privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாபோர்ன் தளங்கள் தடை செய்யப்பட்ட ஓராண்டில் VPN டவுன்லோடு 400% அதிகரிப்பு !

போர்ன் தளங்கள் தடை செய்யப்பட்ட ஓராண்டில் VPN டவுன்லோடு 400% அதிகரிப்பு !

இந்தியாவில் பெரும்பான்மையான பயனர்கள் "இலவச" விபிஎன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். அவை பெரும்பாலும் பயனர் தரவை விற்பதன் மூலம் நிதியை திரட்டிக் கொள்கின்றன.

-

டந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆபாச வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. இந்த 12 மாத கால தடையில், இந்தியாவில் மெய்நிகர் தனியார் வலைப்பின்னல் (virtual private network – VPN) செயலிகள் மூலம் மொபைல் பதிவிறக்கங்கள் 405% அதிகரித்துள்ளன. அதாவது 57 மில்லியன் டவுன்லோடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே தரவுகளை லண்டனை தளமாகக் கொண்ட டாப் 10 வி.பி.என் பகுப்பாய்வு கூறுகிறது.

VPN-கள் பயனர்கள் தங்கள் இருப்பிடத்தை மறைத்து, இணையத்தில் மிகவும் பாதுகாப்பாக உலாவ அனுமதிக்கின்றன.

கடந்த ஆண்டு அக்டோபரில், போர்ன்-ஹப் மற்றும் எக்ஸ்வீடியோஸ் உள்ளிட்ட 827 ஆபாச வலைத்தளங்களுக்கு முந்தைய தடையை மீண்டும் நிலைநிறுத்துமாறு அரசுக்கு உத்தரவிட்டது நீதிமன்றம். இந்தத் தடையால் ஆபாச வலைத்தளங்கள் ஆரம்பத்தில் புதிய வழிகளைக் கண்டுபிடித்தன. pornhub.com தடை செய்யப்பட்ட பிறகு pornhub.net போன்ற கண்ணாடி URL களைத் தொடங்கின. ஆனால் சில மாதங்களில், முக்கிய இணைய சேவை வழங்கும் நிறுவனங்களான பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை இத்தகைய URL களைத் தடுக்கத் தொடங்கின.

ஆனாலும், இந்தியர்களை எதைக் கொண்டும் தடுக்க முடியவில்லை. 2018-ம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்தியாவில் மாதாந்திர மொபைல் விபிஎன் பதிவிறக்கங்கள் சராசரியாக 66% அதிகரித்துள்ளன என டாப் 10 விபிஎன் தெரிவித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட உடனேயே இந்தியாவில் வி.பி.என் -க்கான கூகிள் தேடல்கள் அதிகரித்தன. மேலும் அவை வழக்கமான நிலைகளுக்கு மேல் இருந்தன. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இந்தியத் தேர்தல்களின் போது இந்தத் தேடல்கள் மேலும் அதிகரித்தன.

படிக்க:
போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்
♦ போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

இந்தியாவில் பெரும்பான்மையான பயனர்கள் “இலவச” விபிஎன் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், அவை பெரும்பாலும் பயனர் தரவை விற்பதன் மூலம் தங்கள் நடவடிக்கைக்கான நிதியை திரட்டிக்கொள்கின்றன. எனவே, கட்டண வி.பி.என். சேவைகளின் பயன்பாடு இந்தியாவில் குறைவாகவே உள்ளது.

ஆனால் அனைத்து இந்திய பயனர்களும் வி.பி.என்-களில் சிக்கிக்கொள்ளவில்லை. தடைசெய்யப்பட்ட வலைத்தளங்களின் பார்வையாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தடை செய்யப்படாத பிற ஆபாச உள்ளடக்க தளங்களுக்கு மாறியுள்ளதாக சிமிளர்வெப் எனும் பகுப்பாய்வு நிறுவனம் கூறுகிறது.

பொருளாதார வீழ்ச்சி, பெருகிவரும் வேலைவாய்ப்பின்மை, கும்பல் வன்முறை, கும்பல் வல்லுறவு, ஆபாச படங்கள் மீதான இந்தியர்களின் ஆர்வம்… இவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இவற்றை இணைக்கும் புள்ளியாக ஆளும் அரசாங்கம் செயல்படுகிறது.


கலைமதி
நன்றி : குவார்ட்ஸ் இந்தியா.

Leave a Reply to Deepak பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க