்தார். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு வி.எச்.பி மற்றும் பஜ்ரங் தள் காவி படைகளுடன் இருந்த தொடர்பையும் விசாரிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இரண்டு பசுக்களை; இரண்டு கன்றுகளையும் வாங்கவும் அதைக் கொண்டு செல்லவும் முறையான அனுமதி வாங்கியிருந்தபோதும், காவி குண்டர்களால் பெஹ்லு கான் குடும்பத்தினர் தாக்கப்பட்டனர்.
முசுலீம் என்பதற்காகத்தான் அந்தக் குடும்பம் தாக்கப்பட்டது; பெஹ்லு கானும் பலியானார். அதே காரணத்துக்காகத்தான் போலீசும் அரசும் நீதிமன்றமும் அந்த குடும்பத்துக்கு நீதியை மறுத்திருக்கிறது. ஏற்கெனவே அனுமானிக்கப்பட்ட தீர்ப்புதான் என்றபோதும், விரக்தி பெருமூச்சுடன் கடந்து செல்லப்போகிறோமா நாம்?
கலைமதி
நன்றி: தி வயர், சப்ரங் இந்தியா
பசு கொன்ற பாவம் செய்தவன் எவனா இருந்தண்டனை கிடைக்கும் அது கடவுள் செயல்
ரவி சார், உலகிலேயே அதிக மாட்டுக்கறி (பசுக்கறி உட்பட) ஏற்றுமதி பண்ணும் நாடு இந்தியாதான். அந்த முதலாளிகளின் அடியாள்கூட்டமான ஆர்.எஸ்.எஸ் தான் இது போன்ற (விவரம் தெரியாத வெறிபிடித்த) கொலையாளிகளை ஏற்பாடு செய்கிறது. அந்த பார்ப்பன-பனியா செயலுக்கு மட்டும் தண்டனை அடுத்த ஜன்மத்தில் தானோ.
நடிகர் கவுண்டமனியின் வசனம்: “பெரிய கோயிலாக்கட்டி பெரிய உண்டியலா வச்சா விட்டுடுறீங்க. சின்ன கோயிலாக் கட்டி மரத்தடியில சின்ன உண்டியலா வச்சா புடிச்சிக்கிறீங்க.
நீங்கள் உள்பட பசுமீது காட்டும் அர்த்தமற்ற வெறித்தனமான அன்பு பார்ப்பன-பனியா மேலாதிக்கத்திற்கும், வியாபார லாபத்துக்கும் மட்டும்தான் பயன்படும்.
பொருத்தமான சுதந்திர தினப் பரிசு. வாழ்க இந்து ராஷ்டிரம்! சாக சகோதரத்துவம்!!
உங்களின் பொய் அவதூறுகளுக்கு நீதிமன்றம் துணை நிற்க வேண்டும் என்று எதிர் பார்க்க வேண்டாம். நீதிமன்றத்தில் சரியான ஆதாரம் தான் வேண்டும் சரியான ஆதாரம் இல்லை என்பதற்காக பல மாவோ நக்சல் போன்ற பயங்கரவாத இயக்கத்தினர் விடுதலை பெற்று இருக்கிறார்கள்.