privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகுடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் - செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்

குடியுரிமை சட்ட திருத்த மசோதா : முசுலீமாக மாறுவேன் – செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்

முசுலீம்களைத் தவிர மற்ற எல்லா மத அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, பின்னர் தேசிய அளவிலான என்.ஆர்.சி. -யைக் கொண்டுவருவதே பாஜகவின் திட்டம்.

-

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் மனித உரிமை செயல்பாட்டாளருமான ஹர்ஸ் மந்தர், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்தால் தன்னை முசுலீமாக அறிவித்துக்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்காக தனது குடியுரிமை தொடர்பான ஆவணங்களை அளிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஆவணமற்ற முசுலீமை தடுப்புக் காவல் மையத்துக்கு அனுப்பி, அவருடைய குடியுரிமையை திரும்பப் பெறுவது போன்ற தண்டனையை நானும் கோருவேன்” என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஏழு மணி நேர விவாதத்திற்குப் பிறகு, மக்களவையில் 311 ஆதரவு மற்றும் 80 எதிர் வாக்குகளைப் பெற்று நள்ளிரவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. இந்த மசோதா புதன்கிழமை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளனர். சமூக ஊடகங்களில் பரவலாக எதிர்ப்பு வரத்தொடங்கியிருக்கிறது.

படிக்க:
குடிமக்கள் மசோதா நிறைவேறினால் இந்தியாவிலிருந்து அசாம் வெளியேறும் : விவசாயிகள் எச்சரிக்கை
♦ அசாம் : 51 பேரைக் காவு வாங்கிய தேசிய குடிமக்கள் பதிவு !

முன்னதாக, ஊடகம் ஒன்றுக்கு ஹர்ஸ் மந்தர் அளித்த பேட்டியில், குடியுரிமை திருத்த மசோதா, என்.ஆர்.சி. ஆகியவை பிரிவினை குறித்த நினைவுகளையும், பதட்டத்தையும் கிளறக்கூடும் எனக் கூறினார்.

மனித உரிமை செயல்பாட்டாளர் ஹர்ஸ் மந்தர்.

மற்ற சமூகங்களை குடியுரிமை சட்ட திருத்த மசோதா மூலம் பாதுகாப்பதாக சொல்லிக் கொண்டு, என்.ஆர்.சி. மூலம் முசுலீம்களை மட்டும் குறிவைக்கிறது பாஜக எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன் கணக்கான ஏழ்மையான மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?

முசுலீம்களைத் தவிர மற்ற எல்லா மத அடையாளங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லிக்கொண்டு, பின்னர் தேசிய அளவிலான என்.ஆர்.சி. -யைக் கொண்டுவருவதே பாஜகவின் திட்டம். அதாவது தேசிய அளவில் முசுலீம்களுக்கு என்.ஆர்.சி. இருக்கப்போகிறது என்பதைச் சொல்கிறீர்கள். இது இந்தியர்களாகிய நாங்கள் நம்பும் அனைத்தையும் அழிக்கும்” என அவர் தெரிவித்தார்.


அனிதா
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்.